ஜிஎஸ்டி யால் விலை உயராது என்று சொன்ன மந்திரிகளுக்கு ….!!!

——————————

ஜிஎஸ்டி யால் பொருட்களின் விலை உயராது.
ஜிஎஸ்டி வரி தற்போதைய வரிகளை விட குறைவாக
இருக்கும் அல்லது சமமாக இருக்கும், நிச்சயம் கூடுதலாக
இருக்காது என்று சொன்ன மந்திரிகளுக்கு இந்த செய்தி
முதல் சமர்ப்பணம் –

——————————————————
முதலிலேயே கொசுறு செய்தி –

இந்திய சரித்திரத்திலேயே முதல் தடவையாக –
வெற்றிலைக்கு வரி …..
இன்று முதல், வெற்றிலைக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி….!!!

” ம கி ழ் ச் சி ”

———————————

குடிக்கும் நீருக்கு ஜிஎஸ்டி….

ஜி.எஸ்.டி வரி விதிப்பு: கேன் வாட்டர் விலை உயரும் என
உற்பதியாளர்கள் சங்கம் அறிவிப்பு

By DIN | Published on : 01st July 2017 07:43 PM |

சென்னை: நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை
அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல்வேறு
பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சில பொருட்கள்
விலை குறைந்துள்ளது.

இந்நிலையில் கேன் வாட்டருக்கு 18 சதவீதம் வரி
விதிக்கப்பட்டுள்ளது, இதனால் 20 லிட்டர் கேன் வாட்டர்
விலை 5 முதல் 10 ரூபாய் வரை உயரும் என்று தமிழக
கேன் வாட்டர் உற்பதியாளர்கள் சங்கத்தினர்
தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 20 லிட்டர் கேன் வாட்டர் ரூ.30 முதல் ரூ.40 வரை
விற்க்கப்படுகிறது. கேன் மற்றும் பாட்டில்களில் விற்கப்படும்
குடிநீருக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க
வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை
வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

( அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதும்
இங்கு அவசியம் சொல்லத்தக்கது…!!! )

( http://www.dinamani.com/latest-news/2017/jul/01/ )

——————————————————————-

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to ஜிஎஸ்டி யால் விலை உயராது என்று சொன்ன மந்திரிகளுக்கு ….!!!

 1. Chaaru சொல்கிறார்:

  எதிர்த்து கேட்டால் “உண்மைதானே, பொருட்களின் விலை உயரவில்லையே, வரி மட்டும்தானே உயர்ந்துள்ளது?” என்பார்கள் தேச பக்தி மிகுந்த நண்பர்கள் 😉

 2. Geetha Sambasivam சொல்கிறார்:

  இன்றைய தினமலரைப் பார்த்தால் கடலைமிட்டாய்க்கு வரி இல்லை என்னும் ஆதாரபூர்வமான தகவல் வந்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு சிலர் பரப்பும் வதந்திகளை உண்மை என நம்புபவர்களே அதிகம்! அதே போல் 20 லட்சத்துக்குள் வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு உண்டு!.

 3. புதியவன் சொல்கிறார்:

  நம்ம ஊர்ல வியாபாரிகளைப்போல், தரகர்களைப்போல் அயோக்கியர்கள் (பெரும்பாலும்), அரசுத் துறைகளைத்தவிர வேறு எங்கும் கிடையாது. எதுடா சாக்கு என்று பொருட்களின் விலையை உயர்த்துவதிலும், எந்தப் பிரச்சனை வந்தாலும் பதுக்கலில் ஈடுபடுவதிலும், ஸ்டிரைக் நடத்தினாலும் எப்படியும் இன்றில்லாவிட்டாலும் நாளை, நம் சரக்கை பொதுமக்கள் வாங்கியாகத்தானே வேண்டும் என்ற ARROGANCE னால், இடைஞ்சல் செய்வதும் இவர்களுக்குக் கைவந்த கலை. பொருட்களை உற்பத்தி செய்பவன் சொல்லும் விலையை விட, பலமடங்கு கூட்டி விற்பதும், கணக்குக் காண்பிக்காமல் காசை அமுக்குவதும் இவர்கள் வல்லவர்கள்.

  ஜி.எஸ்.டி என்பது இந்தியா முழுமைக்கும் ஒரே வரிவிதிப்பு. இதில் வரியை கிளெய்ம் செய்யவேண்டுமென்றால், ரசீதும் விற்றதற்கான அத்தாட்சிப் பத்திரமும் வைத்திருக்கவேண்டும். கணக்கு காண்பிக்காமல் கொள்ளையடிப்பதே இவர்கள் தொழில் என்பதால், சத்தம் போடாமல் பொருட்களின் விலையை உயர்த்திவிடுகிறார்கள்.

  அரசு என்ற இயந்திரமே பழுதுபட்டிருக்கும்போது எதையெல்லாம் அரசு சரி செய்யமுடியும்? தலைமை ஆசிரியர் ஒழுங்காகப் படிக்கவேண்டும் என்று சொல்கிறார், எல்லா மாணவர்களும் (பெரும்பான்மை) ஏய்க்கும் வர்க்கம் என்றால், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லையென்றால், தலைமைஆசிரியரைக் குறைசொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? மின்சார வாரிய ஊழியர்கள் பெரும்பாலும் வெட்டிப்பயல்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஊழல் செய்பவர்கள், கவுன்சிலர்கள் கொள்ளையடிப்பவர்கள் என்று எந்த அரசுத்துறை நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் அனைத்திலும் ஊழல் மயம். எப்படிச் சரி செய்வது? ஜெ. செய்தமாதிரி ஒரே அறிவிப்பில் எல்லோரையும் வேலையை விட்டுப் போகச்சொல்லிவிட்டு, இதனை மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு outsource செய்தால் ஒருவேளை ஊழலைக் குறைக்கலாம்.நம்ம இந்தியாவைப் போல தேசபக்தி இல்லாத மக்கள் கொண்ட தேசத்தை உலக மேப்பில் தேடிக்கண்டுபிடிப்பது கடினம்.

  கேன் வாட்டருக்கு ஏன் வரியைக் குறைக்கவேண்டும்? அதுவும் ஒரு உற்பத்தி செய்யப்படும் பொருள்தானே? ஆற்றில் மணலை அள்ளும்போதும் விளை நிலத்தில் பிளாட் போட்டு ஏய்க்கும்போதும், ஆற்றில் கழிவு நீரைக் கொட்டும்போதும். தெருக்களில் கழிவு நீர் வாய்க்காலில் குப்பைகளைப்போடும்போதும், தன் உரிமையான சுத்தமான தண்ணீரை மா’நகராட்சி தராதபோதும் காசு வாங்கி வாக்களித்த மக்களுக்கு ஏன் தெரியவில்லை, இதன் விளைவு மறைமுகமாக நம்மைத் தாக்கும் என்று? அப்புறம் லபோ திபோ என்று புலம்புவதில் என்ன அர்த்தம்?

 4. ஜால்ரா எதிர்ப்பாளன் சொல்கிறார்:

  எழுத வருகிறது என்பதற்காக முட்டாள்தனமாக யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் குறை சொல்லி விடகூடாது. “கேன் வாட்டருக்கு ஏன் வரியை குறைக்க வேண்டும்? ” என்று விதண்டாவாதமாக எழுதுபவர் முதலில் கட்டுரையை
  ஊன்றிப் படிக்க வேண்டும்.
  எதன் மீதும் புதிதாக வரி போடவில்லை. ஜிஎஸ்டி வரி இருக்கின்ற வரிக்கு சமமாக இருக்கும் அல்லது குறைவாக இருக்கும் என்று மந்திரி பேசி இருக்கிறார். அப்படி பேசிவிட்டு, இதுவரை வரியே இல்லாத ‘கேன் வாட்டருக்கு’ 5 % வரி போட்டது எப்படி ? என்பது தான் கேள்வி. திரும்ப திரும்ப பாஜக ஆட்சியை குறை சொல்லி
  கட்டுரை வரும்போதெல்லாம், அது சரியாக இருக்கிறதா,
  இது சரியாக இருக்கிறதா, மக்கள் சரியாக இருக்கிறார்களா என்று பதில் கேள்வி கேட்பதை விட, கட்டுரையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, பிரச்சினைகளுக்கு நேர்மையான முறையில் பதில் விளக்கம் சொல்வது நல்லது.

  • புதியவன் சொல்கிறார்:

   அரசு நிறைய தவறுகள் செய்யுது இந்த ஜி.எஸ்.டி விஷயத்துல. இதை அமுல்படுத்துவது நாட்டுக்கு நல்லது (ஒரே வரி). குளறுபடி செய்பவர்கள் என்னைப் பொறுத்தவரை (வரி போடறதுல குளறுபடி செய்யும் அதிகாரிகள், அமைச்சர்கள்) தேசத்துரோகிகள் என்பதில் சந்தேகம் இல்லை.

   நான் முடிவெடுத்தால் (அந்த இடத்தில் இருந்தால்), அவசியம் இல்லாத லக்சூரியஸ் பொருட்களுக்கு நிறைய வரியும், அவசியம் உள்ள பொருட்களுக்கு குறைந்த வரியும், வரியே இதுவரை இல்லாதவற்றிர்க்கு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு செட்டில் ஆனபிறகு (6-8 மாதத்திற்குப் பிறகு) வரியைக் கொண்டுவருவேன். இப்போ நடக்கிறது எனக்கு உவப்பாயில்லை. இவனுவள்லாம் என்னத்தைப் படிச்சுக் கிழிச்சாங்களோ.

   இந்த ஜி.எஸ்.டியில் நான் நல்லதாக நினைப்பது நாடு முழுதும் ஒரே வரி, எல்லா வியாபாரிகளும் அக்கவுன்டபிள்.

   பிட்சாவுக்குக் குறைந்த வரி, தண்ணீருக்குப் புதுவரி, இட்லி தோசைக்கு வரி என்பதெல்லாம் அதிகாரிகளின், துறை அமைச்சரின் முட்டாள்தனத்தைக் காண்பிக்கிறது. இறக்குமதி செய்யும் எல்லாப் பொருட்களும் (என்னைப் பொறுத்தவரை) லக்சுரி பொருட்கள்தான். அது ஓட்ஸாகட்டும், நூடுல்ஸ் ஆகட்டும் கேஎஃப்சி ஆகட்டும். அவை எல்லாவற்றிர்க்கும் 200% ஜி.எஸ்.டி போட்டாலும் தவறில்லை. அதாவது, விற்பனை மூலம் இந்தியன் அல்லாதவனுக்கு வரவு என்றால் வரியைத் தாறுமாறாக உயர்த்து. WHOEVER HAS GOT SURPLUS MONEY, LET THEM SPEND ON PIZZA, NOODLES, KFC, IMPORTED CHOCOLATES ETC.

   மந்திரி சொன்னாரே என்றெல்லாம் எழுதாதீர்கள். அவரவர்களுக்கு சம்பாதிக்கவே நேரமில்லை. அது ப.சி. யாகட்டும், காங்கிரஸ் ஆகட்டும், பாஜக ஆகட்டும். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். பாஜகவை நான் சேர்த்ததற்குக் காரணம், இன்னும் OBVIOUS RESULT ஏழைகளுக்கோ, சாதாரண எளிய பொதுமக்களுக்கோ தெரியவில்லை. எந்தப் புதிய திட்டங்களிலும் அடி படுபவர்கள் அவர்கள்தான். இதை சரி செய்யாவிட்டால் மக்கள் ஜன’நாயகத்தில் நம்பிக்கை இழப்பார்கள். அடுத்த தேசத்துக்கு நன்மை செய்யறதுக்கு நமக்கு எதற்கு இந்த அரசியல்வாதிகள்?

   மக்கள் (குறிப்பாக ஏழை எளிய மக்கள்) அரசியல் அறிவு பெறாமல், குடித்துக்கொண்டும், காசு வாங்கி ஓட்டளித்தும், வாழ்க்கையை ஓட்டினால், பாதிக்கப்படுவது அவர்கள் சந்ததிதான், பணக்கார இந்தியர்களோ அல்லது உயர் நடுத்தர மக்களோ இல்லை.

   • தமிழன் சொல்கிறார்:

    புதியவன் – இன்னும் கடுமையாக நீங்கள் ‘ஜால்ரா எதிர்ப்பாளனுக்கு’ பதில் சொல்லியிருக்கவேண்டும்.

    பெப்சி, கோக் போன்ற குளிர் பானங்களைப் பருகுகின்ற மக்கள், ஏன் குடிதண்ணீருக்கு வரி கட்டக்கூடாது? ஒரு பெப்சி 20-30 ரூ. இது, நம்முடைய சதையை அறுத்து நமக்கே வியாபாரம் செய்யும் தந்திரம். நம் நீர் ஆதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், விவசாயம் செழிக்காமல்போக, நாடு அழிய தானும் ஒரு காரணம் என்பதை உணராதவர்கள், கேன் தண்ணீருக்கு வரி கட்டினால் என்ன? நம்ம நாட்டுக்குத்தானே அந்தப் பணம் போய்ச்சேருகிறது? என்ன.. கொஞ்சம் மாதங்கள் கழித்து கேன் தண்ணீருக்கு வரி போட்டிருக்கலாம்.

    • ஜால்ரா எதிர்ப்பாளன் சொல்கிறார்:

     தமிழன், புதியவன் –

     நீங்கள் செய்வது ‘சமாளிப்பு’….
     சமையலுக்கும், குடிநீருக்கும் ‘கேன் வாட்டர்’
     வாங்கும் சம்சாரியும்,
     சினிமா தியேட்டரில் ‘கோக்’ சாப்பிடுபவரும் ஒன்றா…?
     சம்சாரி தினமும் ‘கோக்’ வாங்கி குடிக்கிறாரா…?

     எவரோ ‘கோக்’ குடிக்கிறார் என்பதற்காக ஊரிலுள்ள
     எல்லா சம்சாரிகளும் fine கட்ட வேண்டுமா…?

     சமாளிக்காதீர்கள்… உளறிக்கொட்டினால்
     தவறு என்று ஒத்துக்கொள்ளுங்கள்.

 5. Chaaru சொல்கிறார்:

  1. ஜி எஸ் டி யால், பொருட்களின் விலை உயராது என்று சொன்னீர்களே, ஏன் விலை உயர்ந்துள்ளது.

  2. வரி ஏய்ப்பதுதான் ஜி எஸ் டிக்கு மூல காரணம் என்றால், வரி ஏய்ப்பதை தடுக்கலாமே? அரசு அதிகாரிகளை சரியாக வேலை வாங்காமல் பொதுஜனத்தை அவதிக்குள்ளாக்குவதா?

  3. இன்றியமையாத தண்ணீரும் (அரசாங்கம் தரவேண்டியது) சொகுசு பொருட்களும் (கோக் பெப்சி உட்பட) ஒன்றா?

  4. அத்தியாவசிய பொருட்களுக்கு இப்போதாவது விலக்கு தரலாமே?

 6. LVISS சொல்கிறார்:

  Yesterday Minister Nirmala Sitaraman answered questions on GST in a Tamil channel in Tamil – In general what she said was that if you sell any goods in a bag or cover without trade mark no tax need be paid —If any goods is sold in a packet or bag with trade mark they will be taxed because they are advertised –This holds good for the groundnuts prepared and sold loosely which are not taxed or in branded packets which are taxed –As for the canned water she clarified that the tax is for the container and not the water —
  Digressing from this , the highest tax on hotels is 28% -Many people feel this is high –In another interview the FM clarified that at present ie the pre GST tax comes to about 31%–
  The umpteen taxes that were invisible before the GST was introduced have become visible as one single tax ie GST -Most of us may not be aware of the break up of various taxes on purchases that we have been making till now before –We were paying the MRP amount which includes all costs and taxes applicable as far as I could understand – —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Welcome Mr.LVISS…!

   எங்கே போயிருந்தீர்கள் இத்தனை நாட்களாக…?
   வலைப்பக்கமே உங்களை காணோமே…?
   மீண்டும் உங்கள் பின்னூட்டத்தை காண மகிழ்ச்சி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. Woraiyur Pugal சொல்கிறார்:

  புரிந்து கொள்ளவும். தண்ணீருக்கு வரி அல்ல…அதை அடைக்கும் கேன் மற்றும் முடிக்கு தான் வரி…தவறான புரிதலில் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் தண்ணீருக்கு வரி என கிளப்பி விடுவது முறையல்ல…மிக பெரிய போராட்டத்திற்க்கு gst இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது..குறைகள் இருக்கத்தான் செய்யும்…மாதம் ஒரு நாள் gst கவுன்சில் கூடுகிறது..தங்களது குறைகளை மாநில அரசுகள் எடுத்து வைக்கலாம் என கூறியுள்ளது…வரும் காலங்க்ளில் நீங்க சொன்ன வெற்றிலை முதல் எல்லாவற்றையும, எடுத்தது வைத்து வரிவிலக்கு பெறட்டும்…இன்று அஅமலானா gst மட்டுமே நிரந்தரம் இல்லையே ….

  • LVISS சொல்கிறார்:

   One more clarification was given regarding filing returns — Now it is being misinformed that 3 returns have to be filed every month — The return consists of three parts – The dealer has to fill up the first part and the second and third part are auto populated –
   It will take some time to adjust to the new tax regime —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.