கங்கைக்கு வரும் இஸ்ரேலிய டீம் …(video – israel pm demonstrates mobile desalination plant….)

உலகின் தலைசிறந்த நீர் மேலாண்மை தொழில்
நுணுக்கங்களை, இஸ்ரேல் கண்டு பிடித்து தனது நாட்டில்
வெற்றிகரமாக பயன்படுத்தியும் வருகிறது.

1) கடல்நீரை குடிநீராக சுத்தப்படுத்துதல்…

2) மாசு படிந்த நீரை, சுத்தப்படுத்தி, குடிநீராக
பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்…

3) ஏற்கெனவே பயன்படுத்திய கழிவு நீரை, சுத்தப்படுத்தி,
மறுசுழற்சிக்கு கொண்டு வந்து, விவசாயத்துக்கு
பயன்படுத்துதல் …

4) சொட்டு நீர் பாசன வழிகளை மேம்படுத்தி,
குறைந்த அளவு நீரில், சிக்கன முறையில் செழிப்பாக
விவசாயம் செய்தல் –

இந்த 4 பிரிவுகளிலும் அதிக கவனத்தை செலுத்தி
வரும் இஸ்ரேல், மழை நீரை துளிக்கூட எதிர்பார்க்காமல்,
தனது தேவை முழுவதையும், தன்னைச் சூழ்ந்திருக்கும்
கடல்நீரிலிருந்தே பெற்று, நிறைவேற்றிக் கொள்கிறது.

பயன்படுத்தப்பட்ட கழிவு நீரை சுத்தப்படுத்தி தனது
விவசாய தேவைகளில் 50 சதவீதத்தை நிறைவேற்றிக்
கொள்கிறது.

– காற்றிலிருந்து நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை கொண்ட
மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை இஸ்ரேலில்
வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் வழியாக நைட்ரஜன்
சத்து, நிலத்திற்கு இயல்பாகவே செல்கிறது. இந்த உபாயம்
எந்தவித செலவும் இல்லாமல் நிலத்தின் உற்பத்தித் திறனை
அதிகரிக்கிறது.

——–

அண்மையில், மோடிஜியின் இஸ்ரேல் பயணத்தின்போது
நீர் மேலாண்மைத்துறையில் இரு நாடுகளும் பயன்பெறும்
வகையில் இரண்டு ஒப்பந்தங்களை இஸ்ரேலும்,
இந்தியாவும்செய்துகொண்டுள்ளன.

கடல்நீர் சுத்திகரிப்பு, விவசாயத்தில் நீர் மேலாண்மை,
ஆறுகளில் கலக்கும் கழிவு நீரினால் உண்டாகும் மாசுகளை
நீக்கி அதன் தரத்தை மேம்படுத்துதல், பயன்படுத்தப்பட்ட நீரை
மறுசுழற்சிக்கு பயன்படுத்துதல் ஆகிய துறைகளில், இஸ்ரேல்
தனது தொழில் நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்கவிருக்கிறது.

முக்கியமாக, கங்கை ஆற்றை சுத்தப்படுத்தும் முயற்சிகளில்
இஸ்ரேல் கைகொடுக்கும் என்று தெரிகிறது.

நீர்மேலாண்மையில் உலகின் மிகச்சிறந்த தொழில் நுட்பத்தை
இந்தியாவிற்கு கொண்டு வரும் இந்த ஒப்பந்தங்களை நாம்
மனதார வரவேற்கிறோம்…( bjp friends to please note…..!!! )
பிரதமர் மோடிஜிக்கு நமது பாராட்டுகள்.

இந்தியாவில், கங்கை மட்டுமல்லாமல்… பல
மாநிலங்களிலும் ஓடும் முக்கிய நதிகள் பலவும்,
கழிவு நீர் கலந்து பயன்படுத்த தகுதியில்லாத நிலையில்
தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த ஆறுகளின் நீரை
பயன்படுத்தும் மக்கள் பலவித நோய்களுக்கும்
உள்ளாகிறார்கள்.

நாடு முழுவதும் ஓடும் ஆறுகளின் நீரின் மாசை போக்கி,
அதன் தரத்தை மேம்படுத்த, இந்த திட்டம் நாடு
முழுவதுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டியது அவசியம்.
மத்திய அரசு, மாநில அரசுகளையும் இந்த திட்டத்தில்
ஈடுபடுத்தி, ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் அனைத்து
ஆறுகளையும் சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட
வேண்டும்.

மோடிஜி இஸ்ரேல் சென்றிருந்தபோது, இஸ்ரேல் பிரதமர்
தானே முனைந்து, ஒரு நகரும் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை
( mobile desalination plant ) இயக்கிக் காட்டிய ஒரு
வீடியோ கிடைத்தது. சுவாரஸ்யமான அந்த காட்சியை
நண்பர்களும் காண வசதியாக கீழே பதிவேற்றி இருக்கிறேன்.

…..

—————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to கங்கைக்கு வரும் இஸ்ரேலிய டீம் …(video – israel pm demonstrates mobile desalination plant….)

  1. புதியவன் சொல்கிறார்:

    இஸ்ரேல் வளங்கள் குறைந்த நாடு. அதற்கு எதிர்ப்புகள் அதிகம். மழைவளம் மிகவும் குறைந்தது. ஆனால் அவர்கள் நீர் மேலாண்மை அறிவு மிகச் சிறந்தது. சொட்டு நீர்ப் பாசனம் என்பதையே இஸ்ரேல் செயல்படுத்திவருகிறது.

    அவர்கள் நம் தண்ணீர் மேலாண்மைக்கு உதவமுடியுமானால் அதைவிட நல்ல செய்தி வேறு எதுவும் இல்லை. சாலையில் டோல்கேட் போட்டு வசூலிப்பதைப்போல, நீர் மேலாண்மைக்கும் அந்த அந்தப் பகுதியில் வரும் தொழிற்சாலைகளிடம் கப்பம் வாங்கலாம்.

    நல்லது நடக்கட்டும். அதுக்கும் நம்ம ஊர் வெட்டித் தொழிற்சாலை முதலாளிகள் போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரிதான். எல்லா ஆற்றையும் கெடுத்தது இந்த தோல் பதனிடும், சாயத் தொழிற்சாலைகள்தானே. அவர்கள்தானே ஆறு கெட்டுப்போனதற்கு முழு முதல் காரணம்.

  2. குலாம் ரசூல் சொல்கிறார்:

    எப்படியோ தமிழ் நாட்டிற்கு இந்த திட்டங்களை கொண்டு காவிரியை மட்டும் நம்பியிரா நிலை ஏற்பட்டு ஒரு விடிவு காலம் ஏற்பட்டால் நல்லது. அப்படி வந்து இந்த நாடும் தமிழ் நாடும் இன்னும் செழிப்பான நிலை ஏற்பட்டால் அதற்கு காரணமான அனைவருக்கும் கடவுள் அருள் புரிவானாக.

  3. LVISS சொல்கிறார்:

    Recently I remember reading about a device supplied by Israel -This device can help to see thro a wall and see the persons inside — This I understand is being used by our forces to locate terrorists hiding in a house – THis device is supposed to cost around Rs 3 crores and we are going to make it ourselves at a cost of 80 lacs –

  4. குலாம் ரசூல் சொல்கிறார்:

    If a such device used for locate to find only the terrorists is fine. But anyone can give guarantee, promise not to violate once common people’s personal life. This device, is dangerous, incase come into use no one live without scared, is not being watched by someone. This one definitely took off everyone’s peaceful mind.

    The any ruling party can interfere any apposite leader’s life, record their personal life, for threatening to accept or bow for their, ruling party’s, wrong doing. Then it will lead into tyrant rule only.

    This would be definitely against the human rights if it’s come into use.

    Hope no one understand that I am favourably writing for terrorists.

    Only the I’ll minded people can bring this device into notice.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s