யார், எப்படி – சொன்னால் அரசு கேட்கும்…? கீழடி – நிறைய தகவல்கள் தரும் வீடியோ …!!!இரண்டு நாட்களுக்கு முன்னர், ராஜ்ய சபாவில், திமுக
உறுப்பினர் திருமதி கனிமொழி, கீழடி ஆராய்ச்சிப்பணி
குறித்து – எழுப்பிய ஒரு கேள்விக்கு, எழுத்து மூலமான
பதில் ஒன்றினை தந்துள்ள மத்திய சுற்றுலா மற்றும்
கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா –

———————–

”கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் இரண்டு
மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீடா அனலிடிக் என்ற
நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் ஒரு பொருள்
தற்போதைய காலத்திலிருந்து 2160 ஆண்டுகள் முற்பட்டதாக
இருக்கலாம் என்றும், இரண்டாவது பொருள் 2200
ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்றும்
தெரிவித்துள்ளனர்” என்றும் பதிலளித்திருக்கிறார்.

———————–
இது குறித்து வெளிவந்துள்ள இன்னும் சில உண்மைகள் –

கீழடியில் பூமிக்கு அடியில் 4.5 மீட்டர் ஆழத்தில் இருந்து
கரியமில மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி
வைக்கப்பட்டன… இந்த மாதிரிகள், கிறிஸ்துவுக்கும்
மூன்று நூற்றாண்டுகள் பழமையானவை என்று
ஆராய்ச்சியில் முடிவு செய்யப்பட்டுள்ளன….

சங்க காலத்திலேயே நகர நாகரிகம் இருந்ததை கீழடி அகழ்வு
மாதிரிகள் நிரூபிக்கும் வகையில் உள்ளன…

இங்கு கிடைத்த 72 பானை ஓடுகள், தட்டுகளில்
போன்றவற்றில் – ஆதன், உதிரன், சந்தன் போன்ற பெயர்கள்
தமிழ் பிராமி எழுத்துக்களில் இருந்தன…

———————————-

தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதற்குமே
பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கக்கூடிய இந்த செய்தி – எம்.பி.
ஒருவர் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டு அதன் பின்,

வேண்டாவெறுப்பாக கடனேயென்று சொல்லப்பட வேண்டிய
செய்தியா…?

அமெரிக்காவிலிருந்து ரிசல்ட் கிடைத்தவுடனே
அமர்க்களமான கண்டுபிடிப்பாக இந்த செய்தி மீடியாவிற்கு
சொல்லப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு
செய்யத்தவறியது ஏன்…?

துவக்கத்திலிருந்தே, கீழடி ஆராய்ச்சி விஷயம் மிகவும்
தொங்கலாகவே இருக்கிறது. ஏனோ, யார் காரணமோ
தெரியவில்லை – அதில் தொல்பொருள் இலாகா ஆர்வம்
காட்டுவதாகத் தெரியவில்லை. பிரச்சினை அரசிடமா
அல்லது அதிகாரிகளிடமா – நமக்குத் தெரியவில்லை…

மத்திய அமைச்சரோ, மத்திய அரசின் அதிகாரிகளோ
இதில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். ஆனால், தமிழக
பாஜக இதில் ஆர்வமின்றி இருப்பது மகா தவறு…இனியும்
இந்த அலட்சியம் தொடர்ந்தால், அதன் விளைவுகளை
அவர்கள் அறுவடை செய்ய நேரிடும்…! போகும்போதும்,
வரும்போதும் – ஏர்-போர்ட்டில் இண்டர்வியூக்கள்
கொடுப்பதன் மூலம் மட்டும் கட்சியை தமிழகத்தில் வளர்த்து
விட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட
வேண்டும்.

வைகைக்கரையில், கீழடியில் இந்த வரலாற்றுப்புதையல்
கண்டெடுக்கப்பட காரணமாக இருந்த தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களின் –
பல அறிய தகவல்களை தரும் காணொளி பேட்டி கீழே –

தமிழக அரசு, இனியாவது தாமதமின்றி, இந்த விஷயத்தை
உரிய முக்கியத்துவம் கொடுத்து, மத்திய அரசிடம் எடுத்துச்
செல்ல வேண்டும்.

தமிழக அரசே பொறுப்பேற்றுக்கொண்டு, இந்த ஆராய்ச்சியை
தொடர்வதாகவும், அதற்கான நிலத்தை கையகப்படுத்தி
தரவும், தேவையான நிதி, ஆட்கள் மற்றும் இதர
வசதிகளையும் தானே செய்து தருவதாகவும் சொல்லி மத்திய
அரசின் ஒத்துழைப்புடன், இந்த பணியை தமிழக அரசே
மேற்கொள்ள வேண்டும். தமிழக பாஜக இதில் தன் பங்கிற்கு
தங்கள் தலைமையுடன் பேசி, தமிழகமே இந்த பணியை
மேற்கொள்ள முனைப்பு காட்ட வேண்டும்.

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை – கண்ணெதிரே,
மண்ணுக்குள் மறைந்து, புதைந்து கிடக்கிறது என்கிற
உண்மை தெரியவரும்போது, அதனை வெளியே கொண்டு
வர தமிழ் உணர்வு துடிக்க வேண்டாமா…? எதில் தான்
அரசியல் செய்வது என்று வரைமுறையே இல்லையா…?

————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to யார், எப்படி – சொன்னால் அரசு கேட்கும்…? கீழடி – நிறைய தகவல்கள் தரும் வீடியோ …!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  “அதனை வெளியே கொண்டு வர தமிழ் உணர்வு துடிக்க வேண்டாமா…? ”

  கா.மை. சார்.. எனக்கு அப்படிப்பட்ட தமிழ் உணர்வு இல்லை. நம்ம தமிழ்நாட்டில் மிகப் பல இடங்கள் சங்க காலம் மற்றுமல்லாமல் அதற்கு முன்பும், பெருமை பெற்றவை. இதை எல்லாவற்றையும் தோண்டி வரலாற்று இடங்களாக யாருக்காக மாற்றவேண்டும்? போற வர இடங்களிலெல்லாம் எதையாவது எழுதிவைக்கும், தமிழ் உணர்வும் பெருமையும் இல்லாத மாக்களுக்காகவா? நம்மிடம் 1500 வருடங்களுக்கும் அதிகமான பழமையான கோவில்கள் இருக்கின்றன. அதில் உள்ள சிற்பங்கள், நம் வரலாற்றையும், நம் மன்னர்கள் பல இடங்களில் போர் புரிந்து கொண்டுசேர்த்த சிற்பங்களின் வரலாற்றையும் சொல்லும். அந்தக் காலகட்டத்திலேயே இருந்த, சோழர்தம் மாளிகை, ராஜராஜ சோழனின் பள்ளிப்படை என்று சொல்லப்படும் இடம், சோழ அரசினரின் பள்ளிப்படைக் கோவில்கள் என்று பலவும், ஓரளவு வரலாற்று ஆவணப்படுத்தப்பட்ட இடங்கள். இதன் தற்போதைய நிலைமை என்ன? எத்தனை இடங்களில் சமண, புத்த கோவில்கள் கவனிப்பாரற்று இடிபாடுகளாகச் சமைந்துள்ளன? இருக்கும் சொத்துக்களையே பாதுகாக்கமுடியாத அதிகாரிகளுக்கும், அரசுக்கும் மக்களுக்கும், இன்னும் இன்னும் சொத்துக்களைக் காண்பித்துக்கொடுப்பதின் அர்த்தம் என்ன?

  ஒவ்வொரு நாட்டையும் நம் அதிகாரிகள்/அரசியல்வாதிகள் பார்த்தாவது, தாங்கள் எப்படிப்பட்ட முட்டாள்கள் என்பதைத் தெரிந்துகொள்ளட்டும். நிறைய நாடுகளில் 200 வருடப் பழமையான இடங்களையே, பெரிய டூரிசம் இடங்களாக அமைத்து டூரிசத்தை வளர்த்து, அதன் மூலம் பணம், அந்த இடங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு நல்ல விதமாக கடைகள் முதலியன அமைத்துக்கொடுப்பதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரம் போன்றவற்றைச் செய்கின்றன. தமிழ் நாட்டில் எங்கு அப்படி செய்யப்பட்டுள்ளது? துபாயில், 80 வருடங்களுக்கு முந்தைய வீடையே, அவர்களது நாகரிகம் என்று சொல்லி டூரிஸ்ட் இடமாக்கியிருக்கின்றனர். நம்ம மக்கள், தஞ்சை பெரியகோவில் போய், சோத்தைத் தின்னு தூணில் தடவிவிட்டு வருகின்றனர்.

  எவன் ஒத்துக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், உலகின் 7 ஆதி நாகரிகங்களில் தமிழன் நாகரிகமும் ஒன்று. இன்னும் மங்காமல் இருப்பது தமிழ் நாகரிகம்தான் (கடந்த 80 ஆண்டுகளில் மாறினவை தவிர).

 2. Thiruvengadam சொல்கிறார்:

  About six decades I had for no detailed study a book titled Lost Worlds dealing with the excavations by European archeologists which brought to light the Greek and other civilizations and the city ofTroy.Most of the work was done by persons who did not depend on govts but supported by individuals and private foundations.We need initiatives from various cultural organizations and individuals to take up this work as at present there is only lip service to the efforts and everything is based on cui Bono and what is in it for me.A.T.Thiruvengadam

 3. LVISS சொல்கிறார்:

  Here is a judgement of the Madras High Court –This must be latest on the subject as the news is dated June 13 2017–

  http://timesofindia.indiatimes.com/city/chennai/madras-hc-directs-asi-to-set-up-museum-at-keeladi-archaeological-site/articleshow/59285195.cms

 4. selvarajan சொல்கிறார்:

  // “இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள்தான்” – சிங்கப்பூர் அரசு அதிரடி!! // http://www.newsfast.in/world/singapore-govt-says-that-tamilians-are-real-indians அங்கேயும் மொழி வெறி பிடித்து அலைபவர்களுக்கு சிங்கப்பூரான் கொடுத்த ” ஆப்பு ” …… அது ஒரு நேர்மையான அரசு …. ஆனால் இங்கே — சூடு – சொரணையற்ற அரசு …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.