டெல்-அவிவ் கூட்டத்தில்….கருப்பு ஆடு….!!!


நேற்று இரவு, ஆர்வத்துடன் விழித்திருந்து முழு பேச்சையும்
பார்த்தேன்….கேட்டேன்… !!!

5000 பேர் என்று தொலைக்காட்சியில் சொன்னார்கள்.
கூடவே இருக்கும்…

மூன்று ஆண்டுகளாக என்னவெல்லாம் சாதித்திருக்கிறேன்
பாருங்கள் என்று வரிசையாக பட்டியல் போடப்பட்டது.
எனக்கே சந்தேகமாக இருந்தது – இது டெல் அவிவ் தானா,

அல்லது உத்திரபிரதேசம், பீஹார் என்று எங்கேயாவது
தேர்தல் பிரச்சார கூட்டமா என்று…!!! அவ்வளவு விவரமாக,
விரிவாக பேசப்பட்டது.

சிலவற்றை கேட்க எனக்கே
மிகப் பெருமையாக இருந்தது…!!!

ஆனால், ஒரு மிக முக்கியமான சாதனை விடுபட்டு போய்
விட்டது. கூட்டத்திற்கான உரையை தயாரித்த இடத்தில்
ஒரு கருப்பு ஆடு புகுந்து விட்டது போலும்..

இல்லையென்றால் அந்த முக்கியமான சாதனை எப்படி
சொல்லப்படாமல் போகும்…?

ஒரே கையெழுத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு
500 – 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாக்காசு ஆக்கிய
அந்த சரித்திரம் காணாத சாதனையை பற்றி –

அதனால் நாட்டில், மக்களிடையே ஏற்பட்ட
அளப்பறியா மகிழ்ச்சி பற்றியும், அதன் அற்புதமான
தொடர் விளைவுகளை பற்றியும்,
– demonetization பற்றிய அனைத்து சாதனைகளையும்-

– அப்படியே ஒளித்து விட்ட அந்த கருப்பு ஆடு எது என்று
உடனடியாக கண்டு பிடிக்கப்பட வேண்டும்…. உரிய
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்….

இல்லையென்றால் …..

தொடர்ந்து, எதிர்கால உரைகளில் –
இதே போல் மேலும் சில முக்கியமான சாதனைகள்
காணாமல் போய் விடக்கூடிய அபாயம் இருக்கிறது…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to டெல்-அவிவ் கூட்டத்தில்….கருப்பு ஆடு….!!!

 1. Prabhu சொல்கிறார்:

  அய்யோ
  என்னமா எழுதறீங்க
  எக்சல்லண்ட் சார்.

 2. கார்த்திகேயன் சொல்கிறார்:

  இதற்கு பெயர்தான் வஞ்சப்புகழ்ச்சியணியோ

 3. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… பாவம் நீங்கள். தேர்தல் பிரச்சார உரைகளைக் கேட்க உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது போலிருக்கிறது. (முற்றிலும் கேட்காமல் பின்னூட்டம் இடக்கூடாது, ஆனால் in lighter vein இந்தப் பின்னூட்டம்)

  “சிலவற்றை கேட்க எனக்கே மிகப் பெருமையாக இருந்தது…!!!” – அது என்ன என்ன சார்? இதனை இதுவரை வெளியிடாமல் இந்தப் பத்திரிகைகள் இருந்துவிட்டனவே (கடந்த 3 வருடங்களாக).

  ஆனா, டிமானிடைசேஷன் – தோல்வியா வெற்றியா என்பது தெரியவில்லை. அதுல நல்ல விஷயம், எங்க எங்க எந்த எந்த வங்கி ஏடிஎம் இருக்குதுன்னு தெரிஞ்சது. நிறைய அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஃப்ராடு செய்தார்கள். ஆனா அதை உடனே கண்டுபிடித்து எக்ஸ்போஸ் செய்து தண்டனை வாங்கிக்கொடுக்காததுதான் எனக்கும் சந்தேகத்தை விளைவித்தது. ஒருவேளை நீங்கள் அப்போது குறிப்பிட்டிருந்ததைப்போல், உபி போன்ற பெல்டுகளில் தேர்தலுக்கு பணத்தை இறக்கத் தயாராக இருந்த எதிர்க்கட்சிகளை ஒரேயடியாக அமுக்கியதுதான் இதன் நல்ல விளைவா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   //கா.மை. சார்… பாவம் நீங்கள். தேர்தல் பிரச்சார
   உரைகளைக் கேட்க உங்களுக்கு நிறைய நேரம்
   இருக்கிறது போலிருக்கிறது.//

   – இதில் பாவப்பட எதுவும் இல்லை…இந்த நாட்டின்
   பிரதமரின் உரையை, அதுவும் வெளிநாட்டு மண்ணில்
   ஆற்றும், தேர்தல் பிரச்சார உரையை – கேட்பதற்கு
   பாக்கியம் செய்திருக்க வேண்டுமே ….!!!

   //“சிலவற்றை கேட்க எனக்கே மிகப் பெருமையாக இருந்தது…!!!” – அது என்ன என்ன சார்? இதனை இதுவரை வெளியிடாமல் இந்தப் பத்திரிகைகள் இருந்துவிட்டனவே (கடந்த 3 வருடங்களாக).//

   இதுவரை வெளியிடப்படாத விஷயங்கள் என்று நான்
   எங்கு சொன்னேன்….? பத்திரிகைகளும், அவரது
   அபிமானிகளும் (!!!) தொடர்ந்து அலுக்காமல்
   பாராட்டிக் கொண்டே இருக்கும் அதே விஷயங்கள் தான்…!!!

   //ஆனா, டிமானிடைசேஷன் – தோல்வியா வெற்றியா என்பது தெரியவில்லை. //

   விழித்துக்கொண்டிருப்பவர்களுக்கு தெரியும்…
   தோல்வியை பார்ப்பது எனக்கு பிடிக்காது…
   பார்க்க மாட்டேன் என்று
   பிடிவாதமாக கண்களை மூடிக்கொண்டிருப்பவர்களுக்கு
   உலகில் நடப்பது எப்படி தெரியும்..?

   இடுகையில் எழுப்பப்பட்டிருந்த விஷயத்தின் சாராம்சம் –

   ” மீதி அத்தனை சாதனைகளையும் பேசியவர்கள்,
   இதைப்பற்றி பேசாமல் விட்டதற்கு என்ன காரணம்..?
   அது தோல்வியில் முடிந்தது என்பதை அவர்களே
   உணர்ந்திருந்தது தானே…? ”

   இடுகையில் எழுப்பப்படும் கேள்வியை தொடாமலே,
   விவரமாக பதிலளிக்கும் திறமை அபூர்வம் – அது வெகு சிலருக்கே கைவரப்பெறுகிறது…… 🙂 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   Mr Puthiyavan You made a mention of officials not being punished for demonetisation mistakes — The link below might dispel your doubts

   http://www.hindustantimes.com/india-news/after-demonetisation-27-public-bank-officials-suspended-for-irregular-transactions/story-Fq7SMChWntbZZAw3yfO1mO.html

 4. குலாம் ரசூல் சொல்கிறார்:

  //இல்லையென்றால் …..

  தொடர்ந்து, எதிர்கால உரைகளில் –
  இதே போல் மேலும் சில முக்கியமான சாதனைகள்
  காணாமல் போய் விடக்கூடிய அபாயம் இருக்கிறது…!!!//

  அப்படியே இந்த ஆட்சியும்.

  • புதியவன் சொல்கிறார்:

   குலாம்.. நீங்க என்ன சொன்னாலும் யாரும் ஏத்துக்கமாட்டாங்க. நீங்க எதுக்க எதுக்க பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும். ஏனென்றால் உங்களுக்கெல்லாம் இந்துக்கட்சி வளரக்கூடாது என்ற எண்ணம். அதனால்தான் நீங்க பல இடங்கள்ல பார்த்தீங்கன்னா, ஹிந்துப்பேரை வச்சுக்கிட்டு பாஜக, மோடியைத் தாக்கி எழுதுவாங்க.

   இந்த ஆட்சி போனா, யாருடையது வரும்? அது யாருக்கு நன்மையா இருக்கும்னு தெரியாதவங்களா நம்ம வாக்காளர்கள்?

   • குலாம் ரசூல் சொல்கிறார்:

    புதியவன்,

    இப்பவே உங்களிடம் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டுவிட்டது. இன்னும் இரண்டு வருடத்தில் தேர்தல் நெருங்கி வர வர என்ன ஆகப்போகிறதோ. பரிதாபம்.

   • LVISS சொல்கிறார்:

    If NDA loses power in the next election there will be an interim kitchadi coalition govt where every one will be king unto themselves and where koottani dharmam will prevail – It will take another election to get a govt with a comfortable majority or one less dependent on allies –

 5. Prabhu சொல்கிறார்:

  புதியவன்,

  //இந்த ஆட்சி போனா, யாருடையது வரும்? //

  அது தேர்தல் சமயத்துல தீர்மானம் பண்ண வேண்டிய விஷயம்.
  அதுக்காக அஞ்சு வருஷமும் என்ன அடாவடி பண்ணினாலும்
  ஜால்ரா போட்டுக்கிட்டே இருப்பீங்களா ?

 6. LVISS சொல்கிறார்:

  Since a reference is made about demonetisation here is a news which appeared today –Dempnetisation for all practical purposes is a done and dusted subject –People did suffer but some good also came through —

  http://economictimes.indiatimes.com/news/economy/policy/demonetisation-effect-advance-tax-given-by-individuals-in-june-quarter-rises-more-than-40/articleshow/59480872.cms

  Generally the people living abroad dont keep themselves abreast of what is happening in their parent country –They dont find time to spend on this — I found this to a bit disturbing in my visit to US –This could be the reason the PM is repeating the same thing when he meets diaspora in different countries –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.