திரு.ஜெட்லி, “சமாளி”ப்பதை நிறுத்தி விட்டு, செயலில் “முனைப்பு” காட்ட வேண்டும்…

டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில்,
நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள் உரையிலிருந்து
சில பகுதிகள் –


– இந்திய ஜனநாயகம் கருப்பு பணத்தால் தான் இயங்குகிறது…

– தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதை தடுப்பது பெரும்
சவாலாக இருக்கிறது…தேர்தல் ஆணையம் இதில்
தோற்று விட்டது….

– அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.
வரி விதிப்பால் ரொக்க பரிவர்த்தனை பெருமளவில்
குறைந்துவிட்டது ….- பணமற்ற பரிவர்த்தனை
அதிகரித்துள்ளதால் கருப்பு பண புழக்கம் குறைந்துள்ளது…

– ஆனாலும் கூட தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளிடம்
புழங்கும் கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதில் தேர்தல்
ஆணையம் தோற்று வருகிறது…

– கருப்பு பண புழக்கம் பற்றி குறை சொல்வதை
எதிர்க்கட்சிகள் விட்டுவிட்டு அதை தடுப்பதற்கான
யோசனைகளை தெரிவிக்க வேண்டும் –

– இது குறித்து அரசியல் கட்சிகளுக்கு நான் ஏற்கனவே
அனுப்பிய கடிதத்திற்கு எந்த கட்சியிடம் இருந்தும் பதில்
வரவில்லை…

– இது கருப்பு பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கும்
இப்போதைய நிலைமையே நீடிக்க வேண்டும் என
அரசியல் கட்சிகள் விரும்புகிறதா என்கிற எண்ணத்தையே
உறுதிப்படுத்துகிறது….

– 70 வருடங்களாக இந்திய ஜனநாயகம் என்பது கண்ணுக்கு
தெரியாத, கணக்கில் வராத பணத்தால்தான்
கட்டமைக்கப்பட்டுவருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக
நாடு இப்படித்தான் இயங்கி கொண்டுளளது.

– நான் தனிப்பட்ட முறையில் ஒத்துழைக்க வலியுறுத்தியும்
கூட எந்த கட்சியும், பணமற்ற தேர்தலை நடத்த என்ன
செய்யலாம் என்ற திட்டத்தோடு என்னை அணுகவேயில்லை.

( http://tamil.oneindia.com/news/india/arun-jaitley-blamed-election-commission-over-failing-check-290488.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.192.162.7&utm_campaign=client-rss)

———————————————————-

இது குறித்து நாம் சொல்ல விரும்புவது –

தேர்தல்களில் கருப்புப்பணம் செலவழிக்கப்படுவதை
தடுப்பது, தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு மட்டுமல்ல…
மத்திய அரசுக்கும் இதில் பெரும் பொறுப்பு உண்டு…

கருப்புப்பணத்தை ஒழிக்க எதிர்க்கட்சிகள் வழி
சொல்வதில்லை என்று அரசு அவர்களின் மேல் பழியை
போட்டு விட்டு தப்பித்துக் கொள்ள முடியாது.

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக தரப்படும் நன்கொடையின்
அளவை 2000 ரூபாய் என்று மட்டுப்படுத்திய செயல், மத்திய
அரசு தன்னிச்சையாகவே செய்தது தானே…? மற்ற அரசியல்
கட்சிகளை கேட்டுக் கொண்டா செய்தது…?

எனவே, இதே போல், தேர்தலில் கருப்புப்பணம்
விளையாடுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு,
எதிர்க்கட்சிகளுடையது மட்டும் அல்ல…

தேர்தல் கமிஷனுடைய பங்கும் இதில்
மட்டுப்படுத்தப்பட்டுள்ளது…. தனக்கு அளிக்கப்பட்ட அதிகார
வரம்பிற்குள் தான் அது செயல்பட முடியும்.

மத்திய அரசு தனது பொறுப்புகளை சால்ஜாப்பு சொல்லி
தட்டிக்கழித்து விட முடியாது. தனித்த முழு மெஜாரிடியுடன்
இயங்கும் பாஜக அரசு இதற்கான, உரிய சட்டங்களை
கொண்டு வந்து கட்டுப்படுத்துவதை யார் தடுக்க முடியும்…?

– 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதவையாக
அறிவிக்கும்போது, அதற்காக சொல்லப்பட்ட மூன்று முக்கிய
காரணங்களும் –

நடைமுறையில் பலன் தரவில்லை என்பது நிதரிசனம்.

வங்கிக்கு வந்த நோட்டுகளை இன்னமும் எண்ணிக்கொண்டு
இருக்கிறோம் என்று சொல்லும் ரிசர்வ் வங்கியின் கவர்னரே
இதை நிரூபிக்க போதுமானவர்.

ஆனால், மத்திய அரசால், இந்த தோல்வியை ஒப்புக்கொள்ள
முடியாது என்பதையும் நாம் உணர்கிறோம்.
ஆனால், அநாவசியமாக மீண்டும் மீண்டும் demonetization-ஐ
நினைவுபடுத்தி, அதை “சமாளிக்க” ஏதாவது
சாக்குபோக்குகளை கண்டுபிடிப்பதை நிறுத்த வேண்டும்.

நிஜமாகவே கருப்புப்பணத்தை ஒழிக்க உதவக்கூடிய
சில சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.

Benami Transactions (Prohibition) Amendment Act

Debts Recovery Act

Real Estate Act

இந்த சட்டங்களுக்காக நாம் மத்திய அரசை தாராளமாக
பாராட்டலாம்.

இந்த சட்டங்களை உரிய முறையில் முனைந்து
செயல்படுத்தினால், கருப்புப்பணம் உருவாவதை நிச்சயம்
தடுக்க முடியும்.

இதே போல், ஆயிரக்கணக்கான பினாமி நிறுவனங்கள்
இயங்கி வருகின்றன… திருவாளர் கா.ப.சி. போல்,
ஒரே விலாசத்தில் வாயில் நுழைய முடியாத பெயரில்,
டஜன் கணக்கில் கம்பெனிகள் வைத்திருப்பதை கண்டு
பிடித்து முடக்கி, அதன் உண்மை உரிமையாளர்களை
சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

பொருளாதார குற்றங்கள் குறித்த வழக்குகள் மிக மிக
மெதுவாக ஆமை வேகத்தில் நகருகின்றன… பல வழக்குகள்
எதாவது ஒரு அப்பீலின் மூலம் தடையுத்தரவு பெற்று,
நிறுத்தப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றையும் விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க
விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட
காலவரைக்குள் பொருளாதார குற்றங்கள் விசாரித்து
முடிக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய
சட்டங்களை கொண்டு வர வேண்டும்.

திரு.ஜெட்லி அவர்களுக்கு ஏகப்பட்ட சுமைகள் இருக்கின்றன.
பாதுகாப்பு, நிதி ஆகிய இரண்டு முக்கிய அமைச்சகங்களையும்
அவர் கவனிக்க வேண்டியிருக்கிறது.

தன் செயல்பாடுகளின் எல்லையை அவர் உணர்ந்துகொண்டு,
தனக்கு உதவிசெய்ய திறமையான, செயல்திறன் மிக்க,
நல்ல அதிகாரிகளின் குழு ஒன்றை அமர்த்திக்கொண்டு,

இவற்றை எல்லாம் தீவிரமாக செயல்படுத்த முயல்வது
பலன் அளிக்கலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to திரு.ஜெட்லி, “சமாளி”ப்பதை நிறுத்தி விட்டு, செயலில் “முனைப்பு” காட்ட வேண்டும்…

 1. புதியவன் சொல்கிறார்:

  “அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக தரப்படும் நன்கொடையின்
  அளவை 2000 ரூபாய் என்று மட்டுப்படுத்திய செயல், மத்திய
  அரசு தன்னிச்சையாகவே செய்தது தானே…” – அதே சமயம், பணம் வந்த சோர்ஸ் சொல்லவேண்டாம் (எந்தக் கம்பெனி யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தது என்பதைப்போன்று) என்ற மாதிரியும் படித்த ஞாபகம் இருக்கிறதே.

  எல்லாவற்றையும் தடுக்க முடியாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக சட்டங்கள் மூலம் கருப்புப்பணத்தைத் தடைசெய்யும் விதத்தில் மத்திய அரசு செயல்படவேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகளையோ அல்லது தேர்தல் ஆணையத்தையோ குறைகூறுவது கொஞ்சம்கூடப் பயன் அற்றது.

 2. புதியவன் சொல்கிறார்:

  அதேபோல, ஆட்சியின் கடைசி வருடம், புதுப் புது சட்டங்கள் போட்டு, ‘கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாஜக நடவடிக்கை எடுத்தது’ என்று ஃபிலிம் காட்டினாலும் உபயோகமில்லை ஜேட்லி சார்.

 3. LVISS சொல்கிறார்:

  I will touch upon two aspects — One -The limit of Rs 2000 can be removed and make all donations through cheques only –Actually the limit was reduced from 20000 to 2000 if my memory serves me right —
  Two, I am with RBI on the time taken for note counting –Even if the counting is done by machines It will take some more months than what we think to count the notes that have come in It is not only thing that has to be done –The notes received from the notes have to be tallied with the figures received from over 10000 bank branches — SBI alone has about 16000 branches —I guess this was the first task taken up by the RBI —
  I expect the RBI announce the figures only after checking and rechecking the figures they have arrived at —

 4. jksm raja சொல்கிறார்:

  ஒவ்வொரு பேங்கிலும் ரூபாய் நோட்டுக்களை எண்ணித்தானே நமது அக்கவுண்டில் வரவு வைத்திருப்பார்கள். எல்லா பேங்க் ஸ்டேட்மெண்டை வைத்து மொத்தம் எவ்வளவு வந்திருக்கிறது என்று சொல்வதற்கு என்ன கஷ்டம். அதாவது பேங்க் ஸ்டேட்மென்டின் படி எல்லா பணமும் திருப்பி வந்து விட்டது என்று நினைக்கிறேன். அதனை மறைப்பதிற்கு நோட்டை எண்ணுகிறோம் என்று பொய்யான காரணம் சொல்கிறார்கள். நோட்டை திரும்பவும் எண்ண வேண்டிய அவசியம் என்ன. திரு LVISS விளக்குவார் என்று நினைக்கிறேன்

  • LVISS சொல்கிறார்:

   Mr jksm raja The notes first counted and tallied at banks have to be counted again in RBI –Bank statement of banned notes provided by the bank and all all the notes received from the banks will have to be tallied individually with the bank statement after counting —
   If you have a Rs 100 or Rs 500 note packet with the label intact with you see how many signatures are there in the packet — You may find some signatures or initials,some three or four , in them –Yes, it means each packet is counted that many number of times times by different persons — -We are talking about the crores of demonetised notes, not regular notes sent to RBI by nearly 20000 bank branches –It must be in lakh crores – Each of these notes have to be carefully checked , segregated counted and tallied —
   It is not as simple as it sounds —

 5. குலாம் ரசூல் சொல்கிறார்:

  LVISS,

  There is a well sophisticated fake detector machine available and many countries and firms are using this one around the world I hope, this machine finding fake notes while counting in a flash of time.

  If RBI and all other banks have been used this machine, how long will take, days are enough even a month.

  I hope RBI have better knowledge about this than a common people.

  Right who gave this explanation which you have given here LVISS if this is your imagine good joke.

 6. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  தேர்தலில் EVM-உடன் ஆதார் அட்டையை இணைத்தால் நிச்சயமாக கள்ள ஓட்டை தடுத்துவிடலாமே!

  நம்ம தேர்தலில் நடக்கும் விநோதம்தான் அனைவரும் அறிந்தது தானே! அதாவது 50-60% வாக்காளர்களே வாக்களித்து அதில் 1/3 வாக்கு வாங்குபவர், அதாவது 20% (கிட்டத்தட்ட) வாக்குகள் வாங்கி 80% வாக்காளர்களுக்கு பிடிக்காத ஒருத்தரை தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம்.

  இந்த 20% வாக்களர்கள்தான் இந்த அரசியல்வாதிகளின் டார்கேட். இவர்களுக்கு தான் கருப்பு பணம் ஆறாக பாய்கிறது.

  அதற்குபதிலாக வாக்களிக்கும்போது ஆதார் அட்டையை இணைத்துவிட்டு, உடனடியாக அவருடைய வங்கி கணக்கில் ஒரு amount-ஐ தேர்தல் ஆணையமே செலுத்திவிட்டால் நிச்சயமாக 90% மேல் வாக்கு பதிவாக வாய்ப்புள்ளது. மீதி உள்ள 10% வாக்களிக்காத நபர்கள் நிச்சயமாக அதற்கான காரணத்தை முன்னதாகவோ அல்லது தேர்தல் முடிந்த மூன்று நாட்களுக்குள் தக்க ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவரலாம். அப்படி சமர்ப்பிக்காதவர்களின் வங்கி கணக்கை முடக்கலாம். பின்னர் ஒரு தண்டத்தொகை அவர்களின் வங்கி கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.

  இப்படி செய்தால் அரசியல் கட்சிகளின் கருப்பு பணத்தை முடக்கலாம் எனபது என் கருத்து!

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   ப்ரோ சைதை அஜீஸ்,

   நல்ல யோசனை. ஆமாம் எந்த நாட்டிற்கு? 😁

   இது ஏற்கப்பட்டால் அடுத்த தேர்தலில் சங்குதான்.

   • குலாம் ரசூல் சொல்கிறார்:

    சகோ சைதைஅஜீஸ்,

    //தேர்தலில் EVM-உடன் ஆதார் அட்டையை இணைத்தால் நிச்சயமாக கள்ள ஓட்டை தடுத்துவிடலாமே!//

    இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

    இதைவிடவும் நல்ல யோசனை ஓட்டு போட்டதும் receipt machine ஒன்னு இணைப்பது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த பொது தேர்தலில்
    தேர்தல் ஆணையம் கொண்டு வந்து விடும் என்று நம்புவோம்.

    இந்த இரண்டும் இணைந்தால் சந்தேகத்திற்கிடமில்லா நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

    // மராட்டியத்தில் புல்தானாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது சுல்தான்பூர் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தேங்காய் இயந்திரத்தில் தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் விளக்கு எரிகிறது என ஆர்டிஐ தகவலில் தெரியவந்து உள்ளது.

    ஜூலை 23, 2017, 10:20 AM//

    இது நேற்று வந்த செய்தி.

    2014 – லிருந்து நடந்த எல்லா தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

    அடுத்த பொது தேர்தல் முறையாக நடக்கும் என்று மக்கள் நம்பிக்கையை பெற இது தான் ஒரே வழி.

  • புதியவன் சொல்கிறார்:

   சைதை அஜீஸ் – இது பிரச்சனையைத் தீர்க்காது.

   1. நம் தலைவர்கள் நம்மிடமிருந்துதான் உருவாகிறார்கள். நாம் தேர்ந்தெடுத்துத்தான் உருவாகிறார்கள். 40% வாக்களிக்கவில்லை என்று எண்ணக்கூடாது. அவர்கள் மற்ற 60% யாரைத் தேர்ந்தெடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், எந்தக் காரணத்தைக்கொண்டும் குறை சொல்லமாட்டோம்;அதற்கான உரிமை எங்களுக்குக் கிடையாது; நாங்கள் ஆட்டு மந்தைகள்; மற்ற 60% மக்கள் என்ன தீர்மானித்தாலும் நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று சொல்பவர்களாகத்தான் நான் நினைக்கிறேன். அந்த 40% மக்கள், அரசியலைப் பற்றியோ, அல்லது அரசாங்கத்தைப் பற்றியோ அல்லது அதிகாரிகளைப்பற்றியோ எந்தக் கருத்துக் தெரிவிக்க உரிமையில்லாதவர்கள். ஏனென்றால் அவர்கள் இந்தியக் குடிமக்களே அல்லர் (அதில் சிறுபான்மை, தவிர்க்க இயலாத காரணங்களால் வாக்குச்சாவடிக்கு வரமுடியாதவர்களாக இருக்கலாம், அவர்களைத் தவிர)

   2. பெரும்பான்மை மக்களுக்குப் பிடித்தவர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுப்பதுதான் ஜனநாயகம். எப்போதும் பெரும்பான்மை மக்கள் விரும்புபவர்கள்தாம் நம் தலைவர்களாக ஆகியிருக்கிறார்கள்.நீங்கள் சொல்வதுபோல் 80% வாக்காளர்களுக்குப் பிடிக்காத ஒருவர் எந்தக் காலத்திலும் தேர்வாக முடியாது. ஏன், 50% வாக்காளர்களுக்குப் பிடிக்காத ஒருவர் தேர்வாக வாய்ப்பே இல்லை. இதை மிக எளிதாக நிரூபணம் செய்யலாம்.

   3. நீங்கள் ஒரு கடை வைத்திருக்கிறீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர நினைக்கிறீர்கள், இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கிறீர்கள். உங்கள் கடை தஞ்சாவூரில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் உத்திரப் பிரதேச மக்களுக்கு டிஸ்கவுன்ட் ஆஃபர் கொடுப்பீர்களா அல்லது உங்கள் கடைக்கு வரும் வாய்ப்புள்ளவர்களுக்கு ஆஃபர் கொடுப்பீர்களா? அதனால், நிச்சயமாக வாக்குச்சாவடிக்கு வரும், தன்னை விலைக்கு/வாடகைக்குக் கொடுக்கத் தயாராக இருக்கும் (இதற்கான கெட்ட பெயரை இங்கு எழுதவில்லை) நீங்கள் கூறிய 20% மக்களை அரசியல்கட்சிகள் குறிவைக்கின்றன. இது அந்த மக்களின் தவறா அல்லது அரசியல்கட்சிகளின் தவறா?

   3. வங்கிக்கணக்குக்கு தேர்தல் ஆணையம் பணம் செலுத்தவேண்டும் என்ற எண்ணமே தவறானது. வாக்களிப்பது, என் சலுகையல்ல, என் கடமை. அப்படி அரசாங்கம் பணம் அளிக்கும் என்றால், அது வாக்காளரின் பேராசையை இன்னும் தூண்டிவிடும். இன்றைக்கு பெரும்பாலான அரசு அலுவலர்களுக்கு சம்பளம் என்பது அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது, ஆனால் அவர்கள் லஞ்சப் பேய்களாக மாறி மக்களிடமிருந்து பணத்தை உறிஞ்சவில்லையா? ‘சம்பளம்’, ‘கிம்பளத்தைத்’ தடுக்க முடிந்ததா?

   4. இதைவிட, ‘வாக்களிப்பவர்கள்தான்’ ‘குடிமகன்’ என்று கருதப்பட்டு, அரசாங்கத்தின் எந்த ஒரு சலுகையையும் பெறக்கூடிய தகுதி பெற்றவர்கள். ‘வாக்களிக்காமல்’ இருப்பதற்கு தனி பெர்மிட் (உடல் தகுதி போன்றவை) வாங்கிவைத்திருக்கவேண்டும் என்பதுபோல் சட்டம் கொண்டுவந்தால் ஒருவேளை உபயோகப்படலாம்.

   5.தேர்தலில் ‘கருப்புப் பணம்’ என்பது கட்சியினால் மட்டுமல்ல, மக்களினால்தான் உருவாகிறது, அவர்களுடைய பெர்செப்ஷனிலால்தான் உருவாகிறது. உள்ளூர் தேர்தலில் நாம் ஏன் நல்லவர்களுக்கு வாக்களிப்பதில்லை? ஏனென்றால் நாம் ஆடம்பரம், திருவிழா, கொள்ளையடித்த பணத்தில் கோலாகலத்துடன் வரும் வேட்பாளர்களைத்தான் நம்புகிறோம். அப்புறம் அரசியல்வாதி என்ன செய்வான்? திருடித்தான் பணம் சேர்ப்பான், அதைத் தேர்தலில் செலவுசெய்வான். முதலில், அரசாங்கம், இந்தத் தேர்தல் திருவிழாவைத் தடை செய்து, அந்த அந்த வேட்பாளர்கள், உள்ளூரில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டபங்களில் (அல்லது டிவியில்) அவர்களது பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும். வேறு எந்த ஊடகங்களிலோ விளம்பரப்படுத்துவது டிஸ்குவாலிபிகேஷன் என்று சட்டம் போட்டால், ஒருவேளை மக்கள் சிந்திப்பதற்கு உதவும்.

   6. தேர்ந்தெடுக்கப்பட்டு நம்மை ஆள்பவர்களை மெஜாரிட்டி மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு ஒப்பாகும். சந்திரனோ சூரியனோ நம்முடைய ஒப்புதலுக்குக் காத்திருந்து வேலைசெய்வதில்லை. உங்களுக்குப் பிடித்த ஒருவர் தலைவராகவேண்டுமென்றால் நீங்கள் முதலில் வாக்குச்சாவடிக்குச் செல்லவேண்டும் (அதாவது ஒருவர். உங்களைச் சொல்லவில்லை)

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    ——————————

    6. தேர்ந்தெடுக்கப்பட்டு நம்மை ஆள்பவர்களை மெஜாரிட்டி மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு ஒப்பாகும். //
    —————————-

    உங்கள் லாஜிக்
    கோவா, மணிப்பூர் – ஆகிய மாநிலங்களில்
    உதைக்கிறது போலிருக்கிறதே …. 🙂 🙂

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     உண்மைதான் கா.மை. சார். இதெல்லாம் அரசியல் என்று நினைத்தாலும், பாஜக கட்சி காங்கிரஸ் போன்று கீழ்த்தரமாக சட்டத்தை வளைக்காது என்றுதான் நான் நம்பினேன். வெறும் பதவி அரசியலுக்காக கோவா, மணிப்பூர் போன்றவற்றில் நடந்ததை ஜீரணிப்பது கடினம். பாஜகவில் புத்தர்களே உறுப்பினர்கள் என்பதையும் நான் நம்பவில்லை, புத்தர்களை மட்டும்தான் மக்கள் தேர்தல் அரசியலில் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதையும் நான் நம்பவில்லை.

 7. LVISS சொல்கிறார்:

  There is a difference between “therthalil panam puzhanguvathu ” and “karuppu pana puzhakathai thdupathu” by the govt by initiating measures —
  Who cancelled the R K Nagar election and why ECI or the government ?

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப எல்விஸ்,

  1) மத்திய அரசு கருப்புப்பணத்தை ஒழித்து விட்டால்,
  அப்புறம் அது எப்படி தேர்தலில் ” வந்து” புழங்கும்…? ”

  2) ஆர்.கே.நகர் தேர்தலில் கருப்புப்பணம் புழங்குகிறது, ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தி வைத்தது. ஆதாரங்களுடன அரசாங்கத்திற்கு புகாரும் கொடுத்தது.

  அந்த புகாரின் மீது அரசாங்கம் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன…?
  எத்தனை பேர் பிடிபட்டிருக்கிறார்கள்…?
  எத்தனை பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது…?

  500 -1000 ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவித்தவுடன் இனி கருப்புப்பணம்
  அழிந்தது என்று கொண்டாடியவர்களே இப்போது மீண்டும் தேர்தலில் கருப்புப்பணம்
  விளையாடுகிறது என்று சொல்வது விந்தையாக இல்லை…?
  அது விஷயத்தில் நீங்களும் கண்களை மூடிக்கொள்வதும் தமாஷாக இல்லை ..?

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 9. LVISS சொல்கிறார்:

  PLease read my sentence carefully – You are taking it for granted that money held in RK Nagar is black –
  As for the number of cases filed etc in R K Nagar issue – 100 FIRs have been filed ,40 persons have been arrested, about 15 lakhs have been seized —
  The govt only said that the black money will be curtailed ,contained not abolished –Please go thro all the news that came after demonetisation – – Fight against black money does not stop with demonetisation –

  • இளங்கோ சொல்கிறார்:

   LVISS சார்,

   ஆக மொத்தம் கருப்பு பணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மட்டும் தான் பாஜக அரசின் உத்தேசம்; ஒழிப்பது அல்ல என்கிறீர்கள். சரி புரிகிறது ; நல்ல லட்சியம் ;

   • LVISS சொல்கிறார்:

    Yes , you cannot eradicate black money but contain it to the maximum extent possible — To this end measures can be initiated –This applies to not only NDA but all future governments —

 10. LVISS சொல்கிறார்:

  Once the election is announced EC is the most powerful body – -It is an autonomous constitutional body —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.