இந்த கார்ட்டூன் என்ன சொல்ல வருகிறது …?

9-ஆம் தேதி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த
திரு.கேசவ் அவர்களின் கார்ட்டூன் கீழே –

இந்த கார்ட்டூன் என்ன சொல்ல வருகிறது என்பது
புரிகிறதா…? இதைப்பற்றிய என் புரிதல் பற்றி எனக்கே
கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. மற்றவர்களின்
கருத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய புரிதலை பின்னூட்டத்தில் சொல்கிறேன்….


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இந்த கார்ட்டூன் என்ன சொல்ல வருகிறது …?

 1. LVISS சொல்கிறார்:

  To me it appears that the BJP is trying to break the grand alliance in Bihar — Nitish Kumar seems to be moving back to BJP alliance – He is uncomfortable in the company of Lalu Prasad –

 2. புதியவன் சொல்கிறார்:

  லாலுவை வைத்து நிதீஷ் அவர்களுக்கு அமித்ஷா பீகாரில் குடைச்சல் கொடுக்க நினைக்கிறார் (லாஜிக் இல்லை). ஆனால் நிதீஷின் நோக்கம் 2019ல் பொது பிரதமர் வேட்பாளராக வருவது. அதனால் பீகார் முதலமைச்சர் என்ற ஆப்பிளைப்பற்றி அவர் அவ்வளவாகக் கவலைப்படவில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // நிதீஷின் நோக்கம் 2019ல் பொது பிரதமர் வேட்பாளராக வருவது. அதனால் பீகார் முதலமைச்சர் என்ற ஆப்பிளைப்பற்றி அவர் அவ்வளவாகக் கவலைப்படவில்லை.//

   Exactly the same thing….எனக்கு தோன்றியதும் இதே எண்ணம் தான்…
   அது தான் சரியாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். தற்போதைக்கு
   வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், 2019-ல் எதிர்க்கட்சிகளின்
   பொதுவேட்பாளராக தன்னை திரு.நிதிஷ்குமார் நிலைநிறுத்திக்கொள்ள
   எண்ணி இருக்கிறார் என்றே நானும் நினைக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    I think that if at all there is some one who should oppose the PM he must be from Congress since it is the national party -I dont know whether Raghul Gandhi can carry the burden of this task — Regional party leaders have their own agenda –They may come together to defeat the NDA but they will not accept one of them as the leader –NDA may also show some signs of cracking up as the election approaches but as of now they look better off —

    • தமிழன் சொல்கிறார்:

     எனக்குத் தோன்றுகிறது ராகுல் கிட்ட ஆளுமை இல்லை. சோனியா அவர்கள், 2004லேயே இதைப் பற்றிச் சிந்தித்திருக்கவேண்டும். ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கமாட்டார்கள். நிதீஷை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு கொஞ்சம் சோதனையான காலம்தான். பாவம் ராகுல் அவர்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் காவுகொடுத்ததுதான் மிச்சம். அதுவும் தவிர, அவர் இத்தாலிக்குச் செல்வதும் (விடுமுறைக்கு) அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.

   • குலாம் ரசூல் சொல்கிறார்:

    நிதீஷ் குமார் 2019ல் பொது பிரதமர் வேட்பாளராக வந்து அவர் வெற்றி பெறாது போனாலும் பாஜகவுக்கு இப்போது இருக்கும் தனி பெரும்பான்மை குறைக்கப்பட்டால் அதுவே இந்த நாட்டிற்கு நன்மை பயக்கும். தனிப்பெரும் பான்மையைவைத்து தான் அதிக ஆட்டம் போடுகிறார்கள். நாடு நிம்மதியாக பதற்றம் இல்லாமல் இருக்கவேண்டும் என்றால் இது நடக்க வேண்டும்.

    ஆனால் எதிர் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த முடிவுக்கு வருமா? மில்லியன் டாலர் கேள்வி. நாட்டில் நல்லது நடக்கவா அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

    • Vignaani சொல்கிறார்:

     நிதீஷ் குமாருக்கு காயம் படாமல் எதிர்க்கட்சிகளின் கூட்டு என்ற ஆப்பிளை மட்டும் குறி வைப்பதைக் காட்டுகிறது என்றே தோன்றுகிறது. லாலு குடும்பத்தாருக்கு ரெய்டு காரணமாக அவப்பெயர் என்று நிதீஷ் லாலுவை விட்டு விலகி மீண்டும் NDA ஆதரவு தந்தால் நலமே என மோடி நினைக்கிறார்.
     (2) எதிர் கட்சிகளின் வேட்பாளராக நிதீஷுக்கு அவா தான்; ஜனதா தளம் பல கோஷ்டிகளால் ஆனது; தவிரவும் கம்யூனிஸ்டுகள் தேர்தலுக்கு முன்னே எந்த ஒரு ஒருமன தீர்மானங்களை எட்ட விட மாட்டார்கள்; தேர்தலுக்கு பின் கட்சிகளின் பலம் பார்த்து என்று மழுப்பிவிடுவர். அரசில் சேர்வோமோ மாட்டோமா என்று கூட சொல்ல மாட்டார்கள். அவர்களை வைத்துக்கொண்டு தேர்தலை சந்திப்பது மடியில் பூனையைக் கட்டிக்க கொண்டு சகுனம் பார்ப்பதே.
     (3) காங்கிரசுக்கு தர்மம் சங்கடம். தேர்தலுக்குப் பின் ஒருமனத் தேர்வு என்று சொல்லிக்கொள்ளலாம்; முன்பே அறிவிப்பது தோல்வியை பறை சாற்றுவது என்று நினைப்பர்.

 3. தமிழன் சொல்கிறார்:

  நிதீஷ் குமாரின் ஆதரவால், அவருக்குக் குடைச்சல் கொடுக்க எண்ணிய லாலு அவர்களின்மீது சிபிஐ என்ற கத்தி இறங்கி இப்போது குடைச்சல் கொடுக்கிறதோ? அதாவது லாலுவின் வலிமையைத் தளரச் செய்கிறதோ மத்திய அரசு (அதன்மூலம் நிதீஷுக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்கிறது)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s