மறைந்திருக்கும் சரித்திரப் புதையல்கள்….( பகுதி-1 )


நம் பார்வைக்கே வராத பல விஷயங்கள், செய்திகள் –
சரித்திரத்தில் புதைந்து கிடக்கின்றன….

இன்று நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்குமான அடித்தளம்
ஏற்கெனவே பல பத்து வருடங்களுக்கு முன்னரே
போடப்பட்டு விட்டது என்பதை அறியும் வாய்ப்பு நம்மில்
எத்தனை பேருக்கு கிடைக்கிறது…?

பள்ளியில் நமக்கு அறிமுகப்படுத்தப்படுவது சரித்திரம்
இல்லை – சமுத்திரத்தின் ஒரு துளி…!

பல அதிமுக்கியமான விஷயங்களைக் கூட ஒரு பத்தியில்,
அதிகம் போனால், ஒரு பக்கத்தில் கடந்து போய் விடுகிறோம்.
பள்ளிகளில் நமக்கு கற்பிக்கப்படுவதும், நாம் படிப்பதும் –
வருடாந்திர தேர்வு என்கிற கோணத்தில் மட்டுமே…

பள்ளிகளில் சில பக்கங்களில் படித்து விட்டு, பரீட்சை
எழுதியவுடன் அதையும் மறந்து விடுகிறோம்.

கல்லூரி படிப்பில்….?

கலைக்கல்லூரிகளில் சரித்திரம் படிக்கலாம்….
ஆனால், யார் படிக்கிறார்கள்…?

வேறு எந்த தொழில்முறை படிப்பிலும் இடம்
கிடைக்காதவர்களின் கடைசிப் புகலிடம் தான்
கலைக்கல்லூரிகள். அவற்றிலும், சரித்திரத்தை விருப்ப
பாடமாக எடுத்துக்கொண்டு படிப்பவர்கள் எத்தனை பேர்…?
சரித்திரம் படித்தவர்களுக்கு எங்கே வேலை கிடைக்கிறது…..?

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமேயானால் –
இந்திய சுதந்திரப்போரை பற்றி நமக்கு பள்ளிகளில் எவ்வளவு
கற்பிக்கப்படுகிறது…? கலந்துகொண்ட முக்கியமான சில
தலைவர்களின் பெயரை, சில முக்கிய நிகழ்வுகளை மட்டுமே
நாம் அறிவோம். சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்ட
எத்தனையோ லட்சம் பேர்களில், எத்தனை பேரை நாம்
அறிவோம்…? எத்தனை சம்பவங்களை பற்றி அறிய நமக்கு
வாய்ப்பு கிடைத்தது …?

1857-ல், சிப்பாய் கலகத்தின் மூலம் முதல் இந்திய
சுதந்திரப்போராட்டம் துவங்கியது … என்று துவங்கி
இந்திந்த ஊர்களில் கலகம் நடந்தது என்கிற வகையில்
எழுதி இருப்பார்கள்.

ஆமீர்கான் எடுத்து, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற
“மங்கள் பாண்டே” போன்ற திரைப்படங்களின் மூலம், சில நிகழ்வுகள், சில நபர்கள் வெளிச்சத்திற்கு வந்திருப்பார்கள்.

லட்சோப லட்சம் மக்கள் கலந்துகொண்ட அந்த
போராட்டத்தில் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் நிகழ்ந்த
நிகழ்வுகள், அதனால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பு,
அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள், பாதிப்புகள் –
விளைவுகள்….? எங்கே படித்தோம்…? அதற்கான சந்தர்ப்பங்கள்
நமக்கு படிக்கும் காலத்தில் கிடைக்கவில்லை…!

பிற்காலங்களில், ஆர்வமுள்ளவர்கள், சரித்திரத்தில்
விருப்பமுள்ளவர்கள் – தேடினால், கிடைப்பது அற்புதமான
பொக்கிஷங்கள்… புதையல்கள்…!

நான் சரித்திர சம்பந்தமுடைய செய்திகள், கட்டுரைகள்,
திரைப்படங்கள், நாவல்கள் – என்று கிடைப்பது எதையும்
விடுவதில்லை…..

எனக்கு படிக்க கிடைப்பது அனைத்தையும் சொல்ல
முடியவில்லை என்றாலும், முக்கியமான, சுவாரஸ்யமான
நிகழ்வுகள் என்று தோன்றும் சிலவற்றை இந்த தலைப்பில்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில் 1857-ல், பிரிட்டிஷாரை எதிர்த்து நிகழ்ந்த புரட்சி
குறித்த, நாம் அறிந்திராத சில விவரங்கள் …..

….

முக்கியமாக, டெல்லியில், மொகலாய ஆட்சியின் கடைசி
மன்னரான பஹதூர் ஷா ஆட்சியின் இறுதி நாட்களில் நடந்த
சில நிகழ்வுகள்….

( தொடர்கிறது – பகுதி-2 -ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to மறைந்திருக்கும் சரித்திரப் புதையல்கள்….( பகுதி-1 )

  1. இளங்கோ சொல்கிறார்:

    மங்கள் பாண்டே பார்த்திருக்கீறேன்.
    ஆமீர்கான் விடுதலை போராட்டத்தை பின்னணியில் வைத்து
    நிறைய படங்கள் எடுத்திருக்கிறார். லகான் இந்த வரிசையில் இன்னொரு
    மிகச்சிறந்த படம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.