” லோக நாயகர் “…இதை ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை …???

திருவாளர் கமல்ஹாசன் தங்களிடம் சொன்னதாக சில
விஷயங்களை வெளியிட்டிருக்கிறார்கள் இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகள்.


விவரம் கீழே –

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்
எஸ்.பாலா. கூறி இருப்பது –

“பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு நிறைவடைந்து
விட்டது. மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பல
காரணங்களால் இதுவரை நாடு முழுவதும் 28 பேர்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, இஸ்லாமியர்கள், தலித் மக்களை குறிவைத்துத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. பல்வேறு மொழி, பண்பாடு,
கலாசாரங்களைக் கொண்டதே ‘இந்தியா’. அப்பேற்பட்ட
பன்முகத்தன்மையே நம் நாட்டின் அழகு. இந்தியாவுக்கு
சுதந்திரமும் பல்வேறு பிரிவினர், பண்பாடு கொண்ட மக்கள்
இணைந்து போராடியதால் கிடைத்தது.

ஆனால், தற்போது பி.ஜே.பி ஆட்சியில் இந்துத்துவ மதவாதம்
தூண்டிவிடப்படுகிறது. எப்படி பிரிட்டிஷ் ஆட்சி பல
பிரிவினை சூழ்ச்சிகளை நிகழ்த்தி, நம்மை அடிமைப்படுத்தி
வைத்திருந்ததோ, அதுபோல் மக்களிடையே பிரித்தாளும்
சூழ்ச்சியைக் கையாள்கிறது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி.
இந்திய மக்களிடையே, அண்மைக்காலமாக மதவெறி
தூண்டப்படுகிறது. தற்போதைய ஆட்சியில் இந்திய மக்கள்
பாதுகாப்பற்றதொரு சூழலிலேயே வாழ்கிறார்கள்.

இந்தநிலையை மாற்ற, மக்கள் ஒற்றுமையுடன் வாழ,
மனிதநேயம் தழைக்கச் செய்யும் நோக்கில் “மதவெறி
மாய்ப்போம்” என்று ஒரு இயக்கம் நடத்தினோம்.

இந்தியளவில் மதவெறிக்கு எதிரான பிரசாரத்தை ஜூலை 5
முதல் 12-ம் தேதிவரை நடத்தினோம்.

இதில், நாடு முழுக்க மதவாதத்துக்கு எதிராகவும், பி.ஜே.பி
ஆட்சியில் பறிபோகும் கருத்துச் சுதந்திரம், உணவு
பண்பாட்டில் கைவைக்கும் அரசின் எதேச்சதிகாரம்
போன்றவற்றை எதிர்த்து மனு ஒன்றைத் தயாரித்தோம்.

இந்தப் பிரச்னைகளில் இருந்து மக்களுக்கு விடிவு கிடைக்க
வேண்டும், சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிகை குரல் அந்த மனுவில்
ஒலிக்கச் செய்தோம்.

இந்த மனுவை தேசிய மனித உரிமை ஆணையத்திடம்
சமர்ப்பிக்க உள்ளோம். இந்த முயற்சிக்கு ஆதரவுகேட்டு
திரைக்கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும்
சந்தித்தோம். பாடகர் டி.எம் கிருஷ்ணா, நடிகை ரோகிணி,
நடிகர் கமல் ஆகியோரைச் சந்தித்தோம்.

தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கொடுக்க இருக்கும்
மனுவை கமலிடம் கொடுக்க, அதை அவர் முறைப்படி
வெளியிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது, கமல் எங்களுடன் மனம்விட்டுப்
பேசினார். மத்திய பி.ஜே.பி ஆட்சியின் மீதான தனது
விமர்சனங்களை அவர் முன் வைத்தார்.

‘இஸ்ரேலுக்குப் பயணம் செய்த நம்ம பிரதமர் மோடி, பாலஸ்தீன மக்கள் மீதும், குறிப்பாக குழந்தைகள் மீதும் கடுமையான தாக்குதல் நிகழ்த்தும் இஸ்ரேல் அரசின் வன்முறை குறித்துப் பேசாதது வருத்தத்துக்குரியது. பாலஸ்தீனத்தை இந்தியாவும்கைவிட்டு விட்டதே’ என்று தெரிவித்து கமல் அப்போது
வேதனைப்பட்டார்.

மேலும் அவர், ‘சங் பரிவார அமைப்புகள் நாளுக்கு நாள்
வளர்ந்து வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளாக அவர்கள்
முயற்சித்து வந்ததற்கான பலனை தற்போது அனுபவிக்கத்
தொடங்கியுள்ளனர். மறுபக்கம் ஏகாதிபத்தியத்தை நோக்கி,
சார்புத்தன்மையோடு இந்த ஆட்சி பயணிக்கிறது. இது,
மேலும் ஆபத்தையே விளைவிக்கும்.

இந்தத் தீமைக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள்
முன்னிற்க வேண்டும். இளைஞர்கள் மீதே நான் நம்பிக்கை
வைத்துள்ளேன்’ என்றார் உணர்வுபூர்வமாக.

( reference – http://www.vikatan.com/news/india/96254-kamal-
haasan-blames-modi-regarding-palestine-issue.html )
———————————————————————-

.
தினமும், மாநில அரசு பற்றிய பல கருத்துகளை,
தைரியமாக, சுடச்சுட – நேரிடையாக வெளியிட்டு வரும்
திரு.கமல்ஹாசன்,

மத்திய அரசைப்பற்றியும், பிரதமர் மோடிஜி அவர்களின்
செயல்பாடுகளைப்பற்றியும் தான் கொண்டுள்ள –

– இந்த கருத்துகளையும் தானே நேரிடையாக,
பொதுவெளியில் இதுவரையில் சொல்லாதது ஏனோ….?
அப்படி சொல்வதை தடுப்பது எதுவோ…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to ” லோக நாயகர் “…இதை ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை …???

 1. முனீர் சேட் சொல்கிறார்:

  சுப் ரஹோ
  டால் மே காலா ஹை
  கர்த்தன் பகடேங்கே
  கப் சுப் கபர்தார்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   முனீர் சேட்,

   நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கே சரியாக புரியவில்லை.
   உண்மையிலேயே நீங்கள் எதாவது கருத்து சொல்ல விரும்பினால்,
   எல்லாருக்கும் புரியும்படி, விளக்கமாக – தமிழில் அல்லது ஆங்கிலத்தில்
   எழுதவும்… ( what is that “kaala”..? -ஆவலை கிளப்புகிறீர்களே…! ))

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Antony சொல்கிறார்:

    I think he is speaking “Kamal Hassan Tamil”. 🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     வியப்பாக இருக்கிறது.

     வழக்கமாக கருத்து சொல்பவர்கள் எல்லாரும்
     கமல்ஹாசன் செய்தி குறித்து silent ஆக இருப்பது ஏன்…?

     அதிர்ச்சியா…? அல்லது நம்ப முடியவில்லையா…?

 2. குலாம் ரசூல் சொல்கிறார்:

  // பசு பாதுகாவலர்கள் அத்துமீறினால் நாங்கள் பொறுப்பல்ல: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

  பசு பாதுகாப்பு என்ற பெயரில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது மாநில அரசே நடவடிக்கை எடுக்கும் இதில் மத்திய அரசின் பங்கு என்று எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது -ஹிந்து நாளிதழ் செய்தி //

  ஏனென்றால் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் நடப்பது எங்கள் கட்சி ஆசியல்ல. அவர்கள் வேறு நாங்கள் வேறு.

  • LVISS சொல்கிறார்:

   This has been told many times –This is a law and order state subject– It is the responsibility of the states to maintain law and order –Dont expect central govt to police a state –Whether it is a BJP ruled state or otherwise the fact is they have the responsibility of catching the culprits and punishing them — Centre can only issue directions and not do it themselves for the state —
   People are still confused about what are the subjects that have to be dealt with the by the states and where the centre alone can legislate and concurrent subjects where both can legislate –Once you go thro the lists you will get a clear picture of who has to do what —

  • Tamilian சொல்கிறார்:

   Law and order is purely a state subject. Hence centre filed that statement. The 4 states mentioned by you are incidentally ruled by BJP. But centre is right in filing the affidavit.

 3. LVISS சொல்கிறார்:

  Probably Kamal Hassan wants to stick to the state politics for the time being –There are two types of people who follow central politics ,one, , those who dont think much about this govt and they keep saying some thing or other every other day and two, who dont express any opinion orally or in writing because they dont find anything wrong with the way the govt functioning –They express their opinion thro their votes as it happened in U P and many other municipal elections that followed demonetisation which was demonised by many intellectuals —

 4. இளங்கோ சொல்கிறார்:

  // Probably Kamal Hassan wants to stick to the state politics for the time being //

  மாநில அரசைப்பற்றி இவ்வளவு வெளிப்படையாக குற்றம் சாட்ட துணிந்தவர்
  மத்திய அரசைப்பற்றி வாயே திறக்கவில்லை என்பது கோழைத்தனம் இல்லையா ?

  மத்திய அரசைப்பற்றியும், மோடிஜியை பற்றியும் கமல்ஹாசன் சொல்வதை
  எல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா ?

 5. இளங்கோ சொல்கிறார்:

  எந்த நாய் எங்கே ஒன்றுக்கு போனது என்கிற அளவுக்கெல்லாம் தினமும்
  விவாதம் நடத்தும் டிவி சேனல்கள், கமல்ஹாசன் மத்திய அரசையும்,
  மோடிஜியையும் குறை கூறி பேசியதை மட்டும் black out செய்வது எதனால் ?
  பணமா ? அல்லது பயமா ?

  • LVISS சொல்கிறார்:

   Did Kamal Hassan criticise the central govt –The only issue he spoke was about the GST on entertainment —These tax matters no more rests with the central govt or the FM but with the GST council which the FM only oversees –If all states agree on a rate for particular goods or services it is implemented –Having said that the rates now in force are permanent — They are likely to undergo changes —

 6. சேதுராமன் சொல்கிறார்:

  கமல்ஹாசனே மீடியாக்களிடம் இந்த செய்தியை பெரிசுபடுத்த
  வேண்டாமென்று சொல்லி இருக்கலாம்.
  பத்திரிகைக்காரர்கள் யாராவது கேள்வி கேட்டால்,
  அநேகமாக ” லோக நாயகர் ” தான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை
  என்று கூட ………..

 7. LVISS சொல்கிறார்:

  Talking about the Israel visit of the PM –Prior to this our MEA Sushma Swaraj visited both Palestine and Israel during the same visit in January — The visit of the PM marks the 25th anniversary of the diplomatic relations with Israel and also had some thing to do with bolstering defences —
  One more thing has to be mentioned here –Before the visit of the PM India reiterated its support for Palestinian cause –Palestinian President visited India in May — We have a history of keeping our relations with different countries in different sand boxes and the world knows it —

 8. அமீர் சொல்கிறார்:

  குலாம் ரசூல், மத்திய அரசையும், பாஜகவையும் குறை சொன்னதும்,
  தமிழன், தெலுங்கன், புதியவன், பழைய்வன் இன்னும் ஏகப்பட்ட தீவிரவாதிகள்
  பொங்கி எழுந்து சவுண்டு விட்டார்களே. இப்போது கமல்ஹாசன் அதே மோடியை குறை சொல்லும்போதும், இஸ்ரேல் பயணத்தை குறை சொல்லும்போதும்,
  சூடு இல்லாமல் சைலண்ட் மோடில் கம்முன்னு கெடப்பதேனோ ?

  • புதியவன் சொல்கிறார்:

   எழுதறேன் அமீர். உங்கள் தகவலுக்கு. உலகில் யாரிடமும் யார் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று கேளுங்கள். நூற்றுக்கு 99 பேர் இஸ்லாமியர்களைத்தான் சொல்லுவார்கள். அதனால் மற்றவர்களைத் தீவிரவாதிகள் என்று சொல்லுவதை நிறுத்துங்கள். உங்களுக்குத்தான் விஞ்ஞானி என்பவர், வஹாபிசத்தை நிறுத்துங்கள், எப்போப் பாத்தாலும் மோடியைக் குறை சொல்வதை விட்டுவிட்டு இந்தியராக இருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

  • புதியவன் சொல்கிறார்:

   இன்னொன்று. வேறு எந்த இடுகையிலும் உங்களைப் பார்த்த ஞாபகம் இல்லை. மோடியைக் குறை சொல்ல ஓடி வந்துள்ளதிலிருந்து நான் மீண்டும் மீண்டும் சொல்கிற உங்கள் அஜெண்டில்மேன் உங்களை அறியாமலேயே வெளிப்படுகிறது. உங்கள் இந்துமத எதிர்ப்பு மோடியின் இன்னும் வளர்ச்சியிலும், தமிழகத்தில் பாஜகவின் எழுச்சியிலும் முடியும்.

   உங்களைப்போலவே நானும் நினைத்தேன், எங்க அமீர், சலாவுதீன், ரியாஸ் என்ற பெயரில் எழுச்சித் திலகங்கள் நாட்டின்மீது அக்கறை இருப்பதுபோல் பின்னூட்டம் இட வரவில்லையே என்று.

 9. புதியவன் சொல்கிறார்:

  “சங் பரிவார அமைப்புகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளாக அவர்கள் முயற்சித்து வந்ததற்கான பலனை தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபக்கம் ஏகாதிபத்தியத்தை நோக்கி, சார்புத்தன்மையோடு இந்த ஆட்சி பயணிக்கிறது. இது,
  மேலும் ஆபத்தையே விளைவிக்கும்.”

  இதெல்லாம் கமல ஹாசன் சொன்னாரா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டில்தான் அவர் தைரியமாக அவருடைய கருத்துக்களைச் சொல்வார். மத்திய அரசு அல்லது பாஜக சம்பந்தமாக அவர் வெளிப்படையாக எதுவும் சொல்லமாட்டார். அவர் சொல்லவேண்டும் என்ற அவசியமும் இல்லை, ஏனென்றால் அவருடைய முதல் அஜெண்டா தமிழக அரசியல், அதில் அவர் கருத்தளித்தார் என்ற செய்தி.

  ஒருவர், நடுனிலையாக விமரிசனம் செய்கிறார் என்றால், மற்ற கட்சியையும் அவர் என்னமாதிரி விமரிசனம் செய்தார் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். கமலஹாசன் திமுகவில் சேர்ந்து, அதிமுக அரசைக் குறை சொன்னால் அதனைப் புரிந்துகொள்ளமுடியும். அவர் திமுக சார்பானவர் என்பதைப் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, அந்த நிலைக்கேற்பத்தான் அவர் கருத்துக்களையோ அல்லது அவரது சகோதரர் கருத்துக்களையோ புரிந்துகொள்ள இயலும். (சாருஹாசன் ஜெ. குற்றவாளி என்று சொல்லும்போதே, கருணானிதியை, எப்போதாவது, ‘விஞ்ஞான ஊழல் செய்தவர்’, ‘2ஜி, தொலைக்காட்சி’ ஊழல் செய்தவர் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால், எப்போதும் இல்லை. ஒருவேளை, நாளை திமுக மறைந்தால், தைரியமாக இவர்கள் கருத்துச் சொல்லும் சாத்தியம் இருக்கிறது)

  அல்லது, தன்னை வந்து சந்திப்பவர்களைப் பொறுத்து வேடம் கட்டுவது. இது கருணானிதி பாணி (நானும் கம்யூனிஸ்டுதான், என் நெருங்கிய நண்பர் எம்ஜியார், நான் மிகப் பிற்படுத்தப்பட்டவன் என்றெல்லாம் லாவணி பாடுவது கருணானிதியின் கலை).

  இதனால்தானோ என்னவோ, இணைவி இவரிடமிருந்து வெளியேறி, மறுநாளே மோடி அவர்களைச் சந்தித்து, தமிழகத்தைப் பற்றி ரொம்பவும் கவலைப்படுபவர் போல அறிக்கைகளெல்லாம் விட்டபோது, கமலஹாசன் கிணற்றில் போட்ட கல் போன்று இருந்தார். சொல்லமுடியாது, இது திமுகவுக்காக கமலஹாசன் பேசும் பேச்சாகவும் இருக்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.