இன்று நிச்சயமாக தோற்கப்போகிற ஒருவர் …..


வழக்கமாக மகிழ்ச்சியாக கொண்டாடப்படக்கூடிய
ஒரு நாளில் ஒரு துக்கம் நிகழ்ந்து விட்டால்,
பிற்பாடு அந்த மகிழ்ச்சி நாள் வரும்போதே – கூடவே
அந்த துக்க நினைவுகளும் வரும் அல்லவா…?

அதுபோன்ற ஒரு நிகழ்வு தான்…
நம் நாட்டின் விடுதலையும், துண்டாடுதலும் ஒரே நாளில்
நடந்தது. விடுதலை கிடைத்ததை தொடர்ந்த – நாட்டின்
பிரிவினை, கலவரங்கள் – காரணமாக குறைந்த பட்சம் பத்து
லட்சம் உயிர்களை நாம் பறி கொடுத்தோம். எத்தனையோ
குடும்பங்கள் பிரிந்தன. எத்தனையெத்தனையோ சோகங்கள்
– இரண்டு தரப்பிலும்…

தேசத்தின் தென் பகுதியில் இருப்பவர்கள் இந்த வலியை
அதிகம் உணரமாட்டார்கள்… ஆனால், வடக்கே உள்ளவர்கள்
இதை என்றும் மறக்க மாட்டார்கள்.

சுதந்திர தினம் வரும்போதெல்லாம், எனக்கு
இந்த நினைவுகளும், கூடவே காந்திஜியின் மரணம் குறித்த
நினைவுகளும் வருகின்றன. எதாவது ஒரு சேனலில் அன்று
அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படம் போடுகிறார்கள்.
அதைப் பார்க்கும்போது, மீண்டும் அத்தனை விஷயங்களும்
நினைவிற்கு வரும்…

இன்று துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கிறது.
தோற்பது உறுதி என்பது தெரிந்தும் போட்டியிடுகிறார் –
காந்திஜியின் – ராஜாஜியின் பேரன் திரு.கோபால கிருஷ்ண
காந்தி. அவரது கட்டுரை ஒன்று கீழே –

எனக்கு இவரைக் காண்கையில், காந்திஜியை விட, ராஜாஜியே அதிகம் நினைவிற்கு வருகிறார்…resemblance…!!!

———————————————–

தேசப்பிரிவினைக்கு இன்றும் வட்டி கொடுக்கிறோம்!
…..

இந்த ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த 70-வது ஆண்டு
மட்டுமல்ல, இந்தியா – பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப்
பிரித்த பிரிவினையின் 70-வது ஆண்டும்கூட. பிரிவினை
என்பது மிக மோசமான ரத்தக்களரி. இந்து, முஸ்லிம்,
சீக்கியர்கள் என்று ஒரு கோடியே 45 லட்சம் பேர் புதிய
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து
புதிய பாகிஸ்தானுக்கும் குடிபெயர்ந்த நேரம்.

குடிபெயர்ந்தவர்கள் அனைவரும் அச்சத்துடன்
நடுங்கிக்கொண்டே ‘அகதி முகாம்கள்’ என்ற பெயரை மட்டும்
தாங்கிய அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடங்களுக்கு
பீதியுடன் வந்து சேர்ந்தனர். மிகப் பெரிய பணக்காரரும்,
ஏதுமற்ற பராரியும் ஒரே நேரத்தில் ‘அகதி’ என்ற அந்தஸ்தை
அடைந்தனர். ஒருவர் பெரிய மாளிகையில் வசித்திருக்கலாம்,

இன்னொருவர் குடிசையில் வாழ்ந்திருக்கலாம் இருவருமே
அடுத்த வேளை உணவு, உடை, மருந்துகளுக்காகக்
கையேந்தி நின்றனர். கடத்தல், சூறையாடல், மரணம்
ஆகியவற்றின் கோரப் பிடியிலிருந்து தப்பினோம் என்ற
ஆறுதல்தான் அவர்களிடம் மிஞ்சியிருந்தது.

பிரிவினையின்போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை,
‘குறைந்தபட்சம் 2 லட்சம் – அதிகபட்சம் 20 லட்சம்’
என்கின்றனர். இந்து, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 33,000
பெண்கள் கடத்தப்பட்டுவிட்டதாக இந்திய அரசு கூறியது.
50,000 முஸ்லிம் பெண்கள் கடத்தப்பட்டுவிட்டதாக
பாகிஸ்தான் கூறியது. ஒரே சமயத்தில் வாழ்க்கையும்
மரணமும் கூட பிரிவினைக்குள்ளாயின!

கோபத்தில் கொதித்த அகதிகள்

1947 என்பது, ஒரு பகுதிக்கு விடுதலை தேசத்தின் ஒரு பகுதி
வெட்டி நீக்கம், ஒரு பகுதிக்கு வெற்றி – தேசத்தின் ஒரு
பகுதியில் பெரும் சோகம் என்பதை நினைவில் வைக்க
வேண்டும். கற்பனையே செய்ய முடியாத, விவரிக்கவே
முடியாத சோகம் அது.

“பிரிட்டிஷார் பூட்டிய அடிமை விலங்கிலிருந்து நாளை நாம்
விடுதலை பெற்றுவிடுவோம்; ஆனால், இன்று நள்ளிரவு
முதல் இந்துஸ்தானம் இரண்டாகப் பிளவுபட்டுவிடும்.

நாளைய தினம் கொண்டாட்ட தினமாகவும் துக்க
தினமாகவும் இருக்கும்” என்று கல்கத்தாவில் பேசினார் காந்தி.
நகரில் மறுநாள் மகிழ்ச்சியும் தோழமை உணர்வும்
கொப்பளித்தது. பொங்கிய அந்த நல்லுணர்வு சிறிது நேரமே
நீடித்தது. சுதந்திரம் கிடைத்த 16-வது நாள் ஆகஸ்ட் 31-ல்
இரவு 10 மணியளவில், பெலியகட்டா என்ற முஸ்லிம்கள்
குடியிருப்புப் பகுதியில் காந்தி தங்கியிருந்த இடத்துக்கு
கோபாவேசத்துடன் இந்து இளைஞர்கள் கூட்டமொன்று
வந்தது. அவருக்கு இடம் கொடுத்த முஸ்லிம்களைத் தாக்கிக்
கொல்ல வந்தனர். அன்று காந்தி மௌன விரதம் இருந்த
நாள்.

காந்தி உடல் நலமில்லாமல் இருந்தார், மிகவும்
களைத்திருந்தார். அடுத்த நாள் காலை, கலவரத்தால் அதிகம்
பாதிக்கப்பட்டிருந்த நவகாளிக்கு யாத்திரை புறப்பட
ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லியிருந்தார். இப்போது
வங்கதேசம் என்று அழைக்கப்படும் முன்னாள் கிழக்கு
பாகிஸ்தானில் இருக்கிறது நவகாளி. தாக்குதலால்
பாதிக்கப்பட்ட இந்துக் குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்கு
ஆறுதல் சொல்ல அவர் திட்டமிட்டிருந்தார். அந்த நிலையில்
அவரைப் பார்க்க வந்த இளைஞர்கள் கண்ணில்
பட்டதையெல்லாம் உடைத்தார்கள், தெரு விளக்குகள் மீது
கற்களை வீசினார்கள், ஜன்னல் கண்ணாடிகளை
நொறுக்கினார்கள்.

தங்களுடைய ‘இலக்குகளை’ தேடி ஒவ்வொரு அறையாக
நுழைந்தனர். அவர்களை நோக்கிச் சென்ற காந்தி தன் மௌன
விரதத்தை முறித்துக்கொண்டு, “என்ன இதெல்லாம்?” என்று
வேதனை பொங்கக் கேட்டார். “என்னைக் கொல்லுங்கள்,
என்னைக் கொல்லுங்கள், நான் சொல்கிறேன், என்னை ஏன்
நீங்கள் கொல்லக் கூடாது?” என்று கேட்டார். அதற்குள்
ராணுவ போலீஸ் படை வந்ததால் அவர்கள் ஓடிவிட்டனர்.

நகரில் கலவரம் வெடித்தது. அடுத்த நாள் தன்னுடைய
நவகாளி யாத்திரையை ரத்துசெய்துவிட்டு உண்ணாவிரதம்
இருந்தார் காந்தி.

“எத்தனை நாளைக்கு?” என்று கேட்டார் ஆபா காந்தி. “அமைதி
திரும்பும் வரையில் தண்ணீர்கூட அருந்த மாட்டேன்” என்றார்
காந்திஜி. நான்காவது நாள் கல்கத்தாவில் அமைதி
திரும்பியது. அன்றிரவு கலவரக்காரர்களில் சிலர் வந்து அவர்
முன்னர் சரணடைந்ததுடன் துப்பாக்கிகள், ரவைகள், நாட்டு
வெடிகுண்டுகள் போன்றவற்றையும் ஒப்படைத்தார்கள்.

டெல்லியில் படுகொலைகள் மீண்டும் தொடங்கின. மீண்டும்
அமைதியை நிலைநாட்ட உண்ணாவிரதத்தை
மேற்கொண்டார். 1948 ஜனவரி 20 அன்று பிரார்த்தனைக்
கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிறிய நாட்டு
வெடிகுண்டு வெடித்தது. அதனால் சலசலப்பு ஏற்பட்டது.

“கவனிங்க, கவனிங்க, இங்கே எதுவும் நடக்கவில்லை;
அப்படியே ஏதேனும் நடக்க வேண்டுமென்றிருந்தால் நீங்கள்
என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். கூட்டத்தினரை
அமைதிப்படுத்திவிட்டு, கூட இருந்தவர்களை ‘ராம்துன்’ பாடச்
சொன்னார். அகில இந்திய வானொலி அனைத்தையும்
அப்படியே ஒலிப்பதிவு செய்தது. நாட்டு வெடிகுண்டு
வெடித்ததுகூடத் துல்லியமாகப் பதிவாகியிருக்கிறது.

பயங்கரமான சதி!

அந்த குண்டை வெடிக்கச் செய்தவர் மேற்கு பஞ்சாபிலிருந்து
வந்த 25 வயது அகதி மதன்லால் பாவா. சுலோசனா என்ற
பெண்தான் அவரை அடையாளம் கண்டார். போலீஸ்காரர்கள்
வந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

‘பொறுப்பில்லாத இளைஞனின் செயல் என்று இதை
நினைக்கிறீர்களா?’ என்று காந்தியைக் கேட்டபோது, ‘இல்லை’
என்றே அவர் பதில் அளித்தார். ‘பயங்கரமான, விரிவான சதி
இதன் பின்னணியில் இருப்பதைக் காணவில்லையா?’ என்று
பதிலுக்குக் கேட்டார். அவர் நினைத்தது முற்றிலும் சரி. மிகப்
பெரிய சதியின் ஓர் அங்கம்தான் மதன்லால் பாவா. அந்த
சதிக் கும்பல் அடுத்த 10 நாள்களில் தனது ‘இலக்கை’
அழித்தது. 70 ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டின் நிலைமை
அது. வெறுப்பு, முரட்டுத்தனம், திடீரென்றும் திட்டமிட்டும்
மேற்கொள்ளப்படும் வன்செயல்கள் நிறைந்திருந்தன.
பழிவாங்கலுக்கும் பழிதீர்த்தலுக்குமான காலம். பயங்கர
சதிகள் பற்றிய சந்தேகங்கள் நிலவிய காலம்.

70-வது ஆண்டு நிகழ்வு என்பது சுதந்திர இந்தியாவின் பிறந்த
நாள் மட்டுமல்ல, பிளவுபடாத இந்தியா மறைந்த 70-வது
ஆண்டு நிகழ்வும்தான், இதில் கொண்டாட ஏதும்
இருக்கிறதா? பிரிட்டனின் காலனி என்ற
அடிமைத்தளையிலிருந்து விடுபட்டது நிச்சயம்
கொண்டாடப்பட வேண்டியதுதான். ஏகாதிபத்திய சக்தி
நம்முடைய வாழ்விலிருந்து அகன்றது கொண்டாட்டத்துக்கு
உரியதுதான். டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக்
கொடியைப் பிரதமர் நேரு ஏற்றியதைக் காண்பதே
மகிழ்ச்சிக்குரியதுதான்.

நாம் அதையும், இன்னும் பல சாதனைகளையும்
கொண்டாடுவோம். பொருளாதாரத்தில் சுயச்சார்பு, தொழில்
வளம், தேர்தல் நடைமுறையுடனான ஜனநாயகம், சட்டத்தின்
ஆட்சி என்று கொண்டாட பல உள்ளன. எந்த விலை
கொடுத்து இந்த சுதந்திரத்தை வாங்கினோம் என்பதை
மறந்துவிடக் கூடாது. அப்போது அதிக விலை கொடுத்தோம்
என்பது மட்டுமல்ல, இப்போது அதற்கு வட்டியும்
கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ‘இரட்டை தேசம்’ என்ற
கோரிக்கைக்காக இப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கும்
கூடுதல் வரி இது.

இரட்டை தேசம்

‘இரட்டை தேசம்’ என்ற கருத்தை ஆதரித்தவர்கள் இரண்டு
பேர். ஒருவர் இந்து மகாசபையைச் சேர்ந்த விநாயக்
தாமோதர் சாவர்க்கர், மற்றொருவர் முஸ்லிம் லீக் கட்சியைச்
சேர்ந்த முகம்மது அலி ஜின்னா. அவர்களுடைய நோக்கமும்
கண்ணோட்டமும் வேறு. ‘இந்துக்களும் முஸ்லிம்களும்
வெவ்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நாட்டில்
சேர்ந்து வாழ வேண்டியவர்கள்’ என்பது சாவர்க்கரின்
கண்ணோட்டம். அவர் இந்தியா பிளவுபடுவதை
விரும்பவில்லை. ‘இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்தனி
தேசங்கள், அவர்கள் தனித்தனியாக இரு வேறு நாடுகளில்
வாழ வேண்டியவர்கள்’ என்பதுதான் ஜின்னாவின்
கண்ணோட்டம்.

70 ஆண்டுகளுக்கு முன்னால் பாகிஸ்தான் உருவானதை
அடுத்து முஸ்லிம் லீகின் கோரிக்கை
பூர்த்தியடைந்துவிட்டது; அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட
‘இந்து ராஷ்டிரம்’ என்ற கோரிக்கைக்கு என்னவாயிற்று?

கடந்த 70 ஆண்டு அரசு மதச்சார்பற்றது, இந்தியச் சமூகம்
பன்மைச் சமூகமாகவும் தொடர்கிறது. இங்கே மதத்துக்கு
அரசாங்கத்திடம் எந்த வேலையும் கிடையாது;
அரசாங்கத்துக்கும் மதத்தின் மீது ஆர்வம் கிடையாது.

இதுதான் இதுவரை இருந்த நிலை. இது அதிகாரப்பூர்வமாக
மாற்றப்பட்டுவிட்டதா? இல்லை. ஆனால் அந்த நிலைமை
இப்போது அரிக்கப்படுகிறது. இந்து ராஷ்டிரத்துடன் வரலாற்று,
கலாச்சாரத் தொடர்புள்ளவர்கள் நீண்ட நாட்களாக நெஞ்சில்
வளர்த்துவந்த சித்தாந்தங்களை இப்போது பல்வேறு
வழிகளில் பதியவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததைப்போல ஆங்காங்கே சில
சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஊடுருவும் அச்சம்

முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர், பெரும்பான்மை இந்துக்களின்
மூச்சுக்காற்றினாலே ஊதித் தள்ளப்படுவோம் என்று
கிறிஸ்தவர்கள் கலங்குகின்றனர், தாங்கள் தாக்கப்படுவோம்
என்ற அச்சம் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு
ஏற்பட்டிருக்கிறது, அரசின் கோபத்துக்கு இலக்காவோம் என்று
மாற்றுக் கருத்துள்ளோர் நினைக்கின்றனர். கால்நடை
வியாபாரி அஞ்சுகிறார்; அசைவம் சாப்பிடுகிறவர், ‘இது
மாட்டுக் கறி அல்ல’ என்று அலறுகிறார். பத்திரிகையாளர் தன்
கருத்தைக் கூறத் தயங்குகிறார். நம்பிக்கைத் துரோகம்
செய்யப்பட்டிருப்பதாக விவசாயி குமுறுகிறார், பட்டியல்
இனத்தவர்களும் பழங்குடிகளும் தங்களுக்குப் பாதுகாப்பே
இல்லை என்று அஞ்சுகின்றனர். நிர்வாகத்தாலோ
காவல்துறையாலோ பாதிக்கப்பட்டவர்கள் அதை
சொல்லக்கூட அஞ்சுகின்றனர்.

அரசுக்கு எதிராகக் கருத்து சொன்னால், தேசத்துக்கு எதிரான குற்றமாகக் கருதப்படுகிறது.

அச்சம் என்பது கண்ணுக்குத் தெரியாத புகையைப் போல;
உங்களை சூழ்ந்துகொள்ளும். எப்போது வேண்டு மானாலும்
வெடித்துச் சேதப்படுத்திவிடும். சுதந்திரப் போராட்டத்துடன்
எந்த வகையிலும் தொடர்பில்லாத ‘புதிய தலைமுறை’ 70-வது
சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்து சமூகத்துக்கு
உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சில பிரிவுகளை அது
இலக்காகக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள
சக்திகளுக்கு அது வலுவான மாற்று. அது இஸ்லாத்துக்கும்
உள்ளேயேயும் வெளியேயும் இருப்பதை நோக்கிக் கவனம்
செலுத்துகிறது. அது இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல;

இரட்டைப் பிரிவினைவாதிகளின் மதம் இஸ்லாமோ
இந்துவோ கிடையாது; பிளவுபடுத்தல்தான் மதம்.

70-வது சுதந்திர தினம், தேசப் பிரிவினை ஆகிய நிகழ்வுகளின்
விழாவின்போது, இந்தியாவை மீண்டும் பிளவுபடுத்தும்
மதவாத சக்திகளின் முயற்சிகளுக்கு நாம் இடம்
கொடுக்கக்கூடாது.

( திரு.கோபால கிருஷ்ண காந்தியின் கட்டுரைக்காக – நன்றி – தி இந்து (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: சாரி )

—————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to இன்று நிச்சயமாக தோற்கப்போகிற ஒருவர் …..

 1. NS RAMAN சொல்கிறார்:

  Except Gandhi surname he is no way connected to Mahatma and more close to Sonia Gandhi

  I am wondering why congress was not considered him while in majority and nominated leader like MRS Paratibha

  • peace சொல்கிறார்:

   The Opposition has decided to field Mahatma Gandhi’s grandson and retired IAS officer Gopal Krishna Gandhi as its joint candidate for the vice-presidential election. – India Today

 2. புதியவன் சொல்கிறார்:

  நாடு பிரிவினை அடைந்தபோது (அதற்கு முக்கிய, ஒரே காரணம் முகமது அலி ஜின்னாவும் அவரை ஆதரித்த சில இஸ்லாமியத் தலைவர்களும் மட்டும்தான். ஏற்கனவே எழுதியதுபோல், ஜின்னா, தான் என்றுமே ஒன்றுபட்ட இந்தியாவில் தலைவர் ஆக முடியாது என்பதால்தான் பிரிவினையில் உறுதியாக நின்றார். தலைவர் எவ்வழி, அவ்வழி அந்தச் சமுதாயமே திருப்பப்பட்டது). பிரிவினை வட இந்தியாவில் ரத்தக்களறிதான் சந்தேகமில்லை. உறுப்பை, மயக்க மருந்து இல்லாமல் சிறிய பிளேடால் பிளப்பதுபோன்றதுதான் அப்போது நடந்தது. இதைப் பற்றி விரிவாகப் படித்திருக்கிறேன். நடந்தது நல்லதுக்கே என்றுதான் எடுத்துக்கொள்ளணும்.

  கோபால கிருஷ்ண காந்தி, காங்கிரஸ் சார்பானவர். அதனால் அவர் கருத்து பொதுக்கருத்தாக, நடுனிலைக் கருத்தாக இருக்க முடியாது.

  “கடந்த 70 ஆண்டு அரசு மதச்சார்பற்றது, இந்தியச் சமூகம் பன்மைச் சமூகமாகவும் தொடர்கிறது. இங்கே மதத்துக்கு அரசாங்கத்திடம் எந்த வேலையும் கிடையாது; அரசாங்கத்துக்கும் மதத்தின் மீது ஆர்வம் கிடையாது” – இந்தக் கருத்தை பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (அதாவது மெஜாரிட்டி மக்கள்). காங்கிரஸ் அரசுகளில் என்ன என்ன நடந்தது என்று எழுத ஆரம்பித்தால், இவருடைய கருத்து பல்லிளிக்க ஆரம்பித்துவிடும். அதனால், கோபால கிருஷ்ண காந்தியின் கருத்துக்களை காங்கிரஸ் கட்சி உறுப்பினரின் கருத்தாகத்தான் கருத முடியும். அவருடைய கருத்து தவறு, ஏற்றுக்கொள்ள இயலாது. காங்கிரஸ் மதச்சார்பற்றதாக நடந்துகொண்டதற்கு ஒரு உதாரணமும் கிடையாது.

  இவருக்கு மதிப்பு கொடுத்து இவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கவில்லை. அப்படி இருந்தால், இவர், பிரதீபா பாட்டீலைவிட சுமாரான குவாலிட்டி என்று காங்கிரஸ் சொல்வதுபோல் ஆகிறது. இப்போது பலியிட இந்த ஆடு காங்கிரசுக்குக் கிடைத்துள்ளது. கருணானிதி, வெற்றிபெரும் வாய்ப்பு இருக்கும்போது தன்னலமாகவும், தோல்விபெறுவோம் என்று நினைக்கும்போது மற்றவர்களை மதிப்பதுபோல் அவர்களுக்கு வாய்ப்புகொடுப்பார். இதுதான் காங்கிரசின் புத்தி.

  ஊடுருவும் அச்சம் – இதனைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. பெர்சப்ஷன் அது. நான் இருந்த ஊரில் போலீஸ் ஸ்டேஷன், காவல்துறையினர் கிடையாது. யார் என்ன செய்கிறார்கள், என்ன நோக்கம் என்பதைப் பார்க்க யாருமில்லை. குற்றம் செய்கிறவர்கள் தைரியமாக இருந்தார்கள். அரசாங்கம் போலீஸ் ஸ்டேஷன் அமைத்தது. காவலர்கள் ரோந்து வர ஆரம்பித்தனர். குற்றம் செய்தவர்கள் அச்சப்பட ஆரம்பித்தார்கள். ஊர்த்தலைவர் சொன்னார், போலீஸ் வருவதால்தான் நம்ம ஊர் மக்களில் சிலர் அச்சப்படுகிறார்கள், பயம் கொள்கிறார்கள் என்றார். அந்தக் கருத்துக்கு நேர்மையாக இருந்த மக்கள் மதிப்புக் கொடுக்கவில்லை.

 3. LVISS சொல்கிறார்:

  Talking of Gandhi’s grandsons here is another of his grandson Kanubhai —

  http://zeenews.india.com/news/india/did-you-know-mahatma-gandhis-grandson-kanubhai-stays-in-an-old-age-home-in-delhi_1885323.html

  We are all familiar with the photo of a small boy pulling Mahatma Gandhi’s walking stick on Dandi beach during salt satyagraha –He is this Kanubhai in that photo —

 4. Sundar Raman சொல்கிறார்:

  அவர் ஆம் ஆத்மீ கட்சியுடன் சேர்ந்து – பா.ஜா .கா ஆபிஸ் முன்பு ..ஒரு பெரிய கல்லெறி போராட்டம் நடந்த பொழுது , அசுதோஷ் என்ற முன்னாள் பத்திரிகையாளர் , கல்லெறியும் பொழுது மிகவும் அருகில் இருந்து …மிகவும் ஆக்ரோஷமாய் அதில் பங்கேற்றார். யாரையும் தடுக்கவில்லை …. பங்கேற்றார் என்று கூட சொல்வார்கள் .

 5. Chaaru... சொல்கிறார்:

  ஜெர்மணி பிரிக்கப்பட்ட போதும் மக்கள் இயல்பாகவே ஒன்றாய் சேர்ந்துவிட்டார்கள். வடக்கு தெற்கு வியட்னாம் கூட அப்படித்தான்.
  ஸ்காட்லாந்து ஓட்டெடுப்பில் பிரிட்டன் கூட இருப்பதாக சொல்லிவிட்டது.
  மக்கள் மனதில் பிரிவினை இருந்தாலே ஒழிய தலைவர்கள் மட்டும் பிரித்து விட முடியாது.
  உதாரணமாக வட-தென் கொரியா இணையவில்லை. சோவியத் குடியரசு உடைந்துவிட்டது. சீனா திபேக் பிரச்சினைகளை இன்றும் சந்தித்துவருகிறது.
  வரலாறு முழுவதும் பல பிரிவினை- சேர்ந்தது பற்றி நிறைய கூறலாம்.
  பிரிவினை மட்டும் கூட தலைவர்கள் செய்யலாம். இந்த அளவுக்கு திட்டமிட்ட வன்முறை மக்களுக்குள் பலகாலம் வெறுப்பாக எரிந்துகொண்டிருந்தால் மட்டுமே சாத்தியம்.
  காந்தி மட்டும் வந்து இதை தடுத்திருக்க முடியாது. ஜின்னா மட்டும் தனியாளாக வன்முறை செய்திருக்க முடியாது.
  இன்றும் கூட வட இந்தியாவில் மதப்பிரிவினைகள் அதிகம்.
  எடுத்துக்காட்டாக “தனி” தமிழ்நாடு கோரிக்கை இருந்தாலும் யாரும் இந்தியா-தமிழகத்தில் கண்டுகொள்வதில்லை.
  தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வன்முறையில் ஈடுபடுவதில்லை.
  இத்தனைக்கும் வட இந்தியாவிற்கும் தமிழகத்துக்கும் வேறுபாடுகள் உண்டு.
  அதுபோல வட இந்திய மதப்பிரிவினைகள் தெற்கே செல்லுபடியாவதில்ல. 1947-ல் கூட இங்கே வன்முறை பெரிதாக இல்லை.

  • Sekar சொல்கிறார்:

   You are Right.
   மதவாதம் தமிழ் நாட்டில் ஜெயிக்கவில்லை என்பதால் தான்
   பாஜக வால் இங்கே கால் ஊன்ற முடியவில்லை. இல்லையென்றால்,
   எப்போதோ வந்திருக்கும். கோயம்புத்தூரில் கொஞ்சம் முயற்சி
   நடக்கிறது. கேரளாவில் புகுந்து விட்டது.

 6. selvarajan சொல்கிறார்:

  ” ஊடுருவும் அச்சம் ” என்று அவர் கூறியுள்ள கருத்துக்கள் தற்போது நடைமுறையில் ஓரளவுக்காவது இருக்கிறதா .. இல்லையா .. என்பதற்குள் செல்ல [ ஊடுருவ ] யாருக்கும் விருப்பம் இல்லையோ …. ?
  // 70-வது சுதந்திர தினம், தேசப் பிரிவினை ஆகிய நிகழ்வுகளின்
  விழாவின்போது, இந்தியாவை மீண்டும் பிளவுபடுத்தும்
  மதவாத சக்திகளின் முயற்சிகளுக்கு நாம் இடம்
  கொடுக்கக்கூடாது.// என்று அவர் கூறுவது எதார்த்தம் … பிரிவினை பேசினால் — கேட்டால் தேர்தலில் நிற்க முடியாது என்கிற சட்டத்தினால் தானே ” தனித் தமிழ்நாடு ” கோரிக்கை கோஷம் கைவிடப்பட்டது என்பது வரலாறு …

  வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு — இன – மொழி – மத சிறுபான்மையினரை புறக்கணித்தல் – – அடிப்படை உரிமைகளை பறித்தல் — முதலாளித்துவ கொள்கைகள் போன்றவைகள் தான் பிரிவினை வாதம் தோன்றும் விளை நிலங்களாக உள்ளன — இவைகள் அனைத்தையும் தூண்டிவிடும் சக்திகள் தான் ” இந்தியாவின் ஒற்றுமைக்கு ” பெரும் ஆபத்தை உருவாக்கும் … ! ஏகாதிபத்தியத்தில் ஊறித் திளைக்கும் சக்திகள் இவைகளை தூண்டி விட்டு குளிர் காய நினைப்பதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது என்பதே அனைவரும் விருப்பமாக இருக்கணும் … அப்படித்தானே … ? // இன்று நிச்சயமாக தோற்கப்போகிற ஒருவர் ….. // என்று அவர் இருந்தாலும் அவரின் கட்டுரை போற்றத்தக்கது …. தோற்றாலும் ” மேன்மக்கள் – மேன்மக்களே ” ….!!!

 7. Antony சொல்கிறார்:

  //“பிரிட்டிஷார் பூட்டிய அடிமை விலங்கிலிருந்து நாளை நாம்
  விடுதலை பெற்றுவிடுவோம்; ஆனால், இன்று நள்ளிரவு
  முதல் இந்துஸ்தானம் இரண்டாகப் பிளவுபட்டுவிடும்//
  When Hindustan has been a single country?
  Please someone explain without enmity.

  • தமிழன் சொல்கிறார்:

   பாரதம் ஒருபோதும் ஒரே தேசமாக இருந்ததில்லை. அங்கு போவானேன்… தமிழ் நாடே ஒரே தேசமாக எப்போதும் இருந்ததில்லை. ஆனாலும், பாரதம் முழுமையும் ஒரே விதமான கலாச்சாரம், நம்பிக்கைகள் இருந்தன. பாரதம் முழுவதையும் பிரிட்டிஷார் ஆண்டுகொண்டிருந்ததால், ‘ஒரே தேசம்’ என்ற உணர்வு இருந்தது (ஆனாலும் பல தேசங்கள் ஆண்டுகொண்டிருந்தன).

   இந்திரா காந்தி, contrary to agreement by British with various rulers, சமஸ்தானங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை நிறுத்தும் சட்டம் கொண்டுவந்தார். அது நிறைவேற்றப்பட்டபோது, மௌன்ட் பேடன் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டதாகவும், நம்பிக்கையைச் சீர்குலைத்த ஒரு சட்டமாகவும் இதைக் கருதியதாகப் படித்திருக்கிறேன்.

   • Antony சொல்கிறார்:

    Thank you Thamizhan,
    If it never had been a single country, What the point behind Gandhi’s quoted statement? And how can it be said that Jinna or his commuinity has divided the country?

    • தமிழன் சொல்கிறார்:

     அந்தோனி-பிரிட்டிஷ்காரர்கள், ஒரே இந்திய சமஸ்தானமாகத்தான் பார்த்தார்கள். அப்படியே அதனை இந்தியர்களிடம் (தலைவர்களிடம், அதாவது காந்தி மற்றும் அவர் கைகாட்டிய நேரு, வல்லபாய்படேல், ஜின்னா போன்றவர்களிடம்) ஒப்படைப்பதற்காகப் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. சமஸ்தானங்கள் இருந்தபோதும், ‘விடுதலை’ என்ற உணர்வில் எல்லோரும் ஒரே தேச மக்களாகத்தான் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள் (1900 ஆரம்பத்திலிருந்து). அப்போதுதான் (1946 இறுதியில்), ஜின்னா, தான் ஒன்றுபட்ட இந்தியாவில் தலைவர் அல்லது முக்கிய பதவிக்கு வரவே முடியாது என்பதால், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று பிரித்துத் தரவேண்டும், நாங்கள் இந்தியாவின் கீழ் இருக்கமாட்டோம் என்று பேச, அதற்கு நிறைய ஆதரவு (மத ரீதியாக உணர்வுபூர்வமாக) திரள ஆரம்பித்தது. (இந்த எண்ணம் 45 களிலேயே வந்திருக்கவேண்டும்). இதை சரிசெய்யமுடியாது என்பது மௌன்ட் பேட்டனுக்கு நிச்சயமாகப் புரிந்துபோனது. அப்போதுதான், வேறு வழி தெரியாமல் (ஏனென்றால், பிரிட்டிஷ் அரசாங்கம், மே- ஜூலைக்குள் 1947) இந்தியாவைவிட்டு முழுமையாக விலகிவிடவேண்டும் என்று தீர்மானித்துவிட்டது. அதற்கேற்பதான் மௌன்ட் பேட்டனுக்கு சொல்லப்பட்டது. – இது பல பல பிரச்சனைகள் நிரம்பிய கதை. இடம் போதாது. உங்கள் கற்பனைக்கு விடுகிறேன். லைப்ரரியில் இருந்த புத்தகங்கள் முதற்கொண்டு, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பிரித்துத்தரப் பட்டது. எல்லையை நிச்சயம் செய்வது மிக மிகக் கடுமையான எல்லோரும் (இரு தரப்பாரும்) குறை சொல்லும் பணி. இதனை பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் முடிந்த அளவு சரியாகச் செய்தார்… எழுதினால் ரொம்ப நீண்டுவிடும். (எல்லா இந்தியர்களும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம், நள்ளிரவில் சுதந்திரம், டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ் எழுதியது, தமிழில் மயிலை பாலு, வி.என். ராகவன், 677 பக்கங்கள், அலைகள் வெளியீட்டகம். இதைப் படிக்காமல், மற்ற வரலாறைப் படித்துப் பிரயோசனம் இல்லை. அப்போதுதான் எப்படி சுதந்திர இந்தியா மலர்ந்தது என்று தெரியும்).

     அப்படி பிரிக்கும்போது, இந்தியாவுக்குள் (அதாவது நம் எல்லைக்குள்) மெஜாரிட்டி முஸ்லீம்களோ அல்லது முஸ்லீம் அரசோ இருந்ததை, இந்தியாவுடன் இணைக்கவும் – ஹைதிராபாத் நிஜாம் முஸ்லீம் அரசு இந்துக்கள் மெஜாரிட்டி போன்ற, மற்ற எல்லா சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்ததில் வல்லபாய் படேலின் முயற்சியும் சாதுர்யமும் இரும்பு மனமும் மிகவும் போற்றத்தக்கது.

     இடையில் மாட்டிக்கொண்டது, காஷ்மீர் அரசு ஒன்றுதான். அங்கு முஸ்லீம் மெஜாரிட்டி, ஆனால் இந்து அரசர். பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தேவையில்லாத நகர்வால், காஷ்மீர் அரசர் இந்திய உதவி கேட்க, இந்தியாவுடன் இணைந்தால் உதவுவோம் என்று சொல்லி, இக்கட்டான நிலையில் காஷ்மீர் அரசர் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட (அவரது ஒரிஜினல் எண்ணம், தனி அரசாக, தனி நாடாக இருப்பது. சிலர் அந்த ஒப்பந்தமே வேறு வழியில்லாமல் கையெழுத்திடப்பட்டது என்பர்), அதற்கப்புறம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்தது. டெக்னிக்கலாக காஷ்மீர் தேசம் இந்தியாவுடன் வந்தது. (இதனை மனதளவில் ஏற்கமுடியாமல், ஏனென்றால் முஸ்லீம் மெஜாரிட்டி காஷ்மீரின் ஒரு பகுதியில்-ஜம்மு தவிர்த்து, அப்போதிலிருந்து பாகிஸ்தான், காஷ்மீர் மக்களின் மத உணர்வைத் தூண்டிவிட்டு, நிம்மதி இல்லாத பிரதேசமாக காஷ்மீர் ஆகிவிட்டது. இந்த உணர்வு எப்போதும் இருக்கவேண்டும் என்பதால், காஷ்மீரி பண்டிட்டுகள், இந்துக்கள் கொல்லப்பட்டனர் அல்லது விரட்டப்பட்டனர்)

     இப்படிப் பிரித்ததில், இரு வேறு சம்பந்தமே இல்லாத இடங்களாக பாகிஸ்தான் பிரிந்தது (கிழக்கு, மேற்கு). இரண்டுக்கும் இடையில் வேறு நாடுகள். தங்கள் ஆளுமை எப்போதும் இருக்கவேண்டும் என்பதால், மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தானை அடக்கியது, அங்கு பொம்மை அரசு அமையுமாறு செய்ய முயற்சி செய்தது. மக்கள் அரசான ஷேக் முஜிபுர் ரஹ்மானை ஏற்கவில்லை. அப்போதுதான், இந்திரா அவர்கள் திட்டமாக, இந்தியா நுழைந்து, அதனை பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று இரு நாடுகளாக ஆக்க, கிழக்கு பாகிஸ்தானுடன் சேர்ந்து போர் நடத்தி, கிழக்கு பாகிஸ்தானை தனி நாடாக ஆக்கியது 70கள்ல.

 8. srinivasanmurugesan சொல்கிறார்:

  மிகை படுத்தப்பட்ட கட்டுரையாகத்தான் இதனை காண்கிறேன்.

 9. LVISS சொல்கிறார்:

  When a Pakistani woman living in India for so many years does not fear for her safety why are we being told the repeated lies that minorities in India are feeling threatened –Recently a Pakistani woman said she wished Sushma Swaraj was their PM – What makes these people say these good things about our country while our own people mislead us –Many from Pakistan come here for treatment –They are not afraid of their safety — Why do we degrade ourselves like this — Some celebrities here threatened go away from this country because there is growing intolerance — How many of them did and why didnt they go – Deep within them they know they are living in one of the safest countries in the world– There are terrorists at the borders and terror modules inside the country ,.naxalites in some states — In the midst of all this ,our jawans at the borders and the security apparatus within the country like the Police and others do their best to make our life safe–

  “All the prosecuted people throughout the ages will find refuge in India where they will practice their religion in peace ” — Nostrodamus is reported to have predicted this 400 years ago —

  • புதியவன் சொல்கிறார்:

   இந்தியா, மத சம்பந்தப்பட்ட விதத்தில், மற்ற தேசங்களைவிட உயர்ந்ததுதான். பாஜகவைக் குறை சொல்பவர்களை நான் ஏற்கவில்லை. அப்படிக் குறை சொல்லுபவர்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஒரு விஷயம் (யாரும் தொடவில்லை என்பதால்) சொல்லுகிறேன்.

   கூடங்குளம் அணுமின் நிலையம் ஆரம்பிப்பதைத் தடுக்க வெகுவாக போராடிய உதயகுமாரின் பின்னணி, அதற்கு காசு வந்த விதம் போன்றவை யாருக்கும் தெரியாது. ‘மதச்சார்பற்ற’ என்று பொய் சொல்லிக்கொண்டிருந்த காங்கிரஸிலிருந்து, கடைசியில், மன்மோகன் சிங் அவர்கள், ‘உதயகுமாருக்கும் மற்ற என்.ஜி.ஓக்களுக்கும், அதாவது கிறித்துவ, வெளி’நாட்டிலிருந்து பணம் வரும் வழி அடைக்கப்படும், அதைப்பற்றி உன்னிப்பாக ஆராயப்படும்’ என்று சொல்லி, அதனை நோக்கி சில அடிகள் வைத்தபிறகுதான் அந்தப் போராட்டம் அடங்கியது. இதனை நீங்கள் பத்திரிகைகளில் படித்திருக்கலாம்.

   நான் வெளியிலிருந்து பார்க்கிறேன். எனக்கு அங்கு (இந்தியா, தமிழ்’நாடு) இருக்கும் மத சம்பந்தமான பிரச்சனைகள், எதிர்காலத்தில் எங்குபோய் விடும் என்பதெல்லாம் தெளிவாகத் தெரிகிறது. தமிழ் நாடு ‘மத சார்பற்ற அமைதியான’ தேசம் என்று சொல்வது, சொல்பவர்கள் அதனைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பேசுபவர்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறார்கள். இந்த விஷயத்தில் எனது முழு ஆதரவும் பாஜக மற்றும் அந்த அரசின் தலைமை மோடி அவர்களுக்கு உண்டு. They are doing the right thing. என்னைக்கேட்டால், தேவையில்லாமல் மத வெறி கொண்டு பேசும் பேச்சுக்களையும், நிகழ்வுகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் போதும் (எவனேனும் பசு வைத்திருந்தால் வெறியர்கள் கொல்வது, ஹெச்.ராஜாவின் ஒவாயிஸ் போன்ற த்வனி பேச்சு, காதலர் தினத்தில் அராஜகம் செய்வது-அதாவது தாலி கட்டு என்று வற்புறுத்துவது போன்று தேவையில்லாமல் பதட்டம் ஏற்படுத்தும் கயவர்கள்)

   • புதியவன் சொல்கிறார்:

    இன்னொன்று, பாஜக அரசு பதவி ஏற்ற பிறகு, வெளி நாட்டு நிதி, மற்றும் சேரிட்டி, என்.ஜி.ஓ க்களுக்கு அனுப்பும் பணம் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது. நான் ஒரு தடவை பணம் அனுப்ப முயற்சித்தபோது, எக்சேஞ்சில், ‘பணம் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது’ என்று சொன்னார்கள். சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். மத்திய அரசு இந்த மாதிரி (unreasonable foreign money-used for different purposes like religion conversion etc.) தடை செய்துள்ளதால், ஒரு அமெரிக்க சேரிட்டி ஆர்கனைசேஷன், இதனால் 1 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன, அதில் எல்லா மதத்தைச் சேர்ந்த ஏழைகளும் இருக்கிறார்கள், அதனால் தடையை நீக்கவேண்டும் என்றெல்லாம் இந்தப் பிரச்சனையைப் பெரிதாக்கி மத்திய அரசை அணுகியது. அப்போதும் மத்திய அரசு வளைந்துகொடுக்கவில்லை என்று படித்த ஞாபகம்.

    நல்லா நாம ஞாபகம் வச்சுக்கணும். அவனவன் ஊரிலேயே லட்சக்கணக்கான மக்கள் அல்லலுறும்போது, அதற்கு வழி செய்யாமல், ஏன் இந்தியாமேல் அவர்கள் கருணை காட்டவேண்டும்? இதைப் பற்றி நிறைய எழுதலாம்.

    நல்ல எண்ணத்தோடு எழுதும் கா.மை சார் போன்றவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாது என்றுதான் நான் நினைக்கிறேன். (பத்திரிகையில் பெரும்பாலும் வருவதில்லை) அவருடைய நல்லெண்ணத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ‘அன்பு’ எல்லா இடத்திலும் செல்லுபடியாகாது.

   • சேதுராமன் சொல்கிறார்:

    புதியவன்,

    // இந்த விஷயத்தில் எனது முழு ஆதரவும் பாஜக மற்றும் அந்த அரசின் தலைமை மோடி அவர்களுக்கு உண்டு. They are doing the right thing. என்னைக்கேட்டால், தேவையில்லாமல் மத வெறி கொண்டு பேசும் பேச்சுக்களையும், நிகழ்வுகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் போதும் //
    கலவரங்களுக்கும், religious polarization க்கும் காரணமானவர்கள் யார் ? உ.பி.சட்டமன்ற தேர்தலில்இந்து வாக்கு வங்கியை மனதில் வைத்து தேர்தல் பிரச்சாரங்களில் குறி வைத்து தாக்கிப்பேசியது யார் ? கலவரங்கள் உருவாக காரணமானவர்களைத்தான் நீங்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் வாயை மூடிக்கொண்டு, நிர்வாகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாலே கலவரங்கள் காணாமல் போய்விடும்.
    எங்கோ உட்கார்ந்துகொண்டு பார்க்கிறீர்கள் அல்லவா அதான்
    உங்களுக்கு தரை நிலவரம் தெரியவில்லை.
    பசுவின் பெயரால் கொலைவெறியில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் ?
    இந்த நாட்டில் கிறிஸ்தவர்கள் எப்போதாவது கலவரத்தில் ஈடுபட்டு பார்த்திருக்கிறீர்களா ? தேவையில்லாமல் அவர்களை ஏன் இங்கு இழுக்கிறீர்கள் ?

 10. Phillips சொல்கிறார்:

  Mr.Puthiyavan,

  விடைபெறும் துணை ஜனாதிபதி இன்று பேசி இருப்பது –

  ராஜ்யசபா தொலைக்காட்சியில் ஹமீது அன்சாரி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒருவித அச்சத்துடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். பாதுகாப்பு உணர்வின்மை இஸ்லாமியர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் சமூக மதிப்பீடுகள், தார்மீக உணர்வு அனைத்து இடங்களிலும் வீழ்ந்து வருகிறது. நமது தேசபக்தி என்பது அனைத்து நேரத்திலும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை.

  இந்தியாவில் பெருகிவரும் சகிப்புத்தன்மையின்ப்மை குறித்து பிரதமர் மோடியிடம் கேட்டேன். ஆனால் அவர் கூறிய பதிலை வெளிப்படையாக கூறுவது ஜனநாயக மரபுக்கு எதிரானது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது வெளிப்படையான ஒன்று. இவ்வாறு ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.

  Read more at: http://tamil.oneindia.com/news/india/muslims-under-threat-india-told-hamid-ansari-292345.html

  • புதியவன் சொல்கிறார்:

   நன்றி இளங்கோ, சேதுராமன், பிலிப்ஸ் உங்கள் பதிலுக்கு.. – உங்கள் கருத்துக்கள், என் மனதில் சலனம் ஏற்படுத்தவில்லை. இந்த டாபிக் இதற்குமேல் விவாதிக்கவேண்டாம். ‘ஹமீது அன்சாரி’ அவர்கள் இப்போது வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம் (அப்படி ஏதாகிலும் இருந்தால்). Ground Reality – I am completely aware of, not through magazines and பிரச்சார ஊடகங்கள், but from people on the ground and I am there.

 11. LVISS சொல்கிறார்:

  This talk of intolerance in our country by the secularists will not wash as long as Kashmiri Pandits who live as refugees in their own country are not taken back by those who displaced them –Was it not a sign of extreme intolerance to these people —
  The incumbent Vice President spoke on the same subject and debunked all this talk of intolerance —
  Every time the secularists talk of intolerance they conveniently forget about the effect of intolerance on the Kashmiri Pandits —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.