” சுத்த சுயம்பிரகாச சுயநலவாதி ” – திருவாளர் நிதிஷ்குமார்…


கலைஞர் ஆசைப்பட்டதை, தான் சாதித்துக் காட்டி விட்டார்
திருவாளர் நிதிஷ்குமார்… 6-வது முறை முதலமைச்சராகும்
சாதனையை… அதுவும் பன்னிரெண்டே வருடங்களில் ….!!!

நிறைய மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்
திரு.நிதிஷ்குமார் ஒரு வித்தியாசமான அரசியல்வாதியென்று.
அது உண்மை தான்… வடிகட்டிய சுயநலவாதியாக
இருந்துகொண்டே “நல்லவர்” என்றும் “தூய்மையான
அரசியல்வாதி” என்றும் பெயர் எடுப்பது அவ்வளவு சுலபமா
என்ன…?

கொஞ்சம் யோசித்தால் புரியும்… துவக்கத்திலிருந்தே,
தனக்கு எது சாதகமான பலன்களை கொடுக்கும் என்று
அவர் நினைக்கிறாரோ, அதைத்தான் செய்து வந்திருக்கிறார்…
சில சமயங்களில் அவர் தோல்வியை சந்திக்க காரணம்,
எது தனக்கு சாதகம் என்று கணிப்பதில்அவர் செய்து
விட்ட தவறேயாக இருக்கும்.

2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை, NDA வுடன்
இருந்து பதவிகளை அனுபவித்த பிறகு, 2014 தேர்தலில்,
மோடிஜியுடன் இணைந்திருந்தால், பீஹாரின் கணிசமான
இஸ்லாமியர் ஓட்டு தனக்கு கிடைக்காதென
“கணித்து”, பாஜகவையும் மோடிஜியையும்
மிகக்கடுமையாக தாக்கிப் பேசினார்.

அதேபோல், 2015-ல் பீஹார் சட்டமன்ற தேர்தல்களில்
வெறும் பாஜக /மோடிஜி எதிர்ப்பு, இஸ்லாமியர்களின்
ஓட்டுக்கள் மட்டும் தனக்கு வெற்றி கிடைக்க உதவாது
என்பதை (சரியாகவே) “கணித்து” தனது ஜென்ம எதிரியாக
இருந்த லாலுவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.

“லாலு” எப்பேற்பட்ட ஊழல்வாதி என்பது இரண்டு
வருடங்களுக்கு முன்னர் நிதிஷுக்கு தெரியாதா என்ன ?

அவருக்கு வேண்டியது லாலுவின் ஓட்டு வங்கி….
2015 தேர்தலின்போது தெரியாத “லாலுவின் குடும்ப ஊழல்”
இப்போது தான் திடீரென்று தெரிய வந்ததா என்ன …?

இப்போது அவர் மனதில் இருப்பது எதிர்காலம்….
வளமான எதிர்காலம்… 2019-லும் மோடியை எதிர்க்க
ஆளில்லை. எனவே, பாஜகவுடன் கூட்டு வைத்துக்
கொண்டால், அடுத்த பாராளுமன்ற தேர்தல், மத்திய
அமைச்சரவையில் இடம், அடுத்து 2020-ல் பீஹார் சட்டமன்ற
தேர்தலில் ஜெயிப்பு – இத்தனையும் கூட்டி கழித்து
பார்த்தவுடன் அவருக்கு உடனே தெரிந்தது –
“லாலுவின் குடும்ப ஊழல் ” ( தொடர்ந்து லாலுவுடன்
இணைந்திருந்தால், தன் குடுமியும், டெல்லியின் கையில்
சிக்க அதிக நாட்கள் பிடிக்காது என்பதும் தெரிந்தது …!!!)

லாலு ஆர்ப்பரித்தாலும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும்,
இப்போதைக்கு சுத்த சுயம்பிரகாசத்தின் பதவிக்கு
ஆபத்தில்லை. ஆபத்பாந்தவராக மோடிஜி இருக்கவே
இருக்கிறார்…!!!

என்ன … இன்னும் கொஞ்ச நாட்களுக்கு 2014 பாராளுமன்ற
தேர்தலின்போது இவர் மோடிஜியை ஏசிய பேச்சுக்களையும்,
2015 சட்டமன்ற தேர்தலின்போது, பரஸ்பரம் இவர்கள்
இருவரும் ஏசிக்கொண்ட பேச்சுக்களையும், எதிரிகள்
நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்…

அதனாலென்ன….. அரசியலில் சூடும், சொரணையும்,
முதல்மந்திரி பதவியை தக்க வைக்குமா என்ன …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to ” சுத்த சுயம்பிரகாச சுயநலவாதி ” – திருவாளர் நிதிஷ்குமார்…

 1. புதியவன் சொல்கிறார்:

  “அதனாலென்ன….. அரசியலில் சூடும், சொரணையும், முதல்மந்திரி பதவியை தக்க வைக்குமா என்ன …?”

  நல்லா கட்டுரையை முடிச்சிருக்கீங்க. இதற்காகத்தானா, ஒருவேளை, ஜனாதிபதி தேர்தலில் ராம்னாத் அவர்களை ஆதரித்தது? யாருக்குத் தெரியும் அரசியலில் என்ன என்ன டீலிங் நடைபெறுகிறது என்று.

  “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
  அம்மம்மா பூமியிலே யாரும் வஞ்சம்”
  என்ற பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது.

  ஒருவேளை, தன் பெயர் கெட்டாலும், பீகாருக்கு கொஞ்சமாகிலும் நன்மை செய்யலாம் என்று அவர் மனசாட்சி நினைத்திருந்தால்?

  இன்னொன்று கா.மை. சார். இன்றைக்குத் திறந்துவைக்கும் கலாம் அவர்களின் சிலையும் எனக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. அது அவர், மாணவர்களுடன் பேசுவதான போஸில் செய்திருக்கலாம், அல்லது வேறு பல போஸ்கள் இருக்கின்றன. வீணையுடன், வீணை பாலசந்தர் போல அவரைச் சித்தரித்துள்ளது நெருடுகிறது.

  • Ilango சொல்கிறார்:

   // ஒருவேளை, தன் பெயர் கெட்டாலும், பீகாருக்கு கொஞ்சமாகிலும் நன்மை செய்யலாம் என்று அவர் மனசாட்சி நினைத்திருந்தால்? //

   அப்படி நினைத்திருந்தால், 2014-லிலும், 2015-லும், ந.மோ.வை ஏன்
   அவ்வளவு கேவலமாக வசை பாடினாராம் ?

   • புதியவன் சொல்கிறார்:

    அப்போ ஒருவேளை, தான் ‘பிரதமர்’ வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று ஆசைப்பட்டிருக்கலாமோ?

    2015ல், மோடி அவர்களை எதிர்த்தால்தான் எதிர்க்கட்சிகள் நம்பும், அது தான் முதலமைச்சராகி, பீகாருக்கு நன்மை செய்ய வாய்ப்பாக முடியும் என்று நினைத்திருக்கலாமோ?

    நான் ப்ராபப்லிட்டியைத்தான் சொன்னேன். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது நிதீஷ் அவர்கள் செய்தது சொம்ப சுயநலமாத்தான் தெரியுது. அதுவும்தவிர, ‘நம்பிக்கை’த் தீர்மானத்தில் வெற்றி பெறுவதும், ‘யாதவ’ சட்டமன்ற உறுப்பினர்களையும், இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்களையும் (அவர் கட்சி) தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதும் சுலபமல்ல. ஒருவேளை நிதீஷ் அவர்கள், தேவையில்லாமல் தேன் கூட்டைக் கலைத்துவிட்டாரோ?

  • சேதுராமன் சொல்கிறார்:

   கே.எம்.சார்,

   அன்றைய todayandme
   இன்றைய புதியவன்
   இருவரும் ஒருவர் தானோ ?

   • புதியவன் சொல்கிறார்:

    இல்லை சேதுராமன். நான் வேறு. அவர் வேறு. முன்னெல்லாம் (ஜெ இருந்த சமயத்தில்) அவருடைய நிறைய பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். தற்போதைய தமிழக அரசியல் நிலைமையினால் மனம் சஞ்சலப்பட்டு அவர் கருத்திடுவதில்லையோ என்று எனக்கும் எண்ணம். வெகு வாரங்களுக்குப் பின் சில வாரங்கள் முன், ஒரே ஒரு பின்னூட்டம் பார்த்தமாதிரி ஞாபகம். அவர், நிறைய ஆதாரங்களை முன்வைப்பார் (செய்திகளின் லிங்க்). அதில் நிறைய நான் படிக்க விட்டுப்போனது இருக்கும். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து அவர் ஏதேனும் பின்னூட்டமிட ஆரம்பித்தால் நல்லது (நிறைய தடவை கா.மை. சார் அவரின் பின்னூட்டத்தைப் பாராட்டுவதை நான் படித்திருக்கிறேன்)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Dear Friend TODAYANDME –

     I am sure you will be Watching …
     See You are in Great Demand…
     ( It is not only me……others also want you here…. )
     Please Respond atleast NOW … 🙂 🙂 🙂

     -with all best wishes,
     Kavirimainthan

  • LVISS சொல்கிறார்:

   Mr Puthiyavan A photo of Abdul Kalam palying the veena appeared in websites many times –Nothing wrong with it –He was good at playing Rudra veena —

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நேற்றே எழுத நினத்தேன்… மறந்து விட்டேன். இப்போது திரு.எல்விஸ் அவர்களின் பின்னூட்டத்தை பார்த்ததும் நினைவு வந்தது…

    பல வருடங்களுக்கு முன்னர்…( 30…? ), டாக்டர் கலாம் DRDO -வின் Chief ஆக இருந்த சமயம்… ஒரு நாள் முழுவதும் அவருடன் இருக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று, ( பணியில் இருந்தபோது ) எனக்கு கிட்டியது.

    அதிகாலை 6 மணிக்கு அவர் தங்கியிருந்த guest house suite-ற்கு சென்று அழைப்பு பொத்தானை அழுத்தியபோது, கதவை அவரே தான் திறந்தார். அறையில் அவர் மட்டும் தான் இருந்தார். அதற்குள்ளாகவே குளித்து விட்டு தயாராக இருந்தார்….. மேஜை மீது ஒரு மினி டேப் ரிக்கார்டர் இருந்தது. அதிலிருந்து திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இனிய குரலில் கர்நாடக சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது…! ( அவர் அங்கே ஒரு நாள் மட்டுமே பணி நிமித்தம் வந்திருந்தார்… இருந்தாலும் அவர் கூடவே இசையும் வந்திருந்தது…..!!! )

    ஆம் – திரு.கலாம் கர்நாடக இசையை நன்கு அறிந்தவர் தான்.
    பின்னாட்களில், அவருக்கு வீணை வாசிப்பதில் பரிச்சயம் உண்டு என்றும் தெரிந்து கொண்டேன்.

    அந்த சிலை, அவரது வித்தியாசமான ரசனைகளை பிரதிபலிக்கும் விதமாக அங்கே வைக்கப்பட்டிருக்கலாம்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 2. Ilango சொல்கிறார்:

  கே.எம்.சார் – பிஜெபியை மறந்துட்டீங்களா ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   இளங்கோ,

   மறக்கவில்லை. ஆனால், இங்கே ஒரு பிடி பிடிக்கப்பட வேண்டியவர்
   திருவாளர் நிதிஷ் தான்.

   NDA-வில் மோடிஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை எதிர்த்து,
   அவராகவே தான் வெளியேறி கன்னா பின்னாவென்று தாக்கினார்….

   இப்போது தானாகவே தான் பதவியை காப்பாற்றிக்கொள்ள
   அதே மோடிஜியிடம் சரணாகதி ஆகி இருக்கிறார்.

   இதில் பாஜக, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது.
   இதெல்லாம் பாஜகவுக்கு சும்மா ஜுஜுபி…
   அரசியல் விளையாட்டுகள்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • seshan சொல்கிறார்:

    he is patna…ex padaliputhra son…so no surprice …….chankya dynasty may be there still …..as per chanakya neethi this is politically correct…..

   • NS RAMAN சொல்கிறார்:

    NDA-வில் மோடிஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை எதிர்த்து,
    அவராகவே தான் வெளியேறி கன்னா பின்னாவென்று தாக்கினார்…

    Well said

    Nitish left NDA due to ego clash
    He could not tolerate fellow CM of Gujarat projected As a PM candidate
    Now to salvage His clean image he forced to come out of Lalu coalition

    More than power politics
    We should be more happy if bihar is getting some benefits out of this change

   • LVISS சொல்கிறார்:

    MR K M I HAVE A NEWSPAPER CLIP OF WHAT NOSTRODAMUS IS REPORTED TO HAVE SAID,IN LATIN, ABOUT THE RISE OF BJP AND MODI AND ,HOW THE PARTY WILL DOMINATE IN THE 21ST CENTURY —YOU CAN SEE IT ALL THE STUFF IN WEBSITE —

   • LVISS சொல்கிறார்:

    YOU ARE RIGHT , THE BJP IS MAKING THE BEST USE OF THE OPPORTUNITY TO SHARE POWER IN BIHAR —

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     அபூர்வமாக, இந்த இடுகையில் நான் எழுதியதை
     அநேகமாக பின்னூட்டம் எழுதிய அனைவருமே
     ஆதரித்து எழுதி இருப்பதை பார்க்கிறேன். நன்றி.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  GOOD MATCH FIXING AS SOME ONE PUT IT – HOW IS IT THAT N ITSH KUMAR RESIGNED AND ON THE SAME NIGHT COULD REVIVE AN ALLIANCE WITH BJP THAT WAS CALLED OFF SOME YEARS AGO AND GET HIMSELF SWORN IN AS CM THE NEXT DAY ALL IN ONE GO — -HAVING SAID THAT IT WAS OBVIOUS THAT HE WAS UNCOMFORTABLE WITH LALU PRASAD YADAV–HE CAN FIGHT ONE PERSON BUT NOT A WHOLE FAMILY ON WHOM SO MANY ALLEGATIONS HAVE CROPPED UP RECENTLY — NITISH NEEDED BJP AND VICE VERSA–ONE LEADER OF JDU COMMENTED THAT THE BJP WHEN THEY WERE IN ALLIANCE TREATED THEM WITH RESPECT –THIS ALSO COULD BE ONE OF THE REASONS –COMPARE IT WITH LALU SAYING THAT HE ONLY MADE NITISH C M —
  IF SOME GOOD COMES TO BIHAR OUT OF THIS ALLIANCE WELL AND GOOD —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.