இமயமலையும், காற்றில் பறக்கும் தூசியும்….!!!


கடந்த சில மாதங்களாகவே நான் சில கடுமையான
எதிர்ப்புகளையும், அச்சுருத்தல்களையும் சந்தித்து
வருகிறேன்.

பாஜக / மோடிஜி பற்றி நான் சில சமயங்களில் எழுத
நேரிடும் எதிர்மறை விமரிசனங்கள் காரணமாக
எனக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த இடத்தில், ஒரு முக்கிய விஷயத்தை தெளிவுபடுத்த
விரும்புகிறேன்.

நான் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாளனோ,
எதிர்ப்பாளனோ – அனுதாபியோ அல்ல.
நான் தனி மனிதன் – சுதந்திரமானவன்…

என் வயதில், என் அனுபவங்களின் அடிப்படையில்,
என் மனதில் தோன்றும் கருத்துகளை மனசாட்சிக்கு
விரோதமின்றி, நேர்மையாக எழுதி வருகிறேன்.
யாரிடமிருந்தும், எதையும் எதிர்பார்த்தோ, ஹிட்ஸ்
வாங்குவதற்காகவோ நான் எழுதவில்லை.
என் மனசாட்சி தான் எனக்கு முக்கியம்.

எந்தவொரு நிலையிலும், இன்று வரை, நான்
யாரைப்பற்றியும் தரக்குறைவாக எழுதியதே இல்லை
என்பதை என் எழுத்துக்களை படித்து வரும்
எதிர்ப்பாளர்களும் கூட உணர்வார்கள்….

என் எழுத்தில் கிண்டலும், கோபமும், அழுத்தமும்
இருக்கலாம். ஆனால், நிச்சயமாக தரக்குறைவோ,
ஆபாசமோ, பொய்யோ இருக்காது….

பாஜக / மோடிஜி – ஆட்சி என்பது இமயமலை அளவிற்கு
வலுவானது, உறுதியானது, அளவில் பெரியது.
நான் காற்றடித்தால், பறந்து விடக்கூடிய ஒரு சிறு தூசியை
போன்றவன். எனக்கு எந்த வித வலுவோ, பின்னணியோ
கிடையாது.

நான் எழுதும் சில இடுகைகளால்,
தெரிவிக்கும் சில கருத்துக்களால், பாஜக / மோடிஜியின்
அரசுக்கு எதாவது பாதிப்பு ஏற்படும் என்கிற நினைப்பே
அபத்தமானது.

காற்றில் பறக்கும் தூசியால், இமயமலைக்கு என்ன
பாதிப்பு இருக்க முடியும் …?

உண்மை நிலை இப்படியிருக்க – இதை அறிந்தோ,
அறியாமலோ, பாஜகவின் அதிதீவிர அனுதாபிகள் சிலர் –
தேவையேயின்றி, என்மீது அசிங்கமான, ஆத்திரமான,

அவதூறான வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்கள்…
எனக்கு தனிப்படவும் நிறைய பயமுருத்தல்
மெயில்கள் வருகின்றன.

அதே சமயம், இந்த வலைத்தளத்திலேயே அழகாக,
மிகத்தெளிவாக மாற்று கருத்துகளை பின்னூட்டங்களில்
வெளியிடும் பல பாஜக ஜென்டில்மென் நண்பர்களையும்
நான் பார்க்கிறேன்.

ஆபாசமாகவோ, வசவு வார்த்தைகளாலோ என் மீது
தாக்குதல் நடத்தும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்…
நான், யார் மீதும், எந்த காலத்திலும், அவமரியாதையான
சொற்களை பயன்படுத்தியதே இல்லை….
பயன்படுத்தவும் மாட்டேன்.

நீங்களும், மாற்றுக் கருத்துகளை தாராளமாக கூறலாம்.
இந்த வலைத்தளத்தில் அவை நிச்சயம் பிரசுரம் ஆகும்.
தயவு செய்து, தரக்குறைவான தாக்குதல்களை
மேற்கொள்ள வேண்டாம்….

கருத்தோடு, கருத்துகள் தாராளமாக மோதட்டும்.
ஆனால், தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம்…
பயமுருத்தல்கள் வேண்டாம்.

கருத்து கூறும் ஜனநாயக உரிமைகளை தயவுசெய்து
மதித்து நடக்க பழகுங்கள்…

.
நன்றி….

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
11/07/2017

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இமயமலையும், காற்றில் பறக்கும் தூசியும்….!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  இதற்குக் காரணம் ‘உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு, உங்கள் கருத்தில் இது தவறு என்று நினைக்கிறேன்’ என்னும்படியான எண்ணம் சில பின்னூட்டமிடுபவர்களுக்கு இல்லாததுதான் காரணம் என்று நினைக்கிறேன். சமயத்தில், பதில் கருத்து எழுதும்போது கடுமையான வார்த்தைகள் வந்துவிடலாம், ஆனால் அது பெர்சனலான தாக்குதலாக நினைத்துக்கொள்ளக்கூடாது. (‘நேற்று கீதா சாம்பசிவம் என்ற வாசகருடைய கருத்து நேர்மையாக இருந்ததுபோல் எனக்குப் பட்டது).

  எதிர்க் கருத்தைச் சொல்பவர்களை,(அதாவது பாஜகவின் செய்கைகளைக் குறைகூறி எழுதப்பட்டவைகளை எதிர்த்து மாற்றுக் கருத்து சொல்பவர்களை) பாஜக பக்தன், ஜால்ரா என்று முத்திரையிட்டு சிலர் சொல்வது ரசனைக்குறைவு, அவர்களது முதிர்ச்சியின்மை என்று எனக்குத் தோன்றுகிறது. மோடி அரசு (அதாவது மத்திய அரசு, அதாவது இந்திய அரசு) செய்வதைக் குறைகூறுபவர்களை ‘தீவிரவாதிகள்’, ‘தேச விரோதிகள்’ என்று சொல்லமுடியுமா?

  தொடர்ந்து எழுதுங்கள். நோக்கம் நல்லவையாக இருக்கும்போது, விளைவும் நல்லதாகத்தான் இருக்கும்.

 2. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள், கருத்துகளை கருத்துகள் கொண்டு தான் நேரிட வேண்டும் அதன் மூலம் தான் தெளிவு பெற முடியும், பொதுவாக இங்கே மத்திய அரசு அமைப்பை விமர்சணம் செய்தால் அல்லது தவறுகளை சுட்டிக்காட்டினால் அது பெரும்பாலும் மோடி அவர்களுக்கு எதிரானா கருத்தாக பார்க்கப்படுகிறது என்பது வேதனையான விஷயம்.

  மோடி எனும் தனி நபர் குறித்து பெரும்பாலும் யாரும் விமர்சணம் செய்வதில்லை அதே நேரத்தில் அவர் தலைமையில் செயல்படும் அரசு அமைப்பின் குறைகளை விமர்சணம் செய்ய நேரிடும் போது மோடியின் அனுதாபிகள் அரசையும் மோடியும் ஒன்றாக நினைத்து குழப்பிக்கொண்டு தேசவிரோதி பட்டம் சுமத்துகிறார்கள்.

  மக்களுக்கான ஒரு அரசை விமர்சணம் செய்ய அதன் குறைகளை சுட்டிக்காட்ட மக்களுக்கு இந்திய அரசியலைமைப்பு சட்டம் இடம் கொடுத்திருக்கிறது அதை பல முறை நீதிமன்றங்களும் உறுதி செய்திருக்கிறது.

  ஜிஎஸ்ஆர்

 3. Geetha Sambasivam சொல்கிறார்:

  தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். ஒன்றும் பிரச்னை இல்லை; உங்கள் கருத்து உங்களுக்கு! எங்கள் கருத்து எங்களுக்கு! அவ்வளவே! என் கருத்தை நீங்கள் ஏற்றாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை! 🙂

 4. LVISS சொல்கிறார்:

  Most of the readers in this are your ardent supporters -They agree with whatever you say , no problem with that -Would you like it if I call them KM bhakts or Jalras –You will not like it –Bhakti is reserved only for God -At the most it can only be acceptance or admiration of a person or a party –So please stop using the word bhakt for those who do not agree with your views or those who contradict you –The strength of your blog lies with both those who agree with your views and also those who disagree with you –We dont have to accept each other’s views but we can contradict without stepping on each others corns —
  Every one who reads your blog knows that you have a soft corner for AIADMK –Everybody who discusses politics will have a soft corner for some party without being an active member in it —
  I also dont have any party affiliation in the real sense of the term though I think the NDA is doing a better job than UPA (they are not free from drawbacks) but you have made me a bhakt –
  -Our criticisms or praise will not affect the prospects of a party –Only a collective will of the people can achieve it –The fact is, once the people put their faith in a party or a group of parties we have one choice ,accept it and wait for the next change -Till then we are free to air our views this way and that –
  -If I have crossed the limits of decency at any point of time please forgive me —

  • புதியவன் சொல்கிறார்:

   எல்விஸ் – நான் டிமானிடைசேஷன், ஜி.எஸ்.டி போன்ற பல இடுகைகளில் கா.மை. சார் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்துத்துவாவைப் பற்றி கா.மை சாரின் கருத்தோடு நான் ஒத்துப்போகவில்லை. சமயத்தில் அதற்காக அவர், ‘உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை, ஆச்சரியமாக இருக்கிறது’ என்றெல்லாம் எழுதியிருப்பாரே தவிர, கடுமை காட்டியதில்லை. பல கருத்துக்களும் மோதுவதால்தான் இந்தத் தளம் சிறப்பாக இருக்கிறது என்று நினைக்கிறேன். தமிழக நலனை முன்னிறுத்தியதால்தான் ஜெ.வின் ஆட்சிமீது மிகுந்த விமரிசனம் வைக்கவில்லை கா.மை சார் என்று நினைக்கிறேன் (இதில் நான் முழுவதுமாக கா.மை. சாரின் பார்வைதான்). இப்போது தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைபோல்தான் தோன்றுகிறது.

 5. Rajamanickam Veera சொல்கிறார்:

  அன்புள்ள அப்பா,
  பாஜக வை சேர்ந்தவர்களோ, மற்ற இந்துத்துவ சிந்தனையாளார்களோ உங்களை தரக்குறைவாக விமர்சிக்கவில்லை. அப்பா, வீட்டில் தங்களின் மூத்தவர் இப்படி தவறாக புரிந்து கொண்டு எழுதுகிறாரே என்று வேண்டுமானால் வருத்தப்படலாம். உங்களின் மீது எந்த காழ்ப்போ, வெறுப்புணர்வோ யாருக்கும் இல்லை. உங்களின் நியாய உணர்ச்சியின் பாலோ, அறிவு நேர்மை யின் பாலோ, உங்களின் மண் மீதான பாசத்தையோ யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. உங்களின் மனம் வருந்தும்படி எதாவது எழுதி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ராஜமாணிக்கம் வீரா.

   நான் எதையும் மனதில் இருத்திக் கொள்ளவில்லை…
   வெளியில் கொட்டி விட்டேன்… அதோடு தீர்ந்தது…
   அடுத்த பணிக்கு நகர்ந்து விட்டேன்.
   உங்கள் நல்ல வார்த்தைகளுக்காக மீண்டும் உங்களுக்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.