எல்லையில் மிரட்டும் சீனாவிற்கு தான் குஜராத் – சர்தார் படேல் சிலை தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது…!!!


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உத்தராகாண்டில்
சமொலி மாவட்டத்தை ஒட்டி, 370 கி.மீ. தூரத்திற்கு
பொதுவான எல்லை இருக்கிறது.

இங்கு 3 நாட்களுக்கு முன்னர், ஜூலை 31 அன்று, இந்திய
எல்லைக்குள் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ளே நுழைந்து –
அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த உள்ளூர் மக்களை, இது
எங்கள் இடம் – மரியாதையாக வெளியேறுங்கள் – என்று
பயமுறுத்தி விட்டு போயிருக்கிறார்கள், சீன ராணுவத்தினர்…

அது குறித்த, – ஹிந்துஸ்தான் டைம்ஸ்
செய்தி கீழே –


ஹிமாசல் பிரதேசத்தில், நமது எல்லையின் மிக அருகே,
சீனா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது…

அது குறித்த, ஆகஸ்ட் 1 – ஹிந்துஸ்தான் டைம்ஸ்
செய்தி கீழே –

இந்தியா, பூடான், சீனா எல்லையில் டோக்லம் என்கிற
இடத்தில் ஏற்கெனவே, கைகலப்பு ஏற்பட்டதாக
செய்தி வெளிவந்தது… அதன் தொடர்பாக இரு நாடுகளுக்கும்
இடையே சூடான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது…


இந்த நிலையில், குஜராத்தில், நர்மதை நதிக்கரையில்
நிறுவப்பட இருக்கும் சர்தார் வல்லபாய் படேலின்
சுமார் 600 அடி உயர (182 மீட்டர்) சிலை தயாரிக்கும்
பணி ஒரு சீன நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்,
அந்த பணியை சீனாவிடமிருந்து திரும்பப்பெற வேண்டும்
என்றும் வலுவான கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

அஹமதாபாதிலிருந்து 6132 கி.மீ.தொலைவிலுள்ள
ஒரு சீன நகரில் இந்த சிலையின் பகுதிகள் தயாராகிக்
கொண்டிருக்கிறதாம். அங்கே பார்ட் பார்ட்டாக
தயாரிக்கப்படும் சிலையின் பகுதிகள் கப்பல் மூலம் இங்கே
கொண்டு வரப்பட்டு, பகுதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு சிலை
உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பணியை நேரிடையாக சீன நிறுவனத்திடம்
கொடுத்ததாக இருக்க வேண்டாமென்று,

முதலில் சிலை தயாரிக்கும் பணி இந்திய நிறுவனமான
எல் அண்ட் டி நிறுவனத்திடம் அளிக்கப்பட்டு, பின்னர்
அவர்கள் மூலம் ( சப்-காண்டிராக்ட் ஆக ) சீன நிறுவனத்திற்கு
அளிக்கப்பட்டிருக்கிறதாக தெரிய வருகிறது…

சுமார் 3000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த
பணியின் பெரும்பகுதி நிதி சீன நிறுவனத்திற்கு செல்லும்.

சீன இறக்குமதிகளை தவிர்க்க வேண்டும்,
சீன தயாரிப்புகளை வாங்க வேண்டாம்,
பயன்படுத்த வேண்டாம் என்றெல்லாம்
மக்களிடம் தீவிரமாக பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்
அதே வேளையில் –

இந்த சிலை தயாரிக்கும் பணியை சீன நிறுவனத்திடமிருந்து
திரும்பப்பெற வேண்டுமென்கிற கோரிக்கை வலுத்து
வருகிறது. இதனால் பண நஷ்டம் ஏற்பட்டாலும்
பரவாயில்லை – ஆர்டரை கேன்சல் செய்ய வேண்டும் என்பது
கோரிக்கை.

சிதறுண்டு கிடந்த இந்தியாவை, நாட்டின் பல்வேறு
சமஸ்தானங்களை, ஒருங்கிணைத்து இன்றைய
இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்
படேல். அவரது சிலையை தயாரிக்க நமக்கு
வக்கில்லையா ? தொழில் நுட்பம் இல்லையா…?

இல்லாவிட்டாலென்ன… இப்படித்தான் இருக்க வேண்டும்
என்றில்லையே… நம்மால் எந்த அளவிற்கு சிலையை
வடிவமைத்து செய்ய முடியுமோ, அதையே
வைத்துக்கொண்டால் போயிற்று. சர்தார் படேல் வந்து
யார் கனவிலாவது கேட்டாரா இப்படித்தான் என் சிலை
இருக்க வேண்டுமென்று ?

அதெப்படி குஜராத் அரசுக்கு, அரசியல்வாதிகளுக்கு –
இந்த உணர்வு இல்லாமல் போயிற்று…? 3000 கோடி ரூபாய்
ப்ராஜெக்டை டக்கென்று கொண்டு போய் அந்நிய நாட்டில்,
அதுவும் பகை நாடு ஒன்றிடம் கொடுக்க … ? மத்திய அரசும்
இதை எப்படி ஏற்றுக்கொண்டது…?

தேசபக்தி, தன்மானம் எல்லாம் நாட்டின் சாதாரண மக்களுக்கு
மட்டும் தான் போலிருக்கிறது –

அரசியல்வாதிகளுக்கும்,
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அது …..???

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

28 Responses to எல்லையில் மிரட்டும் சீனாவிற்கு தான் குஜராத் – சர்தார் படேல் சிலை தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது…!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  “Make in India ” – yellaam CHCHUMMAA.
  நினைத்ததை நடத்தியே காண்பவன் – நான், நான், நான், நான், நான்,நான், நான், நான்.

 2. selvarajan சொல்கிறார்:

  சுதேசி என்பதும் — சீன பொருட்களை வாங்காதீர்கள் என்று வாய் கிழிய சவடால் பேசுவதும் வெறும் கண்துடைப்பு மற்றும் கையாலாகாத்தனம் …. விதேசி என்பது எல்லாம் வெறும் வாய் சவடால் மட்டுமே …. ஆக்டொபஸ் போல பரவியுள்ளதை விலக்குவது என்பது வெறும் வார்த்தைகள் – உணர்ச்சி பெருக்கு — விலக்க முடிவெடுத்தால் முதலில் விட்டெறிய வேண்டியது ” காதோடு அணைத்துக் கொண்டு ” பேசி திரிகிற கைப்பேசி கருவியைத்தான் … அதில் ஏதாவது ஒரு சின்ன பார்ட் ஆவது சீனாவினுடையதாக இருக்கிறது என்பது தான் உண்மை ….

  கைப்பேசி முதல் கணனி வரை — ஜியோ என்று இந்தியர்களின் காசை வாரி சுருட்டப் போகிற அந்த கருவி கூட சீனாவின் கைங்கர்யம் என்பது பலருக்கும் புரிய வில்லை …. பாவம் ” வல்லபாய் படேல் ” அவர் சுதந்திர இந்தியாவிற்காக ” விதேசி ” பொருட்களை பகிஷ்காரம் செய்தவர் …. அவரது சிலை தயாரிப்பு — பகையாளி என்று கூறுபவனின் கைகளில் … நல்ல அரசு ….?

 3. மாசிலா சொல்கிறார்:

  சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஒரே நாடாக உருவாக்கியது ஆங்கிலேயர்கள். பட்டேல் கிடையாது.
  வரலாற்றை திரித்து கூறாதே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் மாசிலா,

   நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

   பிரிட்டிஷார் இந்தியாவின் பல ராஜ்ஜியங்களை இணைத்து ஒரு கொடியின் கீழ் கொண்டு வந்தது வேறு விஷயம்.

   நான் சொல்ல வந்தது வேறு விஷயம்..
   இந்தியா சுதந்திரம் பெறும்போது, பிரிட்டிஷாரின்
   மறைமுக நிர்வாகத்தில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில், மாநிலங்களுக்கு இடையிடையே 565 சுதேசி சமஸ்தானங்கள் ( princely states )இருந்தன. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும்போது, இந்த சமஸ்தானங்களைப்பற்றி பிரிட்டிஷ் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. தங்களது எதிர்காலத்தை அந்த சமஸ்தானங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசு சொல்லி விட்டது.

   அந்த சமஸ்தானங்கள் அத்தனையுடனும் உரிய முறையில்
   பேசி, அவர்களை convince செய்து, இந்தியாவுடன் இணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து, இந்தியாவுடன் ஒருங்கிணைத்த மாபெரும் பணியை செய்தவர் சர்தார் படேல் அவர்கள். அதைத்தான் நான் சொல்லி இருந்தேன்.

   ——————-

   ஆமாம் – அது என்ன “திரித்து கூறாதே “…?
   இன்னமும் கொஞ்சம் கௌரவமாக “திரித்துக் கூறாதீர்கள்”
   என்று எழுத உங்களுக்கு தெரியாதா…?
   “கனி இருப்ப காய் கவர்ந்தற்று” – உங்களுக்கு தெரியாததா..?

   இந்த தளத்தில், யாரையாவது நான் மரியாதைக்குறைவாக
   எழுதி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா…? நீங்களும் யாரையும் அவமதிக்காமல் எழுதுங்களேன்….!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. LVISS சொல்கிறார்:

  Chinese company is making only some parts of the statue-
  http://indiatoday.intoday.in/story/we-are-only-making-a-small-part-of-sardar-patel-statue-says-chinese-firm/1/508994.html
  If my memory serves me right this is the second time it is appearing in this blog probably because there is some skirmish in the border –China creates problem with almost every country in the world including the US but none of them have terminated their trade ties with them –This is how it works in the world and not the way we want it to be — This is not the first instance of Chinese intrusion into our territory either —
  In spite of the worst kind of relationship with Pakistan we have not withdrawn the MFN status why ?

 5. Thirumalachari thiruvengadam சொல்கிறார்:

  iIf I remember correctly Sardanapalus was somewhat chary of China and George Fernandez was silenced when he said we have to deal with China rather than Pak.It is an irony we still are in the Panchsheel time when China had said good by in1062 itself.A.TThiruvengadam

 6. LVISS சொல்கிறார்:

  Now dont talk about Make In India and sigh “Oh why we are not making this statue ourselves “–Make in India covers certain specific projects –Instead of assuming that Make In India means making everything in India it is better to get properly informed about this initiative from the govt portal —
  Apple will be making I Phone in India —-Lockheed Martins have signed pact with Tata Advanced System to make F16 fighter jets –Sweden’s Saab has offered to make Gripen fighters in India –We are already making Tejas fighter jets , the Light Combat Aircraft —

 7. LVISS சொல்கிறார்:

  One more thought about this statue politics and why we should stop this nonsense about China making a small part of it –The Statue Of Liberty in U S is a gift from the people of France to the people of US –It was designed by a French sculptor -It is fully made outside the US —Did they demolish it because it is not made in US — By the way the relationship between the US and the France is not all that warm —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.எல்விஸ்,

   1) எது “நான்சென்ஸ்” என்பதை யார் தீர்மானிப்பது ?

   2) “about China making a small part of it –” என்று சொல்கிறீர்களே
   அந்த “ஸ்மால் பார்ட்” எது ? எவ்வளவு…? அதன் விலை மதிப்பு எவ்வளவு என்று சொல்ல முடியுமா…?

   3) “The Statue Of Liberty in U S is a gift from the people of France”
   என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்.

   நம்மைப்போல், முட்டாள்தனமாக, அமெரிக்கா ஃப்ரான்சுக்கு சிலை பண்ண ஆர்டர் கொடுக்கவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டதற்கு நன்றி…..

   4) அந்த Statue Of Liberty யுடன் சர்தார் படேலின் சிலையை
   ஒப்பீடுவது “நான்சென்ஸ்” இல்லையா என்பதை
   வாசக நண்பர்களே தீர்மானிக்கட்டும்.

   நீங்கள் கொடுத்துள்ள link news இவ்வாறு முடிகிறது –
   ——————
   L&T has, however, still faced quesions as to why it assigned
   even the bronze elements and parts of the statue to a foundry
   in China, rather than rope in an Indian firm for such a
   landmark Project.
   ——————-

   இதெல்லாம் உங்கள் கண்களுக்கு படவில்லையா அல்லது
   சௌகரியமாக மறந்து /மறைத்து விட்டீர்களா ?

   இந்த பாராவிற்கும் உங்கள் clarification ஐ எதிர்பார்க்கிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    I will answer only one part of this issue — France played a key role in the American War of Independence — For some reason though the Americans are more friendly towards the British –The US could have at any time demolished the statue gifted by the French people and installed one of its own — They didnt think that since it is made in France so they should discard it —
    The part played by the chinese company in making the statue is minimal -Only bronze clading in the form of bronze plates is being sourced from china and it constitutes about 9% of the project according to reports — May be these plates are not available in India —-
    I do not want to go further into this subject —

    • இளங்கோ சொல்கிறார்:

     எல்விஸ் சார்,

     // அந்த “ஸ்மால் பார்ட்” – அதன் விலை மதிப்பு எவ்வளவு என்று சொல்ல முடியுமா ?//
     //அந்த Statue Of Liberty யுடன் சர்தார் படேலின் சிலையை
     ஒப்பீடுவது “நான்சென்ஸ்” இல்லையா ?//
     ” I will answer only one part of this issue ”
     ஏன் ? உங்களாலேயே விளக்க முடியாத விஷயங்களை
     எதற்காக சார் மற்றவர்களுக்கு எழுதுகிறீர்கள். ?

     //May be these plates are not available in India —//
     not available in India என்று உங்களுக்கு யார் சொன்னார்கள் ? நீங்களாக நினைத்துக் கொள்கிறீர்களா ?

 8. புதியவன் சொல்கிறார்:

  இடுகையின் தலைப்பு மிஸ்லீடிங் ஆக இருக்கிறது. சிலை செய்ய ஆர்டர் எல்.என்.டிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சப் கான்டிராக்ட் விட்டுள்ளார்கள். யாரிடம் கொடுக்கணும், யார் செய்யக்கூடாது என்று அரசு சொல்லியிருக்கமுடியாது.

  ஒன்றை நாம நல்லாப் புரிஞ்சுக்கணும். இந்தியர்களுக்கு எலெக்டிரானிக் பொருட்கள், சீனாவைப்போல் தயாரிக்க முடியாது, முடியாது, முடியாது. சீனர்கள், (கொரியர்கள்) இயல்பான எலெக்டிரானிக் அறிவு மிக அதிகம் பெற்றவர்கள், அதுமட்டுமல்ல, மக்கள் பயன்பாட்டுச் சாதனங்களை குறுகிய காலத்தில், அதுவும் மிக விரைவாக காப்பி அடித்து விற்பனை செய்வதில் வல்லவர்கள் (சீனா காப்பி. கொரியா எலெக்டிரானிக், கம்யூனிகேஷன் அறிவில் வெகு வல்லவர்கள்)

  பெரும்பாலான நம்ம மக்களின் மென்டாலிட்டி (என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்), குறைஞ்ச விலையில் யார் கொடுத்தாலும் வாங்குகிற மென்டாலிட்டி. பந்தாவாவும் இருக்கணும், ஆனா காசு செலவழிக்கக்கூடாது. இந்த மென்டாலிட்டிதான் அவனுக்கு திருட்டு விசிடில சினிமா பாக்கக் கத்துக்கொடுக்குது, காசு செலவழிக்காம ஓசில எம்.பி.3 பாடல்களை மொபைல்ல வச்சுக் கேக்கவைக்குது.

  சீனப் பொருட்களை வேண்டாம் என்று சொல்வது சாத்தியமே இல்லாதது. ஆனால், எந்த எந்தப் பொருட்களை வாங்கவேண்டும் என்பது நம் வியாபாரிகளின் தேசபக்தியில், மக்களின் தேசபக்தியில்தான் இருக்கிறது. சீன Battery related, Mobile phone related, accessories, ALL electronic accessories இது இல்லைனா, மொபைல் போன் இப்போதிருப்பதுபோல் சீரழியாது (அடுத்த வேளைக்கு சாப்பிடக் காசு இல்லாதவர்களும் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள்). உங்களுக்குத் தெரிவதற்காகச் சொல்லுகிறேன், எந்த தேசத்திலும் நீங்கள் ‘I LOVE so&so-country’ என்ற டி.ஷர்டுகள் பார்க்கலாம். எல்லா தேசத்துக்கும் (அனேகமாக) சைனாவில்தான் அவை தயாரிக்கப்பட்டு செல்கின்றன.

  அரசை விடுங்கள். மோடி இந்தியாவுக்கு எதிராக இருக்கிறார், சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று சொல்லப்படுவதையெல்லாம் விடுங்கள்.

  இந்தியர்களில் எத்தனை நபர் இந்திய தேசபக்தியோடு இருக்கத் தயாராக இருக்கிறார்கள்? அப்படி இருந்திருந்தால் தொலைக்காட்சி முதல்கொண்டு, உடைகள் முதல்கொண்டு ஒன்றும் நம்மிடம் இருக்காது (கதரைத் தவிர). நம் கதவுகளின் கைப்பிடி, பூட்டுவதற்கு பூட்டு முதல்கொண்டு. மற்ற நாடுகள் தேவையில்லை என்றால், இப்போதிருக்கும் தலைமுறை பட்டினி கிடந்துதான் சாகணும். நாம் பேருந்து செய்வதற்கும் லாயக்கில்லை, நம் நாட்டில் செய்த பேருந்தில் போவதற்கும் ஆட்கள் இல்லை (நான் சொல்வது HARSHஆக இருக்கலாம்) இதை நம்பவில்லையென்றால், சிந்தித்துப் பாருங்கள்.

  இப்போ நான் வல்லபாய் படேல் சிலை விவகாரத்துக்கு வருகிறேன்.

  1. வல்லபாய் படேலை, இந்துத்துவாவின் சின்னமாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்றவை பார்க்கின்றன. நேருவிற்காக, மற்ற எல்லாத் தலைவர்களையும் காங்கிரஸ் மறைத்து, ஒழித்துவிட்டது என்று எல்லோரும் நம்புகிறார்கள். அதனால்தான் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படுகிறது. அது எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும், ஏன் இருக்கவேண்டும் என்று மாற்றுக்கட்சியினர் பொறாமையில் கேள்வி கேட்கலாம் (ரேஷன்லதான் அரிசி வாங்கணும் என்ற நிலைமையில் எதுக்கு தொலைக்காட்சி, ஃப்ரிட்ஜ் என்று கேட்டால் எவ்வளவு அபத்தம்? ஆனால், அண்ணா என்ன இந்த நாட்டுக்குச் செய்தார் என்று தெருக்கு தெரு அவரது சிலை, 6 அடி மனிதருக்கு எதுக்கு 6000 அடியில் சமாதி என்றும் கேட்கலாமே? ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அங்கு ஒரு சிறிய தூண் இருந்தால் போதுமே, ஏன் 5-10 ஏக்கரில் இவ்வளவு செலவழித்து நினைவிடம் கட்டணும்? இது மாதிரி ஊர்ல இருக்கற எல்லாச் சிலைகளுக்கும் இந்தக் கேள்வி கேட்கலாம். இந்த மாதிரி கேள்விகளுக்கு முடிவே இருக்காது)

  2. Make In India – நம்முடைய தேச லீடர் நமக்கு உத்வேகத்துக்காகச் சொல்லுகிறார். அதற்கேற்றவாறு மக்கள், கார்ப்பொரேட்களின் சிந்தனை இருக்கவேண்டும். ‘வறுமையை ஒழிப்போம்’னு நீங்க சொல்லிட்டு, ஏன் 5* ஹோட்டல்ல சாப்பிடறீங்கன்னு இந்திரா அவர்களை நாம கேட்கலை, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்னு சொல்லிட்டு ஏண்டாப்பா எம்.எல்..ஏக்களுக்கு கோடிக்கணக்கா செலவழித்து சட்டமன்றம் கட்டறேன்னு காசை அடிச்சன்னு கருணானிதியையும் நாம கேட்கலை.

  • இளங்கோ சொல்கிறார்:

   புதியவன் சார்,

   // சிலை செய்ய ஆர்டர் எல்.என்.டிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சப் கான்டிராக்ட் விட்டுள்ளார்கள். யாரிடம் கொடுக்கணும், யார் செய்யக்கூடாது என்று அரசு சொல்லியிருக்கமுடியாது.//

   ஏன் சார் சொல்லியிருக்க முடியாது…?
   எல் அன்ட் டி க்கு கொடுக்கும் காண்ட் ராக்டில்,
   இந்திய கம்பெனிகளுக்கு தான் சப்-காண்டிராக்ட் கொடுக்க
   வேண்டும் என்று ஒரு கண்டிஷனை அரசாங்கம் சுலபமாக
   சேர்த்திருக்கலாமே.

   பாஜகவையோ, மோடிஜியையோ எந்த குற்றமும், யாரும்
   சொல்லிவிடக்கூடாது. அதை திசைதிருப்பி விட நீங்களும் எல்விஸ், சுந்தர்ராஜன்களும் பொங்கியெழுந்து வந்து விடுவீர்களே. தலைப்பை விட்டு விட்டு எங்கெங்கேயோ
   ட்ராவல் பண்ணி திசைதிருப்புவதே உங்கள் வழக்கமான பாணி என்பது தெரிகிறது.
   நீங்கள் யாரும் தெருவில் இறங்கி நடப்பவர்களாக நான்கு பேர்களுடன் பேசிப்பழகுபவர்களாகவே தெரியவில்லை.
   எங்கோ உட்கார்ந்துகொண்டு வறட்டு விவகாரம் பேசுகிறீர்கள்.
   தெருவுக்கு வந்து நாலு பேரிடம் பேசி பாருங்கள். மக்கள் என்ன நினைக்கீறார்கள் என்பது புரியும்.

   • புதியவன் சொல்கிறார்:

    இளங்கோ அவர்களே, மோடி அவர்களை ஆதரிக்கணும்கறதுக்காக எழுதலை. எழுதினதுல தவறான செய்தி இருந்தாச் சொல்லுங்க. உங்களுக்காக ஒன்று சொல்றேன்.

    வாத்த்துக்காக மோடி அவர்கள் இந்த கண்டிஷனைப் போடவிட்டுவிட்டார் என்று வைத்துக்கொள்ளலாம் (நான் இதை ஏற்கவில்லை. ஏனென்றால் இப்படிச் செய்யமுடியாது). நீங்கள் பிரதமர் ஆகி சைனா பொருட்கள் வாங்கக்கூடாது, இறக்குமதி செய்வது தேசத்துரோகம், ஒரே நாளில் தூக்குத்தண்டனை என்று சட்டம் கொண்டுவந்தால் அது, நாட்டை 100 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவிடும், மக்கள் புரட்சி ஏற்படும். முதலில் செல்போன், இன்டர்நெட் போன்ற எந்த விஞ்ஞானமும் செயல்படாது (இன்றைய நிலையில்)

    என்ன காரணம்? ஏன்னா பெரும்பாலான இந்தியர்கள் ஜப்பானியரின் தேசபக்தியில் லட்சத்தில் ஒருபகுதிகூட இல்லாதவர்கள். ஜப்பான் அரசு ஜப்பானியர்களை, அமெரிக்க கார் வாங்குங்கள், வெளிநாட்டுப் பொருட்களையும் வாங்குங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறது, ஆனால் ஜப்பானியர்கள், எதை வாங்குமுன்னும், இதனால் நாட்டுக்கு என்ன நன்மை என்பதைத்தான் பார்க்கிறார்கள். ஜப்பானில், நான் படித்தவரையில் உங்கள் பெட்டியை கைதவறி எங்கேயாவது வைத்துவிட்டால் அது அங்கேயே இருக்கும். ஏனென்றால் தனக்குச் சொந்தமில்லாத பொருட்களை யாரும் தொடமாட்டார்கள். பல நாடுகளில் இதுதான் நிலைமை. ஆனா நாம, எது விலை குறைவு என்பதை மட்டும் பார்த்து சுயநலமாக நடப்பவர்கள்.

    “மக்கள் நினைக்கிறார்கள்” — எந்த மக்கள்? ஓட்டுச் சாவடி பக்கம் போகாமல் தொலைக்காட்சியில் மூழ்கியிருப்பவர்களா அல்லது காசை வாங்கி ஓட்டை விற்பவர்களா அல்லது நாட்டின் லஞ்சலாவண்யத்தில் தாங்களும் ஒரு அங்கமாக இருப்பவர்களா?

    • இளங்கோ சொல்கிறார்:

     புதியவன் சார்,

     திரும்பவும் திசை திருப்புகிறீர்கள், மடை மாற்றூகிறீர்கள்.
     நீங்கள் சப்ஜெக்டை மாற்றி வேறு பக்கம் கொண்டுபோவதில்
     சாமர்த்தியசாலியாக இருக்கிறீர்கள்.

     நீங்கள் சொன்னது :
     // சிலை செய்ய ஆர்டர் எல்.என்.டிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சப் கான்டிராக்ட் விட்டுள்ளார்கள். யாரிடம் கொடுக்கணும், யார் செய்யக்கூடாது என்று அரசு சொல்லியிருக்கமுடியாது.//

     நான் சொன்னது :
     ஏன் சார் சொல்லியிருக்க முடியாது…? எல் அன்ட் டி க்கு கொடுக்கும் காண்ட் ராக்டில், இந்திய கம்பெனிகளுக்கு தான் சப்-காண்டிராக்ட் கொடுக்க
     வேண்டும் என்று ஒரு கண்டிஷனை அரசாங்கம் சுலபமாக சேர்த்திருக்கலாமே.

     இதற்கு பதிலே சொல்லாமல் // நீங்கள் பிரதமர் ஆகி சைனா பொருட்கள் வாங்கக்கூடாது, இறக்குமதி செய்வது தேசத்துரோகம், ஒரே நாளில் தூக்குத்தண்டனை என்று சட்டம் கொண்டுவந்தால் // என்றெல்லாம்
     கதைக்க ஆரம்பிக்கிறீர்கள்.

     “மக்கள் நினைக்கிறார்கள்” — எந்த மக்கள்?”
     உங்கள் பாஜகவுக்கு ஓட்டு போட்டவர் போக மீதி இருக்கும் 60 சதவீதத்திற்கு
     மேற்பட்ட மக்கள்.

     • புதியவன் சொல்கிறார்:

      இளங்கோ அவர்களே – இந்தியக் கம்பெனிகளுக்குத்தான் சப் கான்டிராக்ட் கொடுக்கவேண்டும் என்ற கண்டிஷன் – இதை நான் ஏற்கவில்லை. சாத்தியமுமில்லை. நீங்கள் அடுத்த 10 நாட்களுக்கு இந்தியப் பொருள் மட்டுமே உபயோகப்படுத்துவேன் என்று சபதம் எடுத்து நடந்துபாருங்கள். அது முடியவே முடியாது என்று தெரியும். இந்த விஷயத்தில் மோடி அவர்கள் மீதோ, அரசு மீதோ அல்லது எல்.என்.டி மீதோ நான் தவறு காணவில்லை.

      கருத்து மோடிக்கோ பாஜகவுக்கோ சாதகமாக இருந்தால் என்னை பாஜக என்று சொல்லாதீர்கள். நான் ஜெ சார்பாகவும் பெரும்பாலும் கருணாநிதியை எதிர்த்தும் எழுதியிருக்கிறேன். நல்லவேளை, என்னை இரட்டை இலையில் ஒரு இலை என்று சொல்லாமல் போனீர்கள். வேறுபட்ட Viewsதான் சிந்தனையைத் தூண்டும். நான் நினைப்பதிலும் தவறு இருக்கலாம். அதை பின்னூட்டங்கள் பார்த்துப் புரிந்துகொள்வேன்.

     • புதியவன் சொல்கிறார்:

      நாம் உண்ணும் உணவு, தொலைக்காட்சி, பெரும்பாலான மின்னணு சாமான்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், சுத்தப்படுத்தும் பொருட்கள், எதனையும் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள், கட்டடம் கன்ஸ்டிரக்‌ஷன் பொருட்கள், இரயில், சில பேருந்துகள், ஆட்டோ போன்றவை தவிர, அம்பாசிடர் தவிர வேறு எதுவும் இந்தியப்பொருட்கள் கிடையாது. நீங்கள் செல்லும் வால்வோ, தனியார் பேருந்து, விமானம் எதுவும் நம் நாட்டுப்பொருட்கள் அல்ல. நம் குழந்தைகள் விரும்பும் ஒரு உணவும் இந்திய உணவு கிடையாது.

 9. paamaranselvarajan சொல்கிறார்:

  // மத வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் சிலர் பின்னூட்டம் எழுதுகிறார்கள்.
  இந்த விமரிசனம் தளத்தை பொருத்தவரையில் நான் இனி இத்தகைய பின்னூட்டங்களை அனுமதிக்கப் போவதில்லை.// இந்த நிலை ஏனாே

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நான் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது… அவ்வளவே.
   திரு.சுந்தர் ராமன் அவர்களுக்கான விளக்கத்தை பார்க்கவும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   //இந்த நிலை ஏனாே//

   என்னவொரு பாமரத்தனமான கேள்வி.

   சாதி மத வெறுப்புணர்வை தூண்டி சிறுபான்மையினரையும் தலித்துகளையும் கொல்ல‌ ஒரு பெரிய‌ கலவரம் ஏற்பட்டு இந்த நாடு நாசமாகனும் என்று விரும்புகிறீர்களா?

   • paamaranselvarajan சொல்கிறார்:

    இது பாமரத்தனமான கேள்வி தான் … அது ஏன் என்பதை திரு.காமை சரியாக புரிந்துக் காெண்டார்… தங்களின் பார்வை வேறு விதமாக இருக்கிறது … பதிவுக்கான பின்னூட்டங்கள்வேறு திசை நாேக்கி சென்றதால் தான்அந்த கேள்வி ….!

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  சுந்தர் ராமன்,

  // . திருப்பி திருப்பி மோடி எதிர்ப்பு பதிவாகவே போடுவதை ஒரு கடமையாக நீங்கள் நினைப்பதால் இந்த பதில். //

  – என்று எழுதி இருக்கிறீர்கள்.

  ஒரு மாதத்தில் நான் 30 இடுகைகள் எழுதினால்,
  அதில் மிஞ்சி மிஞ்சி 5-6 இடுகைகள் மத்திய அரசை
  விமரிசிப்பதாக இருக்கலாம். அதுவே உங்கள் கண்களை இப்படி உறுத்துவது ஏன்…?

  ஏன் – நான் மத்திய அரசை விமரிசிக்க கூடாதா…? இன்னமும்
  நாம் ஜனநாயக நாட்டில் வாழ்வதாகத்தான் நான் நினைத்துக்
  கொண்டிருக்கிறேன்…. நீங்கள் அப்படி நினைக்கவில்லையா ?

  நான் எழுதும் இடுகைகளை ஒரு நாளில் ஆயிரம் பேருக்கு மேல் படிக்கிறார்கள். அதெப்படி ஒரு ஆறேழு பேர்
  மட்டும் பாஜக/மோடிஜியை பற்றி எழுதினால் பொங்கி
  எழுகிறீர்கள்… நான் ஏதோ பெரிய அராஜகம் பண்ணி விட்டது போல், தேசத்துரோக குற்றம் இழைத்து விட்டது போல் எப்படி எழுதலாம் என்று என்னை துளைக்கிறீர்கள்..?

  ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தின் செயல்களை,
  அரசியல் கட்சிகளின் செயல்களை யாரும் விமரிசிக்கலாம்.
  ஏன் – கடந்த ஆட்சியில், திரு.மன்மோகன் சிங் அவர்களின் அரசை நான் இதைவிட கடுமையாக விமரிசித்து எழுதவில்லையா ?

  அப்போதெல்லாம் உங்களுக்கு இனித்தது அல்லவா…?
  இப்போது மட்டும் கசப்பது ஏன்…?

  ஆர்.எஸ்.எஸ். / இந்துத்வா கண்ணாடிகளை மாட்டிக் கொண்டு பார்ப்பது தான் உங்களது கசப்பிற்கான
  காரணம்.

  நான் இந்த நாட்டில், அனைத்து ஜாதி, மதத்தை சேர்ந்தவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும், வளமாகவும் வாழ வேண்டுமென்று விரும்புபவன். என் எழுத்து அதை நோக்கி பயணிப்பதாகவே இருக்கும். உங்களால், உங்களைப்போன்ற
  இன்னும் சிலரால் அதை ஜீரணிக்க முடியவில்லையென்றால் – நான் வருந்துவதைத்தவிர வேறென்ன செய்ய முடியும்..?

  மிக மோசமான முறையில் பல்வேறு மதங்களை சேர்ந்தவரிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் எழுதப்பட்டு இருப்பதால், உங்கள் பின்னூட்டத்தை இங்கிருந்து அகற்றி இருக்கிறேன்.

  இனியாவது, இத்தகைய பின்னூட்டங்களை இங்கே எழுத
  வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   //நான் இந்த நாட்டில், அனைத்து ஜாதி, மதத்தை சேர்ந்தவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும், வளமாகவும் வாழ வேண்டுமென்று விரும்புபவன். என் எழுத்து அதை நோக்கி பயணிப்பதாகவே இருக்கும்.//

   ஆமீன்.

  • இளங்கோ சொல்கிறார்:

   கே.எம்.சார்,

   மிகவும் அவசியமான விளக்கம்.
   நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.
   வாழ்த்துகள் சார்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி இளங்கோ.

    பல சமயங்களில் உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு பேருதவியாக
    இருக்கின்றன….( சில சமயங்களில்… தர்ம சங்கடமாகவும்…!!!).
    Anyway – உங்கள் ஆர்வத்தை ரசிக்கிறேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • Sundararaman சொல்கிறார்:

   Honestly ….I feel I did not write any anti comments. But I respect your judgement… Will try to live up to your expectations.

 11. குலாம் ரசூல் சொல்கிறார்:

  /// தேசபக்தி, தன்மானம் எல்லாம் நாட்டின் சாதாரண மக்களுக்கு
  மட்டும் தான் போலிருக்கிறது –

  அரசியல்வாதிகளுக்கும்,
  அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அது …..??? ///

  ஒரு வியாபாரம், சந்தர்ப்பவாதம்.

 12. Prakash சொல்கிறார்:

  You don’t have to go to Gujarat…just look at Chennai Metro tunnel project and who is the sub-contractor andThe big tunnel drilling machine imported from China.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.