முல்லை பெரியாறு – பிரச்சினையை தீர்க்க அரியதொரு வாய்ப்பு …..கேரளத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே தீராத ஒரு
பிரச்சினையாக இருப்பது முல்லைப்பெரியாறு அணை
விவகாரம்….

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்த பிறகும் கூட, பிரச்சினைகளை
தொடர்ந்து கொடுத்து வந்த கேரளாவின் போக்கில் –

இடதுசாரி அரசு ஏற்பட்ட பிறகு ஒரு நல்ல மாற்றம்
தெரிகிறது.

அண்மையில், கேரளாவை சேர்ந்த ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்
நீதிபதியும், முல்லை பெரியாறு பிரச்சினையில், கேரளத்தின்
சார்பாக empowered committee-யில் ஆஜராகி வாதாடியவருமான நீதிபதி கே.டி. தாமஸ் அவர்கள் வித்தியாசமானதொரு கருத்தை சொல்லி இருக்கிறார்.

முல்லை பெரியாறு அணையில், உரிய முறையில்,
பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால், இன்னும்
1000 ஆண்டுகள் ஆனாலும், அணைக்கு எந்தவித சேதமும்
ஏற்படாது என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

தொடர்ந்து தமிழகத்துடன் பிரச்சினையை வளர்க்காமல்,
முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும்
மின்சாரத்தில் பாதியை கேரளாவிற்கு கொடுக்க வேண்டும்
என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இரு மாநிலங்களும்
நல்ல விதத்தில் பலன் பெறலாம் என்று கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை – இப்போது மின்சாரம் ஒரு
பிரச்சினையே அல்ல. தேவைக்கு மேல் உற்பத்தி செய்யும்
நிலையில் நாம் இருக்கிறோம். எனவே, இந்த நிபந்தனைக்கு
உட்படுவதில் தமிழகத்திற்கு எந்தவித ஆட்சேபணையும்
இருக்காது / இருக்கக்கூடாது….

எனவே, தமிழக அரசு இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டு விடாமல், உடனடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நீதிபதி கே.டி. தாமஸ் அவர்களின் உதவியையும் பெற்று,
கேரள அரசுடன் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி
ஒரு சுமுகமான முடிவுக்கு வர உரிய நடவடிக்கைகளை
உடனே மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்த பத்திரிகை செய்தி கீழே –

——————————————-

Mullaperiyar dam is safe, says ex-Judge Thomas

KOTTAYAM: Mullaperiyar dam was one of the safest dams in the
country, former Supreme Court judge and Kerala’s representative in the Empowered Committee on the reservoir Justice K T Thomas today said.

Talking to reporters here, he lauded the stand taken by Kerala Chief Minister Pinarayi Vijayan that the view of the Empowered Committee of the Supreme Court on the safety of the dam cannot be overlooked.

The more than a century-old dam is a bone of contention between
Tamil Nadu, which owns and operates it, and Kerala where it is
located.

Kerala had raised concerns over safety of the dam and wanted to build a new one.

Quoting an expert, Justice Thomas said the dam will survive for a
1,000 more years, if the timely reinforcement works were carried out for strengthening it.

He also suggested that Kerala should take steps to get half of the
electricity being generated by Tamil Nadu from Mullaperiyar.

Thomas said he had also once fallen into the propaganda that the dam would burst but was convinced about the strength of the dam after reading an expert study report in this regard.

(http://www.newindianexpress.com/states/kerala/2017/jun/12/mullaperiyar-dam-is-safe-says-ex-judge-thomas-1615845.html )

—————————————-

பின் குறிப்பு – இந்த செய்தி தமிழ்நாட்டு செய்தித்தாள்கள்
எதிலும் இதுவரை வெளிவந்ததாக தெரியவில்லை…..

வெளிவந்திருந்தால், இந்நேரம் நமது அரசியல்வாதிகள்
பேசத்துவங்கி இருப்பார்களே…. அவர்களுக்கும் இதுவரை
இந்த செய்தி போய்ச்சேரவில்லை என்று தெரிகிறது.

நான் இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில
நாளிதழின், கேரள பதிப்பில் பார்த்தேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to முல்லை பெரியாறு – பிரச்சினையை தீர்க்க அரியதொரு வாய்ப்பு …..

 1. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  அருமையான யோசனைதான்.
  இதனை ஜெயலலிதா போன்ற ஆண்மையுள்ள செய்து முடிக்கக்கூடிய
  தலைவர்கள் இல்லையே.

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  மாற்றி யாேசித்தால் ஏகப்பட்ட சிக்கல்கள் புலப்படும் ….கே .டி. தாமஸ் அவரது பிறந்த மண்ணுக்காக இதை கூறியிருக்கிறார் …. நாம் பாேராடி பெற்றுள்ள தீர்ப்பை சந்தடி சாக்கில் நீர்த்துப் பாேக வைக்கும் தந்திரமாக ஏன் இது இருக்க கூடாது …? நமது பாெதுப் பணித்துறை வல்லுனர்கள் …. சாதக பாதக காரணங்களை கூறினால்தான் …. இந்த வித்தியாசமான கருத்தைப் பற்றி முழுமையாக தெரியவரும் ….!!!

 3. தமிழன் சொல்கிறார்:

  நமக்கு எது நல்லது (தமிழகத்துக்கு) என்று ஆராய்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வதற்கு ஒரு தலைவர் இல்லையே.

  கேரள முதலமைச்சர் முதலிலேயே முல்லைப் பெரியார் அணையைப் பற்றி பாஸிடிவ் கருத்து சொன்னார் (அப்புறம் மாற்றிக்கொண்டார், அரசியல் காரணங்களுக்காக). தாமஸ் அவர்கள் சொல்வதும் நேர்மையான கருத்தாகவே இருக்கலாம். ஆனாலும் நாம் அதன் சாதக பாதகங்களை ஆராயவேண்டும்.

  இதற்கு அமைச்சர்களை, அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. தமிழனின்(பெரும்பாலான) ஆட்டிடியூடே, நாடு கெட்டால் என்ன, நாம எப்படிச் சுருட்டலாம் என்பதுதான். இதே எண்ணம் கேரளத்தவரிடம் கிடையாது. அவங்களுக்கு கேரளா, மலையாளிகள், அதற்கப்புறம்தான் மற்ற பிரையாரிட்டீஸ். இது இல்லை என்று சொல்பவர்கள், வாளையார் போன்ற பார்டரில் உள்ள செக்போஸ்டுகளில் எப்படி காசு வாங்கிக்கொண்டு தமிழகத்தை குப்பைத் தொட்டியாக மாற்ற, கேரளாவிலிருந்து வரும் கழிவு லாரிகளை தமிழகத்துக்குள் அனுமதிக்கிறார்கள் என்று பார்த்தாலே போதும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.