கலிகாலம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது…?
கலிகாலத்திற்குரிய அடையாளங்கள் எவை ?
நடப்பது கலிகாலமா என்று கண்டுகொள்வது எப்படி ?

பாகவத புராணம் சொல்கிறது –
கலியுகத்தில் என்னென்ன நடக்குமென்று –
அதை வைத்து ஓரளவு தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்…!

————

ராஜாவுக்கும், திருடனுக்கும் ஒரே நியாயம்,
ஒரேலட்சியம், ஒரே குறிக்கோள் – தான் இருக்கும்…..

“மக்களுடைய சொத்தை எப்படி கொள்ளையடிப்பது…! ”

சரி.. இப்போது ராஜாவுக்கு எங்கே போவது…?
ராஜா என்றால் யார் …?
simple – ராஜ்ஜியத்தை ஆள்பவர்கள்..!
———–

அவர்கள் குடிமக்களை துன்புறுத்துவார்கள்…
ராஜாவினால் துன்புறுத்தப்படும் மக்கள், தங்களுக்குள்
ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொள்வார்கள்…!

————-

பணக்காரன் சொல்வது தான், செய்வது தான் தர்மம்;
அவன் தான் எல்லாம் தெரிந்தவன்; அவன் தான்
புண்ணியவானாக, தர்மாத்மாவாக தெரியப்படுவான் …!

ஏழை சொல் அம்பலம் ஏறாது –
பலமுள்ளவன் சொல்வது தான் நீதி என்கிற நிலை

வந்துவிடும்…பணம் உள்ளவன், பலம் உள்ளவன்
சொல்வது தான் நீதி என்கிற நிலை வந்து விடும்.
அது தான் தீர்ப்பு. அது தான் தர்மம் என்கிற நிலை
வந்துவிடும்.

————–

ஜீவநதிகள் கூட வரண்டு விடும்…

———–

கணவன், மனைவி ஆகியோருக்கு ஒருவர் மீது,
மற்றவர்க்கான அக்கறை குறைந்து விடும்…

—————

வேலைக்காரர்களை எல்லாரும் கேவலமாக நடத்துவார்கள்.
இத்தனை வருடம் நமக்காக உழைத்தானே என்று கூட
பார்க்காமல், சர்வ சாதாரணமாக அவனை வேலையை
விட்டு அனுப்பி விடுவார்கள்..

வேலைக்காரர்களுக்கும், கொஞ்சம் கூட எஜமான விசுவாசம்
இருக்காது.

————

வயது முதிர்ந்தவர்களை யாரும் கவனிக்க மாட்டார்கள்.
பெற்றோர்களை பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள்.
சுமையாக கருதுவார்கள்.

————————————————–

சில லட்சணங்களை மட்டும் தான் இங்கே சொல்லி
இருக்கிறேன்…எல்லாவற்றையும் கேட்டால் பயமாக
இருக்கும்….!!!

தேடித்தேடி பார்த்தேன்… எனக்குத் தெரிந்தவரை
எங்கும் சொல்லப்படவில்லை…

” நடிகர்கள், யாருக்கும் புரியாத மொழியில் கவிதைகள் எழுதி
பயமுறுத்துவார்கள் ” என்று….

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to கலிகாலம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது…?

 1. தமிழன் சொல்கிறார்:

  கலியின் கஷ்டங்களைப் பற்றி இன்னும் விரிவாகவே விஷ்ணு புராணத்தில் சொல்லியுள்ளது. எனக்கு என்ன சந்தேகம்னா, அப்படியே இப்போ நடக்கிறதே, இத்தனைக்கும் இது கலியின் ஆரம்ப காலம்தான். இன்னும் 80% வருடங்களுக்கு மேல் இருக்கிறது. அப்போது எப்படிப் பட்ட மக்கள் இருப்பார்கள், நல்லவர்கள் எண்ணிவிடும் அளவிலாவது இருப்பார்களா என்று தோன்றுகிறது.

  சமீபத்தில் படித்தேன், இந்தியாவில்தான் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி, உலகிலேயே அதிகம் என்று. இது நல்லதல்ல. இதைப் பற்றி ஒரு இடுகை நீங்கள் வெளியிடவேண்டும். ஏழைகள் அதிகமாக அதிகமாக, அவர்கள் வயிற்றுக்காக, தவறுகள் செய்வது அதிகமாகிவிடும். 50 கோடி(even 5 கோடி) ரூபாய் சம்பாதித்து இங்கே வைத்துவிட்டு செத்துப்போவதில் ஒரு பிரயோசனமும் இல்லை. அதற்குப்பதில், 5 லட்சம் வைத்துவிட்டு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏழைகளுக்கு உதவினால் (என்ன உதவி? ரெண்டே ரெண்டுதான். வயிற்றுக்கு, கல்விக்கு. வேறு எதுவும் கொடுக்கவேண்டாம்) அதுவே சமுதாயத்துக்கு, தேசத்துக்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும்.

  கா.மை. சார்… கமலஹாசனை விட்டுவிடுங்கள். அவரால் இம்பாக்ட் கிடையாது. விஜயகாந்த் என்ன நினைப்பாரோ அதை தைரியமாகப் பேசுவார். ரஜினியும் அதுபோல்தான் என்ற இமேஜ் அவருக்கு இருக்கிறது. இருவரும் ஓரளவு மக்களை அணிதிரட்டும் வல்லமை பெற்றவர்கள் (விஜயகாந்த் தன் அரசியல் தவறுகளாலும், பின்பு தன் உடல் நலக் குறைவாலும் கணிசமான ஆதரவை இழந்தார்). கமலஹாசன் அப்படி அல்ல. அவரால் ஒரு விளைவும் இருக்காது. (கமலஹாசனுக்கு இன்டஸ்டிரியில் இருக்கும் வாய்ஸ் போன்றவை, திரையுலகப் பாராட்டு விழாக்களுக்கு உதவும், தன் குடும்ப வியாபாரத்துக்கு உதவும் என்பதால்தான் அவருக்கு திமுகவின் ஆதரவு. கமலஹாசனும் கருணானிதியின் ஆதரவாளராகத் தன்னை எப்போதும் காட்டிக்கொண்டு வந்துள்ளார்). அதனால், கமலஹாசன் ட்வீட்ஸ், கதை, பேச்சு, கவிதை – இதெல்லாம் பொழுதுபோக்கு வகையைச் சேர்ந்தது.

 2. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  கா.மை ஐயா,
  இந்த விஷயங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டை காவலரே திருடனை பார்த்துக்கொள்ளும் பெங்களூர் சிறைப்புனிதத்தை பற்றிய இடுகையை எதிர்நோக்கியுள்ளோம்.
  கலியுகம் சுடிதார் போட்டுகொண்டு அலைந்ததாக நம் செவியால் கேட்பதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை.
  எதாவது உண்மை செய்தி கிடைத்ததா இல்லை publicity ஸ்டூண்ட்கள் தானா?

 3. புதியவன் சொல்கிறார்:

  “வயது முதிர்ந்தவர்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். பெற்றோர்களை பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள். சுமையாக கருதுவார்கள்.”

  ஆமாம். தன் ஊழல் சாம்ராஜ்யத்திற்காக உழைத்த தந்தை ஆஸ்பத்திரியில் இருக்கும்போது, தங்கள் (அவருடைய) பணத்தைச் செலவழிக்காமல், அரசு செலவழிக்கட்டும் என்று பாஜகவின் அரசை விட்டு வெளியேறாமல், அவர் இறந்தவுடன் (அதாவது தங்களுக்கு பைசா செலவில்லை என்பது உறுதியானவுடன்), பாஜகவை விட்டு வெளியேறிய திமுகவை இது குறிப்பிடவில்லையே?

  அல்லது, எங்கே அவருடைய சம்பளம் வராமல் போய்விடுமோ (சட்டசபையில் கையெழுத்திடாவிட்டால்), அல்லது உடல் நிலை சரியில்லை என்றால் அரசு சார்பில் பணம் செலவு செய்யாமல், சொந்தப் பணத்தைச் செலவுசெய்யவேண்டி வருமோ என்று பயந்துகொண்டு ‘சிறப்புத் தீர்மானம்’ (தொகுதி எக்கேடு கெட்டால் என்ன) கொண்டுவந்தவர்களைக் குறிப்பிடவில்லையே இது?

 4. இளங்கோ சொல்கிறார்:

  இது லேடஸ்ட் செய்தி:

  ஸ்டாலினும், கமல்ஹாசனும் விரைவில்
  திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில்
  ஒரே மேடையில் பேசப்போகிறார்களாம்.

  இதற்கு நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் ?

  • தமிழன் சொல்கிறார்:

   @ இளங்கோ – ஸ்டாலினுக்கு திமுகவினரின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. ஆனால் அதுமட்டும் முதல்வராவதற்குப் போதாது. பொதுமக்களின் ஆதரவு தேவை. ஏற்கனவே திமுகவுக்கு இருக்கும் நல்ல பெயர் எல்லோரும் அறிந்ததுதான். அதனால் கமலஹாசன் நடுனிலையாளர்கள் வாக்கை, பார்வையை திமுக பக்கம் திருப்ப உதவும் என்று நினைத்துத்தான் இருவரும் ஒரே மேடையில் பேசலாம். அதுவும்தவிர, திரையுலக ஜாம்பவான்’கள் ஸ்னேகம், ஆதரவு, தன் மகனின் படத்தயாரிப்பு போன்றவைகளுக்கு உதவும்.

   இதனைத் தவிர, ஸ்டாலினுக்கு இந்து ஓட்டு வங்கி தேவைப்படுகிறது. அதனை நோக்கியும் அவரின் செயல்கள் இருக்கும். ‘கடவுள் இல்லை’ என்ற பைத்தியக்காரத்தனம் கருணானிதியோடு போகட்டும் என்று ஸ்டாலின் விட்டுவிடுவார். தேவை ஏற்பட்டாலொழிய அல்லக்கை வீரமணியை ஸ்டாலின் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளமாட்டார். அவருடைய முதல் ப்ரையாரிட்டி, பாஜகவின் வளர்ச்சியைத் தடுப்பது, தனக்குப் போட்டியாக ஜெ. மாதிரி இன்னொரு நடு’நிலையாளர்கள் விரும்புபவர் உருவாகாமல் பார்த்துக்கொள்வது (ரஜினி அரசியலில் இறங்கப்போகிறேன் என்று பூச்சாண்டி காண்பிப்பதையும் கமலஹாசனிடம் ஸ்டாலின் கைகோர்ப்பதையும் ஒப்பு நோக்கலாம்)

   • Sanmath AK சொல்கிறார்:

    ஜெ. மாதிரி இன்னொரு நடு’நிலையாளர்கள் விரும்புபவர் உருவாகாமல் பார்த்துக்கொள்வது…… is it ??…..Was JJ a choice of neutralists ??….If so those neutralists might have been biased outside politics, political/general ideologies & of course developments !

    It is intriguing…. Please educate me – on what basis you said that neutralists were on JJ’s side.

    Thanks.

    • Antony சொல்கிறார்:

     Without neutralists’ support how could she become CM continuously?

     • தமிழன் சொல்கிறார்:

      நன்றி அந்தோனி. அதிமுகவுக்கு (ஜெ காலத்தில். இப்போதல்ல) 35 சதவிகிதம், திமுகவுக்கு 25 சதவிகிதம் வாக்குகள் உண்டு. 5 வருட ஆட்சியின் முடிவில் 4-5 சதவிகிதம், ஆதரவில் குறைவு ஏற்படும் (ஆட்சியாளர்கள் மீது பொதுமக்களுக்கு வருத்தம் இருக்கும்). கட்சி அபிமானிகள்/தொண்டர்கள் பொதுவாக 60-70% இருப்பார்கள். (வாக்களிப்பவர்களில் 80%க்குமேல்). மீதி உள்ளவர்கள் பொதுவானவர்கள், அந்த அந்த சூழ்னிலை, அப்போதிருக்கும் விருப்பு/வெறுப்பு, யார் வெற்றிபெறக்கூடுமோ அவர்களுக்கு வாக்களிக்கும் மனனிலை போன்ற எல்லாம் கலந்தது இந்தப் பொதுவானவர்கள் லிஸ்ட். அவர்கள்தான் ஜெ. பக்கம் இருந்து இரண்டாவது முறை அவரது ஆட்சியைத் தொடரச் செய்தவர்கள். அதனால்தான், திமுக+காங்கிரஸ்+ ஆட்சி எதிர்ப்பு 3 சதவிகிதம் சேர்ந்தும் அதிமுகவைவிட 2 சதவிகிதம் குறைவான வாக்குகள் பெற்றது.

      “political/general ideologies” – இதைப் பார்த்து வாக்களிப்பவர்கள் மொத்த தமிழ்’நாட்டில் 10 வாக்காளர்கள் இருப்பார்கள். எவனுக்கு ஐடியாலஜிலாம் தெரியும் (சும்மா நகைச்சுவைக்காகச் சொன்னேன். ஐடியாலஜிலாம் ஒரு 0.005% வாக்காளர்களுக்குத் தெரிந்திருந்தாலே அதிகம். அதேபோல, 0.005% கட்சிக்காரர்களுக்குத்தான் அவர்கள் கட்சியின் கொள்ளைகள் (கொள்கைகள்) தெரியும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    தமிழன்,

    // இதனைத் தவிர, ஸ்டாலினுக்கு இந்து ஓட்டு வங்கி தேவைப்படுகிறது. அதனை நோக்கியும் அவரின் செயல்கள் இருக்கும். ‘கடவுள் இல்லை’ என்ற பைத்தியக்காரத்தனம் கருணானிதியோடு போகட்டும் என்று ஸ்டாலின் விட்டுவிடுவார். //

    -இங்கே லாஜிக் உதைக்கிறது.

    இந்து ஓட்டு வங்கியை விரும்புபவர் திரு.கமல்ஹாசனை
    தன் கூட வைத்துக் கொள்ள மாட்டார்…கமல்ஹாசன் கூட இருந்தால், வரக்கூடிய இந்து ஓட்டும் போய் விடும்…
    இந்து ஓட்டு மட்டுமல்ல… பெண்கள் ஓட்டும் போய் விடும்.
    கமல்ஹாசன் ஓட்டு கேட்டால் குடும்பப்பெண்கள்
    காரித்துப்புவர்….

    Mr.Kamal hassan will be a liability and no party will be interested
    in taking him into their fold while facing elections.

    இப்போது திரு.ஸ்டாலின் ஆதரவு தெரிவிப்பது,
    சும்மா – ஏற்பட்டிருக்கும் பரபரப்பை,
    சுயலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ள…
    இது தேர்தல் வரையெல்லாம் போகாது.

    இந்த கோணத்தில் யோசித்துப் பாருங்கள் –
    உங்களுக்கே புரியும்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • தமிழன் சொல்கிறார்:

     இல்லை கா.மை. சார். கமலஹாசனால் இந்து ஓட்டு வரும் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை. ஸ்டாலினுக்கு உள்ள இப்போதைய அஜென்டா, புதிய சக்தி, தலைமை எதுவும் இப்போது வந்துவிடக்கூடாது என்பதுதான். அதனால்தான் ரஜினியை அலேக் செய்து, த.மா.கட்சிக்கு அதிக சீட்டுகள் கொடுத்து தன் தலைமையை 1996ல் கருணானிதி வைத்துக்கொண்டார். அதேபோல் எல்லோரும் இப்போது ஸ்டாலினுக்கு உதவி செய்வார்களா என்பது சந்தேகம்தான். ராகுலைப் போல, ஸ்டாலின் மற்ற கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்ளும் ஸ்டேடஸுக்கு அவர் காலத்தில் வருவாரா என்பது சந்தேகம்தான்.

     “இதனைத் தவிர, ஸ்டாலினுக்கு இந்து ஓட்டு வங்கி தேவைப்படுகிறது. அதனை நோக்கியும் அவரின் செயல்கள் இருக்கும். ‘கடவுள் இல்லை’ என்ற பைத்தியக்காரத்தனம் கருணானிதியோடு போகட்டும் என்று ஸ்டாலின் விட்டுவிடுவார். ”

     நான் ஸ்டாலினுடைய அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்று எழுதினேன் (கமலஹாசனோடு சம்பந்தப்படாத போதும்). கமலஹாசனுக்கு அரசோ மற்றவர்களோ தொந்தரவு கொடுத்தால் (குடிகார அமைச்சர் ஒருவர் கமலஹாசனைப் பற்றி மட்டமாக விமர்சனம் செய்தார்) அது நடு நிலையாளர்களை திமுக பக்கம் நோக்கித் திருப்பலாம்.

 5. DeathBirthRaceR சொல்கிறார்:

  கலிகாலம் ~ மனிதம் ஜீன் வழி மறவாத தாய் தந்தை நிழல் என நிறைய அற்புத பலம் பலவீனம் கண்டதும் கேட்டதும் நான் எனும் நிலை பலவாறு பலநிலை உள்ளத் தெள்ளறிவுணர்ந்ததும் படித்ததில் பரவச மதம் தாண்டி உணர்ந்தது உலகியலே எனும் சிறுகுறிப்பு தங்கள் இடுகையில் நானெழுதுதல் பலமனிதமும் சிந்தித்து வாசிக்கும் எனும் நம்பிக்கையில் …..

  ‘நியாயத்தின் பக்கம் நாம் இருப்பது வேறு; நம் பக்கம் நியாயம் இருப்பது வேறு ‘ என்பது ஒரு சிந்தனையைத் தூண்டும் முதுமொழி. ‘என் நியாயம், என் தரப்பு’ என்னும் அணுகுமுறை தனிமனித சிந்தனைத் தடத்தில் உச்சமாயிருப்பது தவிர்க்க இயலாது. அதே சமயம் புதியன- சீரியன சிந்தித்துப் பண்பாட்டுக்குச் செழிப்பூட்டியவர்களே சமுதாய சிற்பிகள். சமுதாயத்தின் நெறிகளை, பாரம்பரியங்களை, வழிநடப்பது மற்றும் கண்டிப்பாக்குவது என்னும் வழிகள் மூலமாக சமுதாயத்தின் அங்கமாகச் செயற்படுவோர் மறுபுறம். இவர்களால் சுதந்திர சிந்தனை அல்லது புது ஊற்றுக் கருத்தாக்கம் என்பவற்றைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்க முடியாது.
  “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா? அல்லது சமுதாயத்தின் அங்கமா?” என்ற கேள்விக்கு அமைப்புகளின் தரப்பில் ஒரே விடை தான் – சமுதாயத்தின் அங்கம் மட்டுமே அவன்; தனித்துச் சிந்திக்க, இயங்கத் தேவையில்லை. இந்த இடத்தில் அமைப்பு என்று நாம் குறிப்பிடுவதின் மிகச் சிறிய உதாரணம் குடும்பம். மிகப் பெரியது அரசாங்கம்.

 6. குலாம் ரசூல் சொல்கிறார்:

  கா.மை. ஐயா அவர்களுக்கு,

  ”தான் விரும்புபவர்கள் எல்லாரும் நல்லவர்கள், தன்னால் வெறுக்கப்படுபவர்கள் அனைவரும் தீயவர்களே என்று மக்களால் கருதப்படுவார்கள்” என்று கலிகால படியலில் எதுவும் இருக்கனுமே ஐயா கொஞ்சம் நல்லா பாருங்கள்.

  தான் விரும்புபவர்கள் அனைவரும் நல்லவர்களே என்று கண்ணை மூடி ஆதரிக்கும் சகோதரர்கள் கவனிக்க, அவர்கள் செய்யும் அனைத்துவித தீய, பாவகாரியங்களில் உங்களுக்கும் நாளை(மறுமையில்) பங்கிருப்பதாக கணக்கிடப்படும், அந்த தீயவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற தண்டனையில் கொஞ்சமேனும் கண்ணை மூடி ஆதரிக்கும் காரணத்தால் நம்மையும் வந்து சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  இஸ்லாமிய தீவிரவாதம்:
  இதற்கு பல தடவை பல பேரால் விளக்கம் கொடுத்தும் மீண்டும் அதே சொல்லாடல்.

  முஸ்லிம் என்று பெயரை வைத்துக்கொண்டு அவன்/அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு பல அப்பாவி உயிர்களை கொல்வதில் இஸ்லாத்திற்கும் அந்த கொடும் பாவ செயலுக்கும் எந்தவித‌ சம்பந்தமுமில்லை. அந்த பாவிகள் இஸ்லாத்திற்காகவே செய்கிறோம் என்று சொன்னாலும் சரியே. அறியாத‌ சில முட்டாள்கள் அந்த கொடுஞ்செயலை ஆதரித்திருந்தால் நான் மேலே இரண்டாவது பத்தியில் குறிப்பிட்டுள்ள பாவ பங்கு அந்த முட்டாள்களுக்கும் சேரும் என்பதில் ஐயமில்லை.

  இஸ்லாத்தை அறியா சிலர் முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் குற்றப்படுத்தும் போக்கு உலகளவில் இருக்கு. அது இங்கும் இருப்பது கண்டு ஆச்சரியமொன்று இல்லை.

  சகோதரர்கள் இதற்கு விடையளிப்பார்களாக, இஸ்லாத்தை அறியா சிலர் செய்யும் காரியங்களுக்காக இஸ்லாமிய தீவிரவாதம் என்று பொதுப்படுத்தி அழைப்பது போல் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இன்று நடக்கும் படுகொலைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம். இதை பொதுப்படுத்தக் கூடாது என்பது உங்கள் பதில் என்றால் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பொதுப்படுத்துவது எங்ஙனம் நியாயம்.

  முஸ்லிகள், மோடியை பாஜகவை வெறுக்க காரணம் வெள்ளிடை மலை. அவர்களின் இஸ்லாமிய விரோத போக்கு. குஜராத் படுகொலைகளிலிருந்து இன்று வறை இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்களின் செயற்பாடுகளில் ஏதாவது மாற்றமிருக்கா. இந்த மூன்று ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லா அளவிற்கு அது அதிகரித்து தான் இருக்கின்றது. இன்று இஸ்லாமியர்கள் ஒரு பதட்டமான சூழ்நிலையில் ஒரு scary நிலையில் இருக்கிறார்களா இல்லையா? இதற்கு யார் காரணம். இந்த நிலையை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் பாவத்தில் பங்கு இருக்குமென்பதை அறிந்துகொள்ளட்டும்.

  மோடி/பாஜக முஸ்லிம்களை ஆதரிக்கவேண்டாம், அவர்களை வெறுக்காது அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை முறையாக கண்டித்து அந்த நாசகார கொலைகார வன்முறையாளகர்ளை தண்டித்து முஸ்லிம்கள் பாதுகாப்பாக நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்கட்டும். பிறகு முஸ்லிம்களிடம் ஆதரவு கேட்க வேண்டாம் தானாகவே தருவார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   குலாம் ரசூல்,

   இன்றைய இடுகையை பாருங்கள்…
   உங்கள் கவலை தான் அதன் அடிப்படை.
   காலம் மாறும்…
   மக்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.