ஹிட்லரை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்கள் ….நம் நாட்டில் ஹிட்லரை பற்றி முழுமையாக அறியாதவர்கள்
நிறைய பேர் உள்ளனர்….!!!

சரித்திரத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற
ஒருவரைப்பற்றி, நாம் சரியாக தெரிந்துகொள்ளாமல்
இருக்கலாமா…? அதுவும் தற்போதைய காலகட்டத்தில்…?

ஹிட்லரைப்பற்றி விவரமாக ஒரு தொடர் பதிவே இட
வேண்டுமென்று எண்ணி இருந்தேன்.

ஆனால், தற்போதைக்கு என் வேலையை மிகவும்
சுலபமாக்கி விட்டார் நண்பர் சுரன்சுகுமாரன். அத்தனை
விவரங்களையும், ரத்தினச்சுருக்கமாக தனது தளத்தில்
தொகுத்து தந்து விட்டார். அவருக்கு எனது நன்றிகளை
கூறிக்கொண்டு, அவரது இடுகையையே இங்கே மறுபதிவு
செய்கிறேன்… நன்றி நண்ப – சுரன்சுகுமாரன். எதிர்காலத்தில்,
ஹிட்லரின் சரித்திரத்தை இன்னமும் விரிவாக எழுதக்கூடிய
வாய்ப்பு உருவாகும்போது, நான் எழுதுகிறேன்.

—————————————————————–

ஹிட்லர் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் …?!

1. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை,
ஆனால் ஒரு காதலி இருந்தாள்.

2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் எதிரியாக
இருந்ததாக நினைத்தார்.

3. ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக
ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர்
பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

4. ஹிட்லர் தனது சிறு வயதில் ஓவியங்களை வரைந்து
விற்று சம்பாதித்தார்.

5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை
பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும்
அவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன.

6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்.

7. ஹிட்லர் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை
தேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள்
என்று அழைத்தார்.

8. ஹிட்லர், சாதாரண அடிப்படை தொண்டராக பாசிச நாஜி
படையில் சேர்ந்தார்… தனக்கு எதிரானவர்களுக்கு குழிகளை
பறித்து பாசிச நாஜி படைக்கு தலைமை பதவியை பிடித்தார்.

9. நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக
துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி
கொடுத்து ஆட்சியை பிடித்தார்…

10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரால் நாட்டின்
சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண
முடியவில்லை… ஆனால் ஜெர்மனியை அதல பாதாளத்திற்கு
கொண்டு சென்றார்..

11. ”நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு
ஆக போகிறது” என்பது தான் ஹிட்லரின் தேர்தல்
ஸ்லோகமாக இருந்தது…

12. ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக
பார்லிமென்றிக்கு ஹிட்லர் சென்ற போது அங்கு உணர்ச்சி
மிகுதியால் அழுதார்…

13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள்
மத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்…

14. விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக
விரும்பினார்…

15. ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும்,
உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை
அறிந்தவர்…

16. ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ”நான், எனது” என்று
மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்…

17. ஹிட்லர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு
ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்…

18. ஹிட்லருக்கு ரகசிய காதலி இருந்தால் அவளை உளவு
பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்…

19. “நண்பர்களே, தோழர்களே” என்ற வார்த்தையை தான்
தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்…

20. ஹிட்லர் தன்னை புகைப்படம் எடுப்பதை அதிகம்
விரும்பினார்…

குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஹிட்லர் பற்றிய
வரலாற்றுப் பதிவு மட்டுமே. வேறு யாராவது உங்கள்
நினைவுக்கு வந்தால் வரலாறு பொறுப்பு அல்ல….!!

( நன்றி -http://suransukumaran.blogspot.in/2017/07/blog-
post_7.html )

——————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to ஹிட்லரை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்கள் ….

 1. satheshkumar சொல்கிறார்:

  Hahaha… Any resemblance are purely coincedental..

 2. Woraiyur Pugal சொல்கிறார்:

  இதற்க்கு நீங்க மோடி என்றே தெளிவாக பெயர் குறிப்பிட்டு விடலாம்..ஒன்று நன்றாக தெரிகிறது…மோடி மீதான வெறுப்பின் உச்சத்தில் இருக்கிங்க…அதனால் தங்களிடம் இருந்து இப்படி எழுத்துக்கள்…எதிர்கட்சிகள் ஒன்றினையாமல் வலுவான தலைவர் ஒருவரை முன். நிறுத்தாமல் ராகுலை முன் நிறுத்தி அடுத்த பொது தேர்தலை நாடு சந்திக்குமானால் உங்களை போன்றவர்கள் இது போன்றே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் எழுத வேண்டி இருக்கும்…

  • இளங்கோ சொல்கிறார்:

   Woraiyur Pugal,

   எனக்கு ரொம்ப சந்தோசமுங்க –
   மோடி அபிமானியான நீங்களே இத்தனை லட்சணங்களும்
   அவருக்கு பொருந்தும்னு ஒத்துக்கிட்டீங்களே 🙂 🙂
   கொடுத்து வைகணுமுங்க, இந்த மாதிரி ஒரு தலைவரும்,
   அவருக்குஇந்த மாதிரி ஒரு கூட்டமும் !

  • இளங்கோ சொல்கிறார்:

   இன்னும் மூன்றரை வித்தியாசங்கள் இருக்கின்றபோதே,
   நீங்கள் இந்த முடிவிற்கு வருவது சரியல்ல.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப Woraiyur Pugal,

   இப்போதைக்கு இரண்டும் ஒரே மாதிரி தான் என்கிற நிலை
   இன்னும் வரவில்லை…. ஆனால், “பக்தர்”களின் மூர்க்கத்தனமான, கண்மூடித்தனமான நடத்தையால், எதிர்காலத்தில் இரண்டும் ஒன்று தான் என்கிற நிலை ஏற்படக்கூடும் என்பது என் கருத்து.

   குறைபாடுகளை எடுத்துச் சொல்பவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல. விமரிசனங்களை பொறுத்துக்கொள்ள
   முடியாததற்கு முக்கிய காரணம் – பலவீனங்களை
   வெளிச்சம் போட்டு காட்டுகிறார்களே என்கிற எரிச்சலாக இருக்கலாம்.

   நான் “எதிரி” அல்ல. ஒரு நல்ல எதிர்க்கட்சி செய்யக்கூடிய
   பணிகளைத்தான் நான் மேற்கொள்கிறேன்… எனக்கு ஒரு வெறுப்பும் இல்லை…
   வெறுப்பு உணர்ச்சியை தூண்டி விடுபவர்களைத்தான்,
   அவர்களின் செயல்பாடுகளைத்தான் நான் எதிர்க்கிறேன்.

   2019 தேர்தல்களின் முடிவும் பாஜகவுக்கு சாதகமாகவே அமையலாம் என்பதை நீங்கள் சொல்லித்தான் நான் அறிய வேண்டும் என்பதில்லை…

   இது இன்னும் சர்வாதிகார நாடாகவில்லை.
   அப்படி ஆகி விடக்கூடாதே என்கிற கவலையிலும், பொறுப்பிலும் தான் இத்தகைய விமரிசனங்கள் வெளிவருகின்றன.

   எப்போதும், எதைச்செய்தாலும், ஆஹா, பிரமாதம் என்று
   கூச்சல் போட்டுக்கொண்டிருக்கக்கூடிய உணர்வுகள் சம்பந்தப்பட்ட
   கட்சியின் தீவிர அபிமானிகளுக்கு வேண்டுமானால் இருக்கலாம். என்னைப்போன்ற சுதந்திரமான மனிதர்களுக்கு அத்தகைய உணர்வுகள் ஏற்படாது என்பதை புரிந்துக்கொள்ளக்கூடிய பக்குவம் உங்களைப்போன்றவர்களுக்கு எதிர்காலத்திலாவது வர வேண்டுமென்று விரும்புகிறேன்.

   .

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr KM No leader is spared from being compared with Hitler including—-But I think in a democracy like our where we choose leaders it ts not proper to do this comparison and is in bad taste –Here leaders dont choose themselves and sit on the throne —

    • சேதுராமன் சொல்கிறார்:

     LVISS,

     உம்ம புத்தியை காட்டி விட்டீரே.
     மோடியை ஹிட்லறோடு கே.எம்.சார் கம்பேர் செய்யவே இல்லை. உம்மை
     போன்ற குற்றமனப்பான்மை உள்ளவர்கள் தான் ஒப்பிட்டு எழுதுகிறீர்.
     மோடியை கம்பேர் செய்வது குறித்து கே.எம்.சாரை குறை சொல்லும் அதே நேரத்தில் மறைந்து விட்ட ஜெயலலிதா அவர்களை அவதூறு
     செய்யும் வீடியோவை எங்கேயோ இருந்து தேடி கண்டுபிடித்து எடுத்து வந்து இங்கே பதிவு செய்கிறீரே. எவ்வளவு ஈன புத்தி இருப்பவர்கள்
     இந்த காரியத்தை செய்வார்கள் ? செத்துப்போன ஒரு பெண்மணியை இப்படி அவதூறு செய்யும் உம்மை போன்ற கீழ்த்தர மனிதர்களை கொண்ட
     கட்சி தானே உம்முடைய கட்சி.. வரிந்து வரிந்து 4 தடவை இந்த ஒரு இடுகைக்கு மட்டும் பின்னூட்டம் எழுதி இருக்கும் உம்மைபோன்ற பஜனைகூட்டம் இந்த நாட்டையே கெடுத்து நாசமாக்கி விடும்.

     சேதுராமன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     திரு LVISS,

     // இப்போதைக்கு இரண்டும் ஒரே மாதிரி தான்
     என்கிற நிலை இன்னும் வரவில்லை….//

     – என்று நான் எழுதிய பின்னாலும், அந்த
     பின்னூட்டத்திற்கு கீழேயே நீங்கள் –

     நான் bad taste -உடன் இந்த இடுகையை எழுதி
     இருப்பதாக குறை கூறுகிறீர்கள்….

     நான் எழுதியிருப்பதை bad taste என்று கூறும் நீங்கள்,
     மறைந்த முதல்வர் ஜெ. அவர்களை ஹிட்லருடன்
     ஒப்பிட்டு, ஒரு பழைய வீடியோ பதிவை ஒட்டி இருக்கிறீர்களே… இதை கண்டுபிடிக்க எவ்வளவு
     மெனக்கெட்டீர்கள்…? உங்களின் வார்த்தையில்
     இதை “what taste..?” என்று கூறுவீர்கள்…?

     ஆமாம் … மோடிஜியை பற்றியோ, பாஜக பற்றியோ
     எதாவது எழுதினால், குதித்தோடி வந்து,
     “bad taste” என்று பதறி பின்னூட்டம் போடும் நீங்கள்,

     அதற்கு முன்னால், நேற்று – இடுப்பளவு வெள்ளத்தில்
     நின்றுகொண்டிருக்கும் BSF Jawan -ஐ பாராட்டி
     ஒரு சல்யூட் என்று எழுதி இருந்தேனே… அப்போதெல்லாம்
     உங்களுக்கு எந்தவித உணர்வும் வரவில்லையா…?
     இல்லை மோடிஜியை பற்றி எழுதினால் மட்டும் தான்
     படிப்பீர்களா…? அந்த அளவிற்கு மோடிஜி மோகம்…!!!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • LVISS சொல்கிறார்:

      Please read my first sentence which says no leader was spared –I just wanted to exemplify it —You also cannot take criticism like any body else and you brand your critics as Modi bhakts —-When you expect others to take criticisms you should also practice it and not brand them as it pleases you without knowing about the others intimately —
      I have written about music and many other things , about the govt functioning and also non functioning —

 3. LVISS சொல்கிறார்:

  Almost every strong leader of a ruling party,including in T Nadu , has been likened to Hitler — It is to be noted that only parties do it and not people because they know that this description is born out of frustration at not being able to counter them politically – Many other things are also named after Hitler — Not a big issue as far as people are concerned -Many of the Indian population may not even understand the logic behind this comparison –It reflects more on the comparer than the compared–

 4. LVISS சொல்கிறார்:

  Having read about the negative aspects of Hitler those who are interested should also try to find out whether there was any good things about him -(One of them which I have heard often is that he was a vegetarian and that he cared for animals )

 5. LVISS சொல்கிறார்:

  On a lighter note

 6. DeathBirthRaceR சொல்கிறார்:

  தேசபக்திக்காக தன் பக்தியை எழுத்தார்வளர் இளம் தலைமுறை கவனிக்கிறதென தெளிவாய் பக்தியை முக்காற்புள்ளி வைத்து எழுதும் உரமேறும் பக்தி தேசபக்தி என படிப்பார்வமே எழுத்துக்கும் தேசமாற்றத்துக்கும் வித்தென உடல் தளரினும் நெஞ்சகம் தேசபக்தி என எழுதும் கா.மை வணக்க துவக்கம்~ ஹிட்லர் -சதாம்உசேன்-பிடல்காஸ்ட்ரோ-சாவேஸ்குரோ(வெனிசுலா)-சேகுவேரா-லிங்கன்-தலைவரெனில் உலகே அசர அசுர குலமே மிஞ்சும் பூரண தேசவளர்ச்சி தத்துவம் அனைத்தும் அறிந்த அற்புத வயோதிகர் தேசபக்தர் மரணபயத்தால் சுட்டு வீழ்ந்த ஹிட்லரை யாரால் அறிந்து உயர எழுத்தின் வன்மை மென்மை என புரிந்த தாங்கள் எடுத்து பதிவேற்றினோரோ – உலக சரித்திரத்தை தன்னல நோக்கின்றி சுயசார்பு தீட்டா தேசநல உயர்வாளர் அறிவுறுத்த மனம் லயிக்காதது ஏனோ…..

  ஈராக் சிற்பி சதாம் உசைன் பிடிபட்ட பதுங்கு குழி தனில் அறிந்தானே வீரனென்று மறைக்காது தன்னை அறிமுகபடுத்து துவளாத தேசவீரனென அறிவித்தானே பகத்சிங் அப்படி நமக்கு ஆட்சி செய்திருப்பின் இன்றைய இந்திய தேசம் எந்த தேசமும் மெச்சும் வீரதீர தியாக மனவளர்ச்சி இந்தியா என்றல்லவே இருந்திருக்கும் எத்தனை தீரன் சின்னமலை குமுறுகின்றார்கள் மனிதம் வாழ உகந்த தேசமென எத்தனை ஜான்சிராணிகள் கோட்டை எம் உயிர் தேசநலம் என சீறுகின்றார்கள் -எத்தனை நேதாஜி சுவாசிகள் ஏழ்மை மாறாதோ என படித்துணர்ந்து இந்திய தேச நிலை உயர உழைக்கிறார்கள் ஆணெண்ண பெண்ணெண்ண யாதும் -யாதும் ஊரே யாவரும் கேளிர் என கற்றுணர்ந்து மெய்சிலிர்த்து தூய தேசவளர்ச்சி மதம் வேற்றுமை – ஒற்றுமை இந்தியம் எனும் இந்திரியம் சேர்க்கும் மனிதம் உலகிலேயே இந்தியாவில் அதிகம் …..

  இளைய ஆதிக்க இந்திய வளர்ச்சிக்கு வித்தாய் எழுதும் கா.மை அவர்களே…..

  எந்த காலநிலை மாற்றம் நம் தேசத்தில் இல்லை அத்தனை உலக காலமாற்றத்தையும் ஏற்ற தாழ்வையும் பருவநிலையால் மக்கள் வாழ்வாதாரத்தல் ஏந்தும் தூய சார்பற்ற சுத்த தேசம் நம் தேசம்…..

  வரலாறு தங்களால் செதுக்கபடவேண்டியது உணர வேண்டி எடுத்துரைத்தேன் அந்நியனாய் ரமணாவாய் அத்தனை நம் தேசம் பிதுங்குவிழி என கலைசிறையில் துவண்டுள்ளது இன்றளவும்…..

  வணக்கவாழ்த்து அடுத்த பதிவு உலகவரலாறை புரையேற்றும் இந்தியா என நிசப்தமாய் எடுத்து கூறுவீராக உலக வரலாற்றை …..

  தங்கள் தேசபக்தி தேவை ஏழை இந்திய அறிவுக்கு …..

 7. குலாம் ரசூல் சொல்கிறார்:

  // 1. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை, //

  இந்த முதல் பாயின்டின் பாதியை தவிர மீதி அணைத்தும் ஒரு சர்வாதிகாரியான கொலைகார பாவியான இரண்டாம் உலக போருக்கு காரணமான ஒரு நாசகாரனோடு பொருந்தி வருகிறதே அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் கண்டுகொள்ளாமல் திரும்பவும் சொம்ப தூக்கவந்துவிட்டார்களே இவர்களை என்ன சொல்ல.

  இதற்கு முன்பு பலர் நாசகாரனோடு ஒப்பிடப்பட்டிருந்தால் இப்போது இந்த ஒப்பீடு இல்லை என்றாகிவிடுமா?

  சொம்புதூக்கிகளே! மேலேயுள்ள பட்டியலில் இது இது பொறுந்தவில்லை என்று மறுங்களேன். இல்லையென்றால் எந்த மாதரியான ஒரு தலைவனை ஒரு பாசிச அமைப்பை ஆதரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணருங்கள்.

 8. Woraiyur Pugal சொல்கிறார்:

  குலாம் ரசூல்….

  உங்க்ளுக்கு மோடி என்றாலே பயம் பீதி வேறு எப்படி எதிர்பார்க்கமுடியும் உங்களை போன்றவர்களிடம் இருந்து பதிலை…எனவே இதில் பெரிய விஷயம் அல்ல.

  முழுக்க முழுக்க மறுக்க முடியும் அண்ணாவின் பதிவை..ஆனால் மறுத்தாலும் தங்கள் ஒப்புக்கொள்ளவா போகிறீர்கள்…இன்னும் குஐராத் கலவரம் இதை தாண்டி வெளியே வாங்க..

  .தலைவனை உருவாக்கியது நாங்கள் அல்ல மக்கள் .,சர்வாதிகாரம் மூலம் நிச்சயம் அவர் பிரதமராக வரவில்லை…முழு மக்கள் ஆதரவுடன் தேர்ந்தேடுக்கப்பட்டார்.பிரதமராக அவரது செயல்பாடுகள் தவறு எனில் நிச்சயம் மக்கள் விரட்டி அடிப்பர்…எனவே சர்வாதிகாரி கொலைகார பாவி போன்ற் வார்த்தைகள் கொஞ்சம் அடக்கியும் வையுங்க,.

  மிக சிறப்பான தலைமை மூலம் பாரதம். சிறப்பான இடம் நோக்கி செல்கிறது,..அங்கு இங்கு சிறு குறைகள் இருக்கத்தான் செய்யும்,..உங்கள் குறைகளை தெளிவாக எடுத்து வையுங்க..இதை விடுத்து வீண் காழ்ப்புணர்ச்சி அவசியமற்ற ஒன் று

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   ஏன் பயம், பீதி வருகிறது. முன்னுதாரணம் காரணம். இன்றைய நாட்டு நடப்புகள் காரணம்.

   அடுத்து, //சர்வாதிகாரி கொலைகார பாவி// என்று மோடியையா சொன்னேன். ஒப்பீட்டளவில் பொருந்தினால் நானா பொருப்பு.

   நீங்கள் தான் மோடி என்றாலே பதறுகிறீர்கள். உங்கள் பதற்றம் தான் எதையும் சரியாக படிக்க, உள்வாங்க தடையாக இருக்கு.

   குஜராத் படுகொலைகளை மறக்கவா சொல்கிறீர்கள்? நான் மறந்துவிட்டால் சரியாகிவிடுமா? பாதிக்கப்பட்ட மக்களின் சாபம் சும்மாவிட்டுவிடுமா?

   அந்த சாபம் கொலைகார மாபாதகர்களை மட்டும் கேட்காது. அதிகாரத்தில் இருந்தும் தடுக்கக் குடிய சக்தி பெற்றிருந்தும் வாய்மூடி மௌனியாகி ஆதரித்தவர்களையும் கேட்கும்.

   மேற்கண்ட தங்கள் மற்ற பத்திகளுக்கு பட்டியலிலுள்ள 9, 10 -ம் மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.

   // 12. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள்
   மத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்… //

   இப்படி தானே ஐய்யா ஆட்சிக்கு வந்தீர்கள். 2019-லும் இதையே பின்பற்றி வரக்கூடும். அதற்குள் மக்கள் விழித்துக்கொள்ளமாட்டார்களா என்ன.

 9. Ganpat சொல்கிறார்:

  ஹாஹஹா!!..காவிரிமைந்தன் வெறும் குதிரை த்தானே காண்பித்தார்?.இங்கு பலர் வந்து “எங்க அப்பா அதற்குள் இல்லை!” என்று சொல்வது ஏன்? 🙂 🙂 அதே போல மோடி எதிர்ப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.1967 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் இன்றுவரை நடந்த அத்தனை தேர்தல்களிலும் வென்றவர்கள் பெற்ற வாக்குகள் மக்களை ஏமாற்றி பெறப்பட்டவைகளே.எனவே 2019 க்கு புதிய விதியை உருவாக்க நினைக்கவேண்டாம்.ராகுல் வயசுக்கு வரும்வரை நம்மை மோடிதான் ஏமாற்றிகொண்டு இருக்கட்டுமே? குடியா முழுகிவிடப்போகிறது?

 10. paamaranselvarajan சொல்கிறார்:

  அய்யா…! ஹிட்லரைப்பற்றி சுரன் சுகுமாறன் எழுதிய பதிவை இடுகையாக பாேட்டது பலருக்கும் யாராே ஒருவரை குத்திக்காட்டும் பதிவாக நினைத்து .. நண்பரகள் பலரும் விவாதித்து ” அவர் யார் ” அனைவரும்தெரிந்துக் காெள்ளும்படி .செய்து விட்டார்கள்..

  நீங்கள் திருவள்ளுவர் திருக்குறளில் ” காெடுங்காேன்மை.” என்ற.அதிகாரத்தில்உள்ள பத்து குறட்பாக்களின் அரத்தத்தை மட்டும் ஒரு இடுகையாக பதிவிட்டால் பல நடைமுறை உண்மைகள் வெட்டவெளிச்சமாக வெளிப்படும் …. சரிதானே ….?

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்…

  மதவேறுபாடுகளை தூண்டும் விதமாக எதையும் எப்போதும்
  நான் எழுத மாட்டேன்.
  மற்றவர்களையும் இந்த தளத்தில் அவ்வாறு எழுத
  அனுமதிக்கக்கூடாது என்பது என் கொள்கை.

  இதை மீறும் விதமாக சில நண்பர்கள் பின்னூட்டங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்… துவக்கத்தில், இத்தோடு இது நின்று விடும் என்று நான் நினைத்து தலையிடாமல் இருந்தேன்.

  ஆனால், அது எல்லை மீறி விட்டது….எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

  பண்பானவர்கள், பக்குவம் மிக்கவர்கள் என்று நான்
  நினைத்திருந்தவர்கள் கூட, உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எழுதுவது எனக்கு கவலையை கொடுக்கிறது.

  இங்கு ஒரு விஷயத்தை நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான், மத விரோத உணர்வுகள் வெளிப்படையாகவும், அப்பட்டமாகவும் பரப்பப்படுகின்றன. அதிகாரத்தில் இருப்பதால், எதையும் செய்யலாம் என்கிற துணிச்சல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

  அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி நான் மீண்டும் மீண்டும் இந்த வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால், மத வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் சிலர் பின்னூட்டம் எழுதுகிறார்கள்.

  இந்த விமரிசனம் தளத்தை பொருத்தவரையில் நான் இனி இத்தகைய பின்னூட்டங்களை அனுமதிக்கப் போவதில்லை.

  எனக்கு ஒப்பவில்லை என்கிற காரணத்தால் இரண்டு பின்னூட்டங்களை நீக்கி விட்டேன்.

  வெறுப்பையும், கலவரத்தையும் ஏற்படுத்த ஒரே விநாடி போதும்.
  ஆனால், அன்பையும், சகோதரத்துவத்தையும் விதைக்கவும்,
  நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தவும் நீண்ட காலம் பிடிக்கும்.

  நண்பர்களை பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுகிறேன்.

  ” ராமன் வேறு – அல்லா வேறு ” – என்று நான் நினைக்கவில்லை. எல்லாருக்கும் சேர்த்து படைத்தவன் ஒருவன் மட்டும் தான் இருக்க முடியும்.

  அவனை யார் எந்த பெயரைச் சொல்லி அழைத்தால் என்ன…? அதனை அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள்… ”

  – வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • Ganpat சொல்கிறார்:

   என் மறுமொழியை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கிறேன்.நம் நாட்டில் இந்த மத வேற்றுமைக்கு வித்திட்டவர்களே ஆங்கிலேயர்களும் இந்திரா கான்டியும் என்ற பொருளில் எழுதியிருந்தேன்.இதைப்பற்றி என்னால் இன்னும் விரிவாக எழுத முடியும்.உங்கள் அளவு இல்லாவிட்டாலும் நானும் எம்மதமே சம்மதம் என்ற கொள்கை கொண்டவனே.உங்கள் புரிதலுக்கு நன்றி

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கண்பத்,

    உங்களை நான் அறிவேன்.

    //பண்பானவர்கள், பக்குவம் மிக்கவர்கள் என்று நான்
    நினைத்திருந்தவர்கள் கூட, உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எழுதுவது எனக்கு கவலையை கொடுக்கிறது.//

    – என்று நான் சொன்னது உங்களை என்று நினைத்து விட்டீர்களென்று நினைக்கிறேன்….. அது உங்களுக்கானதல்ல.

    உங்களுக்கு முன்னால் பின்னூட்டமிட்டவர்களைக் குறித்தது..
    ( சில பின்னூட்டங்களை நான் delete செய்து விட்டதால், ஒருவேளை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்…)

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.