மணிக்கு 1000 கி.மீ. பயணிக்கும் ஹைப்பர்லூப் – துபாயில் 2020-ல் வருகிறது….!!!


மணிக்கு 1000 கி.மீ. பயணிக்கும் ஹைப்பர்லூப் –
துபாயில் 2020-ல் வருகிறது….!!!

விமானத்தை விட வேகம்…
விமானத்தை விட,
தரைவழி பயணத்தை விட,
விரைவான, பாதுகாப்பான, செலவு குறைவான –
எந்தவித எரிபொருளும் தேவைப்படாத –
பசுமைத் திட்டம் ஹைப்பர் லூப் ஒன் ( hyper loop one)

மினி பஸ் அளவுள்ள, பயணிகள் இருக்கைகள் கொண்ட
ஒரு விண்வெளி கேப்சூல் போன்ற வாகனம்….

இதை காற்றுவெளி இல்லாத பெரிய ட்யூபுக்குள்
விரைவாக அனுப்பும் ஹைப்பர் லூப் திட்டத்தை
அறிமுகப்படுத்தியவர் எலன் மஸ்க். இதற்காக அவர்
நிறுவியுள்ள நிறுவனம் “தி போரிங் கம்பெனி ”

2020-ல் துபாயில் இயங்கத்துவங்கும் இந்த திட்டத்தில்,
துபாய்க்கும், சவூதிக்கும் இடையே உள்ள தூரத்தை
வெறும் 13 நிமிடங்களில் கடந்து விடலாம் என்று
சொல்லப்படுகிறது.

இதை விளக்கும் சில டெமொ-வீடியோக்களை பார்த்தேன்…
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

( புல்லட் ட்ரையின்ளுக்கு பதிலாக இதை இந்தியாவுக்கு
கொண்டு வரலாமா என்கிற யோசனை … தோன்றி இருக்கிறதாம்…!!! )

Hyperloop Transport Concept – 3D Animation

Hyperloop In Dubai to Abu Dhabi (Coming Soon)

Hyperloop in Dubai 2020

பின் குறிப்பு –

வளைகுடாவில் பணிபுரியும் நம் விமரிசனம் தள நண்பர்களிடம்,
இது குறித்த மேலதிக தகவல்கள் இருந்தால், அவற்றையும் இங்கு பகிர்ந்து கொள்ளும்படி வேண்டுகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to மணிக்கு 1000 கி.மீ. பயணிக்கும் ஹைப்பர்லூப் – துபாயில் 2020-ல் வருகிறது….!!!

 1. Rajamanickam Veera சொல்கிறார்:

  ஐயா ஹைப்பர் லூப்பை இந்தியாவிலும் முயற்சிக்க எலன் மஸ்க்கும், பிரதமரும் பேசி இருக்கிறார்கள், டெஸ்லாவின் ஜிகா பேக்டரிக்கும் இந்தியாவில் இடம் அளிக்க பட இருக்கிறது.

 2. Rajamanickam Veera சொல்கிறார்:

  LVISS அவர்களுக்கு நன்றி, கா.மை ஐயா, ஊடகங்கள் இது போன்ற ஆக்கபூர்வமான செய்திகளை கவனப்படுத்துவதே இல்லை. அவர்களுக்கு நெகட்டிவ் வான செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் , ஆக்கப்பூர்வமான , கன்ஸ்ட்ரக்டிவான செய்திகளுக்கு கொடுப்பதில்லை. எனென்றால் அதில் அவர்களுக்கு ஆர்வமோ, கவர்ச்சியோ இல்லை என எண்ணுகிறார்கள்.

  நம் சம காலத்தின் நிஜ உதாரண புருஷர் , தமிழ் தாயின் தலைமகன் திரு அப்துல் கலாம் அவர்கள் திரும்ப , திரும்ப சொல்லுவார் செய்தி மற்றும் காட்சி ஊடகங்கள் தேசம் பற்றியும்,வாழ்வு, முன்னேற்றம் பற்றியும் ஊக்கம் தரத்தக்க செய்திகளை முதல் பக்கத்தில் பிரசுரியுங்கள், முக்கியத்துவம் அளியுங்கள் என்று. அதற்கு இஸ்ரேலையும் உதாரணம் காட்டி இருப்பார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் எதையும் நுட்பமாக படிக்கும் நீங்களே இந்த செய்தியை தவற விட்டிருக்கிறீர்கள் பாருங்கள், எனில் சாமனியர்கள் எப்படி படித்திருப்பார்கள்?

  நம் கலாம் ஐயாவின் கனவினை நனவாக்கும் பொருட்டு சில நண்பர்கள் கூட்டு முயற்சியாக துவங்கி நடத்தி வரும் தி பெட்டர் இந்தியா (http://www.thebetterindia.com/) இணைய தளம். மிகவும் நம்பிக்கை அளிக்கும் செயல்பாடுகள் நம்மை சுற்றி நடந்து கொண்டிருப்பதை பார்ப்பதே மகிழ்ச்சி அளிக்கும் செயல் தானே.
  இதில் இன்னொரு சுவாரஸ்யத்தை உங்களுடனும், நம் வலைப்பதிவு வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன், அது டெஸ்லாவின் இலன் மஸ்க் பற்றி டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்,நியூரா லின்க் மற்றும் ஹைப்பர் லூப் என்று இவர் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் இளம் தொழில் நுட்ப வல்லுனர். அபாரமான அறிவு. அற்புதமான செயல் ஆற்றல். நம்பிக்கை அளிக்கும் தொழில் முனைவோர் , இவரின் பேச்சுக்கள், செயல், தொலை நோக்கு திட்டம் எல்லாம் மிகவும் அபாரம், நீட்சே சொல்லும் அதி மானுடன் போல இருக்கிறார் இவர். இவரை பற்றி உங்கள் பார்வையை சொல்லுங்கள்.

  இதோடு உங்களுக்கு என் தனிப்பட்ட கோரிக்கை, உங்களை பின் தொடரும் ஏராளமான நபர்களுக்கு பாசிட்டிவவான நம்பிக்கையளிக்கும் நல்ல செய்திகளை பதிவிடுங்களேன், கூடவே விமர்சனத்தோடு, நம்பிக்கையையும், ஊக்கத்தையும் தானே நீங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்ல வேண்டும்.
  நன்றி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்ப ராஜமாணிக்கம் வீரா,

   உங்கள் தகவல்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்களுக்கு நன்றி.

   நீங்கள் எவ்வளவு காலமாக இந்த தளத்தை படித்து வருகிறீர்கள்…?
   அரசியல் கருத்துகளை கூறும்போது மட்டும் தான் நான் ஒரு நல்ல
   “எதிர்க்கட்சி” நிலையில் நின்று விமரிசனம் செய்து வருகிறேன்.

   அரசியல் தவிர்த்து, இன்னும் நிறைய தலைப்புகளில் நான் எழுதுவதை
   நீங்கள் பார்த்திருப்பீர்களே… அவையெல்லாம் positive கட்டுரைகள் தான்.
   கொஞ்சம் யோசித்து பார்த்தால், உங்களுக்கே புரியும்.

   மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.
   நான் எந்த கட்சி அபிமானியும் இல்லை… நிரந்தர எதிர்ப்பாளனும் இல்லை.
   நான் ஒரு சுதந்திரமான எழுத்தாளன்.
   என் விருப்பம் எல்லாம் சமூக நலன் மட்டும் தான்.
   எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல்,
   என் மனசாட்சி சொல்வதைத்தான் நான் இங்கு எழுதுகிறேன்.

   நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  இது சாத்தியமா? அப்படி எனில், ஏன் இன்னும் அமெரிக்கா இதனைச் செய்யவில்லை? நிறைய லிங்க் இருக்கின்றன. படிக்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி. வித்தியாசமான செய்திகளையும் நிகழ்வுகளையும் எப்போதும்போல் நீங்கள் பகிர்ந்துகொள்கிறீர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s