முதல்வர் மீது F.I.R….?

நிகழ்ந்தால், தமிழக அரசியல் நிலவரத்தை தலைகீழாக
புரட்டிப் போட்டு விடக்கூடிய ஒரு விஷயம்….,.!!!
நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி
இந்த வார ஜூ.வி.இதழில் வெளிவந்துள்ள ஒரு
கட்டுரை கீழே –
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to முதல்வர் மீது F.I.R….?

 1. புதியவன் சொல்கிறார்:

  நம்ம தமிழ்னாட்டில் இப்படித்தான் அதிகார வர்க்கமும் போலீஸ் துறையும் மற்ற துறைகளும் செயல்படுது, ரொம்ப ரொம்ப வருடமாகவே (60 வருடங்களுக்கு மேல், அதிலும் கடந்த 45 வருடங்களாக).

  இதை ஏன் மக்கள் பொருட்படுத்துவதில்லை? காரணம், இங்கு யாரும் யோக்கியன் கிடையாது. தமிழக சிறு குழந்தைகளுக்குக்கூடத் தெரியும் திருமங்கலம் இடைத் தேர்தல் எப்படி நடைபெற்றது என்று. அதைப்பற்றி ஏதாகிலும் பேச்சு, பொது நல வழக்கு, எஃப்.ஐ.ஆர் ஏதாவது கேள்விப்பட்டதுண்டா? திமுக முழுவதும் படு மோசமான கசடர்களைக் கொண்ட கட்சி. அதற்குப் போட்டி போடும்விதமாக அதிமுகவை நடத்தும் மன்னார்குடி கும்பல் மற்றும் எடப்பாடி கும்பல் நடந்துகொள்கிறது. இதில் யாரைக் குற்றம் சாட்ட யாருக்கு யோக்கியதை இருக்கிறது?

  கேட்டால், பழைய கதை பேசக்கூடாது இப்போதுள்ளதைப் பேசவேண்டும், இடுகைக்குச் சம்பந்தமானதைப் பேசவேண்டும் என்று நடு’நிலையாளர்கள் வருவார்கள். இந்த சம்பவமும் பழைய சம்பவம்தான். இதைவிட லேட்டஸ்ட் ஊழல்கள்லாம் நிறைய வந்திருக்கும். நம்ம அரசியல்வாதிகள் ஊழல் செய்யும் வேகத்துக்கு உலகத்தில் மற்ற நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள போலீசும், நீதிபதிகளும் கோர்ட்டுகளும் உழைத்தாலும் யாரையும் உள்ளே தள்ள நேரம் கிடைக்காது.

  என்னைக்கேட்டால், போலீஸ் அரசியல் சம்பந்தமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதை இன்னும் 10 வருடங்களுக்கு நிறுத்தவேண்டும். ஒரு பொதுனல வழக்கும் அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே பென்டிங்கில் இருக்கிற திமுகவின் 2ஜி, ஏர்செல், வோல்டாஸ், கலைஞர் தொலைக்காட்சி 200 கோடி ஊழல், அரசாங்க கேபிளைத் தன் பிசினெசுக்கு உபயோகப்படுத்தி 500 கோடி சுருட்டிய ஊழல் போன்ற அனைத்தையும் முடித்துவிட்டு அதன் பிறகு மற்ற புதிய ஊழல்களின்பக்கம் கவனத்தைச் செலுத்தினால் போதும்.

  ‘காவல்துறையின்மீது அவ’நம்பிக்கை ஏற்படுத்துகிறது’ – இதை யார் சொல்கிறார்கள்? ப.சி. போலிக்கணக்கின்மூலம் திமுகவின் நேரடி உதவியினால் ஏய்த்து, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட எலெக்ஷனில் (2009) வெற்றிபெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை இன்னும் நடத்தலாமா அல்லது ப.சி. போனபிறகு கிடப்பில் போடலாமா என்று யோசித்துக்கொண்டிருப்பவர்கள். ப.சி. அந்த வெற்றியை உபயோகப்படுத்தி பல்லாயிரம் கோடி, அவர் மகன் மூலமாகச் சுருட்டினார், அந்த 5 வருடங்களில்தான் கார்த்திக் சிதம்பரம் உழைத்து 4,000 கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார் என்று மக்கள் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.

 2. selvarajan சொல்கிறார்:

  இங்கே மட்டுமா இந்த நிலை …? இந்தியா முழுக்க இதேதானே நடக்கிறது — மனுஷனே மனுஷனை அடித்துக் கொல்லும் கலாசாரம் சமீப காலத்தில் அதிகமாக இருப்பதும் — வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதும் — ஊழல் அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுங்கள் என்று உத்திரவு போடும் நீதி மன்றங்கள் — எப்போதாவது ஊழல் அரசியல்வாதிகளின் லிஸ்டை வெளியிடுங்கள் என்று கூறியிருக்கிறதா …. ? அந்தந்த ஆளும் கட்சிக்கு வால் பிடிப்பதும் — அடிவருடுவதும் தொடர்ந்தால் தானே இவர்களை போன்றவர்கள் கொள்ளை அடித்து குபேரானாக இருக்க முடியும் ….

  காரியம் ஆக வேண்டும் என்றால் ரெய்டு என்று பாவ்லா காட்டுவதும் அதன் பிறகு கிடப்பில் போட்டுவிட்டு — உறங்குவதுமாக இருக்கும் மத்திய மாநில துறைகளும் — இருக்கும் வரை இது போன்ற செயல்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கும் — எதிர்க்கட்சி ஆளும் கட்சியானவுடன் — முந்தைய ஆளும் கட்சியால் போடப்பட்ட வழக்குகளை — அது கொள்ளை — ஊழல் — கொலை போன்றவைகளை சார்ந்ததாக இருந்தாலும் — வாபஸ் வாங்குவதும் — மக்கள் மற்றும் வழக்கு நடந்த நீதிமன்றங்களும் வாய் மூடி மெளனமாக இருப்பதும் தானே நடைமுறையில் உள்ளது —

  ஒரு தலைவனுக்காவது நான் யோக்கியமானவன் என்றும் — என் மீது எந்த வழக்கும் பதிவாக வில்லை என்றும் — வாபஸ் வாங்கவில்லை என்றும் கூறும் திராணியிருக்கிறதா … ? இல்லாத பட்சத்தில் இந்த எப்.ஐ.ஆர் மட்டும் நேர்மையாக செயல்படுமா …? கொந்தளிக்கும் இடங்களை குளிர வைக்கும் கலை அறிந்தவர்களுக்கு இது சும்மா … ஜூ .. ஜூபி … இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது — வாய்தா … வாய்தா … வாய்தா … ஆட்சி முடிவுக்கு வரும் வரை …. வந்த பின்னும் …. !!!

 3. chaaru சொல்கிறார்:

  பொதுவாகவே அரசு ஊழியர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை நபர்கள், ராணுவ வீரர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சிறுவர்கள், மீது FIR பத்தியமாட்டார்கள். ஒரு முக்கிய காரணம் நல்லவர்கள் பெரிய பணமுள்ள ஆட்களை மிரட்டுவதற்கு ஒரு கருவியாக தகவல் அறிக்கை உதவி செய்யும். அதுவும், சில நேரம் வழக்கறிஞர்கள் பொய் சொல்லவேண்டி இருக்கும். காவலர்கள் சந்தேகத்தின் பேரில் அடிப்பார்கள். ஜாதிகட்சி ஆட்கள் மற்றவர்களை பற்றி கேவலமாக பேசுவார்கள். சுற்றுலா பயணிகளின் போதை, மாது விஷயங்களை கோவா போன்ற இடங்களில் சகித்து கொள்வார்கள். அதிகாரிகள் தொழில் நிமித்தமாக பலருக்கு தீங்கு விளைவிக்க வேண்டி இருக்கும். ராணுவ வீரர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகள் உண்டு. நீதிபதிகள் அனைவரும் உத்தமர்கள் அல்ல. பொது ஜனத்துக்கு வேண்டுமானால் சட்டத்தின் மீதும் நியாயத்தின் மீதும் பயம் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி FIR அனைவரின் மீதும் பதிய முடியாது. இதுதான் உண்மை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.