“செத்த பாம்பை ” அடிக்கத் துடிக்கும் ” பெரிய முதலாளி ” ….!!!


ஊழல் அரசு என்று தமிழக அரசைப்பற்றி விமரிசிப்பவர்களில்
அநேகமாக, இவர் தான் கடைசி ஆசாமியாக இருப்பார்.

ஏற்கெனவே –
அத்தனை பேரும்,
அடித்து துவைத்து,
காயப்போட்ட பிறகு,
செத்த பாம்பை –
அதுவும் பத்திரமாக வெகு தொலைவில் நின்று,
அங்கிருந்தே தடியை வீசி விட்டு –

– நான் அரசியல் பேசுவதை யாரும் தடுக்க முடியாது
என்று வீர வசனம் பேசும் இந்த உலக நாயகர்….

இத்தனையும் கேவலம் துட்டுக்காகத்தானே….? இதைவிட – பிச்சை எடுக்கலாமே…!

மத்திய அரசைப்பற்றி –

அதன் பசுவதைத் தடுப்பு பற்றிய திட்டங்கள் பற்றி …

பாஜக ஆளும் மாநிலங்களில் அது
செயல்படுத்தப்படும் விதம் பற்றி –

500-1000 ரூபாய் நோட்டுகளை செல்லாக்காசாக
(demonetization ) ஆக்கியதன் விளைவுகள் பற்றி..

ஜி.எஸ்.டி.யை அமலுக்கு கொண்டு வந்தது பற்றி
(சினிமாத்துறை விளைவுகள் பற்றி அல்ல-
பொதுவாக, அதன் சமூகத் தாக்கம் பற்றி …)

தமிழ்நாட்டின்பால் அக்கறை கொண்டு,
அதன் பிரச்சினைகளை தீர்க்க
மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி –

இலங்கை விஷயத்தில் மத்திய அரசின் போக்கு,
தமிழக மீனவர்கள் கைது, படகுகள் சிறைபிடிப்பு பற்றி –

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில்
மத்திய அரசின் பொறுப்பு / கடமை பற்றி –

எல்லாம் –

“தில்” இருந்தால் –
அதாவது நெஞ்சில் துணிவிருந்தால்,
கொஞ்சம் கருத்து சொன்னால் தேவலை…!!!

அந்த கருத்து ஆதரித்து வேண்டுமானாலும் இருக்கட்டும் –
எதிர்த்து வேண்டுமானாலும் இருக்கட்டும் –

பொதுவாக, மத்திய அரசின் செயல்பாடுகளை பற்றி
கருத்து சொல்ல துணிச்சல் உண்டா …?

“தில்” இருந்தால், மத்திய அரசைப்பற்றி,
ஒரு வார்த்தை – ஒரே ஒரு வார்த்தை –
விமரிசனம் செய்யட்டும் பார்க்கலாம்…!!!

ஏற்கெனவே அரசியலில் தான் இருக்கிறேன் –
கருத்து சொல்வது என் பிறப்புரிமை –
என்று வீர வசனம் முழங்கியது இவர் தானே …

அந்த “கருத்து சொல்லும் உரிமை” மாநில அரசுக்கு
மட்டும் தானா என்ன…? இவர் என்றைக்காவது மத்திய
அரசை விமரிசித்தது உண்டா…?

ஏன் இல்லை…?

மத்திய அரசை விமரிசிக்கும் முன்னர் இவர் பல்வேறு
விஷயங்களைப்பற்றி யோசிக்க வேண்டி இருக்குமே…

போத்தியில் முதல் முதலாக தனக்கு கிடைத்த விளம்பர
வரும்படி 15 கோடிக்கு, எப்படி, எத்தனை வருமான வரி
கட்டினார் ( ? ) என்பது பற்றி…

விளம்பரத்தில் வரும் வரும்படியை எல்லாம்,
HIV /AIDS நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறந்த
குழந்தைகளுக்காக செலவழிப்பேன்/தேன் என்று சொன்னதை –
சொன்னபடியே செய்தது (?) பற்றி –

இரண்டு மாதங்களுக்கு முன்னர்,

நாகர்கோவில், சென்னை, டெல்லி என்று
அவர் போகும் இடத்திற்கெல்லாம்
விடாமல் பின்தொடர்ந்து சென்று –
தமிழக பாஜக மத்திய அமைச்சரை 3 முறை சந்தித்து
பொன்னாடை போர்த்தியது எதற்காக என்பது பற்றி –

இங்கிலாந்து ராணியை சந்திக்க அனுப்பப்பட்ட
இந்திய குழுவில், பாஜக அரசால்,
nominate செய்யப்பட்டது எப்படி என்று –

“….. நாயுடு” படத்திற்கு, அடுத்த கட்ட ஷூட்டிங்குக்கு
அமெரிக்கா போவதில் என்ன பிரச்சினை என்றும் –
மத்திய அரசு இந்த விஷயத்தில் எப்படி உதவ முடியும்
என்றும் ..!

பல விஷயங்களை யோசிக்க வேண்டி இருக்குமே…!!!

ஏற்கெனவே அரசியலில் தான் இருக்கிறேன்…
என் நற்பணி மன்றங்கள் தான் என் கட்சி என்று
ஆங்கில தொலைக்காட்சி பேட்டியில் சொன்னவர் –

தனது கட்சியின் முக்கிய கொள்கைகளாக –

காட்டுமிராண்டி காலத்திற்கு சமூகத்தை இட்டுச்செல்லும் முயற்சி

– மனதுக்குப் பிடித்த ஆணும் பெண்ணும் பொதுவெளியில்
எங்கே வேண்டுமானாலும் தாராளமாக கட்டிப்பிடித்து
முத்தம் கொடுத்துக் கொள்ளலாம்…

– யார் வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும்
சேர்ந்து வாழலாம். திருமணம் செய்து கொள்ளும் வழக்கம்
சட்டபூர்வமாக தடைசெய்யப்படும்….

– இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகள், அரசே
நடத்தும் அநாதை இல்லங்களில் வளர்க்கப்படுவார்கள்.

– சேர்ந்து வாழ்வது அலுத்து விட்டால், சட்டை மாற்றுவது
போல், இணையை மாற்றிக்கொள்ளலாம்…

-ஜீவனாம்சம் கேட்பதும், கொடுப்பதும் –
தடை செய்யப்படும்…

என்று தமிழ் தொலைக்காட்சிகளின் மூலம் அறிவிக்கலாமே…!

கடைசியாக – ஆங்கில தொலைக்காட்சியில் பேசும்போது –
அபிராமி அந்தாதி மற்றும் “யோனி” பற்றி இவர் கூறிய அதே
கருத்தை, தைரியமாக தமிழில், தமிழ்நாட்டில் –
தமிழர்களுக்கு புரியும்படியாக இன்னும் ஒருமுறை திரும்ப
சொல்லலாம் …!!!

இவரை இன்னமும் சரியாக புரிந்து கொள்ளாத
மீதி தமிழ் மக்களும் இவரை புரிந்துகொள்ள அது உதவும்.

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to “செத்த பாம்பை ” அடிக்கத் துடிக்கும் ” பெரிய முதலாளி ” ….!!!

 1. சுவாமிநாதன் சொல்கிறார்:

  இந்த ஆசாமி ஒரு கோழை. 101 % சுயநலவாதி.
  தனக்கு மார்க்கெட் இல்லாதபோதெல்லாம்
  இந்த மாதிரி எதாவது பிரச்சினையை
  செயற்கையாக உண்டு பண்ணுவது இவர் வாடிக்கை.
  இப்போது பிக் பாஸ் ஓடவில்லை;
  அதை ஓடவைக்க பரபரப்புகளை செயற்கையாக
  உண்டாக்குகிறார்கள். வாங்கிய காசுக்கும்,
  இனி மீதம் வாங்கப்போகும் காசுக்கும் இவர் வேலை பார்க்கிறார்.
  முன்பு மத்தியமந்திரி பின்னால் அலைந்தது
  லண்டன் அரசியை பார்க்கும் குழுவில் சேர்ப்பதற்காக.
  இப்போது அலைவது ச.நாயுடு படக்குழு முழுவதுக்கும்
  விசா கிடைக்காத காரணத்தால், மத்திய அரசின் ரெகம்மண்டேஷனுக்காக.
  தமிழக மக்கள் ஏற்கெனவே இந்த ஆசாமியை புரிந்து தான் வைத்திருக்கிறார்கள். இந்த பரபரப்பு எல்லாம் வெறும் பொழுதுபோகாத தொலைக்காட்சி சேனல்கள் கிளப்புபவை மட்டுமே.
  தான் கெட்டலைந்தது போதாதென்று தமிழ் சமுதாயத்தையும்
  கெடுக்க முயலும் ஒரு மகாபாவி.

 2. புதியவன் சொல்கிறார்:

  இது கமலஹாசன் மீதான கடுமையான விமரிசனம் என்று நினைக்கிறேன். அவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர்.. என்று கலையுலகத்தில் இருப்பவர்.

  தனிப்பட்ட முறையில், அவர் பொதுவாக எல்லோரும் நம்பும் கலாச்சாரம் என்பதை உதறித்தள்ளியவர். திரையுலகத்தில் இருக்கும் பலரும் திருமண வாழ்வில் ஒழுக்கமாக இருந்தவர்கள் கிடையாது (அதாவது ஒழுக்கம் என்று நம்பப்படும் கொள்கைகள்). இதுல கமலஹாசன் ஓரளவு வெளிப்படையாக போலித்தனம் இல்லாமல் நடந்துகொள்கிறார். நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘கொள்கைகள்’ எல்லாம், குறைந்தபட்சம் பெரும்பான்மை மக்கள் மனதளவில் செய்வதுதானே. அப்படிப்பட்ட எண்ணம் மக்களிடத்தில் இல்லையென்றால் கனவுக்கன்னிகளுக்கு வேலையேது?

  பொதுவாக, தான் சார்ந்த திரையுலகம் (தொழில்) காரணமாக, கருணானிதி சார்பு நிலையையும், மத்திய அரசு சார்பு நிலையையும் எடுப்பவர். மத்திய அரசு எதிர்ப்பு நிலை எடுத்தால் அவரின் தொழிலுக்கான அங்கீகாரம் கிடைக்காது.

  அதே சமயம், சமயத்தில் தேவையில்லாத அரசியல் பேசி வம்பை வளர்த்துக்கொள்பவர். அவர் மனசாட்சி இரு அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்லர், ஆதாயத்தை மட்டுமே நோக்கக்கூடியவர்கள் என்று சொல்லும். இதனால்தான் ஒரு சமயம் ஜெ. எதிர்ப்புப் பேச்சு பேசிய ரஜினி, அதற்கப்புறம் அரசியல் பற்றிப் பேசுவதையே விட்டுவிட்டார். அவருக்குத் தெரியும் கருணானிதி, ஜெ.வைவிடச் சிறந்தவர் கிடையாது என்று.

  கமலின் விமரிசனம், இது யார் சொல்லியேனும் செய்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. இவர் என்ன சொன்னாலும் அதற்கு ரஜினிபோல் இம்பேக்ட் மக்களிடையே இருக்காது.

  • சுவாமிநாதன் சொல்கிறார்:

   // ஆங்கில தொலைக்காட்சியில் பேசும்போது –
   அபிராமி அந்தாதி மற்றும் “யோனி” பற்றி இவர் கூறிய அதே
   கருத்தை, தைரியமாக தமிழில், தமிழ்நாட்டில் –
   தமிழர்களுக்கு புரியும்படியாக இன்னும் ஒருமுறை திரும்ப
   சொல்லலாம் …!!!//

   இந்த மனிதரை இப்படியே விட்டு விட்டால், அவர் குடும்பத்தினரை
   தவிர, மற்ற அத்தனை பேரைப்பற்றியும் அசிங்கமாக பேசுவார்.
   அந்த வாயில் சாக்கடையில் இருப்பதை அள்ளி போட வேண்டும்.

   • புதியவன் சொல்கிறார்:

    ‘இந்து என்றால் திருடன்’ என்று கூறிய ஆசியாவின் மிகப்பெரிய கொள்ளைக்காரனை நம்மால் என்ன செய்ய முடிந்தது?

 3. இளங்கோ சொல்கிறார்:

  ‘பிக் பாஸ்’ ஃப்ளாப் ஆனதை மறைக்க வீராவேஷம் போடுகிறார்
  மேடையிலும், சினிமாவிலும், தனி வாழ்விலும் எல்லா இடங்களிலும் நடிப்பவர் இந்த வேடதாரி.
  பிக் பாஸ்’ஸில், பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகள் பற்றி,
  அதில் இவருக்குண்டான பொறுப்பு பற்றி, சில சர்ச்சைகள் எழுந்தன. இவருக்கு அதிலிருந்து தப்ப வேண்டி இருக்கிறது. அது இன்னொரு காரணம்.
  “திருமண பந்தம்” விடுங்க சார். இறுதியில் VD வந்து தவிக்கும்போது தானாகவே
  புரியும்.

 4. RST சொல்கிறார்:

  // இறுதியில் VD வந்து தவிக்கும்போது தானாகவே
  புரியும். //

  Sincerely pray that this should really happen.

 5. LVISS சொல்கிறார்:

  Probably he wants to confine mostly to T Nadu politics – Those who talk politics need not have views or express them on every issue –This question can be asked of any one who enters politics –These questions are asked and no one cares to respond to this —
  There are two issues that concern T Nadu on which he should express his views Cauvery issue and fisherman’s issue —

 6. NSM Shahul Hameed சொல்கிறார்:

  வெறும் காற்றில் வீரவாள் வீசும் கமலின் ‘காவி’யக் கனவுகள் பலிக்குமா?

  இடித்துரைப்போம் துடித்தெழுவோம்

  தோல்வியுற்றால் ஆளுநராய்
  தோள்கிடைத்தால் முதல்வராய்

  திராவிடப் பாதைகள் தென்படா சூழலில்
  மோடி தவிர்த்து முனைவரே தலைவர்
  சூடிக் கொடுக்க அமித்ஷா வருவார்! 😎😋

  – nsmsh

 7. LVISS சொல்கிறார்:

  Talking of demonetisation and its after effects , one thing intrigues me — How is it that after going through severe hardship of standing in queues for long hours and not having enough cash for almost two months , people voted for BJP in almost all the elections that followed ,especially in UP which is the biggest and one of the poorest states where people gave majority to BJP –No one has the answer to this –Either the people didnt think the way most of us think or that it was not a big issue for them to decide the winner of an election —
  Demonetisation is done and dusted issue –It was a temporary disruption caused deliberately . so the effects were temporary —

  • D. Chandramouli சொல்கிறார்:

   Well said, Mr LVISS.

   • புதியவன் சொல்கிறார்:

    எல்விஸ், சந்த்ரமௌலி – நீங்கள் உ.பிரதேச மற்றும் சில மாநிலத் தேர்தல் முடிவுகளை வைத்து (டிமானிடைசேஷனுக்கு அப்புறம்) எடைபோடுகிறீர்கள். அது தவறு என்று தோன்றுகிறது.

    1. கா.மை சார் டிமானிடைசேஷன் போதே, இது உ.பி. போன்ற மாநிலத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் பண விநியோகத்தை முற்றிலுமாக முடக்குவதற்காக இருக்கலாம் என்று சொல்லியிருந்தார்.

    2. மோடி அவர்கள் மீது இருந்த நம்பிக்கை எல்லா மக்களுக்கும் குறைந்துவிடவில்லை. இஸ்லாமியர்கள் (மிகப் பெரும்பான்மை) மோடியை ஆதரிப்பவர்கள் அல்லர். கிறிஸ்துவர்களும் அப்படியே (ஆனால் அவர்கள் மோடி எதைச் செய்தாலும், அதாவது இந்தியாவின் தென்பகுதி குறுகி இருப்பதற்கும் மோடியின் 3 ஆண்டுகால ஆட்சிதான் காரணம் என்று பல இஸ்லாமியர்கள் கண்ணைமூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் மாதிரி அவர்கள் செய்வதில்லை) அவர்கள் பாஜகவையும் எந்த இந்துக் கட்சியையும் ஆதரிப்பவர்கள் அல்லர். அதே சமயம் அந்த அந்தப் பிரதேச மக்களுக்கு வேறு வாய்ப்பை (தற்போது இருப்பவர்களைவிட) முயற்சிக்கலாமே என்று பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது, அதனால்தான் அறுதிப் பெரும்பான்மை பாஜகவுக்குக் கிடைத்தது. (இதில் நீங்கள் ஜெ. அவர்கள் முஸ்லீம் தொகுதி என்று அறியப்பட்ட தொகுதியில், முஸ்லீம் அல்லாதவரை நிறுத்தி, திமுக நிறுத்திய முஸ்லீம் வேட்பாளரைத் தோற்கடித்ததை ஒப்பிடலாம்)

    3. இதுவரை குறிப்பிடும்படியான, மக்களைப் பாதிக்கும், மக்கள் பார்க்கும் எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டும் மோடி அவர்கள் மீது கிடையாது. பிற்காலத்தில் ஆட்சி போனபின் தெரியும் என்று சொல்வதெல்லாம் விதண்டாவாதம், அனுமானம். அதனால், மோடி அவர்கள் ஊழலில் சம்பந்தப்படவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

    4. பொதுவாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைக்கக் கொடுத்திருக்கும்போது, மக்கள் அதீத வெறுப்படையும்படி எதுவும் நடந்துவிடவில்லை. எதிர்க்கட்சிகள் எதன்மீதும் நம்பிக்கை வரும்படி அவர்கள் இதுவரை நடந்துகொள்ளவில்லை, வளரவில்லை.

    5. கருணானிதியின் திமுக ஆட்சிக்கு மரண அடி கொடுப்பதற்கு முன்பு, 6 மாதத்துக்கு முன் நடந்த இடைத்தேர்தலிலும், திமுகவைத்தான் அந்தத் தொகுதி மக்கள் வெற்றிபெற வைத்தார்கள்.

    மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களது தினப்படி வாழ்க்கை பாதிக்கப்பட்டால் நிச்சயம் தேர்தலின்போது பொங்கி எழுவார்கள். ஜெ.வின் வெற்றிக்குக் காரணம், அவர், மக்கள் தினப்படி வாழ்க்கை பாதிக்கும்படி, அவர்களின் ஏழ்மையை எள்ளி நகையாடும்படி எந்தவிதமான செயல்களிலும் (91-96ஐப் போல) ஈடுபடவில்லை.

    என்னைப் பொறுத்தவரையில், பாஜகவின் தற்போதைய மோசமான எதிரிகள், ‘பசுப் பாதுகாப்பு’, ‘காதல் எதிரிகள்’ என்ற போர்வையில் கலவரத்தைத் தூண்டும் தீவிரவாதிகள். இவர்களுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் (WHOEVER IS DOING TERRORISM, NOT ALL) என்னைப்பொறுத்தவரையில் வேறுபாடு எதுவும் கிடையாது. தேவையில்லாமல், ‘இந்துத்துவா’ என்று பேசி வம்பு வளர்க்கும் ஹெச்.ராசா போன்றவர்களும் இதில் சேர்த்தி. அமைதிக் குளத்தில் கல்லெறியக்கூடாது, ஆனால் பெரும்பான்மை இந்துக்களை அவமதிக்கும் போக்கையும் பொறுத்துக்கொள்ளக்கூடாது (காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் செய்தவைகள்)

    • LVISS சொல்கிறார்:

     Mr Puthiyavan , Frankly I also thought that demonetisation will have some deep impact on the elections after it was gone through –But the results in the elections “disappointed ” those who predicted hell –The desperation among the opposition parties you see now is because of this “disappointment” –They do not know what to do to stop this continued success of the NDA –They depended on the outcome of the UP elections to dent the popularity of the govt–
     On a lighter note were notes in not demonetised in UP ?
     The people appear to believe that the steps taken by the PM are good for the country in the long run because the promise comes from a person who has maintained a clean image throughout his tenure spanning 3 terms as CM and who keeps his cabinet free of complaints —
     A section of the people have reservations about the PM –This is known to every one –There is another silent section of the people fed up with what they have got from the parties they have elected —

     • புதியவன் சொல்கிறார்:

      ‘நான் சொன்னது சரியாகப் புரியும்படி இல்லையா எல்விஸ்?

      டிமானிடைசேஷன் செய்ததால், மாயாவதி, சாமஜ்வாதி போன்ற கட்சிகள், பணத்தை எலெக்ஷனுக்காக இறக்க முடியவில்லை (500/1000 தடை காரணமாக). அதனால் பணத்தை வைத்து வாக்காளரைக் கவர்வது தடைபட்டது. அதனால் வாக்காளர்கள் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். அதனால், மாற்றி மாற்றி மாயாவதியையும் முலயாம் கட்சியையும் கட்டி அழுவதைவிட பாஜகவை நோக்கிப்போவோமே என்று வாக்களித்திருக்கிறார்கள். (இன்றைக்கு வரை உ.பியில் அரசு நல்ல பாதையிலேயே செல்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. யோகி நல்லவராகத்தான் எனக்குத் தோன்றுகிறார்)

      மக்களுக்கு, கஷ்டப்பட்டாங்களே தவிர, டிமானிடைசேஷனினால் ஏதோ நல்லதுதான் நடக்கப்போகிறது என்று நம்பிக்கை இருந்தது. எனக்கும் அந்த நம்பிக்கைதான். (எனக்கு எப்போ நம்பிக்கை போனது என்றால், புது 2000ரூ வைத்திருந்து பிடிபட்டவர்கள்-சேலத்தில பிடிபட்டானே ஒரு பாஜக கயவன், அப்புறம் ரெட்டி, அப்புறம் கர்னாடகாவுல கன்னா-பின்னா செலவுல திருமணம், புது 2000ரூ இவர்களுக்குக் கொடுத்த வங்கி அதிகாரிகள், பஸ் டிபோட், கோவில் கலெக்ஷனில் பழைய நோட்டைக் கலந்து அதற்குப் பதில் மாற்று கரென்சி பெற்றவர்கள் யாருமே, கையும் களவுமாகப் பிடிபடவில்லை, பிடிபட்டாலும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஒன்றும் தெரியவில்லை. அதே சமயம், நிச்சயமாக நல்ல நோக்கத்துடந்தான் மோடி அவர்கள் இதனைச் செயல்படுத்தினார் என்று இன்றும் நம்புகிறேன்)

 8. இளங்கோ சொல்கிறார்:

  // especially in UP which is the biggest and one of the poorest states where people gave majority to BJP –No one has the answer to this –//

  சார் எல்விஸ், நிஜமாகவே உங்களுக்கு இதன் விடை தெரியாதா ?
  குறைந்த பட்சம் religious polarization என்றால் என்ன என்று கூடவா தெரியாது ?

  • LVISS சொல்கிறார்:

   Mr Elangovan I do not subscribe to this polarisation theory –Polarisation is already there and the BJP is not its author — When the ruling parties blatantly indulge in appeasement of a section of people the other section is bound to get disgusted and coalesce themselves into a group –This is what is happening and this is what the other parties call polarisation – They are responsible for it and are paying for it —

   • புதியவன் சொல்கிறார்:

    எல்விஸ்-இதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதுவரை 20%, 15% ஓட்டுக்களுக்காக சிறுபான்மையினர் சமூகம் என்று தேன் குரலுடன் பேசியவர்கள், அதே அம்பு தங்கள் மீது திரும்பும்போது, ‘ஐயோ இந்துத்துவா… சமூக நல்லிணக்கம் போகிறதே’ என்று பினாத்துகிறார்கள். என்றைக்கு சமூக ரீதியாக பிளவுபடுத்தும் ‘சிறுபான்மையினர்’ என்ற கத்தியை காங்கிரசும் மற்ற கட்சிகளும் எடுத்ததோ, அப்போதே அவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும், வேறு ஒருவன் வருவான், அவன் இந்துக்களிடம், ‘நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்’ என்று சொல்லி போலரைஸ் செய்வான் என்று. அதுதான் இப்போது நடக்கிறது. அதனால்தான் நான் நம்புகிறேன், சிறுபான்மையினர், ‘மோடியைக் குறிவைத்து வெறுப்பை உமிழும்போது, சாதாரண பெரும்பான்மையினர், மோடியை நோக்கித்தான் செல்வார்கள். அதைத்தான் அவர்கள் பார்க்கப்போகிறார்கள்.

    • LVISS சொல்கிறார்:

     Mr Puthiyavan You made a mention about Hindutva –There is something that is intriguing about this –A section of Hindus are afraid of Hindutva and spreading a scare about Hindutva which is a way of life —
     Your last sentence sums up what is happening on the ground —

 9. Antony சொல்கிறார்:

  //செத்த பாம்பை //
  Even though she is a punished for corruption, I don’t think refering to a passed away person as a snake. I thought you had a good view on JJ.

  • தமிழன் சொல்கிறார்:

   ஜெ. ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டவர் அல்லர். அவருக்கு வாதிடுவதற்கு வாய்ப்பு இல்லாதபோது (அதாவது அவர் மறைந்துவிட்டார்) கோர்ட். அவரைக் ‘குற்றவாளி’ என்று அறிவிக்கமுடியாது, தண்டிக்க முடியாது.

   நிறையபேர் இதைப்பற்றிப் பிரஸ்தாபிப்பதைப் பார்க்கிறேன். சுப்ரீம் கோர்டே சொல்லிவிட்டது, அதற்கு அப்பீல் கிடையாது என்று. யாருக்கும் ஒரே நிலைதான் இருக்கமுடியும். (1) உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால் அதுதான் கடைசி நீதி. அதைத்தான் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் (2) உச்ச நீதி மன்றம் சொன்னதை ஏற்பதற்கில்லை.

   இது வழக்கினைப் பொறுத்து மாறக்கூடாது.

   அந்தோனி அவர்களே-இந்த இரண்டில் உங்கள் நிலை என்ன? அதைச் சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்.

   ‘செத்த பாம்பு’ என்று இடுகையில் குறிப்பிடப்படுவது, ‘எடப்பாடி, மன்னார்குடி கும்பல்’ கையில் உள்ள அதிமுக அரசை. ஏனென்றால், அது மக்கள் ஆதரவு பெற்ற அரசு அல்ல (மக்கள் ஜெவுக்கு வாக்களித்தனர். ஒருவேளை ஓபிஎஸ் தலைமையில் இயங்கினால் ஓரளவு அதை ஒத்துக்கொள்ள இயலும், ஏற்கனவே அதிமுக ஆட்சியை 3 தடவைகள் தலைமையேற்று நடத்தியுள்ளார்).

   • Antony சொல்கிறார்:

    Puthiyavan,
    Even though I admire JJ, I personaly feel she is guilty in that case looking at the way ahe behaved during the case.Answering your question, I never trusted Indian Justice system when it comes to political cases.
    Since KM has clarified, I don’t want to deviate from the topic.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Antony,

   நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள்.

   நான் “செத்த பாம்பை” என்று சொல்வது தற்போது
   இயங்கிக் கொண்டிருக்கும் அரசைத்தான்.
   ஜெ. அவர்களின் தலைமையில் இயங்கிய அரசை அல்ல.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 10. Woraiyur Pugal சொல்கிறார்:

  ஆங்கில தொலைகாட்சியில் அபிராமி அந்தாதி மற்றும் யோனி பற்றி கமல் பேசியதை நீங்க பதியலாமே..நாங்கள் கேட்டதில்லை அவரின் அந்த பேச்சை…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.