ஸ்பெஷல் குடும்பத்தின் … அபார சாதனை…!!!

கர்நாடகா அரசு, சற்றும் தளராமல், விடாப்பிடிவாதத்துடன்
வழக்கை 18 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி, அப்பீலுக்கு மேல்
அப்பீல் போட்டு, ஒரு வழியாக சிறைத்தண்டனை வாங்கிக்
கொடுத்து விட்டு தான் ஓய்ந்தது.

தங்களுக்கு இவ்வளவு கொடுமை செய்தவர்களுக்கு,
பதிலுக்கு அந்த குடும்பம் என்ன செய்தது…?

” இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர் நாண நன்னயம் செய்துவிடல்”

-என்கிற வள்ளுவர் வாக்கை சிரமேற்கொண்டு, அவர்களுக்கு
கோடி கோடியாக பணத்தை அள்ளி அள்ளி கொடுத்து
கேட்பவரை எல்லாம் பிரமிக்கச் செய்திருக்கிறது….யாருக்கு
வரும் இந்த பரந்த மனப்பான்மை….!!!

—————————-

காலையில், பின்னூட்டத்தில் ஒரு நண்பர் கேட்டிருந்தார்…
அவருக்காகவும், மற்ற நண்பர்கள் அறியவும், சில விவரங்கள்
கீழே –

சமூக ஆர்வலர், பெங்களூரைச் சேர்ந்த திரு நரசிம்மமூர்த்தி,
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தான் சில
தகவல்களை பெற்றுள்ளதாக கூறி, கீழ்க்கண்ட விவரங்களை
அறிவித்துள்ளார்….

16/02/2017 முதல் 12/06/2017 வரையிலான மொத்தம்
117 நாட்களின் விவரங்கள் –

சிறைக்குள் இருக்கும் விசாரணைக் கைதிகளை –
கைதிகளின் உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள்
வாரம் ஒரு முறை சந்திக்கலாம்.

தண்டனை பெற்ற கைதிகளை, 15 நாட்களுக்கு ஒரு முறை
தான் சந்திக்க முடியும் என்பது சிறை விதி. அப்படி பார்த்தால்,
தண்டனை கைதியான, திருமதி சசிகலா 117 நாட்களில்
(அதாவது சுமார் 4 மாதங்களில்) மொத்தம் 8 முறை தான்
சிறைவிதிகளின்படி சந்தித்திருக்க முடியும்.

ஆனால், 32 முறை 71 பேர், அவரை சந்தித்திருக்கிறார்கள்.

அதே போல், சிறையில் இருக்கும் தண்டனை கைதியை,
ஒரு வருடத்தில், ஒரே நபர் ஆறு முறை தான் சந்திக்க
முடியும். ஆனால், திருமதி சசிகலாவை, திருமதி
இளவரசியின் மகன் திரு.விவேக், நான்கு மாதங்களுக்குள்
ஒன்பது முறையும், திரு.தினகரன் ஏழு முறையும்
சந்தித்திருக்கிறார்கள்;

பார்வையாளர்கள் நேரம் காலை 11 மணி முதல் மாலை
5 மணி வரை என்பது சிறை விதி. ஆனால், திருமதி
சசிகலாவை பலரும் இரவு 8 மணி வரை
சந்தித்திருக்கிறார்கள்.

———————–

இப்பேற்பட்ட குடும்பத்தின் ஆட்சியை
அனுபவிக்க தமிழக மக்களுக்குத்தான் கொடுப்பினை
இல்லாமல் போய் விட்டது…!!!

—————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ஸ்பெஷல் குடும்பத்தின் … அபார சாதனை…!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  “இப்பேற்பட்ட குடும்பத்தின் ஆட்சியை அனுபவிக்க”

  கா.மை. சார்… இந்த விமரிசனம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. எனக்கு இரண்டுவிதமான காரணங்கள் தோன்றுகின்றன.

  1. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கும் மக்கள் ‘கயவர்களா’ அல்லது வாங்கும் அரசு அலுவலர்கள் ‘கயவர்களா’?
  2. காசுக்கு ஓட்டை விற்கும் வாக்காளர்கள் ‘அயோக்கியர்களா’ அல்லது ‘காசு கொடுத்து ஓட்டைத் தனக்குப் போடச்சொல்லும்’ வேட்பாளர்கள் அயோக்கியர்களா?
  3. தன்னைவிட படிப்பில் உயர்ந்தவர்களைப் புறம் தள்ளி, தன் தந்தையின் பணத்தால் ‘இடங்களை’ அபகரிக்கும் மாணவர்கள் ‘கயவர்களா’ அல்லது அப்படி படிப்பறிவுள்ள மாணவர்களை ஒதுக்கிவிட்டு, ‘பணத்தினால்’ மட்டுமே இடங்களை வழங்கும் கல்லூரி அதிபர்கள் ‘கயவர்களா’? (இது சட்டப்படி என்று நாம் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் தார்மீகப்படி தவறுதான்)
  4. ரயிலில், சில இடங்கள் மீதம் இருக்கும்போது, காசு கொடுத்து, ஏற்கனவே ‘ரிசெர்வ்’ செய்யாதவர்கள், இடங்களை அபகரிக்கிறார்களே, அவர்கள் ‘கயவர்களா’ அல்லது அப்படி காசு வாங்கி, இடத்தைக் கொடுக்கும் அதிகாரிகள் ‘கயவர்களா’

  இதற்கான பதிலைப் பொறுத்துத்தான், சசிகலா கும்பல், ‘கயவர்களா’ அல்லது, சட்டத்தை முழுவதுமாக ‘பணத்துக்காக’ வளைக்கும் சிறைத்துறை அதிகாரிகள் ‘கயவர்களா’ என்பதைச் சொல்ல இயலும். (இடுகையில் நேரடியாக சசிகலாவை நீங்கள் குற்றம் சொல்லாத போதும்)

  இன்னொன்று, காங்கிரஸ் கட்சி, திருநாவுக்கரசர் அவர்களைத் தலைவராக ஆக்கியதன்மூலம், வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டது. அவர் காங்கிரஸ் காரர் அல்லர். அவருக்கு உள்ளூர அதிமுக ரத்தம்தான் ஓடுகிறது. அதனால் அவருக்கு திமுக உவப்பான கட்சியல்ல. அதனால்தான் ராகுலை, ஜெ. அவர்கள் உடல்’நலம் இல்லாதபோது அப்போலோவுக்கு வந்து சந்திக்கவைத்தது (அது ராகுல் அவர்களின் இமேஜை உயர்த்தினாலும், அதுவரை, அவர் கூட்டணியில் இருக்கும் கருணானிதியைச் சந்தித்ததேயில்லை). திருநாவுக்கரசர், அவருடைய தொடர்புகளை வைத்து மன்னார்குடி கும்பலுக்கு உதவி செய்கிறார். இது, திமுக+காங்கிரஸ் கட்டுச்சோத்தில் கட்டிய பெருச்சாளிபோல் அவரைக் காண்பிக்கிறது.

  நம் சிஸ்டத்தில், ‘பணம்’ இருந்தால், அவர்களுக்கு சட்டம் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் ‘பணம்’ இல்லாவிடில், சட்டம் கறாராகத் தன் கடமையைச் செய்யும். ஓரளவு நேர்மையாக சட்டம் நடந்துகொள்ளும் அத்தகைய ஏதிலிகளிடம்.

  • Ganpat சொல்கிறார்:

   நண்பரே!

   உங்கள் சந்தேகத்தை ஒரு நகைச்சுவை துணுக்கின் மூலம் தெளிவாக்க விரும்புகிறேன்.

   ஒருவர் அலுவல் காரணமாக வெளியூர் சென்று விட்டு குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தன் இல்லம் திரும்பி படுக்கை அறையினுள் நுழைந்தால்…அங்கு அவருடைய நெருங்கிய நண்பருடன் அவர் மனைவி!!
   சினமடைந்த அவர் தன் கைத்துப்பாக்கியால் மனைவியை உடனே சுட்டு கொன்று விடுகிறார்.
   ஆச்சு! கைது,கேஸ் அவர் மீது குற்றம் நிரூபணம் ஆகி நீதிபதி தண்டனையும் கொடுத்தாச்சு! கடைசியாக நீதிபதிக்கு ஒரு சந்தேகம்.குற்றவாளியை பார்த்து கேட்கிறார்.
   “இந்த குற்றத்தில் உங்கள் மனைவி, நண்பர் ஆகிய இருவருக்கும் சம பங்கு இருக்கையில் நீங்கள் ஏன் நண்பனை விடுத்து மனைவியை மட்டும் சுட்டீர்கள்?”
   அவர் சொன்னார்.
   “மிலாட்!..வாரம் ஒரு கொலை செய்வதை விட ஒரே கொலையுடன் முடித்துக்கொள்வது எளிது என்று எண்ணியே அப்படி செய்தேன்”

   • senthil சொல்கிறார்:

    அருமையான பதில்!

   • தமிழன் சொல்கிறார்:

    கண்பத் – எனக்கு யாரை நீங்கள் குற்றவாளி என்று கூறுகிறீர்கள் என்று விளங்கவில்லை. ‘ஒட்டுமொத்த அரசு அலுவலர்களையா’ அல்லது ‘ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையா’ அல்லது ‘ஒட்டுமொத்த மக்களையா?’. ஏனென்றால், இன்றைக்கு சசிகலா (இவர்களைப்போல் ஆயிரக்கணக்கில் இந்தியச் சிறைகளில் இருக்கிறார்கள்) செய்வது தவறு என்றால், மற்றவர்கள் செய்வது? (நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை. நம்ம சிஸ்டத்தில் காசு இருந்தால் எதையும் சாதிக்கமுடியும், இறைவன் ஆணையைத் தவிர)

    • Ganpat சொல்கிறார்:

     நண்பரே,ஒரு குற்றத்தில் நம் பிரதிநிதி யாரோ அவரைத்தான் தண்டிக்க வேண்டும்.சசிகலா விஷயத்தில் தண்டிக்கப்படவேண்டியது கர்நாடக முதலமைச்சர்.நம் மாநிலத்தில் ஜெயா ஆட்சியில் நடந்த அட்டூழியங்களுக்கு தண்டனை பெற வேண்டியவர் ஜெயாதான் சசிகலா இல்லை.சசிகலாவிற்கும் நமக்கும் இந்நாள்வரை யாதொரு சம்பந்தமும் இல்லை.நம் நாட்டின் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அரசியல்வாதிகள் தான்.(அதாவது நம்மால் தேர்வு செய்யப்பட்டு பதவிகளிலிருப்பவர்கள்)

     • தமிழன் சொல்கிறார்:

      ஏற்கக்கூடிய விளக்கம் கண்பத். ஏனென்றால், அவர்கள்தான் இதனைச் சரி செய்யும் இடத்தில் இருப்பவர்கள். நன்றி.

     • குலாம் ரசூல் சொல்கிறார்:

      அருமை நன்பரே,

      //ஒரு குற்றத்தில் நம் பிரதிநிதி யாரோ அவரைத்தான் தண்டிக்க வேண்டும்.//
      //(அதாவது நம்மால் தேர்வு செய்யப்பட்டு பதவிகளிலிருப்பவர்கள்)//

      அதே அளவுகோல்படி இன்று பசுபாதுகாப்பு என்ற பெயெரில் நடக்கும் படுகொலைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் மத்தியில் ஆட்சியில் உள்ளவர் தானே பொருப்பு.

      //நம் நாட்டின் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அரசியல்வாதிகள் தான்.//

      சத்தியமான வார்த்தை. இதில் எந்த வியாதியும் ச்சே வாதியும் விதி விளக்கில்லை. முன்பொரு காலம் சிலர் இருந்தனர், காமராஜரென்றும் கக்கனென்றும் ஜீவாவென்றும். பொலைக்க தெறியாத ஜென்மங்கள்.

      நன்றி நன்பா.

  • இளங்கோ சொல்கிறார்:

   தமிழன்,

   ஆக மொத்தம் உங்கலுக்கு சசிகலாவை குறை சொன்னால் பிடிக்காது.
   கமல்ஹாசனை குறை சொன்னால் பிடிக்காது.
   பாஜகவை குறை சொன்னால் பிடிக்காது.
   அதற்காக, பராசக்தி சிவாஜி மாதிரி அது யார் குற்றம், இது யார் குற்றம்
   என்று கேள்வி கேட்டு டபாய்க்க பார்ப்பீர்கள். மனசாட்சி உள்ளவர்
   கேட்கக்கூடிய கேள்விகள் இல்லை இது. மறைக்க பார்ப்பவரின் சால்ஜாப்பு.

 2. தமிழன் சொல்கிறார்:

  குலாம் ரசூல் – நீங்கள் என்ன சொன்னாலும் மோடி அல்லது பாஜக விஷயத்தில் எடுபடாது. இதே லாஜிக்படி, உலகத் தலைவரான அமெரிக்காவும் நடந்துகொள்கிறது. எங்கு பயங்கரவாதிகள் இருக்கிறார்களோ, அந்த அரசு செயல்பட்டு அவர்களை அழித்தொழிக்கவில்லையென்றால் உலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அமெரிக்கா தான் முயற்சி எடுத்து பயங்கரவாதிகளைக் கொல்கிறது. இதைத்தான் இஸ்ரேலும் செய்கிறது. அவர்களை (அதாவது இஸ்ரேலையும் அமெரிக்காவையும்) பாராட்டுங்கள்.

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   தமிழன் ‍- உங்கள் லாஜிக் படியே வருவோம். பசுபாதுகாப்பு பயங்கரவாதிகளை இந்த மத்திய அரசு அழித்தொழிக்க வேண்டுமா வேண்டாமா? என்ன செய்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு செல்லப் பிள்ளையை தட்டி கொடுப்பது போல் ஒரு அறிக்கை. கண் துடைப்புக்காக ஒரு நடவடிக்கை. உம்மை போல் உள்ளவர்களெல்லாம் ஆ.. நடவடிக்கை எடுத்துவிட்டார்கள் கண்டித்துவிட்டார்கள் என்று கூக்குரல்.

   இதனாலெல்லாம் பசுபாதுகாப்பு பயங்கரவாதிகளின் கொட்டம் அடங்கியதா மேலும் ஊக்கம் பெற்றதா? மனசாட்சி என்று ஒன்று இருந்தால் தொட்டு சொல்லுங்கள்.

 3. இளங்கோ சொல்கிறார்:

  தமிழன்,
  பசு பாதுகாப்பு என்கிற பெயரில் ஆட்களை அடித்து கொல்வது
  எங்கே நடக்கிறது ? ராஜஸ்தானில், மஹாராஷ்டிராவில், உ.பி.யில்,
  ம.பி.யில். எல்லாம் பாஜக ஆளூம் மாநிலங்கள். இதுவரை எத்தனை பேற்
  தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் ? இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றா ?
  அமெரிக்கா தன் சொந்த குடிமக்களை வதைக்கிறதா ? பயமுறுத்துகிறதா ?
  அங்கே ஆளும் கட்சி பொறுக்கிகள் ஆட்டம் போட அனுமதிக்கப்படுகிறார்களா ?
  சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்களா?

  • தமிழன் சொல்கிறார்:

   “பசுபாதுகாப்பு பயங்கரவாதிகளை இந்த மத்திய அரசு அழித்தொழிக்க வேண்டுமா வேண்டாமா”; ‘எத்தனைபேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்’?

   இளங்கோ, குலாம் ரசூல் – இத்தகைய நடவடிக்கைகளை, அதாவது, பசுவைக் காக்கவந்துள்ளோம் என்று அவதாரம் எடுக்கின்ற இந்தக் கயவர்களின் நடவடிக்கைகளை, பெரும்பான்மையான நேர்மையாளர்கள் ஆதரிக்கமாட்டார்கள். அரசியல் கட்சிகளும் ஆதரிக்காது. என்னைப் பொறுத்தவரையில், அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்புகளில், அதாவது பிறரைப் பாதிக்காத, வெறுப்புக் கொள்ளச்செய்யாத, குற்றம் சாட்டமுடியாதவைகளில், யாரும் தலையிடக்கூடாது. அப்படித் தலையிட ஆரம்பித்தால், ஜன’நாயகம் என்பதும் சுதந்திரம் என்பதும் அர்த்தமில்லாததாகிவிடும். நம் நாடு, அரபு நாடுகளைப்போல் மதச் சார்பான, மற்ற மதங்களின்மீது தங்கள் வழக்கத்தைத் திணிக்கும் நாடல்ல. நம் கொள்கை மதச்சார்பின்மை. இந்த மெக்னானிமிட்டி இந்தியாவின், இந்துக்களின் குணாதிசயம். இந்துக்கள் மாத்திரம்தான், ‘வாழு, வாழ விடு’ என்ற கொள்கையைக் கடைபிடிப்பவர்கள். அதற்குப் பங்கம் விளைவிப்பவர்களை பெரும்பான்மை இந்துக்கள் நிச்சயம் ஆதரிக்கமாட்டார்கள்.

   இவர்கள் பயங்கரவாதிகள் என்றால், டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டு வைத்தவர்கள், உக்கடம் தீவிரவாதிகள், நாட்டுக்கு எதிராகச் செயல்படும் இஸ்லாம் தீவிரவாதிகள் போன்ற பெரும்பாலான தீவிரவாதிகளை ‘அழித்தொழியுங்கள்’ என்று எந்த இஸ்லாமியரும், இஸ்லாமியக் கட்சிகளும் சொன்னதாக ஒரு ஆதாரத்தை நீங்கள் காட்டுங்கள். சிறையில் வைத்திருந்த இஸ்லாமிய பயங்கரவாதியை (எத்தனை வருடங்கள்) காங்கிரஸ் அரசு பல வருடங்கள் கழித்து தூக்கிலிட்டதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தன. ஒரு ஆதரவுக் குரல்(தூக்கிலிட்டது சரி, ஏன் தாமதம் என்று) இஸ்லாமியரிடமிருந்து வந்தது என்று காண்பியுங்கள் பார்க்கலாம்? இஸ்லாமியர்கள் இப்படி இரட்டை வேடம் போடுவதால்தான், அவர்கள் வெறுப்புகொள்வது இந்துக்களின்மேல் என்பது உறுதிப்படுகிறது.

   இளங்கோ-இஸ்லாமியர்கள் பொதுவாக அமெரிக்க, இஸ்ரேலிய எதிர்ப்புணர்வைக் காண்பிப்பார்கள். ஏன் என்று ஆராய்ந்தால் அவர்களது குறுகிய நோக்கம் தெளிவாகத் தெரியும். அந்த கன்டெக்ஸ்டில்தான் என் கருத்தை நீங்கள் படிக்கவேண்டும். மேலும், “எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் ?” – இதற்கு பதில், இந்திய நீதித்துறை என்பது நத்தைவேகத்தில் இயங்குவது, குற்றவாளிகளுக்கு எல்லாவித வாய்ப்புகளும் (கடைசியில் இறப்பு முதற்கொண்டு) கொடுக்கக்கூடியது. அதுவும்தவிர, கருணானிதி காலத்தில், அவர் கொடுத்த பயிற்சியினால் நடந்துகொண்டதுபோல், எல்லா மா’நிலத்திலும், போலீசார் பெரும்பாலும் ஆளும் கட்சியை அனுசரித்து நடக்கின்றனர். அதுவும் குற்றம் சாட்டுவதில் உள்ள தாமதத்திற்குக் காரணம் என்றே நினைக்கிறேன்.

 4. srinivasanmurugesan சொல்கிறார்:

  தவறு செய்யும் இரு தரப்புமே தண்டிக்கப்பட்ட வேண்டியவர்கள்.அதிலும் சட்டத்தை/தர்மத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் தவறு செய்யும் போது மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.வேலியே பயிரை மேய எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது.

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   //தவறு செய்யும் இரு தரப்புமே தண்டிக்கப்பட்ட வேண்டியவர்கள்//

   நிச்சயமாக. அப்படியா நடந்து கொண்டிருக்கு.

   //சட்டத்தை/தர்மத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள்…..//

   அட போங்க சார். தர்மமாவது நியாயமாவது. கலிகாலம் சார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.