ஏன் இவர்களை பிடிக்க முடியாது ….?


பெரிய பெரிய நகரங்களில் கோடிக்கணக்கில்,
பள பள பங்களாக்கள்…
8 லட்சம் டாக்டர்கள்…
8 லட்சம் சார்ட்டர்டு அக்கவுண்டெண்டுகள்…
2 லட்சம் எஞ்ஜினீயர்கள் மற்றும் எம்.பி.ஏ.க்கள்…
2.18 கோடி பேர் – கடந்த வருடம் “வெளிநாடு”களுக்கு
“ஹாலிடே டூர்” சென்ற இந்தியர்கள்…

( இதில் முக்கியமான இன்னொரு ரகமான,
வக்கீல்களை சொல்லாமல் விட்டு விட்டார்கள்…! )

– இத்தனை பேரில், வெறும் 32 லட்சம் பேர் மட்டுமே
வருடத்திற்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பதாக கூறி,
வருமான வரி கட்டி இருக்கிறார்கள்….

-யாராவது இந்த எண்ணிக்கை உண்மையானது
என்று நம்புகிறீர்களா…?

—————————-

– இப்படி கேட்பது யாராவது எதிர்க்கட்சியினர் என்று
நினைத்து விட வேண்டாம்… ஆட்சி, அதிகாரத்தில்
இருப்பவர் தான் இத்தனை தகவல்களையும் தந்து,
கேள்வியையும் எழுப்புகிறார்…!!!

——————————————

“these people ( those who are cheating…) are
mostly salaried class people in government
or private companies….”

-இதுவும் அவரே சொல்வது….!!!
——————————————-

இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் எவரும்
வருமான வரி கட்டாமல் ஏய்க்க முடியாது….
சட்டம் அப்படி…?

Tax Deduction at Source – மாத சம்பளம்
வாங்குபவர்களின் வரியை பிடித்தம் செய்து அரசாங்க
கஜானாவில் செலுத்தும் பொறுப்பு சட்டப்படி
அவர்களுக்கு சம்பளம் கொடுப்பவர்களுடையது.

எனவே, இதைச்செய்ய தவறினால், அவர்கள் தான்
சிறை செல்ல வேண்டும் என்பதால் –
மாதச் சம்பளம் வாங்குபவர்கள் வரி கொடுக்காமல்
ஏமாற்றுகிறார்கள் என்று சொல்பவர் அரசுப் பதவியில்
இருக்கவோ, இதைப்பற்றி பேசவோ கூட
-தகுதியற்றவராகிறார்…!

நிஜத்தில், மாத சம்பளம் வாங்குபவர்களிடம் மட்டும் தான்
ஒழுங்காக வருமான வரி வசூலிக்கப்படுகிறது….

அப்படியானால் – ஏய்ப்பவர் யார்…?
அது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும்…

– பங்களா ஓனர்களின் லிஸ்ட் அரசிடம் இருக்கிறது….
– டாக்டர்களின் லிஸ்ட் அரசிடம் இருக்கிறது…
– எஞ்ஜினீயர்களின் லிஸ்ட் அரசிடம் இருக்கிறது…
– வக்கீல்களின் லிஸ்ட் அரசிடம் இருக்கிறது…
– வெளிநாட்டுகளுக்கு ஹாலிடே டூர் போனவர்களின்
லிஸ்ட்டும் அரசிடம் இருக்கிறது.

அவர்களின் பான் நம்பர் இருக்கிறது…
போன் நம்பர் இருக்கிறது….
ஆதார் நம்பர் இருக்கிறது…
வங்கி கணக்குகளின் விவரம் இருக்கிறது….
வருமான வரி கட்டுபவர்களின் லிஸ்ட்டும் –
அரசிடம் இருக்கிறது….ஆக மொத்தம் அவர்களைப்பற்றிய
அத்தனை விவரங்களும், அரசிடமே இருக்கிறது…!

இவற்றை கூட்டி, கழித்து, பட்டியல்களை வடிகட்டி –
இறுதியில் வரி கட்டாமல் ஏய்ப்பது யார் என்று
கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது….?

இதைச் செய்ய வேண்டியது மத்திய அரசா அல்லது
பொதுமக்களாகிய நீங்களும் நானுமா… ?

அரசாங்கத்தால் இதைச் செய்ய முடியவில்லை என்றால்
கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொண்டு,

ஏற்கெனவே அரசிடம் தயாராக இருக்கும்,
வருமான வரி கட்டுபவர்களின் பட்டியலை மட்டுமாவது
( அவர்கள் கட்டும் தொகையுடன் ), அரசின்
வலைத்தளத்திலேயே பொதுமக்கள் பார்க்க வெளியிடட்டும்.

யார் வரி கட்டி இருக்கிறார்கள்,
எவ்வளவு வரி கட்டி இருக்கிறார்கள்
என்கிற பட்டியலை பார்த்தால் –

அரசின் அங்கங்கள் வேண்டுமானால்,
தங்களுக்கு தெரியாதது மாதிரி நடிக்கலாம்.

கட்டாமல் ஏய்ப்பது யார் என்பதை பொதுமக்கள்
வெகு சுலபத்தில் கண்டு பிடிப்பார்கள்……சமூகத்தில்
கோடிக்கணக்கில் சம்பாதிப்பது யார் என்பதை அவர்கள்
பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

கண்டு பிடித்து அவர்களே அரசுக்கு லிஸ்ட் கொடுப்பார்கள்…
ரெடியா…?

வருமான வரி கட்டாமல் ஏய்ப்பவர்களின்
பட்டியலைத்தான் அரசால் கொடுக்க முடியாது…

வருமான வரி கட்டுபவர்களின் பட்டியலையாவது
கொடுக்கலாம் அல்லவா…?

அதை வைத்துக்கொண்டு, ஏய்ப்பவர்களின் பெயர்களை
மக்கள் அரசுக்கு தெரிவிப்பார்கள்….

அப்போதாவது அரசு, வரி கட்டாமல் ஏய்க்கிறார்கள் என்று
போலியாக புலம்பாமல், ஏய்ப்பர்களிடமிருந்து வரியை
வசூலிக்க நடவடிக்கை எடுக்குமா…?

—————————————————

சொந்தமாக தொழில் செய்பவர்கள்,
பெரிய பெரிய வர்த்தகர்கள்,
பெரிய பெரிய தொழிலதிபர்கள்,
சினிமா நட்சத்திரங்கள்,
வக்கீல்கள், டாக்டர்கள், எஞ்ஜினியர்கள்,
சார்ட்டர்டு அக்கவுண்டெண்டுகள்,
பரம்பரை பண முதலைகள்….

இவர்களை பிடிக்க மனமில்லாமல், வக்கில்லாமல் –
பொதுக்கூட்டங்களில் வாய்ச்சவடால் ஏன்…?

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ஏன் இவர்களை பிடிக்க முடியாது ….?

 1. Karthik சொல்கிறார்:

  I am paying almost for all the items under GST regime. Why should i pay income tax?
  Double taxation.

  • LVISS சொல்கிறார்:

   GST is a replacement tax for all the indirect taxes we have been already paying for goods and services—MRP which we have been paying so far includes tax elements also– Income tax is for the income earned —

 2. புதியவன் சொல்கிறார்:

  1. பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கு அரசு வீடு கொடுக்கிறது. அதை உள்வாடகைக்கும், காரை நிறுத்தும் கேரேஜையும் வீடுபோல் வாடகைக்குக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கின்றனர் அனேகமாக எல்லா எம்பிக்களும்.
  2. எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கலாம். இதற்கு அரசு தரப்பில் நிச்சயமான பதில் கிடைக்கும். இதற்கு தங்கள் லெட்டர் பேடுகளை ஒரு கேள்விக்கு இவ்வளவு லட்சம் என்று விற்கின்றனர் அனேகமாக எல்லா எம்பிக்களும்.
  3. தமிழ்’நாட்டில், ‘ஏழை மக்களுக்காகப் பாடுபடுகின்ற’ எல்லா அரசியல்வாதிகளும் துபாயில் பிசினெஸ் செய்கின்றனர், வீடுகள் வைத்திருக்கின்றனர். வெறும் 2000 ரூ மாதச் சம்பளம்கூட வாங்கியிராத துரைமுருகன், டி.ஆர் பாலுவின் எல்லா குடும்ப உறுப்பினர்கள், அல்லக்கை மச்சான் சதீஷ், சரத்குமார் என்று லிஸ்ட் எடுத்தீர்களானால் அனேகமாக எல்லா யோக்கியன் வேஷம் போடும் அயோக்கிய அரசியல்வாதிகளும் சிக்குவார்கள். அதில் திமுக, அதிமுக வின் % ஜாஸ்தி, குறைய இருக்குமே தவிர, யோக்கியன்போல் வெளி’நடப்பு செய்யும் எல்லா அரசியல்வாதிகளும் இதில் அடக்கம். வெறும் பழக்கடை, இடத்தை ஆக்கிரமித்து நடத்திய அரசியல்வாதியும் பலப் பல கோடிகளுக்குச் சொந்தக்காரர்கள்.

  ஆனால், அரசுக்கும் (தமிழக அரசு, மத்திய அரசு), அதிகாரிகளுக்கும் இவைகளைப்பற்றி ஒன்றும் தெரியாது. நேற்றுப் படித்தேன். கூவாத்தூர் கட்டிடம், விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது என்று. நான் கேட்கிறேன், அதற்கு மின்சாரம் கொடுத்த கயவாளி, கட்டிடத்துக்கு சர்டிஃபிகேட் கொடுத்த கும்பல், தண்ணீர் போன்ற வசதிகளைச் செய்துகொடுத்தவர் அனைவரையும் கூண்டோடு தூக்கில் போடாவிட்டாலும் (அதற்கு அவர்களும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தகுதியானவர்கள்தான்) இந்தியாவைவிட்டே வெளியேற்றவேண்டுமா இல்லையா? யார்தான் இதைச் செய்வது? ஊழல், கீழிருந்து மேல்வரை எங்கேயும் பரவி இருக்கிறது. எப்படிச் சரி செய்வது? சிலர், நம்ம நாட்டில் ஒரு சர்வாதிகாரி வந்து, இப்படிப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களை அழித்தொழிக்கவேண்டும் என்று பேசுவார்கள். அப்படிச் செய்யமுடியாதல்லவா? அதேபோல், ஒருவரை குற்றவாளி என்று சொல்லும்போது, அவர் குடும்பமே ஜெயிலில் போடப்படவேண்டும், ஏனென்றால் அந்த ஊழல் பணத்தில் லாபமடைந்தது குடும்பமே அல்லவா என்றும் சிலர் சொல்லுவார்கள். அதுவும் நியாயமா என்று யோசிக்கவேண்டும்.

  குட்கா பற்றி எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரைக் குற்றம்சாட்டிப் பேசுகிறார். குட்கா கம்பெனியை எதிர்த்து அல்ல. ஏன், பணம் வாங்கியதால்தானே.

  • Ramesh சொல்கிறார்:

   Mr.புதியவன்,

   I find that whenever Mr.K.M. is raising the issues against
   Modi Govt. or BjP, you are cleverly side-tracking the issue
   by raising some other corruptions. Have you mentioned even a word
   about what is written in the above Article ?
   PLEASE DON’T TRY TO BE TOO CLEVER.
   TALK ON THE ISSUE RAISED. DONOT DIVERT THE ATTENTION
   FROM THE MAIN ISSUE RAISED IN THE ARTICLE.

   • புதியவன் சொல்கிறார்:

    ரமேஷ் அவர்களே-என் பின்னூட்டமே காரணத்தைப் புரியவைத்திருக்கும் என்று நினைத்தேன்.

    தூய்மையானவர்கள்தான் மற்றவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கமுடியும். அரசியலில், ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு முன்பு, நிச்சயமாக தன் கட்சி பாதிக்கப்படாது, தன் ஆட்கள் பாதிக்கப்படமாட்டார்கள், குறிப்பிட்ட சிலரது பிசினெஸ்கள் பாதிக்கப்படாது என்று நிச்சியத்துக்கொண்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதனால் வருமான வரி கட்டாத இந்த OBVIOUS PEOPLE மீது ஒரு நடவடிக்கையும் வராது. கருப்புப்பணத்தைக் கொண்டுவரப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களால், விஜய் மால்யா, லலித் மோடி, கேடி பிரதர்ஸ், ப.சி/கார்த்திக் சிதம்பரம், இண்டியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் போன்ற எதிலாவது எதாவது செய்யமுடிந்ததா?

    தமிழகத்திலும் இதே கதைதான்.

    இன்றைக்கு யாரையாவது கேளுங்கள், 2ஜி ஊழல் யார் செய்தது என்று-சின்னக்குழந்தையும் சொல்லும் ஆ.ராசா, கனிமொழி கும்பல் என. ஆனால் உண்மை என்ன? மன்மோகன்சிங், ப.சி இவர்களுக்குப் பங்கு இல்லையா? காமன் வெல்த் விளையாட்டு ஊழலில் சுரேஷ் கல்மாடிக்கு மட்டும்தான் பங்கா? காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்குப் பங்கில்லையா?

    நமது நாட்டின் சட்டம், அரசு ஊழியர்கள் (வரிக்கு மட்டும், கிம்பளம் வாங்குவதில் நாட்டுக்கே அவர்கள்தான் எடுத்துக்காட்டு, பெரும்பாலான), மத்தியதர வர்க்கம், ஏழை எளியவர்கள் போன்றவர்களுக்கு மட்டும்தான். ஒரு செய்தியைப் படிக்கும்போது பலதும் நினைவுக்கு வருவதால் அவைகளையும் சேர்த்து எழுதுகிறேன். இப்போகூட எனக்குத் தோன்றுவது, எத்தனை இஸ்லாமியர்கள்( மற்றவர்களும் இருக்கலாம்) குற்றச்சாட்டு பதிவுகூட செய்யப்படாமல் 5-10+ வருடங்களுக்கு மேலாக சிறைக்கைதியாக இருக்கிறார்கள் என்று தெரியுமா?

 3. VS Balajee சொல்கிறார்:

  Sir
  You can add up high end car in the list which cost Rs10 lakhs+ , there are 100+ cars available and on road in India. Even small Varia thivar get Inova. All most all back money goes to high end cars. Govt can IT Ride each one…(including it officers). India is rich country. Have seen crowd in jewellery shop before GST? or at Akshaya Tritiya. Ride who have gold above 1/2 kg. All IMF loan can be repaid.
  VS Balajee

 4. இராமாநுசம் சொல்கிறார்:

  அருமை யான பதிவு அனைவரும் காண ஆவன செய்யுங்கள்!

 5. shiva சொல்கிறார்:

  AADHAAR is linked to PAN
  AADHAAR is linked to bank account
  AADHAAR is linked to LPG connection
  AADHAAR is linked to social benefit schemes

  Ever wondered why AADHAAR is not linked to Voter id card (EPIC) – that’s the hypocrisy of political parties.
  All their dead voters will not be able to vote.
  Spurious voting will be eliminated with biometrics
  Duplicate/triplicate voter ids will disappear.
  Illegal Bangladeshi migrants can’t vote.
  Maoists who don’t have AADHAAR cards can’t vote.
  Kashmiri separatists who don’t want to be Indian citizens can’t vote…..
  Anyone can vote anywhere.

  So many benefits…. real Swach Bharath can begin there with cleansing of electoral system. Just linking AADHAAR to EPIC will eliminate bogus voting.

  But you won’t see it happen!

 6. LVISS சொல்கிறார்:

  this link may provide some info –but I am afraid that the individual names cannot be disclosed —

  http://indiatoday.intoday.in/education/story/income-tax-report-made-public-first-time-10-disclosures/1/656806.html

 7. இளங்கோ சொல்கிறார்:

  வருமான வரி கட்டாமல் ஏய்ப்பவர்களை பிடிப்பது பற்றி தான்
  கே.எம்.சார் எழுதி இருக்கிறார் : நீங்கள் ஏன் சம்பந்தம் இல்லாத
  கதைகளை இங்கே அவிழ்த்து விடுகிறீர்கள் சார் ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.