கீழ்மையான, கேடுகெட்ட அரசியல்….!!!


டெல்லியில் அன்னா ஹஜாரே “லோக் பால்” சட்டத்தை
வலியுறுத்தி துவக்கிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய
இடத்தில் இருந்த முக்கால்வாசிப்பேர் – இன்று முழுநேர
சுயநல ( அரசியல் ) வாதிகளாகி விட்டது மிகவும்
வருத்தத்தை தருகிறது.

ஒரு பக்கம் திரு.கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும் –
தனிக்கட்சி துவங்கி டெல்லியில் நிகழ்த்தும் கோமாளித்தன,
கிரிமினல்வாத அரசியல்…

இன்னொரு பக்கம் –
லோக்பால் ஆதரவுக்கான போராட்டங்களில் கலந்துகொண்டு, பெரிய அளவிலான தேசிய கொடியை இங்கும் அங்குமாக அசைத்து மக்கள் மனதில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திய இன்னொருவர் –

 

இந்த கொடி ஆட்டலின் பின்னே இவருக்கு இத்தனை அதிகார ஆசைகளும், பதவி வெறியும் மறைந்திருந்தன என்பது நமக்கு தெரியாமல் போய் விட்டது தான் பரிதாபம்

இன்று தன் பதவி ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவும்,
தனது கட்சியின் சாம்ராஜ்ய விஸ்தீரண ஆசையை
நிறைவேற்றவும், அரசியலில் எந்த அளவு கீழ்மைக்கும்
போவார் என்று தெரிய வரும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, பதவியில்
இருக்கும்போது,

ஆளுநர் பதவி வகிப்பவர், தனக்கு ஆளுஞர் பதவியை
பிச்சை போட்ட கட்சியை சேர்ந்தவர்களை,

தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும் தெரியாமலே –
ரகசியமாக, நியமன உறுப்பினர் ஆக்கும் முயற்சியில்
ஈடுபட்டது கீழ்மையிலும் கீழ்மையான அரசியல்.

அதிலும், சபாநாயகர் செய்துவைக்க வேண்டிய பதவியேற்பு
நிகழ்வையும், தன் அறையிலேயே, தானே ரகசியமாக
நிகழ்த்தி, புகைப்படங்களை மட்டும் வெளியிடும் அளவுக்கு
ஒரு தீவிரம்….!!!

நாளையே, குடியரசுத்தலைவர், தனக்குப் பிடித்தமான
இரண்டு காங்கிரஸ் தலைவர்களை, பிரதமரை கேட்காமலே,
ராஜ்ய சபாவுக்கு நியமன உறுப்பினராக நியமித்தால் –
அதை பாஜக தலைமை ஏற்குமா…?

பின், இவர்கள் இப்போது புதுவையில் செய்திருப்பது மட்டும்…
எதில் சேர்த்தி…?

மக்களிடம் தங்கள் செல்வாக்கை நிரூபித்து, அதன்
பின்ஆட்சியில் அமரும் அளவுக்கு பொறுமையோ,
தன்னம்பிக்கையோ இல்லாமல் –

குறுக்குவழியில் வரிசையாக ஒவ்வொரு மாநிலமாக தன்னை
திணித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது பாஜக
தலைமை …..

இந்த நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு,
சொற்ப மெஜாரிடியில் ஊசலாடிக் கொண்டிருக்கும்
நா.சா.ஆட்சியை வீழ்த்தி, அங்கும் (பாஜக) ஜனாதிபதி
ஆட்சியை கொண்டுவரத்தானே இந்த முயற்சியெல்லாம்…?

மாநிலம் பிடிக்கும் இந்த ஆசையை நிறைவேற்றிக்
கொள்ள எந்த அளவுக்கும் கீழே இறங்க தயாராக இருக்கிறது
பாஜக தலைமை….

ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம்,
கோவா, கதைகள் ஒருவழியாக முடிந்து, இப்போது
ஒடிஷாவில் பிஜூவின் கட்சியை பிளப்பது, வங்கத்தில்
மதக்கலவரத்தை தூண்டி விட்டு, ஆளுநர் மூலம் ஆட்சியை
கவிழ்ப்பது என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வளவு தூரம் சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரித்தவர்கள்
தெற்கில் தடம் பதிக்க வேண்டாமா…?
புதுவையில் கிடைத்தார் ஒரு சுயநலம் பிடித்த அடிமை…
அதன் விளைவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
யார் கொடுத்தார்கள் அந்த 3 பேர் பட்டியலை…?
அவரது உண்மை எஜமானர்கள் தானே…?

ஆயிற்று… அடுத்த அரங்கேற்றம் தமிழகத்தில்
நடைபெற அதிக நாட்கள் பிடிக்காது….ஜனாதிபதி, துணை
ஜனாதிபதி தேர்தல்கள் முடிவடைய வேண்டும்…

அப்புறம் இங்கேயும் பார்க்கலாம்… இத்தகைய
அசிங்கமான கூத்துகளை… பதவி வெறி பிடித்த அரசியல்
அடிமைகளுக்கு ……

இங்கு மட்டும் பஞ்சமா என்ன…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to கீழ்மையான, கேடுகெட்ட அரசியல்….!!!

 1. செ. இரமேஷ் சொல்கிறார்:

  இது வரலாறு திரும்பி நடக்க ஆரம்பிக்கிறது என்பதையே காட்டுகிறது. அன்று இந்திரா சர்வ வல்லமை படைத்த தலைவராக தன்னை காட்ட முயன்றார். அது 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் அலஹாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தவிடுபொடி ஆக்கப்பட்டது. அதை தொடர்ந்தே அவசர நிலை 25-ஜூன்-1975-ல் பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பொழுது மோடி சர்வ வல்லமை படைத்தவராக தன்னை காட்டிக் கொண்டும், அந்த கட்சியை சேர்ந்தவர்களும் தாங்கள் செய்வது அனைத்தும் சரி என்று நடந்து கொண்டும் இருக்கிறார்கள். எனக்கு இந்திய அரசியல் / நீதி அமைப்பின் மேல் மாறாத நம்பிக்கை எப்போதும் உண்டு. இவர்களின் தலை மேல் கூட்டு வைக்க ஒரு சரியான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவும் இந்திராவின் மேல் வந்த தேர்தலின் கால பதவி துஷ்ப்ரயோக வழக்கைப் போல் இருக்குமோ என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. அதனாலேயே நாம் வரலாற்றை கொஞ்சம் மறக்காமல் இருக்க வேண்டும்.

 2. Woraiyur Pugal சொல்கிறார்:

  1990 ம் ஆண்டு ஆளுநர் சந்த்ரவதியை கையில் போட்டுகொண்டு புதுச்சேரியில் மூன்று தி மு க வினரை எம் எல் ஏ க்களாக நியமனம் செய்ததை விடவா கிரண்பேடி செய்தது தவறு ???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோர்ட் சுப்ரமணியை கேட்கிறது –
   ” நீ ஏன் ராமசாமியை கொலை செய்தாய்…? ”

   சுப்ரமணி பதில் சொல்கிறார் –
   ” கோவிந்தசாமி மட்டும் 27 வருடத்துக்கு முன்னால்
   ஆறுமுகத்தை கொலை செய்யவில்லையா…? ”

   -உங்கள் வாதம் அற்புதம் நண்பரே…!!!

   • Woraiyur Pugal சொல்கிறார்:

    உங்க வாதம் சரிதான்.,ஆனால் முன் உதாரணம் என்ற உள்ளதே..அதை கண்டுகொள்ள மாட்டோம்,..ஆனால் இதை பெரிதாக எடுப்போம் என்றால் மோடி மீதான காழ்ப்புணர்ச்சி மட்டுமே தானே காரணம்…

 3. Woraiyur Pugal சொல்கிறார்:

  புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள சடடமன்ற உறுப்பினர்கள் நியமன சர்ச்சை மற்றும் அவர்களுக்கு மாநில துணை நிலை ஆளுநர் பதவி பிரமாணம் செய்யலாமா ? இது சட்டபடி செல்லுமா என்பதற்கான பதில்களை பார்போம்….

  1. மத்திய அரசு 3 நியமன சட்டமன்ற
  உறுப்பினர்களை நியமிக்க அதிகாரம்
  உள்ளதா?

  ஆம் உள்ளது. யூனியன் பிரதேசங்களின் நிர்வாகம் Union territory Act 1963 படி நடைபெறுகிறது..

  இந்த சட்ட விதி 3 (3) படி மத்திய அரசு மூன்று நியமன உறுப்பினர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது…இதில் மாநில அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற விதியில்லை….

  ..

  2. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி
  பிரமாணம் செய்து வைக்க
  சபாநாயகருக்கு தானே அதிகாரம்
  துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம்
  எப்படி வந்தது….அவர் இதை
  செய்துவைத்தது சட்டபடி சரியா?

  ஆம் யூனியன் பிரதேச சட்டம் விதி 11 படி துணை நிலை ஆளுநர் சட்டமன்ற
  உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அதிகாரம் உள்ளது…1990 ஆம் ஆண்டு துணை நிலை ஆளுநராக இருந்த திருமதி.சந்திரவதி அவர்கள் அப்போது ஆட்சியில் இருந்த திமுக- ஜனதா தள ஆட்சி நடைபெற்ற போது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்துள்ளார்….

  3. அமைச்சரவையின் ஆலோசனை படிதானே துணை நிலை ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் உண்டா….

  யூனியன் பிரதேச சட்ட விதி எண் 44 படி அவருக்கு தானே முடிவெடுக்கும் Discretionary அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது…..

  குறிப்பு :- இந்த சட்டத்தில் எங்கெல்லாம் Administrator என்று சொல்லப்பட்டுள்ளதோ அது துணை நிலை ஆளுநரை குறிப்பதாக அர்த்தம்..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   rule -3 says –

   (3) The Central Government may nominate not more than three
   persons, not being persons in the service of Government, to be members
   of the Legislative Assembly of 1*[the Union territory].

   இதில் மத்திய அரசு நாமினேட் செய்யலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது.
   மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாகவே செய்யலாம்
   என்று கூறப்படவில்லை…
   தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லையென்றால், மத்திய அரசு தன் விருப்பம்
   போல் செயல்படலாம்.
   ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயங்கும்போது,
   அதன் முதல்வர் ஆலோசனையை கேட்டு செயல்படுவது தான் நியாயம்.

   முடியாது… எங்கள் கட்சி தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டேன்
   என்கிறார்கள். எனவே நாங்கள் இப்படித்தான் எங்கள் உறுப்பினர்களை
   உள்ளே அனுப்புவோம் … என்றால்…. தாராளமாக செய்யுங்கள்…

   ஆனால் … அதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல….!!!

   rule -11 says-

   11. Oath or affirmation by members. Every member of the
   Legislative Assembly of 1*[the Union territory] shall, before taking
   his seat, make and subscribe before the Administrator, or some person appointed in that behalf by him, an oath or affirmation according to the form set out for the purpose in the First Schedule.
   ————
   ” before the Administrator, or some person appointed in that behalf by him,”

   அதாவது ” கவர்னர் அல்லது அவரால் அதற்காக நியமிக்கப்பட்ட நபர்”
   என்று பொருள்….
   ஏற்கெனவே, சபாநாயகர் -கவர்னரால், அதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
   மற்ற 30 உறுப்பினர்களுக்கும், சபாநாயகர் தான் பதவி பிரமாணம்
   செய்து வைத்தார்.
   இந்த 3 பேருக்கு மட்டும், கவர்னர் செய்து வைக்க வேண்டிய அவசியம்
   எங்கே, ஏன் வந்தது…?
   சபாநாயகருக்கு கொடுத்த அதிகாரத்தை திரும்ப பெறுவதாக, கவர்னர்
   அறிவித்தாலொழிய இது முறையானதல்ல…

   ———————-

   rule 44-

   மிக நீண்டது… பல விளக்கங்களும், குழப்பங்களும் அடங்கியது.
   இந்த குழப்பங்களை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு,
   குழம்பிய குட்டையில் 3 மீன்களை பிடிக்கத்தானே இத்தன முயற்சிகளும்…

   rule 44- – குறித்து இங்கே விவாதிப்பது நடைமுறையில் இயலாத காரியம்.
   இதுவே, நீதிமன்றம் என்றால் – நானே விவாதிக்க, நிறைய விஷயங்கள் –
   எனக்கு சொல்ல வேண்டியவை உள்ளன…..

   Anyway – இவ்வளவு தூரம் ஆர்வத்துடன் நீங்கள் விவாதிக்க வந்தது
   குறித்து எனக்கு மகிழ்ச்சியே.

   Last But not the Least –

   இங்கே இந்த இடுகையில் நான் எழுப்பியிருப்பது –
   முக்கியமாக on moral grounds….

   அதைப்பற்றி நீங்கள் எதுவும் சொல்ல முன்வரவில்லை என்பதால்,
   நானே உறுதி செய்து விடுகிறேன்…..
   1990-ல் சந்திராவதி அவர்களை கொண்டு நிகழ்த்தப்பட்ட நாடகம் போலவே –
   இதுவும் ” அசிங்கமான ” ஒரு விவகாரம் தான்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.