கல்யாணம் செய்யாமலே குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்…..


குடும்ப விஷயம், நாம் இதை பொதுவெளியில்
எழுதுவது நாகரிகமாக இருக்குமா என்று ஒருக்கணம்
யோசித்தேன்…

இதை நாமா பொதுவெளிக்கு கொண்டு வருகிறோம்..?

சம்பந்தப்பட்டவரே,
ஏற்கெனவே,
பொதுவெளிக்கு கொண்டு வந்து விட்டதைப்பற்றி தானே
எழுதுகிறோம் என்று தோன்றியது..
எனவே தொடர்கிறேன்…!

” திருமணம் செய்துகொள்வது –
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்,
சமூக சாட்சியாக ஒரு பந்தத்தில் இணைத்துக்கொள்வது –
தேவையற்றது, முட்டாள்தனம்…..”

என்றெல்லாம் கூறி இணைந்து வாழ்ந்து,
பிள்ளைகளையும் பெற்றுக் கொள்பவர்களின்
எதிர்காலம் எப்படி இருக்கும் …?

அந்த குழந்தைகள் வளர்ந்த பிறகு,
அவர்கள் சுயமாக நிற்கும் நிலை வந்த பிறகு –

பெற்றவருக்கும், பிள்ளைகளுக்குமான தொடர்பு
இப்படித்தான் இருக்குமோ ..?

சொந்த விஷயங்களுக்குகூட,
தொலைபேசியின் மூலம் கூட தொடர்பு கொள்ள முடியாத
ஒரு உறவாக, பொதுவெளியின் மூலம் தான்
தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற அளவிற்கு….?

குறைந்த பட்சம் (வெளியே தெரிந்தது) 3 பெண்களுடன்
வாழ்ந்து, 2 பிள்ளைகளையும் பெற்றவருடன் –
இன்று யார் வாழ்கிறார்கள்….?

ஊருக்கு உபதேசம் செய்யும் தகுதி
இவருக்கு இருக்கிறதா…..?

வாலறுந்த நரியின் கதை நமக்கு அரிச்சுவடி
படிக்கும்போதே கற்றுக்கொடுக்கப்பட்டு விட்டதே…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கல்யாணம் செய்யாமலே குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்…..

 1. paamaranselvarajan சொல்கிறார்:

  // நடிகர் கமல்ஹாசன் மகள் அக்ஷரா புத்த மதத்துக்கு மாறினாரா? //www.vikatan.com/news/tamilnadu/97215-did-akshara-haasan-convert-to-buddhism.html#ampshare=http://www.vikatan.com/news/tamilnadu/97215-did-akshara-haasan-convert-to-buddhism.html … தாெலைபேசியில் பேசினால் அவர்கள் இருவருக்குள்ளம் விஷயம் முடிந்து விடும்….. ஊராருக்கும் தெரிய இது தானே வசதி … பின்பு எந்த விமர்சனத்தையும் சமாளிக்கலாம் … புரட்சியாளர் அல்லவா அவர்..? அப்பா… மகள் இருவரின் டிவிட்டர் செய்திக்கும் நம் ஜனநாயக “நெட்டிசன்கள் ” இடும் டிவிட்டர்கள் ….?

 2. tyaguu சொல்கிறார்:

  மீடியா அட்டென்சனுக்காக குடும்பமே அம்மணமா ஓடினாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல

 3. இளங்கோ சொல்கிறார்:

  tyaguu -வை வழிமொழிகிறேன் 🙂 🙂

  ஆனால் கூடவே ஒரு சந்தேகம்;
  இவர் குடும்பம் என்று எதைச் சொல்வது ?

 4. LVISS சொல்கிறார்:

  Even children born from regular marriage change their religion — For some time the parents keep away from them and then they forget or forgive– There is a saying about “Tholukku mel valarndha pillai” –Children are more independent now than at any other time –
  It is worthwhile to read article 25 (2) (b) of the constitution —

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  வேறுஒருசெய்தி:அமித்ஷா சொத்து 300 சதவீதம் அதிகரிப்பு – ஸ்மிருதி ராணி பட்டமே முடிக்கவில்லையாம் // …http://www.newsfast.in/india/bjps-national-president-amit-shahs-assets-have-increase ….!

 6. புதியவன் சொல்கிறார்:

  //”திருமணம் செய்துகொள்வது – ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்,
  சமூக சாட்சியாக ஒரு பந்தத்தில் இணைத்துக்கொள்வது –
  தேவையற்றது, முட்டாள்தனம்…..//” – கா.மை சார்… இது டி.ஸ்ரீனிவாசன் அவர்களின் பிள்ளைகள் எல்லோருக்கும் இருந்த எண்ணம். அவரே இதைமாதிரியான புரட்சி எண்ணங்கள் கொண்டவர், ஓரளவு காந்தியவாதியாக வாழ முயற்சித்தவர் (வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பரமக்குடியில், தலித் மக்களை வீட்டுக்கு வரச் சொல்லி, தன்னுடனேயே சாப்பிடவும் செய்தவர்), தன் மாமனாரின் கன்சர்வேடிவ் அப்ரோச் பிடிக்காமல் அதற்கு நேர் எதிராக வாழ்ந்தவர். அதனால், கமலஹாசனின் தனிப்பட்ட கொள்கைகள் பெரிய அளவில் அதிர்ச்சியாக இல்லை. இருந்தபோதும், பொதுவாழ்வில் வந்துள்ளவர்கள் ஓரளவு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும்.

  இரண்டாவது, பெரிய பணக்காரர்கள், செலப்ரிடீஸ், சொந்த வாழ்க்கையைப் பெரும்பாலும் தொலைத்துவிட்டவர்கள்தான். அவர்களுக்கு குடும்பம், உறவு போன்றதெல்லாம் பெரும்பாலும் நன்றாகவும் இருக்காது, அதற்குச் செலவழிக்க அவர்களுக்கு நேரமும் குறைவு.

  //பெற்றவருக்கும், பிள்ளைகளுக்குமான தொடர்பு இப்படித்தான் இருக்குமோ ..?// – ஆமாம். ஓடியோடி உழைப்பவர்களுக்கும், தங்களுடைய துறையில் மென்மேலும் உயர உழைப்பவர்களுக்கும், பெரிய பொறுப்புகள் உள்ளவர்களுக்கும் குடும்பத் தொடர்பு மிகவும் குறைவாக இருக்கும்.

  நான் கம்பேர் செய்யவில்லையென்றாலும், அரச குடும்பத்தில் அப்பாவும் மகனுமே சந்திக்கமுடியாது. அது ஒரு அபூர்வ நிகழ்வு. அப்படிச் சந்திக்கவேண்டும் என்றாலும், மூன்றாம் மனிதர் முன்னிலையில் அல்லது, கடுமையான பாதுகாப்புச் சோதனைகள் முடிந்தபின்பு, ரொம்ப ஃபார்மல் சந்திப்பாக அது இருக்கும். மனைவி (அரசி) கணவனைச் சந்திப்பதற்கும் இத்தகைய கறாரான முட்டுக்கட்டைகள் உண்டு. (இதைப் பற்றி ஓரளவு நான் அறிவேன்)

  சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் சொல்லியது, ‘நான் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டவள். கோவிலுக்குப் போவதையும், கடவுளை வணங்குவதிலும் faith உள்ளவள்’ என்று சொன்னார். கமலஹாசன் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி.

  //குறைந்த பட்சம் (வெளியே தெரிந்தது) 3 பெண்களுடன் வாழ்ந்து, 2 பிள்ளைகளையும் பெற்றவருடன் – இன்று யார் வாழ்கிறார்கள்….?// – இதுவும் கமலஹாசனின் தனிப்பட்ட ஒழுக்கம் (கருணானிதி இதைவிடக் கேவலமானவர், நாம் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை நம்புபவராக இருந்தால். ஆனால் கருணானிதி எழுதிய குறள் உரைதான், அவரை வாழும் திருவள்ளுவர் என்று அவருடைய அடிப்பொடி அடிமைகள் சொல்லுவது). கமலஹாசன் வாணிகணபதியை விரும்பித் திருமணம் செய்தார்; குழந்தை இல்லை; அவர் ஒருதடவை ஒழுகிய களவொழுக்கம், வாணியை அவரைவிட்டுப் பிரிந்துபோக வைத்தது. அதன்பின் சரிகா. குழந்தைகள் பிறந்தபின், அவரும் அவரை விட்டு விலகினார். திரைத்துறையில் பொதுவாக எல்லோரும் நடந்துகொள்வதுபோல் கமலஹாசன் நடந்துகொண்டார் (உடனே அபூர்வப் பிறவிகளான சிவகுமார், நம்பியார், ஆர்.எஸ்.மனோகர் போன்றவர்களை உதாரணம் காட்டாதீர்கள்). அதில் பெரிய தவறு இருப்பதுபோல் எனக்குத் தெரியவில்லை.

  //ஊருக்கு உபதேசம் செய்யும் தகுதி இவருக்கு இருக்கிறதா…..?// – எனக்குத் தெரிந்தவரை, கமலஹாசனுக்கு மட்டுமல்ல, கருணானிதி உட்பட, ஸ்டாலின், அவர் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ஊருக்கு உபதேசமும், நல்லதும் சொல்லும் தகுதி கிடையவே கிடையாது. ஆனால் அவர்கள்தான் எது நல்லது என்று நீட்டி முழக்குவதில் தமிழ்’நாட்டில் முதல் வரிசையில் இருக்கிறார்கள். என்ன செய்வது? (முந்தைய இடுகையில் சொன்னமாதிரி, காலம் கலிகாலம் என்பதைத் தவிர?)

 7. Antony சொல்கிறார்:

  Your enmity towards Kamal is understandable. What to do? Truth always hurts..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.