பயத்தை, பதட்டத்தை போக்க வேண்டும் பாஜக – அரசு…


ஒரு பின்னூட்டத்தில் நண்பர் குலாம் ரசூல் அவர்கள்
கூறியுள்ள கருத்து தான் இந்த இடுகைக்கான அடிப்படை –

—————————————————

இந்த மூன்று ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லா
அளவிற்கு அது அதிகரித்து தான் இருக்கின்றது. இன்று
இஸ்லாமியர்கள் ஒரு பதட்டமான சூழ்நிலையில்,
ஒரு scary நிலையில் இருக்கிறார்களா இல்லையா?
இதற்கு யார் காரணம் ? இந்த நிலையை ஆதரிப்பவர்கள்
யாராக இருந்தாலும் அவர்களுக்கும் பாவத்தில் பங்கு
இருக்குமென்பதை அறிந்துகொள்ளட்டும்.

மோடி / பாஜக முஸ்லிம்களை ஆதரிக்கவேண்டாம்,
அவர்களை வெறுக்காது, அவர்களுக்கு எதிராக நடக்கும்
வன்முறையை, முறையாக கண்டித்து அந்த நாசகார,
கொலைகார வன்முறையாளர்ளை தண்டித்து முஸ்லிம்கள்
பாதுகாப்பாக நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்கட்டும்.
பிறகு முஸ்லிம்களிடம் ஆதரவு கேட்க வேண்டாம்
தானாகவே தருவார்கள்….

-குலாம் ரசூல்
————————————————————

இந்த இஸ்லாமிய சகோதரரின் கவலையையும்,
அச்சத்தையும், என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அவர் சொல்வதற்கு முன்பாகவே நான் இந்த
வலைத்தளத்தில் இது குறித்து பலமுறை எழுதி
இருக்கிறேன். இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும்
அச்சமின்றி, பாதுகாப்புணர்வுடன் வாழ வழி செய்து கொடுக்க
வேண்டியது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பு –
தார்மீகக் கடமை.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி கடைபிடித்த
ஓட்டு வங்கி அடிப்படையிலான “போலி மதச்சார்பின்மை”
யானாலும் சரி,

இப்போது நிலவும் அடிப்படை மதவாத சக்திகளின் “வெறி”
மற்றும் “சகிப்புத்தன்மை இன்மை” யானலும் சரி –

இரண்டையுமே இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள்
ஏற்றுக் கொள்ளவில்லை….

நாம் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரின் கருத்தை,
அவரது வார்த்தைகளிலேயே – இந்த சமயத்தில் நான் இங்கு
நினைவு படுத்த விரும்புகிறேன்.

———————————–

ஆலோசனை பண்ணிப்பார்த்தால் தெரியும்…
லோகத்தில் எத்தனையோ சித்தாந்தங்கள் இருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் ஏற்பட்டிருக்கிற காரியங்களோ
ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கின்றன.

நாம் தீபாராதனை பண்ணினால் இன்னொருத்தன்
மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கிறான்.
நாம் ‘சாந்த்ராயண விரதம்’ என்றால்
வேறே ஒருத்தன் ரம்ஜான் fasting என்கிறான்.

நம்முடைய தேவாலயங்களில் எப்படி பூஜை நடக்கிறதோ,
அப்படியே தான் பௌத்த, ஜைன ஆலயங்களிலும் நடக்கிறது.

நமக்குள்ளேயே எடுத்துக்கொண்டால் …..
சைவன் எப்படி அபிஷேகம், அர்ச்சனை, கந்த,புஷ்ப
உபசாரங்கள் செய்கிறானோ,
அப்படியே தான் வைஷ்ணவனும்
செய்கிறான்… .

சாளக்ராமமும், லிங்கமும் வேறேயாக இருக்கட்டும்..
இவன் போடுகிற துளசியும், அவன் போடுகிற வில்வமும் வேறேயாக இருக்கட்டும். புளியோதரையும், சம்பாப்பட்டையும் வேறேயாக இருக்கட்டும்.

அவன் வைகுண்ட ஏகாதசிக்கு கண் விழித்து
பட்டினி கிடக்கிறானென்றால் இவன் சிவராத்திரிக்கு அப்படி
செய்கிறான்.. …..

இப்படியே சின்னங்களும், பழக்க வழக்கங்களும்
வேறேயானாலும், எல்லாம் கடைசியில் கொண்டு
போய்ச்சேர்ப்பது அவன் காலடியில் தானே…?

அவரவர் தர்மம் அவரவருக்கு…

அவரவர் முன்னோர் காட்டிய வழியில் அவர் அவர்
போவது தான் சிறந்த தர்மம்…

————————————-
ஒரு மதத்திற்குள்ளேயே, இத்தனை வித்தியாசமான
வழிபாட்டு முறைகள், பழக்கவழக்கங்கள் இருக்கும்போது,
வெவ்வேறு மதங்களின் வழிபாட்டு முறைகளில், பழக்க
வழக்கங்களில் – வித்தியாசங்கள் இருப்பது இயற்கை
தானே…?

பிற மதத்தவர்களை, தூஷிப்பதை (பழிப்பதை), வெறுப்பதை –
காஞ்சி பெரியவர் என்றுமே ஏற்றதில்லை. அதே போல்
மதமாற்றத்தையும் அவர் ஆதரித்ததில்லை.

எந்த வழியில் போனாலும், எந்த மார்க்கத்தை
பின்பற்றினாலும், இறுதியில் எல்லாரும் ஒரே இடத்தை,
ஒரே இறைவனைத்தான் சென்றடைகிறார்கள் என்பதை
அவர் பல சமயங்களிலும் வலியுறுத்தி இருக்கிறார்…

———————————

இந்த மத கலவரங்கள், வன்முறைகள் எல்லாவற்றிற்கும்
காரணம், மதப்பற்றோ அல்லது மத அபிமானமோ அல்ல.

மாறாக -இவற்றிற்கு அடிப்படையான காரணம் – வெறி…
சில மனித மிருகங்களுக்கு ஏற்படும் ஒரு வித வெறி –

மதத்தை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, தங்களுக்குள்
அடங்கி இருக்கும் வெறித்தனத்தை, மிருக உணர்வை
வெளிப்படுத்துகின்றன அத்தகைய மனித விலங்குகள்.

இத்தகைய, மனித உருவத்திலான விலங்குகள் எல்லா
மதங்களிலும் (பௌத்த மதத்திலும் கூட) இருக்கின்றன…

இந்த மனித விலங்குகளை, அடையாளம் கண்டுகொண்டு,
ஒதுக்கி வைத்து, சட்டத்தின் முன் கொண்டு வந்து
நிறுத்துவது (அவர் எந்த மதத்தை சேர்ந்தவராக
இருந்தாலும்…) ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.

முக்கியமாக, அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள்,
அது எந்த அரசாக இருந்தாலும் சரி, இத்தகைய நபர்களை
அடையாளப்படுத்தி, சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான
தண்டனைக்கு உட்படுத்துவதன் மூலமே –

நியாயமான வழியில் நடக்கும் குடிமக்கள் (அது எந்த
மதத்தினராக இருந்தாலும் ) மனதில் நம்பிக்கையையும்
பத்திர உணர்வையும் உண்டாக்கும்.

இந்த தேசம், இங்கு வாழும் அனைவருக்கும் சொந்தம்
என்கிற உணர்வுடன், அனைவரையும் அணைத்துச் சென்று,
ஒற்றுமையோடு, வளர்ச்சியை காண்பதே இன்றைய தேவை…

இன்றில்லா விட்டாலும், நாளையாவது இந்த நிலை
உருவாகும் என்று நம்புவோம்… அதற்காக நாம்
ஒவ்வொருவரும் நம்மாலியன்றதைச் செய்வோம்.

———————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to பயத்தை, பதட்டத்தை போக்க வேண்டும் பாஜக – அரசு…

 1. LVISS சொல்கிறார்:

  Muslimas are safest in India -Who says this -A person living in Kashmir -Read it for yourself

  http://indianexpress.com/article/india/india-news-india/muslims-are-more-safe-in-india-than-anywhere-else-mehbooba-mufti-3055022/

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   Bro. LVISS,

   Instead of comparing to other countries in the world, compare past and present. you’ve never been argued the content of any article on this site. This one is a good example.

   • LVISS சொல்கிறார்:

    Mr Ghula Razul I dont know from where you are posting your comments – I think you have not read the link — I am posting another video for you going by its title -I do not understand the language though — This from an unexpected quarter —

    This video is published in Mar 2017 as per foot note

    This kind of false scare mongering is going on but the truth is always there for all to see –When this kind of false propaganda goes on one has to definitely draw comparison with other countries — Look at the countries like Syria Iraq and few other countries where people live in eternal fear not knowing what will hit them next and compare it with the relatively calm atmosphere that is prevailing in our country —
    One more question to those indulging in this kind of propaganda –Why is it that people from our neighbouring country prefer to come here for medical treatment -When they dont have any doubts about their safety why should people here create a fear among people – —
    A few fanatics are responsible for incidents here and there and these are blown up out of proportion to create an illusion of scary atmosphere —

    • குலாம் ரசூல் சொல்கிறார்:

     Sako. LVISS,

     I still define you India is more secure country than comparing to many Muslim countries. I’ve no any doubt at all I’m very proud of it, thank God.

     But, I ask you to please open your mind, what is the present situation around India and what’s happening in the name of the cow. How many life’s been taken by ‘gau raksha’s and by the group of fanatics targeting Muslims and Muslim families so far. And you said //A few fanatics are responsible for incidents here and there// simply.

     Was this kind of mob fanatics incidents targeting and killing Muslims in public place, railway stations in the past.

     Who give this freedom to killing people for the mob fanatics without any fear. Would you pls explain?

     I agree with there was many more incident in the past, but those were comparatively not like happening at present. With no any reason, if some collective people saw a Muslim or family they were attacked. Is it false scare mongering? would you pls explain what stern action was taken against them?

     Please do come up with the difference between present and past in this country, not between countries.

     Bro. LVISS,

     Still India is well secured Country if these unwanted mob fanatics killing on certain communities keep on going, are you happy with that?

     • LVISS சொல்கிறார்:

      Gau Rakshas are a blot on the country –Nobody will support them — -One rumour is excuse enough for them to do this — Recently there was an incident in T Nadu where the gau rakshas were caught by the police—We can be sure that in T Nadu it wont happen again -In other states they manage to get away –Many states have banned cow slaughter but how many of them are able to strictly enforce it —
      In Udipi there was a case of lynching by gau rakshaks -The victim was a Hindu and said to be a BJP worker —
      Whatever it be these people should be shown their place in the society —

  • சேதுராமன் சொல்கிறார்:

   2016-17ஆம் ஆண்டில் பா.ஜ.க அரசு விளம்பரங்களுக்குச் செய்த செலவு மட்டும் ரூ.1,285 கோடியாம்..

 2. புதியவன் சொல்கிறார்:

  இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, வெளி நாட்டின் தாக்கத்தால் (தாங்கள் நம்பும் கடவுள், கொள்கைகளால்) இந்தியாவைக் காட்டிக்கொடுக்கும், அல்லது இந்தியாவுக்கு எதிரான செயல்களைச் செய்யும், இந்த நாட்டின் கலாச்சாரத்தை மாற்ற நினைத்து தாங்கள் நம்பும் மதத்துக்காக முழு முனைப்பாக எல்லாவற்றையும் மாற்ற நினைக்கும் மக்கள் மட்டும்தான் இப்போது அச்சப்படவேண்டும். மற்றபடி எல்லோரும் இந்திய மக்கள் என்ற எண்ணம்தான் பெரும்பான்மையினரிடம் உள்ளது (பெரும்பான்மை மக்களிடம்).

  “மதத்தை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, தங்களுக்குள் அடங்கி இருக்கும் வெறித்தனத்தை, மிருக உணர்வை வெளிப்படுத்துகின்றன” – இது உண்மையான கருத்துதான். ஓவாயிஸ் போன்றவர்களின் குரல், பிரிவினைவாதிகளின் குரல் எழுந்தபோது, அதனைக் கண்டித்த இந்திய மக்கள் யார் யார் என்று பாருங்கள். சம்பந்தமேயில்லாத ஐ.எஸ்.எஸ்., பின் லாடனின் தாலிபான் போன்றவர்களை ஆதரித்து இங்கு கூட்டம் போட்டவர்களும், அதற்காக ஆட்கள் சேர்த்தவர்களும் யார் யார் என்று பாருங்கள். அதனை யார் கண்டித்தார்கள் என்று பாருங்கள். அப்போது தெரியும் ‘இன்றைக்கு அச்சப்படுபவர்கள், இந்திய நாட்டினைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட்டார்களா’ என்று.

  அதே ஹிட்லர் ஆட்சிக்குப் பிறகு ஒருவர் சொன்னார். ஹிட்லர் ஒன்றைச் செய்தபோது, அதனால் தனக்குக் கஷ்டமில்லை, மற்றவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் விலகியோடியதால்தான், ஹிட்லர், அழிக்கமுடியாத முள் மரமாக வளர நேர்ந்தது என்று.

  அன்றைக்கும், இன்றைக்கும் தன் மதத்தைச் சேர்ந்தவர்களை வெளிப்படையாக எதிர்க்காமல், அவர்கள் செய்வது தவறு என்று எங்கும் எழுதாமல், எதை எடுத்தாலும் ‘மோடி அரசினால்தான், மோடியினால்தான்’ என்று எழுதுபவர்கள்தான், இந்த அரசு அமைந்தபின், இந்துத்துவா (அல்லது வெறும் மதத் தீவிரவாதிகள் என்று தங்களைப் பற்றி நினைத்துக்கொள்பவர்கள்) என்ற பெயரில் சிலர் விஷம் கக்கும் சொற்களைப் பேசுவதற்குக் காரணம், இன்றைக்கு ‘அச்சமாக இருக்கிறது’ என்று போலித்தனமாகப் பேசும், அன்றைக்கு அமைதியாக இருந்து, எல்லா பயங்கரவாதச் செயல்களுக்கும் ஆதரவு தெரிவித்தவர்கள்தான்.

  மற்றபடி, எல்லோரும், எப்போதும், மதத்தை, சாதியை அரசியலுக்குக் கொண்டுவரக்கூடாது, மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அமைந்த எல்லாக் கட்சிகளையும் உடனடியாகக் கலைக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ‘சாதியைக் குறிப்பிட்டு எதிராகவோ ஆதரவாகவோ எழுதுபவர்களும், மதத்தின் பெயரால் கட்சி நடத்துபவர்களும் இந்திய நாட்டைக் கெடுக்கவந்த பயங்கரவாதிகள் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை.

 3. குலாம் ரசூல் சொல்கிறார்:

  நன்றி ஐயா.

  என்னுடைய பின்னூட்டத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ஒரு தனி இடுகை இட்டதுகண்டு மேலும் மனம் முழுவதும் நன்றியால் விம்முகிறது ஐயா. கூடவே பிரார்த்தனையும், இறைவன் நீண்ட ஆயுளையும் நிறை சுகத்தையும் தங்களுக்கு அளிப்பானாக.

  உங்களை போல் தான் ஐயா பெரும்பான்மையான சகோதரர்கள் இந்நாட்டில் நட்போடும் சகோதரத்துவத்துவ‌ உறவோடும் இன்னும் இருக்கிறார்கள்.

  மனிதம் அழிந்துவிடாது, எவ்வளவு மிருகங்கள், அது எந்த மத மிருகங்களாகட்டும், ஒன்று கூடினாலும் அழித்துவிட முடியாது என்ற நம்பிக்கையை இந்த மதம்மீறிய சகோதரத்துவத்துவ‌ உறவு தான் தருகிறது.

  இம்மாதரி நிகழ்வுகளை கொண்டு இறைவன் இந்நாட்டை காப்பாற்றுவான் என்று அவன் மீது அசைக்கமுடியா நம்பிக்கை இருக்கு.

 4. Vignaani சொல்கிறார்:

  ஐயா, மோதியைப் பிடிக்கவில்லை; அவர் வந்தது அதுவும் பூரண மெஜாரிட்டியுடன் வந்தது ஜீரணிக்க முடியவில்லை என்ற நிலையில் பலர், போலி மதச்சார்பின்மை வாதிகள், மற்றும் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் (முஸ்லீம் லீக், AMIIMM, த. ம.மு.க.,, National Conference,PDP, முதலியன. ). பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்துக்களை போல கூடி வாழும் மன நிலையில் இருந்தாலும் ஓங்கி ஒலிப்பது த்வேஷ ஒலிகள். (1) அவர்கள் மிகச் சிறிய சம்பவத்தையும் பெரிது படுத்தி ஆளும் கட்சிக்கு எதிராக சீன போடுகிறார்கள். (2) சில ஜமாத் கூட்டங்களில் கிட்டத்தட்ட ISIS, LET, JIM பேசும் கருத்துக்கள் மிக்க கலக்கத்தைக் கொடுக்கின்றன ஏற்படுத்தி உள்ளனர். (3). இங்குள்ள முஸ்லீம்கள் ISIS, LET, JIM போன்றோர்களின் தீ வி ரவாதச் செயல்களுக்கு ஆதரவு, உதவிகள் புரிந்து விடுவாரோ என்ற பயத்தை உண்டு பண்ணுகின்றனர். வெடி வைப்பவர்களுக்கு தங்க இடம் மஜீதுகளில் என்று ஐயம்; அவர்களுக்கு சிம் கார்டு , பான் கார்ட்,, போக்குவரத்து உதவி முதலியவை பெற உள்ளூர் மக்களின் உதவி உள்ளதாக பலரும் ஐயம் கொள்கின்றனர். இவை செயல்கள் ACTIONS.

  2. IDEOLOGY: குரானுக்கு இஸ்லாமில் உள்ள இடம்: உண்மையான முஸ்லீம் மீற க் கூடாதது. அது இறுதியானது. அ தில் மாற்றங்கள் இரா./ வரா. அதில் காபிர்களை பற்றி வரும் வரிகள் இப்போது பலருக்கும் பயம் தரும் வண்ணம் உள்ளன: காபிர் ஒன்று இஸ்லாமுக்கு மாற வேண்டும் — அல்லது — இஸ்லாம் உயர்ந்தது என்று ஒப்புக்கொண்டு ஜிஸியா வரி கட்ட வேண்டும் : இல்லை என்றால் வேறு இடத்துக்கு/நாட்டுக்கு ஓடவேண்டும் –இல்லை என்றால் அவர்கள் கொல்லப் பட வேண்டும்.. இவை பற்றி முஸ்லீம்கள் இவை இந்தியாவுக்கு பொருந்தாது; இங்கு காபிர்கள் பெரும்பான்மையுடன் உள்ளனர்; இங்கு ஜிஹாத் செய்வதற்கு முகாந்திரம் ஒன்றும் இல்லை என்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லீம் மசீதுகள் தீர்மானம் போட்டு காபிர்களின் அச்சத்தை ப் போக்க வேண்டும்.

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   நன்ப விக்னானி,

   உங்கள் இரண்டு பத்தி முழுவதும் ஆர்எஸ்எஸ் காலங்காலமாக பரப்பிவரும் அவதூறு தான். இப்படி துர்போதனை செய்து தான் அப்பாவி அறியா ஹிந்து சகோதரர்களை முஸ்லிம்களுக்கு எதிராக அது ஒன்று திரட்டுகிறது.

   நீங்கள் ஒருமுறையேனும் குர்ஆனை விருப்பு வெறுப்பில்லாமல் படித்ததுண்டா? அவர்களின் துர்போதனையை தலைக்கேற்றாமல் திறந்த மனதுடன் அதனை அனுகிபாருங்கள். உங்களை அது வசீகரிக்கக் கூடும்.

   மேலும், முஸ்லிம்களிடம் நெருங்கி பழகியிருக்கிறீர்களா? பாருங்கள். உங்கள் அனுமானம் தவறு என்பதை உணர்வீர்கள். எல்லாரும் உத்தமர்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், நிச்சயம் உங்களுக்கு போதிக்கப்பட்டிருப்பது போல் மோசமானவர்களில்லை என்பதை அறிவீர்கள். என் ஹிந்து நன்பர்களை போல.

   நாம் இன்று கா.மை. ஐயாவை அறிந்து பெருமிதம் கொள்வது போல் முஸ்லிம்கள் மத்தியிலும் பலர் உண்டு சகோதரரே. அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் சகோதரா, துவேஷத்தை களையவேண்டும். வேண்டாம் , அது கொண்டவர்களையும் நிம்மதி இழக்க செய்து மற்றவர்களையும் பலி தீர்க்கும்.

   முதலில் நமக்கு நிம்மதி கிடைக்க இறைஞ்சுவோம். பிறகு மற்றவர்க்கும் கிடைக்க உழைப்போம்.

   முக்கிய குறிப்பு:
   என்னுடைய ஆர்எஸ்எஸ்/பாஜக‌ தொடர்பான‌ பின்னூட்டங்களை படித்திருப்பவர்கள் அதன் தொண்டர்கள் அபிமானிகள் என்னை வெறுப்பதை தூஷிப்பதை என்னால் அனுமானிக்க முடிகிறது. ஒன்றை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

   ஆர்எஸ்எஸ்/பாஜக அன்பர்கள் இந்த நாட்டிற்காக, நாடு நலம்பெற வளம்பெற‌ உழைப்பதிலோ ஹிந்து மதத்திற்காக ஹிந்து சகோதரர்களுக்காக அவர்கள் நன்மையுற வளம்பெற பாடுபடுவதிலோ யாருக்கும் எந்த பாதிப்போ மாற்று கருத்தோ இருக்கப்போவதில்லை.

   இங்கு பிரச்சனை என்னவென்றால், அவர்கள் சிறுபான்மையோர் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறை, துவேஷம், அவதூறு, பொய்பிரச்சாரம் இவைகளினால் சிறுபான்மையினர்க்கும் மற்றவர்க்கும் ஏற்படும் சொல்லொனா இன்னல்கள், இழப்புகள். இவைகளெல்லாம் நல்லுள்ளம் படைத்த ஹிந்து சகோதரர்களாலேயே பொருத்துக் கொள்ளமுடியாத போது எங்களால் எப்படி தாங்கிகொள்ளமுடியும்.

   நான் அதிகம் ஒன்றும் செய்து விடவில்லை. என் ஆற்றாமையை போக்கிக்கொள்ள சில பின்னூட்டங்களை இந்த தளத்தில் இட்டேன். அதையே இவர்களால் பொறுத்துக் கொள்ளமுடிய வில்லையென்றால் சிறுபான்மையினர் நிலை எந்த அளவு அச்சுறுத்தலாகி இருக்கு என்பதற்கு நான் வேறு எதையும் சுட்டவேண்டியதில்லை.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் குலாம் ரசூல் அவர்கள், பாதிப்புக்கு உள்ளானவர் என்கிற முறையில் மிக அழகாகவும், பொறுமையாகவும், தெளிவாகவும் நிலைமையை விளக்கி இருக்கிறார். அவருக்கு
    என் பாராட்டுகள்.

    நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உண்மை நிலவரத்தை புரிந்துகொண்டு,
    இது சீர்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்பது தான் என் இடுகையின் நோக்கம். ஒருவரை ஒருவர் மீண்டும் மீண்டும்
    குற்றம் சாட்டிக்கொண்டே போவதல்ல…

    எனவே, இதற்கு மேலும், இந்த விஷயம் குறித்து, இப்போதைக்கு விவாதங்கள்
    வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Vignaani சொல்கிறார்:

     நண்பர் குலாம் ரசூல் பொறுமையாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார். நன்றி
     .நான் ஆர்.எஸ்.எஸ் காரன் இல்லை. குரானைப் படித்திருக்கிறேன். நான் சொன்னது உள்ளதா? இல்லையா? “ஆமாம், இந்த பகுதி இந்தியாவுக்கு ஏற்காது, நாங்கள் அதன் வழி நடக்க மாட்டோம்” என்று ஒரு ஜமாத்தில் சொல்லட்டும்.

     வேறு நாடுகளைத் தான் ஒப்பிட வேண்டும்; இங்கு அனைத்து மதத்தினருக்கும் சுவர்க்கம் தான் (72 ஹூரிக்கள் இல்லை). வரலாற்றைப் படித்தால் இருநூறு, ஐந்நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை .natural balancing factors/forces will emerge and restore equillibrium. ஆகவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்று குறுகிய கால கண்ணொட்டத்தில் பார்க்காமல் ஐந்நூறு ஆண்டு க ளையும் பாருங்கள்.

     மதச்சார்பின்மை என்பது ஒரு கை தட்டினால் ஓசை தருவது அல்ல. இரு கை தட்ட வேண்டும். பிற மதத்தினரின் பங்கு நிச்சயம் உள்ளது என்று உணரவேண்டும். பெரும்பான்மை வீட்டுக் கொடுப்பது மதச்சார்பின்மை அல்ல. அப்படி ஒரு தோற்றத்தை விடுதலைக்குப் பின் தோற்றுவித்துள்ளார்கள்; அதை சரிப் படுத்ததும் முயற்சி இது என்று நினைக்கிறேன்.

     • குலாம் ரசூல் சொல்கிறார்:

      நன்ப விக்னானி,

      நானும் மேலும் தொடரபோவதில்லை. இருந்தாலும் சில வார்த்தைகள்….

      இந்தியா எங்கள் நாடு. நாங்களும் போராடிப் பெற்ற சுதந்திரம். அதன் மூலம் எல்லோருக்கும் இருக்கும் உரிமை போல் எங்களுக்கும் சாசனத்தின் அடிப்படையிலேயே இருக்கு. நாங்கள் (என்றால் பெரும்பான்மையான முஸ்லிம்கள், வேறு பொருள் குத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்) எங்கள் நாட்டில் உரிமையோடு வாழ யாருடைய தயவும் தாட்சண்யமும் எங்களுக்கு அவசியமில்லை.

      குர்ஆனை திறந்த மனதுடன் அனுகசொன்னேன். ஏன்?

      குர்ஆன் எங்கள் நாயகம் பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்களுக்கு 23 வருடகாலம் சிறுக சிறுக அதாவது ஒரே சமயத்தில் முழு புத்தகமாக அல்லாது சிறுக சிறுக கால ஓட்டதின் தேவைக்கேற்ப வாழ்கையின் வழிகாட்டு நெறியாக இறைவனால் அவர்களுக்கு அருளப்பட்டது. அவர்களின் வாழ்கையே அந்த 23 வருடகாலமும் குர்ஆனின் விளக்கமாக அமைந்தது. அது தான் ஹதீஸ் என்பது. ஆக குர்ஆனும் ஹதீஸும் ஆகிய இரண்டும் சேர்ந்தது தான் இஸ்லாம்.

      குர்ஆனை மட்டும் படிக்கும்போது சில இடங்கள் புரியாமல் போக அதிக வாய்ப்பிருக்கு. அதனால் தான் திறந்த மனதுடன் அனுகசொன்னேன். அப்படி நீங்கள் படித்திருந்தால் புரியாத இடங்களில் அதன் விளக்கம் என்ன என்று அறிய ஒரு நல்ல முஸ்லிமையோ அல்லது ஹதீஸையோ நாடி இருப்பீர்கள். நீங்க‌ள் குறிப்பிட்டவைகளுக்கும் விளக்கம் கிடைத்திற்கும்.

      போகட்டும், நீங்க‌ள் குறிப்பிட்ட அந்த இடம் ஒரு இஸ்லாமிய அரசுக்கு போரின் போது நடந்துகொள்ள வேண்டிய நடைமுறையை விளக்கும் இடம். சாதாரன எந்த குடிமகனுக்கும் அது அல்ல.

      இந்த மாதரியான‌ சில வசனங்களை எடுத்துக்கொண்டு தான் இஸ்லாத்திற்கெதிராக அதன் எதிரிகள் வன்மத்தை வளர்க்க பயன்படுத்துகிறார்கள். அதில் நீங்களும் ஒருவராக வேண்டாம்.

      //இல்லையெனில், பெரும்பான்மையினர் அன்பளிப்பான மதச்சார்பின்மை நீக்கிக் கொ ள்ளப்பட்டு , இது இந்து நாடாக அறிவிக்க வேண்டிவரும்//

      விக்னானி நீங்கள் ஆர்எஸ்எஸ்/பாஜக இல்லை. ம்….

 5. avudaiappan சொல்கிறார்:

  i agree with vignaani……he said correctly

 6. Rajamanickam Veera சொல்கிறார்:

  சகோதரர் குலாம் ரசூல் அவர்களின் கவலை புரிந்து கொள்ளத்தக்கது, பிரச்சினை எங்கே துவங்குகிறது என்றால் அப்பாவியான இஸ்லாமியர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அடிப்படைவாதிகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதிலும், போலி மதச்சார்பின்மைவாதிகள், பிரிவினைவாதிகள் இஸ்லாமியர்களால் நிகழ்த்தப்படும் வெறிஆட்டங்களின் போது கள்ள மெளனம் காத்துக்கொண்டு இந்துக்கள் மரணிப்பதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் போது துவங்குகிறது. இந்த தேசத்தில் இஸ்லாமியர்களை தங்களுடனே வைத்து கொள்ள வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசமே முடிவு செய்தது, இன்றும் அவர்களை பாராட்டி சீராட்டி தான் வைத்து கொண்டுள்ளது. ஆனால் வஹாபியம் இந்திய இஸ்லாமியர்களின் மனதில் நஞ்சை விதைத்து அறுவடை செய்கிறது. உண்மையா இல்லையா என்று மனதார யோசித்து சொல்லுங்கள்.
  முந்தைய தலைமுறை இஸ்லாமியர்கள் எவ்வளவு தூரம் அனைத்து மக்களுடனும் கலந்து பழகினார்கள், அனுசரித்து சென்றார்கள் ? இப்போது இருக்கும் இஸ்லாமிய தலைமுறை எப்படி இருக்கிறது என்று யோசித்து பாருங்கள். இஸ்லாமியர்களை ஒடுக்கப்பார்க்கிறது என்று சொல்லும் எத்தனை பேர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, அவர்கள் இந்து சமயத்தையோ, இன்ன பிற சமயத்தையோ ஆபாசமாக பேசுகையில் வாய் மூடி தானே இருக்கிறார்கள். பிறர்க்கினா முற்பகல் செய்யின் எனும் வள்ளுவரின் வாக்கை நினைத்து பாருங்கள். ஆர் எஸ் எஸ் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்யாத இஸ்லாமியர்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்களின் பணி என்ன என்று உங்களுக்கு தெரியுமா? குரானை வெறுப்பின்றி படிக்க சொல்லும் நீங்கள் ஆர் எஸ் எஸ் பற்றி எந்த நல்ல விஷயத்தையாவது இது வரை சொல்லி இருக்கிறீர்களா?
  ஜிஹாத் பற்றியும், கட்டாய மத மாற்றம், பற்றியும் குரானை விமர்சிக்கும் குரல்களை நீங்கள் கையாளும் முறைகள் பற்றி ஏதேனும் கண்டனத்தை கருத்தை கேட்டிருக்கிறீர்களா? இணையத்தில் இஸ்லாமியர்கள் ஆற்றும் எதிர்வினைகளை வாய்ப்பிருந்தால் சென்று படித்து பாருங்கள். அதில் நாகரீகமாக , அல்லது பாசிட்டிவ்வான விமர்சனங்கள் என்று ஏதேனும் இருக்கிறதா என்று பாருங்கள். வெறுப்பை போல ஆற்றல் கொள்ளச்செய்யும் அழிவு சக்தி எதுவும் இல்லை. பரஸ்பர நம்பிக்கை இன்மையும், ஐயப்படுதலும் தனிமைப்படுத்தும் இதை கொஞ்சமேனும் சிந்தித்து பாருங்கள்.
  இதற்கு இன்னும் ஒரு காரணம் நடு நிலையாளர்கள் என்ற பெயரில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் திராவிட இயக்கத்தவர்கள், முற்போக்கு முகமூடிகள், பிரிவினைவாதிகள் இந்துக்களை இழிவிலும் இழிவாக விமர்சிப்பதும் அசிங்கப்படுத்துவதும், அவர்களின் பிரச்சினைகளின் போது கள்ள மெளனம் சாதிப்பதும் இந்துக்களை தாங்கள் தனித்தவர்கள் தங்களுக்கு எதேனும் நிகழ்ந்தாலும் கேட்க நாதியில்லை எனும் நிலையை நோக்கி தள்ளுகிறது. உதாரணமாக நம் காவிரி மைந்தன் ஐயாவே மந்திரி சாலையில் உடல் உபாதையினால் சிறுநீர் கழிப்பதை மோடியோடு சேர்த்து வசை பாடி வெறுப்பு உமிழ்ந்து மகிழ்கிறார். ஆனால் மேற்கு வங்கத்தில் இந்து மண்ணின் மைந்தர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட போது மிகுந்த கவனத்தோடு அமைதி காக்க்கிறார். பஷிர் ஹட்டிலும், காஷ்மீரத்திலும், கேரளாவிலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை ஆகும் தோறும் அங்கு சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்ப்படும் வன்முறை பற்றி ஒரு நடு நிலையாளரும் கேள்வி கேட்பதில்லை. எந்த ஒரு இஸ்லாமியரும் இந்துக்கள் மீதான இஸ்லாமிய ஜிஹாதிய வெறி தாக்குதலை, கொலையை கண்டிக்க கூட இல்லை. இது என்ன விதமான நியாயம் என்று கேட்க தலைப்படுகிறேன். இதற்கு விடை கண்டால் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   நன்ப Rajamanickam Veera,

   நான் மேலும் தொடரபோவதில்லை. இருந்தாலும் சில வார்த்தைகள்….

   நான் என்ன குற்றசாட்டை வைத்தேனோ அதை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் அதை மேலும் மெய்பிக்கும் விதமாகவே ஒரு பின்னூட்டம்.

   திசை திருப்பலும் கேட்ட‌தை கண்டுகொள்ளாமல் வேரொன்றை கதைப்பதும் ஹா…!

   சாரே, ஆர்எஸ்எஸ்/பாஜகவை விமர்சிப்பது வேறு, ஹிந்து மதத்தை விமர்சிப்பது என்பது வேறு. ஆர்எஸ்எஸ்/பாஜகவை விமர்சித்தால் ஹிந்துக்களை விமர்சிப்பதாக அப்படியே திசை திருப்புவது காலமுழுதும் நீங்களெல்லாம் கையாலும் புரட்டு தான். உங்கள் வழிமுறையே அதுதான். உங்களிடமிருந்தெல்லாம் நியாயமான பதிலையோ இனக்கத்தையோ எதிர்பார்த்து நான் இங்கு எதையும் பதிவிடவில்லை. அது விழலுக்கு இறைத்த நீராகிப் போகும் என்பது நிதர்சனம்.

   பொய், புரட்டு, அவதூறு அதைகொண்டு வன்முறை நீண்ட நாள் நிலைத்ததில்லை. இன்றைக்கு முழு அதிகாரம் கிடைக்கபெற்றதினால் ஆடும் ஆட்டம் நாளை பதில் சொல்லியாகனும் என்பதை நினைவில்வையுங்கள். எதுவும் சாசுவதமில்லை என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.

   நீங்கள் இப்படியே கதைவிட்டுகொண்டிருக்க தான் போகிறீர். இனி கண்டு கொள்ளபோவதில்லை.

 7. Vignaani சொல்கிறார்:

  இதற்கு மேலும், இந்த விஷயம் குறித்து, இப்போதைக்கு விவாதங்கள்
  வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்”. பின்பு தான் கவனித்தேன். இருப்பினும் இரண்டு விஷயங்கள் சொல்லியாக வேண்டும்: 1. வஹாபிஸம் வளர விட மாட்டோம் 2. ஜிஹாத் என்ற பததத்தை இந்தியாவில் பயன் படுத்த மாட்டோம் என்று ஒவ்வொரும் முஸ்லீமும் மனதில் எண்ணி, உறுதி கூறும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பெரும்பான்மையினர் அன்பளிப்பான மதச்சார்பின்மை நீக்கிக் கொ ள்ளப்பட்டு , இது இந்து நாடாக அறிவிக்க வேண்டிவரும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.