குலுங்க குலுங்கச் சிரிக்க – “துக்ளக்” சத்யா’வின் ஒண்ணரை பக்க நாளேடு….!!!


அண்மைக் காலங்களில் திரு.கமல்ஹாசன் “இயற்றிய”
ட்விட்டர்களையும், அவற்றிற்கு எதிர்வினையாற்றிய
அமைச்சர் பெருமக்களையும் மிஞ்சி –

அதைவிட சி(ரி)றப்பான செய்திகளை, வெகு சுலபமாக
தன்னால் உருவாக்க முடியும் என்று செயலில் காட்டி
இருக்கிறார் துக்ளக் சத்யா அவர்கள்….

அவரது அற்புதமான கற்பனையை நீங்களும் ரசித்து
அனுபவிக்க –
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to குலுங்க குலுங்கச் சிரிக்க – “துக்ளக்” சத்யா’வின் ஒண்ணரை பக்க நாளேடு….!!!

 1. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  அம்மாவ ரொம்ப “மிஸ்” பண்ணிய குழந்தைய பத்தி சூடா பதிவு வரும்னு எதிர்பார்த்தேன்!
  (லேடியா மோடியா உங்களுக்கு தேவை என்றதை நான் மறந்து மூணு வருஷமாச்சு)

 2. kausikan1967 சொல்கிறார்:

  Sir, Hope SG will not sue you since you are using the scan copy of the magazine !!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கௌசிகன்,

   நீங்கள் சட்டத்தின் பின்னணியை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்….

   1) பிறர் எழுதியதை எடுத்து, தான் எழுதும் ஒரு கட்டுரையில் புகுத்தி, அதை முழுவதும் தானே எழுதியது போல் தோற்றம் அளிக்கச் செய்வது குற்றம்…

   2) ஒரு பத்திரிகையை அப்படியே பதிவுசெய்து, அந்த பத்திரிகையின் விலையை விட குறைவான விலைக்கு (ஆன்லைனில்) விற்று, பத்திரிகையின் வருமானத்துக்கு குந்தகம் விளைவிப்பது இன்னொரு வகையில் குற்றம்.

   – நீங்கள் குறிப்பிடும் அந்த வழக்கு இரண்டாவது வகையை சேர்ந்தது…. அது சட்டப்படி குற்றம் தான் என்பதால் அதனை செய்தவர்கள், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியவர்களே.

   பத்திரிகையின் சில பகுதிகளை மேற்கோள் காட்டியோ, சாம்பிளுக்கு பிற இடத்தில் பதிந்து, அதைக்குறித்த விமரிசனங்களை எழுதுவதோ சட்டப்படி அனுமதிக்கப்பட்ட விஷயம் தான்.

   நான் இந்த தளத்தில் எந்த பத்திரிகையின் விற்பனையையும் பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடுவதில்லை… எந்தவித பண ஆதாயத்திற்காகவும் நான் இதை செய்யவில்லை. இது சட்ட விரோதமானதல்ல…..

   ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் இங்கு பதித்து, நான் செய்வது விமரிசனம் மட்டுமே.

   உண்மையில், நான் இங்கு மேற்கோள் காட்டியிருக்கும் கட்டுரையை மிகவும் ரசித்து, பாராட்டி, விமரிசித்து எழுதி இருப்பதால் –

   ஒரு விதத்தில், இது சம்பந்தப்பட்ட பத்திரிகையின் சர்குலேஷனை அதிகரிக்க உதவும். அவர்கள்
   இதை வரவேற்கவும், எனக்கு நன்றி கூறவும் கூட முற்படலாம்…… 🙂 🙂 🙂

   சட்டவிரோதமான எந்த செயலையும் நான் என்றும் செய்ய மாட்டேன்.
   எனவே, கவலை வேண்டாம்…உங்கள் அக்கறைக்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. kausikan1967 சொல்கிறார்:

  Sir, thanks for your explanation.

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  // Carbon dating confirms Keezhadi site is from Sangam era //
  https://www.google.co.in/amp/www.thehindu.com/news/national/tamil-nadu/carbon-dating-confirms-keezhadi-site-is-from-sangam-era/article19376556.ece/amp/ …… மீண்டும் தாெடர்வார்களா ஆராய்ச்சியை ….?

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வருக செல்வராஜன்,

  நீங்கள் கொடுத்துள்ள லிங்க்குக்காக நன்றி.
  இன்றோ, நாளையோ –
  நான் இது குறித்து தனியே ஒரு இடுகை எழுதுகிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 6. தமிழன் சொல்கிறார்:

  சத்யாவின் ஒண்ணரைப் பக்க நாளேடு எப்போதும்போல் சிறப்பாக இருக்கிறது. அதுவும் கடைசியில், ‘நிர்வாகக் காரணங்களுக்காக லஞ்ச ஒழிப்புத் துறை மூடப்பட்டிருப்பதாக ‘ எழுதியது செம சிரிப்பு.

  கமலஹாசனுக்குக் கேள்வி கேட்கும் தார்மீகம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஒன்று, அவர், திமுகவிற்கு உதவி செய்வதற்காகச் செய்கிறார், இல்லைனா, ஜெ. இருந்தபோது வேறு வழியில்லாமல் அடங்கிக் கிடக்க நேரிட்டதை எண்ணி இப்போது குரலை உயர்த்துகிறார். அவர் சொல்லுக்கு மரியாதை இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

  For that matter, கமல், ரஜினி போன்றோர், திமுக ஊழல்கள் நடந்தபோது வாயை சாப்பாட்டிற்கும், கொட்டாவிக்கும் தவிர வேறு எதற்கும் திறந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. On top of it, இரண்டுபேரும், கருணானிதியின் மாதமிருமுறை பாராட்டுக்கூட்டங்களை, 2ஜி, தொலைக்காட்சி ஊழல் போன்றவற்றிர்க்கு அப்புறமும் organize செய்தவர்கள். அவர்கள் ஊழலைப் பற்றிப்பேச எந்த அருகதையும் உள்ளவர்கள் அல்லர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s