சுதேசி ஜாக்ரண் மன்ச் போராட்டம் …..தவறு எங்கே…?சங் பரிவாரின் பொருளாதாரப் பிரிவு, சுதேசி ஜாக்ரண் மஞ்ச்.
பாஜக வின் இன்னொரு சகோதர இயக்கம் என்று இதை
சொல்லலாம்.

இது நாலைந்து நாட்களுக்கு முன்னர் டெல்லியில் ஒரு
போராட்டத்தை நடத்தியது…!
காரணம் “கவலை தரும் சீன முதலீடுகள்” …

போராட்டத்தையொட்டி, பிரதமருக்கு மஞ்ச் ஒரு எச்சரிக்கை
கடிதமும் எழுதி இருக்கிறது..

பாஜக அரசுக்கு எதிராக அதன் மற்றோரு பிரிவே
போராட்டம்… !!!

காரணம்….?

இந்தியாவுடன் பகைமை பாராட்டி, எல்லையில் போர்
பயமுறுத்தல்களுடன் காத்திருக்கும் சீன நாட்டிற்கு
இந்தியாவில் தொழில் நடத்த இரண்டு காண்டிராக்டுகள்
கொடுக்கப்பட்டுள்ளன.

முதலாவது – SAIC Motor Corporation Ltd என்கிற சீன அரசுக்கு
சொந்தமான கம்பெனி, General Motors-உடன் இணைந்து,
குஜராத்தில், ஹலோல் என்கிற இடத்தில் ஒரு புதிய
தொழிற்சாலையை துவங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

( கள நிலவரம் என்னவென்றால், ஜெனரல் மோட்டார்ஸ்
நிறுவனம் ஏற்கெனவே குஜராத்தில் வைத்திருக்கும் கார்
தொழிற்சாலையைத்தான் சீன நிறுவனம், (தொழிலாளர்கள்
யாருமின்றி, தொழிற்சாலையை மட்டும்…) வாங்கி நடத்த
உத்தேசித்துள்ளது…)

இரண்டாவது – சீன அரசு நிறுவனமான, China Railway Rolling
Stock Corporation (CRRC), நாக்பூர் மெட்ரோ ரெயிலுக்கு
தேவையான பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை
ஒன்றை மஹாராஷ்டிராவில், நாக்பூர் அருகே துவங்க
அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகவே, அதனிடம்,
மஹாராஷ்டிரா அரசு 851 கோடி ரூபாய் மதிப்பில், 69
பெட்டிகளை வாங்க ஆர்டர் கொடுத்து விட்டது. தொடர்ந்து,
மேற்கு வங்கம் 100 பெட்டிகளை வாங்க ஒப்பந்தம்
செய்திருக்கிறது.

இதில் குறிப்பாக, சுதேசி ஜாக்ரண் மஞ்ச் தெரிவிக்கும்
ஆட்சேபணை, பொதுவாக, சீனா – தான் வெளிநாடுகளில்
துவங்கும் தொழிற்சாலைகளில், உள்ளூர் தொழிலாளிகளை
வேலைக்கு அமர்த்துவதில்லை.. மாறாக, சீன
தொழிலாளர்களையும், மேலதிகாரிகளையும்,
ஒப்பந்ததாரர்களையும் தான் பணிக்கு அமர்த்துவது வழக்கம்.

அதே போல் technology transfer ( அதாவது தொழில்
நுணுக்கங்கள் பகிர்தல் ) எதையும் மற்ற நாடுகளுடன் செய்து
கொள்ளும் வழக்கமும் அதற்கு இல்லை. எனவே, இந்த
இரண்டு தொழிற்சாலைகளாலும், இந்தியாவிற்கு எந்தவித
பலனும் இல்லை.

மாறாக, இந்த இரண்டு ஒப்பந்தங்களும், இந்தியாவின்
பாதுகாப்புக்கு எதிராகவும், அதிக அளவில் சீன பொருட்களை
இறக்குமதி செய்து, இங்கு கொண்டு வந்து குவிப்பதிலும் தான்
சென்று முடியும்… என்கிறது பிரதமருக்கு சு.ஜா.மஞ்ச்சால்
எழுதப்பட்டுள்ள கடிதம்.

இந்த தவறு, கவனக்குறைவு, மத்திய அரசிடம் எப்படி
ஏற்பட்டது…?

நமக்கு புரிய வருகிற ஒரு காரணம் –

குஜராத் – பிரதமரின் சொந்த மாநிலம்.
பாஜக ஆளும் மாநிலம்…

மஹாராஷ்டிரா – ரெயில்வே அமைச்சரின் சொந்த மாநிலம்…
பாஜக ஆளும் மாநிலம்…
மேலும், தொழிற்சாலை வரவிருக்கும் நாக்பூர், முதல்வர்
பட்நாவிஸ் அவர்களின் சொந்த தொகுதி…

எனவே, ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களின்,
தங்கள் தங்கள் தொகுதியைப்பற்றிய அக்கரை,
நாட்டின் பொது நலனை அலட்சியப்படுத்த வைத்து விட்டது
என்றே தோன்றுகிறது….!!!

இந்த பிரச்சினையை இதர கட்சிகள் எழுப்பினால், தொழில்
வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று
ஆளும் தரப்பிலிருந்து கண்டனங்கள் எழும்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் இன்னொரு பிரிவான,
சுதேசி ஜாக்ரண் மன்ச்சே கிளப்பும்போது …?

மத்திய அரசு இதை சற்று கவனத்துடன் அணுக வேண்டும்
என்றே தோன்றுகிறது…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சுதேசி ஜாக்ரண் மன்ச் போராட்டம் …..தவறு எங்கே…?

  1. Sethuraman சொல்கிறார்:

    You are Right Sir.

  2. இளங்கோ சொல்கிறார்:

    என்ன சார் இது,
    பாஜக நண்பர்கள் யாரையும் இன்னும்
    பின்னூட்டத்தில் காணோமே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.