வினை விதைத்த திருவாளர் சு.சாமி. தினையா அறுக்க முடியும்…?


மது அருந்திய மந்தியை தேள் கொட்டிய மாதிரி இயங்கிக்
கொண்டிருப்பது அவர் இயல்பு. காரணமே இல்லாமல்,
யாரைப்பற்றி வேண்டுமானாலும் அசிங்கமாகவும்,
அவமரியாதையாகவும், பொய்யாகவும் உளறிக்கொட்டி,
அவமானப்படுத்துவது அவரது பொழுதுபோக்காக இருக்கிறது.

திருவாளர் சுப்ரமணியன் சுவாமியை பற்றித்தான் நான்
சொல்கிறேன் என்பதை வாசக நண்பர்கள் சொல்லாமலே
புரிந்து கொள்வார்கள்….!!!

இத்தகைய செயல்களின் மூலம் கிடைக்கும் விளம்பரத்தை
அவர் மோகிக்கிறார் – அவருக்கு அதில் ஒருவித போதை
கிடைக்கிறது என்றே தோன்றுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அவரது தற்போதைய
நெருங்கிய நண்பர்களும், ஆதரவாளர்களும் திரு.தினகரனும்,
திருமதி சசிகலாவும் தான். மற்ற அனைவரையும்
ஏளனப்படுத்திக் கொண்டும், அவமானப்படுத்திக் கொண்டும்
தான் இருக்கிறார்.

அண்மைக்காலங்களில், திரு.ரஜினிகாந்தை காரணமேயின்றி
வசை பாடிக்கொண்டிருக்கிறார். ஆதாரமற்ற அவதூறுகளை
அவர் மீது அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார். இத்தனைக்கும்
திரு.ரஜினிகாந்த், இவரைப்பற்றி இன்று வரை எதுவுமே
சொன்னதில்லை.

இந்த இடுகையை நான் எழுத முனைந்தது, எந்தவித
சீரியசான காரணங்களுக்காகவும் அல்ல. இவரது வக்கிரங்கள்
இவரை / மக்களை எங்கு கொண்டு சேர்க்கின்றன என்பதை
சுட்டிக்காட்டத்தான்….

பொதுவாக இதுநாள் வரை, மற்றவர்களைப் பற்றி இவர்
தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிக் கொண்டிருந்த
போதெல்லாம், வழக்கம் போல், அவரது பஜனைக்கூட்டம்
மட்டுமே பின்தொடர்ந்து பாராட்டும்….சாதாரணமாக அதற்கான
எதிர்வினைகள் அதிகம் எழுவது வழக்கமில்லை…..

ஆனால், நேற்று ரஜினியைப்பற்றி அவர் போட்ட ட்விட்டர்
பலபேரை கடுப்பேற்றி இருக்கிறது. திரு.ரஜினிகாந்த்,
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் –
இது ஏற்கெனவே திட்டமிடப்பட்டு, வெளிப்படையாக
அறிவிக்கப்பட்ட செய்தி தான்.

இருந்தாலும், நேற்று திரு.சு.சுவாமி வேண்டுமென்றே
திரு.ரஜினிகாந்தை அவமானப்படுத்தும் விதத்தில்,
எதிலிருந்தோ தப்பிப்பதற்காக அவர் (R.K.) அமெரிக்கா ஓடி
விட்டதாக எழுதி இருந்தார்.

சும்மா இருப்பார்களா ரஜினி அன்பர்கள்….?

வரிசையாக வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறார். நம்மைபோல்,
நாகரிகமாக, பண்பாக விமரிசனம் செய்தால் எல்லாம்
அவருக்கு உறைக்காது….
சுடச்சுட, கடுமையான வார்த்தைகளால் அவரது ட்விட்டர்
பக்கத்தில் வந்து விழுந்துகொண்டிருக்கிறது பதில் வினை.

நான் தான் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை
என்று விரதம் ( !!! ) எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால்,
அங்கே வந்திருப்பதை இங்கே எடுத்துப்போடுவதில் தவறு
ஒன்றுமில்லையே…. 🙂 🙂 🙂

ஆனால், அதிலும் ஜாக்கிரதையாக, ஓரளவு soft -ஆன, எதிர்வினைகளை மட்டும் கீழே வடிகட்டி தந்திருக்கிறேன்…!!! என்னால் சென்சார் செய்யப்படாத வினைகளை பார்க்க விரும்புபவர்கள் அவரது ட்விட்டர் தளத்திற்கே சென்று பார்க்கலாம்.

கீழே இருப்பது சாம்பிள் மட்டுமே…!!!

——————————————————————-


saranya nadaradjane‏ @saranyagn

Ena thaan bro avanuku venumam. Y do u ppl don’t take any actions
on him
————————–
ராஜேஷ்‏ @Itisraj1990

நண்பா,அவன் சாதா சில்ற கிடையாது,பெரிய சில்ற
அவனலாம் ஒன்னும் பண்ண முடியாது,முடிஞ்ச வரைக்கும்
இங்க அவன காரி துப்பிக்க வேண்டியதான்
————————–

saranya nadaradjane‏ @saranyagn

He won’t adangify bro. See the kind of language he is using. How he
can say 420?

———-
ராஜேஷ்‏ @Itisraj1990 3

ஏனா அது ஒரு பைத்தியம் பிடிச்ச பரதேசி,இப்படி தான் பேசும்

#mentalsswamy
——————————–

prasadka‏ @prasadka

The one Swamy is scared of.. he joins BJP you will be history

—————–

Thalaivar Rasigan‏ @ssrasigan
Replying to @Swamy39

You will not get more than 50 votes. That is your level, Anyway, you are trying to get more publicity. You have become cheap & 3rd rated?

————-

Jαιρяιαη‏ @Jaiprian

u r unfit to comment on RK. U r such a cheap fellow got money from
sasi & TTV n acting like good guy in public .

Jαιρяιαη‏ @Jaiprian

Mr publicity mental, don’t dream RK will rply for ur comments. He nvr evr respond low level 🐶 lik u.


S Amudhan‏ @samudhan
@venky29256560 @Swamy39

Thalaivar will never talk negatively.. We too should follow.. Just let Swamy talk what he wants..

Jαιρяιαη‏ @Jaiprian

Media guys, this mental @Swamy39 commenting Rajini for free
publicity. Pls give him some attention.

Rajini வெறியன் Muthu‏ @NoorumugamMuthu

இனி நீ சுப்ரமணியன் என்று அழைக்கப்படாமல்
எல்லோராலும் …….மணியன்
என்று அன்போடு அழைக்கப்படுவாய்……………
Double 420 #MentalSuSwamy

THALAIVAR FOUNDATION‏ @Dreamsundar

Soon u will get punishment from GOD…

SIVAJI THE BOSS‏ @maha578237

@narendramodi Modiji pls admit him in mental hospital…

பாஸ்கர் அம்பிகாபதி 🤘‏ @BhaskarCVF

#FraudSuSwamy – Rajni never talked about you. And, you are keep
on abusing him.

Ramasubramanian 🇮🇳‏ @RamRajiniVerian

Guys please don’t use foul language against this guy, because what
we speak will reflect our @superstarrajini Thalaivar. So just ignore him.

Arunkumar‏ @arun_christ2003

எதிரகளை அழிக்க எத்தனையோ வழிகல் இருக்கு . முதல்
வழி மன்னிப்பு அது நம் தலைவர் வழி.

——————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to வினை விதைத்த திருவாளர் சு.சாமி. தினையா அறுக்க முடியும்…?

 1. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நான் சொல்வதற்கு மன்னித்துக் கொள்ளவும்.
  நீங்கள் அனியாயத்துக்கு soft ஆக இருக்கிறீர்கள்.
  Please be more AGGRESSIVE.
  குறைந்த பட்சம் சு.சு.மாதிரியான ஆட்களிடம்.

 2. Ramesh சொல்கிறார்:

  சு.சா.வுக்கு தமிழகத்தில் உரிய மரியாதை கிடைக்கவில்லை.
  அதை எவ்வளவோ தடவை பல விதங்களில் அவர் எடுத்துக்காட்டியும்
  யாரும் உணர்வதாக தெரியவில்லை. அடுத்த தடவை அவர் தமிழ்நாடு
  வரும்போது “அவருக்கு உரிய மரியாதை”யை கொடுத்து விட்டால்,
  பிறகு அவர் ஏன் இப்படி எல்லாம் பேசப்போகிறார் ? தமிழ்நாடு அவர்
  விஷயத்தில் இப்படி”பாராமுக”மாக இருப்பது சரியல்ல.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கவலை வேண்டாம் ரமேஷ்.

   அடுத்த தடவை அவர் தமிழகத்திற்கு வரும்போது
   அவரது குறை களையப்பட்டு விடுமென்று நம்பலாம்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  பிஜேபியின் அரசியல் சதுரங்கத்தில் மாட்டிக்கொண்ட மராட்டியர் நடிகர் ரசினி

  பிஜேபி தனது முகமாக தமிழகத்தில் ரசினியை கொண்டுவர முனைப்பு காட்டுகிறது என்பது ஏற்கனவே அறிந்த விஷயம் தான் ஆனாலும் ரசினிக்கு மக்கள் செல்வாக்கு என்பது துளியும் இல்லை என்பதை ஏற்கனவே ரசினி வாய்ஸ் கொடுத்து வாங்கிகட்டிக்கொண்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அபரிமிதமான வெற்றியே சாட்சி.

  ஜெயலலிதா காலத்தில் இனி தமிழகத்தை கடவுளை வந்தாலும் காப்பற்ற முடியாது என்று அவர் சொல்லியிருக்காவிட்டாலும் மறைந்த ஜெயலலிதா அம்மையார் மீது அந்த நேரத்தில் மக்கள் சொல்லென கோபம் கொண்டிருந்தார்கள் அது தான் அந்த நேரத்தில் குருவி உட்கார பணம்பழம் விழுந்த கதையாக ஆனது என்பது அரசியல் விமர்சகர்கள் நன்கு அறிவார்கள்.

  இப்பொழுது பொறுக்கி புகழ் சு.சாமி பாஜாகவின் முகமாக ரசினியை முன்னிறுத்துவதற்கு வசதியாக மக்களின் அனுதாபத்தை பெறும் வகையில் தன்னுடைய டிவிட்டரில் ரசினியை 420 என்றும் அவன் இவன் என்றும் பதிவு செய்கிறார் இதில் நமக்கொன்றும் வருத்தமில்லை தான் ஆனால் சு.சாமியின் இந்த விளையாட்டை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

  ஆம் அவர் திட்டுவது போல திட்டுகிறார் அதை புரிந்துகொள்ளாமல் மக்களும் இப்பவே ரசினி மீது அனுதாப படத்தொடங்க்கி விட்டனர் என்பதற்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பொங்கும் மக்களை வைத்தே புரிந்துகொள்ள முடிகிறது.

  ரசினி திரையில் விட நிஜ வாழ்க்கையில் உலக மகா நடிப்புகாரர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் இவ்வளவு கேவலமாக சு.சாமி, ரசினியை கேவலபடுத்தியும் ரசினி தரப்பில் ஒரு எதிர்வினையும் இல்லையே இதை எப்படி எடுத்துக்கொளவது.

  ஆனால் ஒன்றை மட்டும் நிச்சியமாக புரிந்துகொள்ள முடிகிறது ரசினி அரசியலுக்கு வர விருப்ப படுகிறார் (அதற்கு அவர் பொறுத்தமில்லாதவர் 100% அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை) ஆனால் அதே ரசினையை பிஜேபி தங்களின் முகமாக தமிழகத்தில் நிலை நிறுத்த பார்க்கிறது.

  சோலியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல தான் சு.சாமியின் விளையாட்டும் ரசினிக்கு ஏதோ ஒரு மறைமுக செய்தியை சொல்லிக்கொண்டு இருக்கிறது.

  ஜிஎஸ்ஆர்

  • arulnithya சொல்கிறார்:

   Thiru GSR,
   Have you ever read Rajini’s essay published 96 in dugluk.. 11 episodes “ANTHA 5 functions”.. and it would be great if you go to the past and recollect RAJINI”S stand…MODI came to his house and asked his support even last elections.. Rajini politely refused it..RAJINI never acted in real life…not even hide his real look in public..

   • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

    மன்னிக்கவும் நான் அதை படிக்கவில்லை ஆனாலும் துக்ளக் ரசினியை குறித்து எப்படி எழுதியிருப்பார்கள் என்பதை படித்து பார்க்காமலே யூகிக்க கூடிய விஷயம் தான்.

    ரசினி ஆஹா ஓஹோவென இருக்காலம் உங்கள் பார்வையில் ஆனால் பொதுவெளிக்கு, அவர் சார்ந்த சமூகத்திற்கு என்னவிதமான பங்களிப்பை (இந்த இடத்தில் பணம் பொருள் அல்ல மாறாக அரசியல் குறித்தான, மக்களின் பிரச்சினை குறித்தான நிகழ்வுகளில் என்றே எடுத்துக்கொள்ளவும்) செய்திருக்கிறார்.

    • arulnithya சொல்கிறார்:

     thiru GSR, Rajini did when ever required…he addressed the year92 kaveri issue and said he would go with 50000 rasigars if Karnataka not stopped the riots against tamil people.. he is the only person really supported kaveri issue meaningfully, did fasting..he is the person talked against the Karnataka CM in okenakkal issue..he is the only asked sorry (varuththam not mannippu) when some wrong words against public Karnatha people and clearly said that the “Udaikka vendama” word is only for the people who did wrong things.. he participated Tamil eelam supports meeting held in Nadigar sangam and talked against the Srilankan goverment and Even LTTE natesan said thanks to Rajini..Even no one ready to say anything against JJ openly during 1991 -1996, he came, made a voice against her..He is always doing what ever he can do as an Actor or Common man in openly or in back ground..Also those essays are written by Rajinikanth only, not by CHO..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அய்யா ஜிஎஸ்ஆர்,

   நீங்கள் ரஜினியை ஆதரியுங்கள் அல்லது எதிர்ப்பு தெரிவியுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.

   ஆனால் தமிழை மட்டும் தயவுசெய்து இப்படி கொலை செய்ய வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

   – வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

    காவேரி மைந்தன் அய்யா அவர்களுக்கு, தமிழை கொலை செய்கிறேன் என சொல்லியிருக்கிறீர்கள், பிழைகளை சுட்டிக்காட்டினால் வரும் காலங்களில் திருத்திக்கொள்கிறேன்… அதே நேரத்தில் மேலை எழுதியதில் ஒரு பிழை இருக்கிறது அது என்னவென்று நான் அறிகிறேன்… அதை மனதில் வைத்து தான் நீங்கள் எனக்கான பதிலை எழுதியிருக்கிறீர்கள் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன் அய்யா.

    விதண்டாவாதமாக கருதவேண்டாம்…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப ஜிஎஸ்ஆர்,

     நீங்கள் கருத்து கூறியதில் நான் பிழை காணவில்லை. மாறுபட்ட கருத்துக்களை கூற உங்களுக்கு நிச்சயமாக உரிமை இருக்கிறது. அதை மறுத்துக்கூற மற்றவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

     நான் சுட்டிக்காட்ட வந்தது எழுத்துப் பிழைகளைத்தான்…
     அதையும் நகைச்சுவையாக ” கொல்லாதீர்கள்” என்று சொல்ல
     வந்தேன்… அவ்வளவு தான்.

     கீழே சில சொற்களை காட்டி இருக்கிறேன். இன்னும் கொஞ்சம்
     கவனமாக இருந்தீர்கள் என்றால், இத்தகைய எழுத்துப்பிழைகளை தவிர்த்து விடலாம்.

     ரசினி ( ரஜினி – ‘ஜ’ ஏற்றுக்கொள்ளப்பட்ட
     தமிழ் எழுத்து தான் -தாராளமாக பயன்படுத்தலாம்…)

     சொல்லென கோபம் (சொல்லொணா கோபம் )
     பணம்பழம் (பனம்பழம்)
     சாதரணமாக (சாதாரணமாக )
     கேவலபடுத்தியும் (கேவலப்படுத்தியும்)
     நிச்சியமாக (நிச்சயமாக)
     பொறுத்தமில்லாதவர் (பொருத்தமில்லாதவர்)
     சோலியன் குடுமி (சோழியன் குடுமி)

     – நான் சுட்டிக்காட்டியதை சீரியசாக எடுத்துக் கொள்ள
     வேண்டாம். நல்ல தமிழில் எழுத ஆர்வம் கொள்ளுங்கள்
     என்று உரிமையுடன் சொல்ல வந்தேன் அவ்வளவே.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 4. DeathBirthRaceR சொல்கிறார்:

  எனக்கு அரசியல் வழி சுத்த துணிந்த நண்பர் தாங்கள் குறிப்பிட்ட சு.சா டுவிட்டி பல விசயம் என்னோடு பகிர்ந்துள்ளார் அவர் எண்ணப்படி பேசுவதை விட அவர் அகப்பை வாழ்வாதார போராட்ட மமதை படி பேசுவதை என்றோ அறிந்து அரசியல் இதுவே என நான் என் உரையாடலை நட்பாய் அரசியல் அறிவு ஏற்பாய் என இளஅரசியல் நட்பிடம் தேச நலன் கருதி தூய மனத்துண்கண் தேவை மாற்றம் தன்னலம் துறந்த தேசமாற்றம் என உரையாடிய நினைவு …..

  வாழ்வாதாரம் பணத்துக்கா குணத்துக்கா இல்லை தேச நலனுக்கா என வழி காட்டி உரையாடிய நினைவை அசை போட வைத்த தேசசிந்தனை இன்றும் தங்களால் நினைக்க சு.சா யார் என நல்லவை தீயவை கடந்து தேச தூய்மை உணர எண்ணிபார்க்க வைத்த கா.மை வாழ்த்துக்கள்…..

  அரசியல் அற்புதமானது இளைய தலைமுறைக்கான ஆடுகளமானது ஆட தூய தலைமுறை எண்ணி துணிவதேது …..!

 5. சுவாமி ரசிகன் சொல்கிறார்:

  அரசியலில் காலை ஆட்டிக்கொண்டே படுக்கவில்லையானால், செத்துவிட்டான் என்று இடுகாட்டுக்குத் தூக்கிச்சென்றுவிடுவார்கள் அல்லது மக்கள் மறந்துவிடுவார்கள். அரசியலில் வெட்கம் மானம் ரோஷம் என்ற எதையுமே பார்க்கக்கூடாது. பொய் சொல்வதற்கு கொஞ்சம்கூட வெட்கப்படக்கூடாது. எத்தனை அடி வாங்கினாலும், முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். இதெல்லாம் அரசியலில் பாலபாடம்.

  சு.சுவாமி இதனைப் பின்பற்றும்போது ஏன் மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது?

  1. மானம் இல்லாமல், 2 ஜி, தொலைக்காட்சி ஊழல், மஸ்டர் ஊழல், அண்ணா நகர் ரமேஷ் முதல் எல்லாவற்றிலும் பங்கு எடுத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே அமைச்சர் விஜயபாஸ்கர் மேல் குற்றம் சாட்டும் ஸ்டாலினைப் பார்த்து யாரும் இந்தக் கேள்வியை வைப்பதில்லையே?
  2. தமிழ் வாழ்க என்று சொல்லிக்கொண்டே ஆங்கிலவழிக் கல்விக்கூடங்களை நடத்தும் ஸ்டாலினைக் கேள்விகேட்க மனம் எங்கே போனது?
  3. கடவுள் இல்லை என்று ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு, கோவில் கோவிலாகச் சுற்றும் ஸ்டாலின் குடும்பத்தைக் கேள்வி கேட்க யாருக்குமே மனம் இல்லையே?
  4. ஏழைகளை முன்னேற்றுவோம், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொல்லிக்கொண்டே பல்லாயிரம் கோடி சுருட்டிய குடும்பத்தின்மீது வராத ஆத்திரமா சு.சுவாமியின் ட்வீட்டினால் வரும்?

  சு.சுவாமி பஜனை செய்துகொண்டிருந்தாலோ அல்லது திருக்குறளுக்கு உரை எழுதினாலோ இப்படி செய்தித்தாளிலோ அல்லது மக்கள் மனங்களிலோ அடிபடுவாரா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.