சீன சப்மரீனை மிரட்டும் முயற்சி ….


இந்தியா -பூடான் எல்லையில் “டோகா-லா” பகுதியில்
புதிதாக ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதன் மூலமும்,
சிக்கிம் மாநிலத்தின் ஒரு பகுதியை தனக்குரியது என்று
சொந்தம் கொண்டாடுவதன் மூலமும் –


china border

இந்த தடவை இந்தியாவுக்கு கொஞ்சம் அதிகமாகவே
டென்ஷனை உருவாக்கி இருக்கிறது சைனா…

இந்தியா விட்டுக்கொடுக்கவில்லையென்றால், பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு பகுதியில் நுழைவதாகவும் மறைமுகமாக
மிரட்டல் விடுக்கிறது…. 1962 – நினைவில் வையுங்கள் என்று
வேறு மிரட்டல்…. இந்தியா இந்த அச்சுருத்தலை எப்படி
கையாளப்போகிறது என்று உலகம் உன்னிப்பாக
கவனித்துக்கொண்டிருந்தபோது –

சரியான நேரத்தில் துவங்கி இருக்கிறது இந்தியா, அமெரிக்கா
மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சியான
“மலபார் எக்சர்சைஸ்”…

இதன் விளைவை இப்போதே சைனா சற்று அச்சத்துடன்
பார்ப்பதாகத் தெரிகிறது. சைனாவின் புகழ் பெற்றதும்,
கிட்டத்தட்ட அதிகாரபூர்வமானதுமான செய்தி
நிறுவனம் இதைப்பற்றி சில சந்தேகங்களை
வெளியிட்டுள்ளது. இது குறித்த சில சீன செய்தி தளங்களை
நான் பார்த்தேன்…

மிகவும் சக்திவாய்ந்த இந்த 3 நாடுகளின் விமானந்தாங்கி
கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும் சேர்ந்து பயிற்சி
பெறுவதும், இந்த தடவை பயிற்சியின் முக்கிய குறிக்கோள்
” சப்மரீன் எதிர் தாக்குதல்” (anti submarine warfawre -ASW )
பயிற்சிகளை மேற்கொள்வது என்பதும் சைனாவிற்கு
கவலை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

இந்த பயிற்சி முக்கியமாக ‘சைனாவின் சப்மரீன்களை
எதிர்கொள்வது எப்படி ” என்பதாக இருக்குமென்று தெரிவது
சைனாவின் கவலையை மேலும் அதிகரித்திருக்கிறது.

பொதுவாக “மலபார் எக்சர்சைஸ்” –
விமான தாக்குதல், மற்றும் கடற்படை தாக்குதல்களை
எதிர்கொள்வது எப்படி என்பது குறித்ததாகத்தான் இருக்கும்
என்றாலும்,

இந்த தடவை அதன் முக்கிய குறிக்கோள் “ஏதோ ஒரு”
நாட்டின் சப்மரீனை குறிவைப்பதாக இருக்கிறது என்று
சந்தேகம் தெரிவித்திருக்கிறார் லீ ஜீ என்கிற சீன கடற்படை
நிபுணர்…

இந்து மகா சமுத்திர பிராந்தியத்தில், சீன சப்மரீன்களை
trace செய்து விடக்கூடிய திறனை இந்த பயிற்சியின் மூலம்
இந்தியா பெற்றுவிடும் என்பது அவர்களின் கவலை…

சீனாவின் ராணுவ அச்சுருத்தலை எதிர்கொள்வது ஒரு பக்கம்
இருந்தாலும், பொருளாதார ரீதியாக அதை மடக்க வேண்டிய
அவசியத்தை இந்திய மக்கள் சற்றும் உணர்ந்ததாகவே
தெரியவில்லை….

கடைத்தெருவில், அனைத்து சிறு/பெரு கடைகளிலும்,
மால்களிலும் சீனப்பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பெண்களைக் கவரும் – காய்கறி வெட்டும் கத்தி, கரண்டிகள்,
ஸ்பூன், கிண்ணங்கள் போன்ற கிச்சன் பொருட்களில் துவங்கி
பென்சில், ரப்பர், ஸ்டேஷனரி முதல், டிபன்பாக்ஸ், ஸ்கூல்
பேக் – போன்ற சாமான்கள் வரை அனைத்து
கடைகளிலும் கொட்டிக் கிடக்கின்றன. விலை மலிவாகவும்,
கவர்ச்சிகரமான வண்ணங்களிலும், அளவுகளிலும்
கிடைப்பதாலும், மக்கள் விழுந்து விழுந்து வாங்கிக்கொண்டு
போகிறார்கள்.

மத்திய அரசாங்கம் ஏன் இந்த பொருட்களின் இறக்குமதிக்கு
தடைபோடவில்லை என்று சிலர் கேட்கலாம்..
உலக வர்த்தக உடன்பாட்டில் இந்தியா
சேர்ந்திருப்பதால், அதிகாரபூர்வமாக, மத்திய அரசு இதற்கு
தடை போட முடியாது…( மறைமுகமாக சில தடங்கல்களை
வேண்டுமானால் உருவாக்கலாம்… அதைச்செய்ய இப்போது
மத்திய அரசு முயற்சிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்…!!!)

ஆனால், இதில் மக்களின் உணர்வு மிகவும் முக்கியம்.
இதை இரண்டு விதங்களில் மக்கள் அணுக வேண்டியது
அவசியம்…

ஒன்று – இப்படி வெளிநாட்டு பொருட்களை வாங்குவதால்,
உள்நாட்டில் இத்தகைய பொருட்களின் உற்பத்தி அடியோடு
முடங்கி விடும்…. ஏற்கெனவே, எத்தனையோ பேர் இதனால்
வேலை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு – நம்மை தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கும்
ஒரு எதிரி நாட்டின் பொருளாதார ஆதிக்கத்திற்கு நாமே வலிய
இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதில் பொதுமக்களின் உணர்வுகளோடு, வர்த்தகர்களின்
அணுகுமுறையும் மாற வேண்டும்…

லாபநோக்கை மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது
என்று தீர்மானித்து தானே, அண்மையில் “வெளிநாட்டு
குளிர்பானங்களை இனி விற்பதில்லை” என்று நமது
வணிகர்கள் முனைந்தனர்….?

அதே ஈடுபாட்டுடன், சீன பொருட்களை விற்பனை செய்ய
மாட்டோம் என்றும் நமது வியாபாரிகள் ஒரு முடிவுக்கு
வர வேண்டும்…

போர் வந்தால் தான் நமக்கு தேசபக்தி வரும் என்றால்,
அதன் பெயர் தேசபக்தியே அல்ல..

தேசபக்தி என்பதும் எப்போதும் நம் மனதில், உணர்வில்,
ரத்தத்தில் திளைத்திருக்க வேண்டும்.

நம் நாடு, பொருளாதார ரீதியாகவும்,
ராணுவ ரீதியாகவும், உயர்வு பெற –
அரசு மட்டும் முயற்சித்தால் போதாது…
இந்த நாட்டின் அத்தனை மக்களுக்கும்
( முக்கியமாக வணிகர்களுக்கும் ) அந்த உணர்வு
இருக்க வேண்டும்.

இனியாவது நம் மக்கள் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும்…
ஒவ்வொரு இந்தியனும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்…

” நம் நாட்டுக்கு தொடர்ந்து அச்சுருத்தலாக இருக்கும்
சீன தயாரிப்புகளை இனி எக்காரணம் கொண்டும் வாங்க
மாட்டோம் ” என்று….

நமது வணிகர்களும் உறுதி கொள்ள வேண்டும்…
” எத்தனை லாபம் கிடைத்தாலும், சீன தயாரிப்புகளை
வாங்கி, விற்க – மாட்டோம் ” – என்று.

என்ன நண்பர்களே, இன்றே துவங்கலாமா இந்த இயக்கத்தை….????

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to சீன சப்மரீனை மிரட்டும் முயற்சி ….

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்த இயக்கத்திற்கு, முதலில் மக்களுக்கு எதிலெல்லாம் சீனத் தயாரிப்புகள் இருக்கின்றன என்ற knowledge வேண்டும். எப்போதும் வணிகர்கள், பிஸினெஸ்மென் இவர்களுக்கு நாட்டுப்பற்று கிடையாது. அவர்களது நாட்டுப்பற்றெல்லாம், சுதந்திர தினம் அன்று கொடி, இந்தியக் கொடி கலரில் சட்டை விற்பது போன்றவற்றிலேயே முடிந்துவிடும்.

  நம் நாட்டுப் பொருட்களை மட்டும் வாங்கவேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும். இந்த ‘சின்னத் தளபதி’, ‘தளபதி’, ‘அந்த ஸ்டார், இந்த ஸ்டார்’ போன்ற வெட்டிப் பயல்கள், அன்னிய கார்களையும் பைக்குகளையும் வாங்குவதை முதலில் நிறுத்திவிட்டு, நாட்டு அரசியலைப் பற்றி அப்புறம் கவலைப்பட்டால் போதுமானது.

  ஸ்போர்ட்ஸ் ஷூ, எல்லா உதிரி பாகங்கள், உடைகள், கிச்சன் சம்பந்தமான பொருட்கள், கணினி சம்பந்தப்பட்டவை, பழங்கள், பாத்திரங்கள், காய்கள், இயந்திரங்கள், டயர்கள், ஸ்டேஷனரி, லைட்டுகள் போன்ற எல்லாவற்றிலும் முற்றிலும் சைனா தயாரிப்புகள்தான் மார்க்கெட்டில் இருக்கின்றன. இவைகள் எல்லாம் குறைந்த விலை, உபயோகப்படுத்தித் தூக்கி எறியும் தரம். இதைத் தவிர வெடிகள் போன்றவையும். இவை எல்லாவற்றையும் வியாபாரிகள்தான் வாங்கி இங்கு விற்கிறார்கள். வியாபாரிகளுக்கு, அரசியல்வாதிகள் சம்பந்தமான கம்பெனிகள்தான் விற்கின்றன. இதைத் தவிர கள்ளத்தனமாக இங்கு போர்ட்டிலிருந்து சைனா பொருட்களை அனுமதிப்பது இந்த இந்திய மக்கள்தான்.

  நீங்கள் சொல்லியிருப்பதுபோல், இந்திய அரசு நேரடியாக ஏதும் செய்ய இயலாது (பொருட்களில் தவறு இருந்தால் மட்டும். சில வருடங்களுக்கு முன் போலி பால் பவுடரை சைனா அனுப்பியதுபோல்). மக்கள்தான் இதனைச் செய்ய இயலும். அவர்கள் செய்ய மறந்தால், யுத்தத்தின் விளைவை அவர்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும். அப்போது, அவர்கள் இந்திய அரசைக் குறைகூறக்கூடாது, தங்கள் பேராசையை, ஏமாற்றும் குணத்தை, காட்டிக்கொடுக்கும் தங்கள் ரத்தத்தை, தேசத்துரோகத்தைத்தான் குறைகூறிக்கொள்ள வேண்டும்.

 2. LVISS சொல்கிறார்:

  We cannot stop the Chinese goods officially – The people themselves must stop buying these goods or the shops selling these should stop ordering these goods — China is angry because we are the stumbling block for building a road near the border – This road will be detrimental to our security and isolate N East states –
  China entering Kashmir can be taken with a pinch of salt because they will be confronted by terrorists who are already there near the border – Recently the terrorists killed two Chinese nationals – China is also strict with a region in China with muslim population putting restrictions on their practices —

 3. குலாம் ரசூல் சொல்கிறார்:

  சீன தயாரிப்பான மலிவுவிலை மொபைல் போன்கள் மார்க்கெட்டில் விற்பனையாகும் பொருட்களில் முதன்மையானது. இதை யாரெல்லாம் வைத்திருக்கிறோமோ அவர்களெல்லாம் இன்றே தூக்கிப் போட்டு நம்மிலிருந்து இந்த போராட்டத்தை துவங்கி வைப்போம்.

  அப்படி தூக்கி போடுவதை தனியாக செய்யாமல் நமக்குத் தெரிந்த நான்கு நண்பர்களையும் இதன் அவசியத்தை விளக்கி கூட்டாக செய்வோம்.

  இதனுடன் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் உபயோகமற்ற
  சீன பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அப்போது பெண்களுக்கும் விளங்கச் செய்வோம். அவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால் மிகப் பெரிய பலன் கிடைக்கும்.

  இந்தப் போராட்டம் பரவலாக வேண்டுமென்றால் மீடியா துணை வேண்டும். லோக்கல் மீடியா யாரையாவது அணுகி வரவழைத்து விட்டால் நல்லதாக இருக்கும்.

  களத்தில் இறங்குவோம் தோழர்களே இன்றே இப்பவே. இது ஒரு மெரினா புரட்சி மாதிரி வெடிக்கட்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப குலாம் ரசூல்,

   உங்கள் எழுச்சி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

   மனதளவில் நான் முழுவேகத்துடன் இறங்க விரும்பினாலும் கூட, என் வயதும், இதய நோயும், என்னை துடிப்புடன்
   இயங்க விடாமல் தடுக்கின்றன…

   உங்களைப் போன்ற நண்பர்கள் அனைவரும்,
   இதில் துடிப்பாக இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இயன்ற அளவு இந்த செய்தியை மற்ற நண்பர்களிடத்தே எடுத்துச் செல்லுங்கள்.

   கொஞ்ச நாட்களுக்கு தொடர்ந்து கீழ்க்கண்ட செய்தியை
   பகிர்ந்து கொண்டே இருப்போம்….

   —————————————————————–

   // நாட்டுப்பற்று மிக்க நண்பர்களே,

   எந்த காரணத்தை முன்னிட்டும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை வாங்காதீர்கள்… பயன்படுத்தாதீர்கள்…

   நம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பதற்கும்,
   நம் பாதுகாப்பு கேள்விக்குறியாவதற்கும் நாமே காரணமாக
   இருக்கலாமா …??

   தயவுசெய்து இந்த செய்தியை உங்களுக்கு வேண்டியவர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்…//
   —————————————————————–

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Geetha Sambasivam சொல்கிறார்:

  நல்ல பகிர்வு. மக்கள் மனம் மாற வேண்டும். அதற்கான விழிப்புணர்வுப் பிரசாரங்கள் செய்யப்பட வேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி திருமதி கீதா சாம்பசிவம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. avudaiappann சொல்கிறார்:

  i will do the propaganda from today

 6. Peace சொல்கிறார்:

  http://www.tm.org/benefits-cardiovascular-disease.
  அறிவுரை இல்லை. குடும்ப உறுப்பினர் என்றால் இதையே சொல்வேன். ஆழ் நிலை தியானம் ஒரு எளிய இருபது நிமிடப் பயிற்சி. உங்கள் இதயம் வலுவடைய. மகேஷ் யோகியின் ஆசிரியர், ஜோதிர் மடத்து சங்கராச்சரியார் பிரமானத்த சரஸ்வதி. சமீபத்தில் யூ டூப் அனுப்பி வைத்த காணொளி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி நண்பர் Peace.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. seshan சொல்கிறார்:

  Why not our Govt implement Compulsory Military (min 3 yrs) for all youth after school. very few states people only in majority of national services. why not all…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.