திரு.தம்பித்துரையின் “ரகசிய” வேண்டுகோள் – பாஜக அம்பலப்படுத்தியது….!!!

தற்போது அதிமுகவில் யார் கட்டுப்பாட்டில் யார்
செயல்படுகிறார்கள் என்பதே புரியாமல் செய்தியாளர்களும்,
மக்களும் திகைக்கின்றனர்.

முதலமைச்சராக எடப்பாடி அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சார்பாகதம்பித்துரை அவர்களும் சேர்ந்து தான் முடிவுகளை எடுக்கின்றனர் என்று, அவர்களால் ஒரு “உருவகம்” உண்டு பண்ணப்பட்டிருக்கிறது.

அந்த “உருவகம்” எல்லாம் மாயா, மாயா – உண்மை நிலை
வேறு என்பது இப்போது தெரிய வருகிறது.

அதிமுகவின் அனைத்து கோஷ்டிகளும் ஆதரவை அறிவிக்கும்
முன்னர் – திரு.தம்பித்துரை அவர்கள், பாஜக தலைமையை
அணுகி,

பிரதமர் மோடிஜி, பங்களூரு சிறையிலுள்ள திருமதி
சசிகலா அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,
சம்பிரதாயமாக பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு
தருமாறு கேட்டுக்கொண்டால், தங்கள் ஆதரவை
வெளிப்படையாக தெரியப்படுத்த வசதியாக இருக்கும் என்று
ஒரு “ரகசிய” வேண்டுகோள் வைத்துள்ளார். இதில் கடுப்பான
பாஜக தலைமை அவரது வேண்டுகோளை அலட்சியப்படுத்தி
விட்டது.

இது குறித்த ஒரு செய்தி கீழே –

இந்த செய்தி உண்மை என்றும், ஆதாரபூர்வமானது என்றும்
எப்படிச் சொல்ல முடியும் என்கிற கேள்வி இயற்கையாகவே
படிப்பவர் மனதில் எழும்.

மேற்கண்ட செய்தியை வெளியிட்டிருப்பவர்,
திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் என்பது தெரிந்த பிறகு நமக்கேன் அந்த சந்தேகம் வரப்போகிறது….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திரு.தம்பித்துரையின் “ரகசிய” வேண்டுகோள் – பாஜக அம்பலப்படுத்தியது….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  அதிமுக வாக்குகளும், ஜெ வுக்கு வாக்களித்த பொதுமக்கள் வாக்குகளும் இப்போது யாருக்கு இருக்கு? ஒருவேளை ஓபிஎஸ் தொடர்ந்திருந்தால் தொய்வு இல்லாத நிலைமை இருந்திருக்கலாம் (வாக்கு சதவிகிதம் குறைந்தாலும்).

  தம்பிதுரை, ஜெயக்குமார், செங்கோட்டையன் போன்றவர்கள் அந்த அந்த ஏரியாவில் தெரிந்தவர்கள் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வாக்கு இழுக்கும் வல்லமை கிடையாது. தம்பிதுரையெல்லாம் கொஞ்சம்கூட நம்பிக்கைக்கு உரியவர் அல்லர். காற்றடித்ததனால் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்ததனால், குப்பை, கோபுரத்துக்கு ஈடாகிவிடமுடியுமா?

  வெளியே தெரியவில்லை என்றாலும் பாஜக தன் ஆக்டோபஸ் கரங்களால் அதிமுகவை அழுத்தப்பார்க்கிறது. (காங்கிரஸ் ஊழல் கருணானிதியின் கழுத்தை, அவர் குடும்ப உறுப்பினர்களின் கழுத்துக்களை நெறித்ததுபோல). இது ஒன்றே போதும் பாஜகவை தமிழக மக்கள் வெறுக்க, ஜெ.வின் தைரியத்தையும், தலைமைப் பண்பையும், மக்கள் கருத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொண்ட தீரத்தையும் போற்ற.

  ஜெ. அதிமுகவைக் கட்டிக்காத்தது பாஜகவுடன் நெருங்காத தன்மையினால்தான். அதுவும் அவர் நண்பர் மோடி பிரதமருக்காக போட்டியிட்ட தேர்தலிலும், மோடி அவர்களே ஜெ. வைத் தொடர்புகொண்டபோதும், ‘வாங்க, சாப்பிடுங்க, நல்லாயிருங்க, என் ஆதரவைக் கேட்காதீங்க’ என்று சொன்னவர் ஜெ. இந்தக் கொள்கையிலிருந்து அதிமுக தடம் பிறழ்ந்தால், பொதுமக்கள் மற்றும் அதிமுக அனுதாபிகளின் வாக்குகள் அதிமுகவுக்கு வந்து சேராது. பாஜகவை ஆதரிப்பதற்கான காரணம் எதுவும் தமிழகத்துக்கோ, தமிழனுக்கோ வந்துவிடவில்லை. பாஜகமேல் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு ஏகப்பட்ட காரணம் இருக்கிறது. ( நெடுவாசல், மீத்தேன், காவிரி கண்காணிப்பு குழு, விவசாயிகளின் பிரச்சனை-இதில் ஒன்றும் செய்திருக்காவிட்டாலும் பிரதமர் 5 நிமிடம் சந்தித்திருக்கலாம். அதற்குக்கூட முக்கியத்துவம் இல்லாத பிரச்சனையா விவசாயிகளின் பிரச்சனை போன்று ஏகப்பட்ட பிரச்சனைகள். இவை எதிலும் தமிழகத்துக்கு நேரடியான ஆதரவாக பிரதமர் அவர்கள் நடந்துகொள்ளவில்லை). தமிழக வாக்காளர்களுக்கு இப்போதிருக்கும் ஒரே பிரச்சனை, நம்பிக்கை தரக்கூடிய தலைவர் எவரும் இப்போது இல்லை (உடனே ஸ்டாலின்னு வந்துடாதீங்க. கருணானிதியின் கறை திமுகமீது ஆழப்பதிந்தது. ஸ்டாலினைச் சுற்றியுள்ள எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் சகதியில் முழுகி பலப் பல கோடீஸ்வரரானவர்கள், அவர்களின் தலைவர் குடும்பத்தைப்போல).

  மோடி வடவர். விட்டுத்தள்ளுவோம். தமிழக பாஜகவில் யாராவது குறிப்பிடத்தக்க தலைவர் என்று கொள்ளத்தக்க, தமிழகத்தின் நலனில் அக்கறை உள்ளவர் என்று எண்ணத்தக்க அரசியல்வாதி உள்ளாரா? சுத்தமாக இல்லை. தமிழிசை, பொன்.ராதா, பழைய இல.கணேசன் போன்ற யாருமே நம்பிக்கைகொள்ளத்தக்கவராக இல்லை. இதில் நான் தீவிரவாதக் கருத்துக்களை, வெறுப்பு உமிழும் கருத்துக்களைச் சொல்லும் ஹெச்.ராஜாவைச் சேர்க்கவில்லை.

  யாராவது நல்ல, மக்கள் தலைவர் என்று எண்ணும்படியாக ஒருவர் தமிழக அரசியல்களத்துக்கு வரவேண்டும்.

  • VS Balajee சொல்கிறார்:

   Supper reply புதியவன் ! Well done

  • Antony சொல்கிறார்:

   What about Su.saa? Is he not in BJP 🙂

   • புதியவன் சொல்கிறார்:

    வீட்டில் ஒரு வயதானவர் இருக்கிறார். அவரை யாரும் மதிப்பது கிடையாது. அதனால் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காக ஏதேனும் புலம்புகிறார். சம்பந்தமே இல்லாமல் எல்லோரையும் திட்டுகிறார், கெட்டவர்களைப் பாராட்டுகிறார். இது எல்லாம் விரக்தி, அங்கலாய்ப்பு இவற்றில் சேரும். பொழுது போகாதவர்கள் அவர் சொல்வதைக் கேட்பார்கள். குடும்பத்தைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதைவைத்து வம்பு இழுத்துப் பொழுதைப் போக்கலாம் என்பவர்களும் இதில் அடங்கும். அத்தகைய பெரியவர் சு.சு. அவரது நல்ல இமேஜ், அந்தக் காலத்திலேயே போய்விட்டது.

    யார்தான் பாம்புக்குப் பால்வார்க்கத் தயாராக இருப்பார்கள்?

 2. jksm raja சொல்கிறார்:

  இந்த செய்தி உள்நோக்கம் கொண்டதுபோல் தெரிகிறது. நீங்கள் நினைப்பதைப்போல் உண்மை சம்பவத்தை வெளிப்படுத்த எழுதப்பட்டது இல்லை. இதன் மூலம் குருமூர்த்தி இரண்டு காரியம் செய்ய முற்பட்டிருக்க்கிறார். 1 ADMK வை அசிங்கப்படுத்தபடவேண்டும் என்பது. அதாவது சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் ADMK இயங்குகிறது என்பதை தெரியப்படுத்த. 2 . BJP யை ” நாங்கள் ஜெயில் கைதிகளிடமெல்லாம் பேசமாட்டோம் நாங்கள் புனிதர்கள் என்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது. .

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  குருமூர்த்தி தற்பாேது கூறுபவை எல்லாமே அவரின் மீது ஒரு சநதேகத்தை ஏற்படுத்துவதாக தான்தெரிகிறது …. நடு நிலையான பத்திரிக்கையாளராக நிலைக் காெள்ள நீண்ட காலம் ஆகும் என்பது மட்டும் நிச்சயம் … அவரின் வாக்கு ஆனைத்தும் வேதவாக்காகி விடாது…. நீங்களே அவரை விமர்சனம் செய்துள்ளதும் உற்று நாேக்க தக்கது ….!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   jksm raja, மற்றும் Selvarajan,

   கவலைப்படாதீர்கள். நான் இதை நன்கு அறிவேன்.
   திரு.குருமூர்த்தி அவர்களின் உள்நோக்கம் தெரிந்தே தான்
   இதை பதிவு செய்தேன்.

   jksm raja சொன்னது போல், அதிமுகவை அசிங்கப்படுத்துவதும், பாஜகவின் இமேஜை உயர்த்துவதும் இந்த செய்தியின் உள்நோக்கம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

   selvarajan சொன்னது போல்,
   // அவரின் வாக்கு ஆனைத்தும் வேதவாக்காகி விடாது…. //
   நானே அவரை விமரிசனம் செய்திருக்கிறேன் –
   என்பதும் உண்மையே.

   திரு.குருமூர்த்தி அவர்கள் நடுநிலையானவர் என்று
   நான் சொல்ல மாட்டேன்….அவர் பாஜக சார்பு நிலை கொண்டவர் தான்…

   ஆனால், இந்த செய்தி நிஜமானது….
   அதிமுகவில் ரகசியமாக நடந்த ஒரு விஷயத்தை பொதுவெளிக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக தான் இந்த இடுகை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s