லாலுவை தோற்கடித்த தமிழ்க் குடும்பம்…!!!????????????????????????????????????

இந்தியாவிலேயே, இதுவரை லாலு குடும்பத்தை விட –
லஞ்ச ஊழலிலும், சட்டத்தின் ஆட்சியையும்,
சமூக அமைப்பு முறையையும் ஏமாற்றுவதில் சிறந்தவர்கள்
யாருமில்லை என்கிற நிலை தான் இருந்தது….

கணவன், மனைவி, மகன், மகள் என்று குடும்பத்தில்
யாருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்று
அகில இந்தியாவிற்கும், உலகிற்கும் நிரூபித்துக்
கொண்டிருந்த குடும்பம் இது.

இன்று அதையும் மிஞ்சிக் காட்டி விட்டது ஒரு
தமிழ்க்குடும்பம். சொல்லி வைத்தாற்போல், குடும்பத்தில்
அனைவருமே “கில்லி”கள். அக்கா, தம்பி, கணவன், மனவி,
அக்காள் மகன், தம்பி மகன், அண்ணன் மகன், மைத்துனர்,
அவர் மகன் என்று சொல்லி சொல்லி அடிக்கிறார்கள்…!!!
அவர்கள் குடும்பத்து டிரைவர் கூட வெளுத்து விளாசுகிறார்…

கிரிமினல் வழக்கு தொடர்ந்து, ஜெயிலுக்கு அனுப்பும் வரை
எனிமியாக இருந்த திருவாளர் சு.சு.வையே விலைக்கு
வாங்கி, தங்களுக்கு வக்காலத்து வாங்கும் மத்திய
ஆளும்கட்சி பேச்சாளராக மாற்றிய சாமர்த்தியம் –

வெறும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக, 89 கோடி ரூபாய்
லஞ்சம் கொடுத்து, தேர்தலே ரத்து செய்யப்பட
நேர்ந்தபோதும், FIR -ல் தங்கள் பெயர் கூட வராமல்
பார்த்துக்கொண்ட சாமர்த்தியம் –

தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது
செய்யப்பட்டு, 3 மாதங்கள் திஹார் ஜெயிலில் இருக்க
நேர்ந்தபோதும் – டெல்லி போலீஸ் நீதிமன்றத்தில்
சமர்ப்பித்த குற்ற அறிக்கையில் (சார்ஜ் ஷீட் ) தன் பெயர்
வராமல் பார்த்துக் கொண்ட சாமர்த்தியம் –

4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, பக்கத்து மாநில சிறையில்
இருக்கும் நிலையில் முற்றிலும் விரோத மனப்பான்மை கொண்ட பக்கத்து மாநில காவல்துறை அதிகாரிகளையும் கூட, சொன்னபடி ஆடும் வகையில் வளைத்துப் போட்டுக்கொண்ட சாமர்த்தியம் –

ஜெயிலில் முறைகேடாக வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன
என்று புகார் கொடுத்த பெண் காவல் அதிகாரியின் மீதே,
நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அந்த மாநில
முதல்வரையே கைக்குள் போட்டுக்கொண்ட சாமர்த்தியம் –

துவக்கத்தில் – போயஸ் கார்டனிலிருந்து, அப்போலோ
மருத்துவ மனை தொடர, இறுதியாக பரப்பன அக்ரஹார
சிறை வரை, சிசிடிவி காமிரா காட்சிகள் எதுவும்,
எப்போதுமே சிக்காமல் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட
வைத்த சாமர்த்தியம் –

மத்திய ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் கூட,
மாநில ஆளுநரையும் வளைத்துப் போட்ட சாமர்த்தியம் –

நாள்தோறும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்த எதிர்க்கட்சி
உறுப்பினர்களையும் “கவனித்து”க் கொண்டு, சத்தமே
எழும்பாமல், சட்டமன்ற கூட்டங்களை சமாளிக்கும்
சாமர்த்தியம் –

இன்னும் 4 ஆண்டுகள் முழுமையாக இந்த ஆட்சி நடைபெற
வேண்டும் என்று மாநிலத்தில் இருக்கும் மத்திய
அமைச்சரையே சொல்ல வைக்கும் சாமர்த்தியம் –

அடடா – லாலு குடும்பத்தின் சாமர்த்தியம், இந்த குடும்பத்தின்
சாமர்த்தியத்தோடு போட்டியிட வந்தால், அது, பின்னங்கால்
பிடறியில் இடிக்க ஓடத்தானே வேண்டி இருக்கும்….????

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to லாலுவை தோற்கடித்த தமிழ்க் குடும்பம்…!!!

  1. தமிழன் சொல்கிறார்:

    உங்கள் இடுகை கன்வின்சிங் ஆக இல்லை. லாலு அவர்கள் ஊழல் செய்ததைவிட பல்லாயிரம்கோடி ஊழல் செய்து எல்லாவற்றிலும் சாட்சி, ஆதாரங்கள் இருந்தும் இன்னும் கழுவில் ஏற்றாத நிலையில் தீயசக்தி கருணாநிதியின் ஆலமரக் குடும்பத்தை விடவா இந்தியாவில் இன்னொரு ஊழல் குடும்பம் இருக்கமுடியும்? உள்ளூரிலேயே இருக்கிற உதாரணத்தை விட்டுவிட்டு லாலுவை சொல்வது தவறல்லவா? வாலுவுக்குப் பதில் கருணாநிதி கும்பல் ரயில்வே மந்திரியாக இருந்தால் லட்சம் கோடிக்கு அதிகமான பணமும், இரயில்களும் கருணாநிதியின் வீட்டில்ல்லவா இருந்திருக்கும்?

  2. Srini சொல்கிறார்:

    ithanai saamarthiyamum eppadi vandhahu… oru pen seitha pizhayal allava KM sir…

    sadikari endru therindhum… thanaku vasathiya iruku endru 20 aaandu kalam pakathile vachu irundha pavam… avargalai kondu poi vitathu.. naam maatikondom

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.