பீரங்கியில் கட்டப்பட்டு, வெடிக்கப்பட்ட மௌல்வி ஃபகர் – சரித்திரப் புதையல்கள்….( பகுதி – 3 )


மக்கள் வீறுகொண்டெழுந்து, ஆங்கிலேயருக்கு எதிராக
போராடினார்கள். ஜாதி, மத வேறுபாடின்றி, கையில்
கிடைத்த ஆயுதங்களை ஏந்தி, வெள்ளையர்களை காணும்
இடங்களில் எல்லாம் துரத்தினார்கள் – போர்க்கொடி
தூக்கினார்கள்.

இருந்தாலும், வலிமை மிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்
முன்னர், அவர்களால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க
முடியவில்லை…

வெள்ளையருக்கு உதவ கூடுதலாக பிரிட்டிஷ் படை
ரங்கூனிலிருந்து வந்து கொண்டிருக்கும் செய்தியும் தெரிய
வந்தது.

மக்கள் தளர்ந்து போகாமலிருக்க, மௌல்வி ஃபகரும் தனது
பத்திரிகையில் வெள்ளையருக்கு எதிராக பல கட்டுரைகளை
எழுதினார். நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்த
புரட்சியை பற்றிய செய்திகளை டெல்லி மக்கள் அறிய
உதவினார். பல இடங்களில், மக்களுக்கு தகவல் தெரிவிக்கும்
பொருட்டு, பத்திரிகை இலவசமாகவே விநியோகிக்கப்பட்டது.

மே 12, 1857 – அன்று ஆங்கிலேயருக்கு எதிராக சிப்பாய்கள்
புரட்சியில் இறங்கி, மன்னர் இரண்டாம் பகதூர் ஷாவை
Emperor of India என்று முடிசூட்டியபோது –
மன்னர் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டார் …

“To all the Hindus and Muslims of India, taking my duty by the people into consideration at this hour, I have decided to stand by my people…

It is the imperative duty of Hindus and Mussalmans to join the revolt against the Englishmen. They should work and be guided by their leaders in their towns and should take steps to restore order in the country. It is the bounden duty of all people that they should, as far as possible, copy out this Firman and display it at all important places in the towns. But before doing so, they should get themselves armed and declare war on the English.”

இதற்கிடையே போரில் ஈடுபட்டிருந்த மக்களை மத ரீதியாக
பிளவுபடுத்த பிரிட்டிஷார் முயற்சிகளை மேற்கொண்டனர்.

டெல்லியின் ஜாமா மசூதியின் சுவர்களில், வெள்ளையர்களின்
ஏஜெண்டுகள் மூலம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அதில் துப்பாக்கி குண்டுகளில், பன்றி கொழுப்பு
தடவப்படவில்லை என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

மறைமுகமாக, பசுமாட்டு கொழுப்பு தான் தடவப்பட்டிருந்தது
என்று உணர்த்தும் முயற்சியாக அது இருந்தது.

அதன் வாசகங்களின் மூலம் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின்
நண்பர்கள் என்றும், முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிராக
ஜிஹாத் போரை துவங்க வேண்டும் என்றும் தூண்டி
விடப்பட்டனர்.

ஆங்கிலேயரின் இந்த சூழ்ச்சியை முறியடிக்கவும்,
மக்களுக்கு உண்மை நிலையை விளக்கவும், மௌல்வி
ஃபகர் தன் பத்திரிகையின் மூலம் பெருமுயற்சி
மேற்கொண்டார். மௌல்வியின் மகன் மொஹம்மத்
ஹைசேன் ஆசாத், பத்திரிகையில் கம்பெனி செய்யும்
அக்கிரமங்களைப்பற்றி கவிதைகள் எழுதினார்.
மன்னர் பகதூர் ஷா ஸாஃபர் மற்றும் அவரது பேரன் மிர்சா
பிதர் பக்த் ஆகியோரும் பத்திரிகையில் ஆங்கிலேயருக்கு
எதிராக எழுதி, மக்களுக்கு உத்வேகமூட்டினர்.

இந்து, முஸ்லிம்களிடையே ஒற்றுமை தொடர, பகதூர் ஷா
பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்….

இந்த வழியில், அவர் தன்னைப்பற்றியே எழுதிக்கொண்ட
கவிதை ஒன்று இப்படி போகிறது…..

Butkhano’n mein jab gaya main kenchkar qashqa Zafar
Bol utha woh but, ‘Brahmin yeh nahin to kaun hai?’

(When Zafar went to the temple with a tilak on my forehead,
The idol exclaimed, ‘If not a Brahmin then who is he?’)

—Bahadur Shah Zafar

இருந்தாலும், கடைசியில் – நான்கு மாத முற்றுகைக்குப்
பிறகு, செப்டம்பர் 14, 1857 அன்று டெல்லி ஆங்கிலேயரிடம்
வீழ்ந்தது…..

டெல்லியில் பிரிட்டிஷார் நுழைந்த அன்று, பகதூர் ஷா
கோட்டையை விட்டு வெளியேறும் முன்னர் கடைசியாக
செய்த பிரார்த்தனையில் –

“Khuda, the Hindus and Muslims of India are my children. Please
keep them safe and don’t let them suffer for my deeds at the hands of the British.”

என்று இறைவனிடம் மனமுருகி வேண்டி இருக்கிறார்.

உள்ளே நுழைந்த ஆங்கிலேய படை, டெல்லிவாசிகளை
எப்படியெல்லாம் வதைத்தது என்பதைப் பற்றி அக்காலத்தில்
அதையெல்லாம் நேரில் பார்த்த ஒரு எழுத்தாளர்
விவரித்திருப்பது …

” வெள்ளையர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எண்ணி
அஞ்சிய மக்களில் பெரும்பாலானோர், டெல்லியை விட்டு
வெளியேறி விட்டனர். பூட்டிக் கிடந்த வீடுகள் ஆங்கிலேய
படையினரால் கொள்ளை அடிக்கப்பட்டன.
எங்கேயாவது மக்கள் வசித்தால், அவர்களை வெறியுடன்,
எந்தவித விசாரணையுமின்றி கணத்தில் சுட்டுக் கொன்றனர்.

ஒரு மொஹல்லாவில் இருந்த 140 பேரையும்,
கைகளை கட்டி யமுனை ஆற்றின் கரைக்கு இழுத்து வந்து,
சுட்டுக் கொன்று, பிணங்களை ஆற்றில் வீசி விட்டனர்.
மானத்திற்கு அஞ்சிய ஆயிரக்கணக்கான பெண்கள்,
குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து
கொண்டனர். கலைகளின் தலைநகரமாக விளங்கிய
டெல்லி இப்போது கொலைக்களமாகி விட்டது. அனைத்து
திசைகளிலும் மரண ஓலங்கள்…”

டெல்லி வீழ்ந்த இரண்டாம் நாளே, அதாவது செப்டம்பர் 16,
1857 அன்று மௌல்வி ஃபகர் ஆங்கிலேயர்களால் சிறை
பிடிக்கப்பட்டார்.

அவரது முடிவைப்பற்றி இரண்டுவித தகவல்கள்
உலவுகின்றன…பிரிட்டிஷ் படை, அவரை பீரங்கியின் வாயில்
பிணைத்துக்கட்டி, குண்டை வெடிக்கச்செய்து, அவர் உடலை
சிதறச் செய்தது என்று ஒரு தகவலும்,

மேஜர் வில்லியம் ஸ்டீபன் ஹாட்சன் முன்பு மௌல்வி ஃபகர்
ஆஜர்படுத்தப்பட்டார் என்றும், எந்தவித விசாரணையும்
இன்றி மேஜரால், மௌல்வி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று
மற்றொரு தகவலும் கூறுகின்றது.

பிரிட்டிஷார் டெல்லியை கைப்பற்றிய நிலையில்,
மன்னர் இரண்டாம் பகதூர் ஷா, தன் மகன்களோடும்,
பேரன்களோடும், அவரது பாதுகாப்பிற்கான சிறு படையோடு
டெல்லியை விட்டு வெளியேறி ஹூமாயூன் கல்லறையில்
சென்று ஒளிந்து கொண்டார்.

இருந்தாலும், மேஜர் வில்லியம் ஸ்டீபன் ஹாட்சன்
விடாமல் துரத்திச் சென்று, ஹுமாயூன் கல்லறையை
முற்றுகை இட்டார் ( மார்ச் 28, 1858 ).

மன்னர் பகதூர் ஷா கைது செய்யப்பட்டபோது இருந்த நிலை – வரையப்பட்ட சித்திரம்

பஹதூர் ஷாவும் அவர்களது குடும்பத்தினரும் கைது
செய்யப்பட்டு, டெல்லிக்கு அழைத்து வரப்படும் வழியிலேயே,
மன்னர் கண்ணெதிரேயே, அவரது மகன்களும், பேரன்களும்
சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது தலைகள்
கொய்யப்பட்டு, சாந்தினி சௌக் அருகே “கூனி தர்வாஜா”
என்கிற இடத்தில் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக –
காட்சிக்கு வைக்கப்பட்டது.

ரங்கூன் சிறையில்
கடைசி மொகலாய மன்னர் பகதூர் ஷா – நிஜ புகைப்படம் எடுக்கப்படும் பாக்கியம் இந்த நிலையில் தான் அவருக்கு கிட்டியது……

மன்னர் இரண்டாம் பகதூர் ஷாவின் பதவி பறிக்கப்பட்டு,
அவர் பர்மாவில், ரங்கூனுக்கு கைதியாக அனுப்பி
வைக்கப்பட்டார். பகதூர் ஷாவின் இறுதி நாட்கள் ரங்கூனில்
பிரிட்டிஷாரின் கைதியாக கழிந்தன. நான்கு வருடங்கள்
கழித்து, நவம்பர் 7, 1862-ல் மொகல் பரம்பரையின் கடைசி
மன்னரான பகதூர் ஷா ரங்கூனிலேயே தனது 87-வது வயதில்
மரணமடைந்தார்.

சிப்பாய் கலகம் என்று பிரிட்டிஷாரால் வர்ணிக்கப்பட்ட
முதல் இந்திய சுதந்திர போராட்டம், ஜூன் 20, 1858-ல்
குவாலியரின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது.

இந்த முதல் சுதந்திர போராட்டம் தான் பிரிட்டிஷாருக்கு
ஒரு விபரீதமான தந்திரம் உதயமாக உதவியது.

இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்கும்
வரை தங்களுக்கு ஆபத்து தான் என்றும்,

அவர்களைப்பிரித்து,
அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்து,

அவர்களுக்குள்ளேயே சண்டையிடும் சூழ்நிலையை
உருவாக்கி விட்டால்,
பிறகு பிரிட்டிஷ் ஆட்சியை எந்த சக்தியாலும்
இந்தியாவிலிருந்து அகற்ற முடியாது என்கிற ஞானோதயம்
பிரிட்டிஷாருக்கு உண்டாகியது இந்த நிகழ்வின் மூலம் தான்.

அதன் விளைவைத்தான் இந்திய மக்கள் இன்று வரை
அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to பீரங்கியில் கட்டப்பட்டு, வெடிக்கப்பட்ட மௌல்வி ஃபகர் – சரித்திரப் புதையல்கள்….( பகுதி – 3 )

 1. புதியவன் சொல்கிறார்:

  “இந்த முதல் சுதந்திர போராட்டம் தான் பிரிட்டிஷாருக்கு ஒரு விபரீதமான தந்திரம் உதயமாக உதவியது. இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்கும் வரை தங்களுக்கு ஆபத்து தான் என்றும்”

  இது அவ்வளவு சரியான observation ஆகத் தோன்றவில்லை (துப்பாக்கியில் பன்றிக்கொழுப்பு, ஜெனரல் டயர் போன்ற பலவித நிகழ்வுகள் இருந்தபோதும்). எப்போதுமே ஒரு அரசுக்கு, யாரும் ஒற்றுமையாக இருந்துவிடக்கூடாது என்று தோன்றுவது சகஜம்தான். இது அரசுக்கு மட்டுமல்ல, ஆபீசுக்கும் பொருந்தும். மௌன்ட்பேட்டன் தன்னால் முடிந்த அளவு நியாயமாக நடந்துகொண்டதும் (பிரிவினையின்போது), அவருக்கு அந்தப் பணியில் நிறைய பிரிட்டிஷார்கள் துணை நின்றதும் வரலாறுதானே.

  எப்படி இருந்தாலும், ‘பகதூர்ஷா’, தன் முன்னோர்களெல்லாம் இந்துக்களுக்கும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும் செய்த அநியாயங்களை நிச்சயமாக நினைவுகூர்ந்து பார்த்திருப்பார் (சாகும் தறுவாயிலாவது)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // இது அவ்வளவு சரியான observation
   ஆகத் தோன்றவில்லை.//

   உங்களுக்கு அப்படி தோன்றாமல் இருக்கலாம். ஆனால், சரித்திரம் சொல்லும் உண்மை இது தான்.
   இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது பிரிட்டிஷார் தான். அது சுயமாக எழுந்த கோஷம் அல்ல.

   // , ‘பகதூர்ஷா’, தன் முன்னோர்களெல்லாம் இந்துக்களுக்கும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும் செய்த அநியாயங்களை நிச்சயமாக நினைவுகூர்ந்து பார்த்திருப்பார் (சாகும் தறுவாயிலாவது) //

   அந்த வயது முதிர்ந்த நிலையில், எந்தவித பின் பலமும் இல்லாத தான், பிரிட்டிஷாரை எதிர்த்தால், தன் முடிவு எப்படி இருக்கும் என்பது தெரிந்தும் துணிந்து செயல்பட்ட பகதூர் ஷாவை பாராட்ட உங்களுக்கு மனமில்லா விட்டாலும் பரவாயில்லை.
   ஆனால், அவரைப்பற்றியும் நீங்கள் நெகடிவ்வாக எழுதுவது வருத்தமளிக்கிறது. இது யாரோ செய்த தவறுக்கு, யாரையோ அவமதிப்பது மாதிரி உங்களுக்கு தோன்றவில்லை…? உங்கள் தாத்தாவோ,
   கொள்ளுத் தாத்தாவோ செய்த ஒரு தவறுக்கு உங்களை குத்திக் காட்டினால் எப்படி இருக்கும்….?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Nadham சொல்கிறார்:

    indraya
    reservation-ku
    kaaranamaaga
    தாத்தாவோ,
    கொள்ளுத் தாத்தாவோ
    seidhadhuyena
    kooruvadhillyaa!

    indraya
    (so called) Forward-gal
    adhanay
    anubhavikkvillyaa?

    idharuku
    solution
    yenna?

   • புதியவன் சொல்கிறார்:

    அன்புள்ள கா.மை. சார்,

    நான் என்ன நினைத்து எழுதினேனோ அதற்கான விடையை மற்ற நண்பர்கள் எழுதிவிட்டனர். (நான் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவன் கிடையாது, ஆனால் அவர்களை ஒதுக்கி, அதனால் வரும் பயனை அனுபவித்தவன்)

    1. தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு என்று, அவர்கள் 3%தான் என்று சொல்லி இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடத்தி, (அதைக்கூட தவறு என்று சொல்லமாட்டேன், ஆனால் போராட்டம் நடத்தியவர்கள் பெரும்பாலானோர், தலித் என்றால் இன்னும் தீண்டத்தகாதவர்கள் என்று அவர்களை ஒதுக்குகின்றனர். தலித் தன் இனப்பெண்ணைக் காதலித்தால் பெரிய குற்றம் என்று நினைக்கின்றனர், ஆனால் இவர்கள், இவர்களைவிடப் பெரிய ஜாதியாக சமூகத்தில் எண்ணப்படும் ஜாதியிலிருந்து பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது ‘கலப்புத் திருமணம்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வர். இந்தக் காதல் மறுப்பு என்ற பிரச்சனையைப் பார்த்தால், ஆண், அவனைவிடப் பெரிய சாதிப் பெண்ணை மணந்துகொள்வதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர் (தலித்தைத் தவிர, ஏனென்றால், மற்ற சாதியினர் எல்லோரும் தலித்தை இன்னும் மனிதர்களாக மதிப்பதில்லை). ஆனால், ஆண், தன்னைவிடக் குறைந்த சாதியில் பெண்ணை மணப்பதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. இதையெல்லாம் கட்சிகள் பேசாது, ஏனென்றால், பிராமணர்கள், தலித் தவிர, மற்ற அனைத்துப் பெரும்பான்மை சாதிகளும், போலி ‘சாதி மறுப்பு’, ‘சாதி அடக்குமுறை’ பேசுகின்றனர்.

    2. தமிழகத்தில் பிராமணரை ஒதுக்கி, அவமதித்தபோது (எப்படி.. கோவில் என்பது பிராமணர்களுடையது. அதனால் அதனையும் அவமதி, என்பதுபோல), ஒரு இனத்தை அவமதிக்கிறோமே என்ற குற்ற உணர்வு பெரும்பான்மையினருக்கு வரவில்லை. அதுபோல, ‘பிராமணீயம்’ என்று சாதியைக் குறிவைத்து எழுதும்போது அப்படிப் பேசுபவர்களுக்கு அது அவமானமாகத் தெரியவில்லை (வைகோ, மேளம் அடிப்பார் என்று தீயசக்தி கருணானிதியைச் சொன்னபோது எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டுவந்தனர். இது அவர்கள் எல்லோரது சாதிப்பற்றைக் காண்பிக்கிறது). அதே சமயம், ஹிந்தி வரும்போது, ஐயோ, தமிழனை நசுக்குகிறார்களே, தமிழகத்தை ஒதுக்குகிறார்களே என்று பஞ்சப்பாட்டு பாடுகின்றனர். இதைத்தானே ஹிந்திக்காரன் சொல்லுவான். நான் அதிக %, அதனால் என் மொழிதான் உயர்ந்தது என்று.

    3. ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரிய விளையாட்டு என்று கூச்சல் போடுகிறார்கள். ஜல்லிக்கட்டு முதலியார்களின் விளையாட்டா, பிராமணனின் விளையாட்டா? தலித் எங்கேயாவது மாடு பிடித்திருக்கிறார்களா அல்லது அவர்களை அதற்கு அனுமதித்திருக்கிறார்களா? ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர்க்குரிய பாரம்பரியம், பழக்கவழக்கம் இருக்கிறது. அதை மதிக்காமல், அவமதித்துவிட்டு (நீங்கள் பூணூலை அறுத்தெரிந்து பயங்கரவாதம் நடத்திய தி.க மற்றும் அனைத்து பயங்கரவாதிகளைப் பற்றிய செய்திகளைப் படித்திருப்பீர்கள்), பெரும்பான்மை இருக்கிற வட நாட்டவர்கள், தமிழனின் கலாச்சாரம் என்று ஒரு சில சாதியினரின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று சொல்லும்போது, ஏன் அதைத் தமிழனின் கலாச்சாரம் என்று சொல்லவேண்டும்?

    முதலில் உள்ளூரில், சாதியை வைத்து வேறுபாடு காண்பிப்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பிறகு, இனப்பற்றையும், இனத்தை வைத்து வேறுபாடு காண்பிப்பதை எதிர்ப்பதையும் செய்யலாம்.

    இது இடுகைக்குச் சம்பந்தமில்லாத கருத்து என்றபோதும், ‘முன்னோர்கள் செய்தார்கள்’ என்று ஆதாரமில்லாமல் ஒன்றைச் சொல்லி ஒரு சில சாதியினரை ஒதுக்கிவைப்பதை முதலில் நிறுத்திவிட்டு, அதன் பின்பு, மதச்சார்பின்மையைப் பற்றிப் பேசுவது நலம் பயக்கும். இது என் கருத்து.

    • சேதுராமன் சொல்கிறார்:

     புதியவன்,

     கே.எம்.சார் உங்களிடம் கேட்டது ;

     “இது யாரோ செய்த தவறுக்கு, யாரையோ அவமதிப்பது மாதிரி உங்களுக்கு தோன்றவில்லை…? உங்கள் தாத்தாவோ, கொள்ளுத் தாத்தாவோ செய்த ஒரு தவறுக்கு உங்களை குத்திக் காட்டினால் எப்படி இருக்கும்….?”
     ஏன் சார் அதே தவறைச் செய்திருக்கும் உங்களுக்கு;
     “‘முன்னோர்கள் செய்தார்கள்’ என்று ஆதாரமில்லாமல் ஒன்றைச் சொல்லி ஒரு சில சாதியினரை ஒதுக்கிவைப்பதை முதலில் நிறுத்திவிட்டு,”

     என்று சொல்ல எப்படி உரிமை வரும் ? நீங்கள் ஒரு தவறை
     செய்துகொண்டே, அடுத்தவர் அந்த தவறைச்செய்கிறார்
     என்று குற்றம் சாட்ட உங்களுக்கேது உரிமை ?

     நீங்கள் இஸ்லாமியர்களின் முன்னோர்கள் செய்த தவறை சொல்லிக்காட்டமல் இருந்திருந்தால் மட்டுமே இதை கேட்கும் உரிமை உங்களுக்கு வரும்.

     இல்லையென்றால் இது “ஊருக்கு தான் உபதேசம்; நமக்கில்லையடி பெண்ணே ” தான்.

     • புதியவன் சொல்கிறார்:

      சேதுராமன், நான் சொன்னது உங்களுக்குப் புரியவில்லையா அல்லது அவசர அவசரமாக என்னை மடக்க நினைக்கிறீர்களா?

      “நீங்கள் இஸ்லாமியர்களின் முன்னோர்கள் செய்த தவறை சொல்லிக்காட்டமல் இருந்திருந்தால் மட்டுமே இதை கேட்கும் உரிமை உங்களுக்கு வரும்.” – இப்படி நீங்கள் எழுதினால், தமிழகத்தில் எந்தச் சாதியினருக்கும் இஸ்லாமியர்களை ஆதரித்து எழுதும் உரிமை இருக்காது.

      கா.மை சாரின் பின்னூட்டத்தையும், நான் எழுதியிருப்பதையும் படித்துப்பாருங்கள்.

      ‘நான் எழுதியதைக் குறை சொல்கிறீர்களே’, அப்போது முற்பட்ட வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ‘முன்னோர்கள்’ பெயரால் பாதிப்பு நிகழ்ந்தபோது, எந்த உலகத்தில் நீங்கள் எல்லாம் இருந்தீர்கள் என்பது மட்டும்தான் என் கருத்து.

      கா.மை. சாரின் கருத்தாக நான் பார்ப்பது, ‘நடந்ததை மற; நடப்பதை நினை’ என்ற கண்ணனின் கருத்து.

 2. இளங்கோ சொல்கிறார்:

  சூப்பர் கே.எம்.சார்.

  நீங்கள் இந்த சப்ஜெக்டை ஏன் எடுத்தீர்கள் என்று முதலில்
  யோசித்தேன். இப்போது க்ளியர். உங்கள் நல்ல முயற்சிக்கு
  பாராட்டுகள்.

 3. seshan சொல்கிறார்:

  #####இது யாரோ செய்த தவறுக்கு, யாரையோ அவமதிப்பது மாதிரி உங்களுக்கு தோன்றவில்லை…? உங்கள் தாத்தாவோ,
  கொள்ளுத் தாத்தாவோ செய்த ஒரு தவறுக்கு உங்களை குத்திக் காட்டினால் எப்படி இருக்கும்….?########

  then why i am currently suffering due to reservation system…..implement the pure merit system in all areas.

  hope this BJP govt will touch that also.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.