சண்டிகார் பெண் அவலம் – மகனையா, பெற்றவரையா, கட்சியையா…யாரைச் சொல்ல….?


29 வயது இளம்பெண் ஒருவர், தனது காரில் இரவு 12
மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரில் அவர்
தனியாக இருந்தார். அவரே காரை ஓட்டி வந்தார்.

அவரை நீண்ட நேரமாக மற்றொரு கார் பின் தொடர்ந்து
வந்தது… பல இடங்களில், அவரது காரை முந்தி, அதை
நிறுத்தச்செய்ய முயன்று கொண்டிருந்தது.

அவரது காரை நிறுத்தச் செய்யும் முயற்சி தொடர்ந்து
கொண்டிருந்தது. பலமுறை, பல சிக்னல்களை
தாண்டிச் சென்றும், அவள் துரத்தப்படுவது
நிறுத்தப்படவில்லை. பயந்துபோன அந்தப்பெண், காரை
ஓட்டிக்கொண்டே, அவசர போலீஸில் விஷயத்தை சொல்லி
உதவி கேட்டிருக்கிறார்…

போலீஸ் உதவி வரும் முன்னர், ஒரு சந்தர்ப்பத்தில்,
ஒரு சிக்னலில், காரை நிறுத்த வேண்டிய கட்டாயம்
ஏற்படுகிறது. உடனே அவரை பின் தொடர்ந்து வந்த காரும்
அருகேயே நிறுத்தப்பட்டு, அதிலிருந்து ஒரு இளஞன் இறங்கி
வந்து, இந்த பெண்ணை வெளியே வருமாறு
அழைத்திருக்கிறான்.

இந்தப்பெண், பயந்துகொண்டு பதில் பேசாத நிலையில்,
காரின் கண்ணாடியை பலமாக குத்தி, அவளை இறங்கி
வெளியே வரச்சொல்லி நிர்ப்பந்திக்கிறான்.

இந்த வேளையில் போலீஸ் உதவி வருகிறது. அந்தப்பெண்
போலீசிடம், தான் நீண்ட நேரமாக அவர்களால் துரத்தப்பட்டு
வந்ததையும், கீழே இறங்கி இருந்தால், தன்னை
கடத்திக்கொண்டு போய் விடுவார்கள் என்று
அச்சப்பட்டதாகவும் கூறி இருக்கிறாள்.

போலீஸ் அந்த வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு
அழைத்துப்போய் -விசாரித்திருக்கிறது. அவன் குடித்து விட்டு
கார் ஓட்டி வந்ததும் சோதனையில் நிரூபணமாகி இருக்கிறது.

அவன் மீது FIR பதிவு செய்யப்பட, அதற்குள்ளாக
அந்தப்பெண்ணின், தந்தை அங்குவர, அந்தப்பெண் வீடு
திரும்பி இருக்கிறாள்.

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் – சண்டிகர்.

காலையில் மீடியாவில் செய்திகளை பார்க்கும்போது தான்
அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது….
தாங்கள் எப்பேற்பட்ட சிக்கலில் மாட்டி இருக்கிறோம்
என்பது …

ஆம்… அவர்கள் புகார் கொடுத்தது சாதாரண பொறுக்கி பற்றி
அல்ல… திருவாளர் சுபாஷ் பராலா என்னும் ஹரியானா
மாநில பாஜக தலைவரின் செல்ல மகனாகிய “விகாஸ்
பராலா” என்னும் “பெரும்” பொறுக்கி பற்றி என்று…..!

மீடியாக்கள் மேலும் வெளியிட்டிருந்த செய்திகள் –
மதுவருந்தி விட்டு காரை ஓட்டியதாகவும், பெண்ணை பின்
தொடர்ந்ததாகவும் விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர்
ஆஷிஷ் குமார் ஆகியோர் மீது சண்டிகர் போலீசாரால் FIR
பதிவு செய்யப்பட்டு, அன்றே அவர்கள் ஜாமீனிலும்
விடப்பட்டு விட்டதாக…!!!

————————

சண்டிகர் – பஞ்சாபுக்கும், ஹரியானாவிற்கும் -பொதுவான
தலைநகரம். ஒரு யூனியன் பிரதேசம் ( Union Territory).
இதன் நிர்வாகம், காவல் துறை – கவர்னர் மூலமாக
நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
தற்போதைய சண்டிகர் கவர்னர் பாஜகவை சேர்ந்தவர்….

————————–

ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்கிறது.
இந்த செய்தி வெளியானவுடன், ஹரியானா முதல்வர்
கூறுகிறார்…” இந்த சம்பவத்திற்கும் மாநில பாஜக தலைவர்
சுபாஷ் பராலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஒரு
தனிப்பட்ட நபர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது… சட்டம்
அதன் கடமையை செய்யும்…”

——————–

ஹரியானா மாநில பாஜகவின் துணைத்தலைவர் -திருவாளர்
ராம்வீர் பட்டி (மாநில தலைவர் சுபாஷ் பராலாவின், வலது
கரம் ..) ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருக்கிறார்…
” அந்தப்பெண் இரவில் அந்த நேரத்தில் தனியாக எங்கிருந்து
வந்து கொண்டிருந்தார்… ஏன் தனியாக வந்தார்…? ”

————————

தற்போது வெளிவந்திருக்கும் செய்தி –
அந்த கார் துரத்தப்பட்ட வழியில், முக்கியமான ஐந்து
சந்திப்புகளில் பதிவு செய்யப்பட்டிருந்த CCTV வீடியோ
பதிவுகளை காணோமாம்.

இதற்கு பிறகு என்ன நடக்கும்…?
நம்மால் புரிந்து கொள்ள முடியாதா என்ன…?

————————–

அந்த பெண்ணின் தந்தை ஒரு IAS அதிகாரி…
(எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை…)
அவர் தனது முகநூலில் எழுதுகிறார்…

விரும்பாமலே, நாங்கள் ஒரு கடுமையான சூழ்நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் பெரும்
செல்வாக்கு உடையவர்கள் என்பது தெரிய வருகிறது. இந்த
விவகாரத்தால் நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க
வேண்டியிருக்கும் என்பது எனக்கு புரிகிறது. ஆனாலும்,
இரண்டு பெண்களைப் பெற்ற தந்தை என்கிற முறையில்,
இந்த விளைவுகளை நான் எதிர்கொண்டேயாக வேண்டும்.

தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு
தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

என் மகளை அவர்கள் கடத்திச் செல்ல முயன்றார்கள் என்பது
நிச்சயம் தெரிகிறது… அவளுடைய சமயோசித அறிவு,
செய்கைகளாலும், தைரியத்தினாலும் தான் அவள்
தனக்கு நடந்திருக்கக்கூடிய மிகப்பெரிய கொடுமையிலிருந்து
தப்பி இருக்கிறாள். இந்த சம்பவத்தின் போது அவள்
எத்தகைய மன உளைச்சல்களுக்கும், பயத்திற்கும் உள்ளாகி
இருப்பாள்…? இந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவே
அவளுக்கு நீண்ட காலம் பிடிக்கும்.

இந்த தருணத்தில் அவளுக்கு துணையாக நான்
நிற்கவேண்டியது பெற்ற தந்தை என்கிற முறையில் என்
கடமை… விளைவுகள் எதுவானாலும் சரி…

சமூகத்தில் ஓரளவு வசதி கொண்ட என் போன்ற
குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கே – இவ்வளவு
கொடுமைகள் நடக்கக்கூடும் என்றால், இந்த நாட்டில் –
எந்தவித பின்னணியும் இல்லாதவர்கள் கதி என்ன…?

இறுதியாக அவர் எழுதுகிறார் –

“நான் இந்த விஷயத்தை பொதுவெளியில் எழுதுவதற்கு
இரண்டு காரணங்கள் உண்டு.

1) இந்த சம்பவம் பற்றிய முழுமையான உண்மைகள்
மக்களுக்கு போய்ச்சேர வேண்டும்…

2) ஒருவேளை, எதிர்காலத்தில், நான் இதை தனியாக
எதிர்கொள்ள முடியவில்லையென்றால் எனக்கு இந்த
சமூகத்தின் துணை வேண்டும்…

———————————————-

இந்த ஆட்சி அந்த ஆட்சி என்றில்லை …
இந்த கட்சி, அந்த கட்சி என்றில்லை …
எந்த ஆட்சி வந்தாலும் சரி –
எந்த கட்சியில் இருந்தாலும் சரி..
அரசியல்வாதிகளின் குணம் அப்படியே தான் இருக்கிறது.
இதிலிருந்து இந்த நாட்டு மக்கள் “முக்தி” பெறப்போவது
எப்போது…? எப்படி….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to சண்டிகார் பெண் அவலம் – மகனையா, பெற்றவரையா, கட்சியையா…யாரைச் சொல்ல….?

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… சரியான கோணத்தில் இதனை எழுதியிருக்கிறீர்கள். (அதே சமயம், இஸ்லாமியர்கள் சிலரின் உணர்வுகளும் அறிந்துகொள்ள முடிகிறது. அதாவது ஒருத்தன் தவறு செய்யும்போது, அவர்கள் எல்லோரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறோம்).

  …..
  …..

  இந்தமாதிரி ‘பயங்கரவாதி’ விகாஸ் பராலாவைப் போன்றவர்கள்தான் நமக்கு அடுத்த ஜெனெரேஷன் அரசியல்வாதிகள். நல்ல தகப்பன் என்ன செய்திருக்கணும், இவனை உடனே போலீசில் பிடித்துக்கொடுத்து செய்த குற்றத்துக்குத் தண்டனை வாங்கித்தந்திருக்க வேண்டும். நம்ம நாடு ஏன் கீழே போகிறது என்று தெரிகிறதல்லவா? இங்குள்ள அரசியல்வாதிகளை 95% அப்படியே நாட்டை விட்டு வெளியேற்றினால், ஓரளவு சுத்தமாகிவிடும். என்ற மக்கள் எண்ணம் நியாயமானதோ என்று எனக்குத் தோன்றுகிறது.

  ஒரு வருடத்துக்குள்ளாக, அமெரிக்காவில், இந்திய அமெரிக்கப் பெண் (டாக்டருக்குப் படிப்பவர் என்று நினைக்கிறேன்), குடியினால் டாக்சி டிரைவரிடம் முரட்டுத்தனமாக நடந்ததன் காரணமாக, அவர் படித்துக்கொண்டிருந்த கல்லூரி, அவரை வெளியேற்றியது. ‘அமெரிக்காவை’ நம் அரசியல்வாதிகள், மற்றவர்கள் விமரிசிப்பதற்கு முன், நம் நாட்டின் சாக்கடைகளான இந்த பராலா அரசியல்வாதிகளை நாட்டில் தகுதி நீக்கம் செய்யவேண்டும்.

 2. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  அந்தக் குற்றவாளியின் தந்தை தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

  • Sekar சொல்கிறார்:

   கொச்சின் தேவதாஸ்,

   ஏன் பொய்யான செய்தியை இங்கே தர்றீங்க ?
   நீங்களும் அதே கூட்டமா ?

   • கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    தாங்கள் அந்த சம்பவம் நடக்கும்போது அருகில் இருந்து பார்த்த ஐவிட்ணஸ் இல்லையே.
    தாங்களும்,நானும் ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையிலேதான் பகிர்ந்து கொள்கிறோம்.
    இதில் பொய் சொல்வதற்கு என்ன
    தேவை இருக்கிறது.

 3. selvarajan சொல்கிறார்:

  இதுவும் ஒரு சம்பவம் : // பா.ஜனதா தலைவர் ஆம்புலன்ஸை நிறுத்தியதால் உயிரிழப்பு // http://ecnindianews.blogspot.in/2017/08/blog-post_595.html … பா.ஜனதா தலைவரது மகன் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகளை காரில் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளநிலையில், — மற்றுமொரு பா.ஜ.க ” நகராட்சி மன்ற தலைவர் தர்சான் நாக்பால் ” என்பவரின் உன்னத செயல் இது …. ஆளும் வர்க்கம் எதை செய்தலும் வேதனையோடு வேடிக்கை பார்ப்பது தான் இன்றைய நிலையாக இருக்கிறது …

  சட்டம் — ஒழுங்கு — நீதி — நேர்மை என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதுமா … ? பதவி கையில் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் — என்கிற திமிர் ” அரசியல்வாதி — மற்றும் அவரை சார்ந்த அடிவருடிகளுக்கும் ” இருப்பது தான் தற்போதைய நிலை … மாறுமா …? அந்தந்த கட்சியின் தலைமை என்ன பதில் சொல்ல போகிறது … ? இவர்கள் சொல்லாவிட்டாலும் — காலம் ஒரு நாள் சொல்லும் … அராஜகம் என்றும் நிலைக்காது அப்படித்தானே …?

 4. Sekar சொல்கிறார்:

  மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடனேயே பாஜக ஆசாமிகளுக்கெல்லாம்
  ஒரு திமிர். கொம்பு முளைத்து விட்டது. மாநிலத்தில் ஆட்சியில் இல்லா விட்டாலும் கூட அந்த ‘திமிறி’கள் ஆடுவதை டிவி டிபேட்களில் பார்க்கலாம்.
  மண்டைக்கனம் பிடித்து அத்தனை பேரையும் கிள்ளுக்கீரையாக நினைத்து பேசுவார்கள். ஹரியானாவில் பாஜக ஆட்சியில் வேறு இருக்கிறது.கேட்கவேண்டுமா ? எட்டு மணி வரை ஆங்கில செய்தி சேனல்களை பார்த்தேன். பாஜக தலைவர்கள் ஒருவரும் இதைப்பற்றி வருத்தமோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. எல்லாம் மேடையில் வாய்கிழிய பேசுவதுடன் சரி.

 5. LVISS சொல்கிறார்:

  The latest news on this issue is that Mr Subramanian Swamy is going to file PIL in Chandigarh –

  • Sekar சொல்கிறார்:

   அவர் கட்சிக்காரன் செஞ்சது தானே ?
   டிராமா பண்றார்.
   அவரை போய் புல் புடுங்கச் சொல்லுங்க.

  • Sekar சொல்கிறார்:

   நடந்ததை பற்றி கருத்து சொல்லாத உங்களுக்கு
   இந்த செய்தியை இங்கே தர என்ன உரிமை ?

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புலன் விசாரணையில் தலையீடு இருக்கிறது என்பது
  மிகத்தெளிவாக தெரிகிறது.
  5 CCTV தொலைக்காட்சிகளின் பதிவுகள் எப்படி
  காணாமல் போயின…? அதை கண்டுபிடிப்பது காவல் துறைக்கு
  கடினமான காரியமா என்ன ? இதற்குள்ளாக அதை யார் செய்தது என்று கண்டுபிடித்திருக்க வேண்டுமே. ஒருவேளை அவர்களே செய்திருந்தால் – கண்டுபிடிக்க முடியாது தான்……

  பாஜக தலைவர்கள் யாரும் ஏன் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை…?

  ஹரியானா பாஜக தலைவரின் தலையீடு இல்லாமல், விசாரணை திசை மாறி இருக்குமா ? 5 CCTV காட்சிகள் காணாமல் போயிருக்குமா ?
  வழக்கு இலேசாக்கப்பட்டிருக்குமா ? கிரிமினல் செக் ஷன் கள் பலவீனமாக காட்டப்பட்டிருக்குமா..? இப்போது காவல் துறை பதிவு செய்திருப்பவற்றை அனுபவமே இல்லாத துக்கடா வக்கீல் கூட உடைத்து விடலாமே ?

  அந்த பெண்ணின் தந்தை மிக கண்ணியமாக, அதே சமயம் உறுதியாக – தங்கள் நிலையை சொல்லி இருக்கிறார்… கீழே –

  “In a cut and dried case like this, where there is nothing hazy or unclear in terms of actions or identities, if the system fails to deliver justice, then there is something deeply rotten in our society, our government and our country,” he said.

  “The issue is, does our country allow a woman to live as a free and equal citizen, and if she is wronged, does it give her enough confidence to even claim justice? If not, we are no better than a lawless, barbaric society,”

  இந்த நிகழ்ச்சியால் ஒரே ஒரு நல்ல விளைவு ஏற்பட்டிருக்கிறது.
  டெல்லியிலிருந்து வெளியாகும் 4 ஆங்கில சேனல்கள் நீண்ட நாட்களாக
  ஆளும் கட்சிக்கு பயந்து அடிபணிந்திருந்தன…. இன்று அவை பீரிட்டு எழுந்திருக்கின்றன… இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த சப்ஜெக்ட் அங்கே
  தொடரக்கூடும்.

  தமிழ்நாட்டில் வழக்கம்போல் தொலைக்காட்சிகள்…திருவாளர் தினகரன் பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றன….!!!!!

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   Channels which support the govt are “afraid” of the govt ! -The channels including those which are ‘afraid ” of the govt also conduct debates on routine state law and order issues every now and then and try to blow them up as national issues – How come they are ‘afraid ” and “not so afraid ” at the same time –There are channels which air views against the govt –Why are they not t”afraid” of the govt like the other channels —Because our is a functioning democracy–
   Your blinkered view doesnt want to see the obvious — Like the people who voted for BJP in U P and in other elections particularly after demonetisation the channels that you say support the govt out of fear also probably see that the govt is endeavouring to do something good for the people after all–
   Leaders of parties which comprise the NDA did not question the surgical strike thereby giving a chance to our enemy to use it against us — They did not go and sit with those who raised anti national slogans in an educational institution or go to talk peace with seperatists in Kashmir —In such a situation which side you think our channels would stand with —
   The debate on the issue highlighted will continue in all the channels for a few more days including those which are ‘afraid” of the govt —

   • இளங்கோ சொல்கிறார்:

    Mr.Elvis
    For your your information : Chandigarh issue is NOT a State subject.
    Chandigarh is a Union TErritory which is administered by the
    Union Home Ministry through the Governor. ச்ண்டிகார் போலீஸ் நேரடியாக
    உள்துறை அமைச்சகத்துக்கு தான் ரிப்போர்ட் செய்கிறது. அரைகுறையாக
    புரிந்து கொண்டு உளறுவானேன். பிறகு க்ராஸ் கேள்வி எதாவது
    கேட்டால் எதாவது “ஒன்றுக்கு” தான் பதில் சொல்வேன் என்று
    ஒளிந்து கொள்வானேன். பிஜேபி ஆர்வத்தில் உளறுதல்
    தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது போலும்.

 7. இளங்கோ சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார் மன்னிக்க வேண்டும் –

  சூடான,சுவையான செய்தி:

  பாவிகளுக்கு இடமிருக்கும் போது காவிகளுக்கு இடமிருக்காதா?- தமிழிசை சவுந்தரராஜன்.

  http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilisai-s-poser-tamil-nadu-political-parties-292055.html

  பாவிகளும், காவிகளும் ஒன்று தான் என்று பாஜக தலைவர்
  சொல்கிறாரா ? புரியவில்லை. முடிந்தால் விளக்குங்களேன்.

 8. paamaranselvarajan சொல்கிறார்:

  பாவியானவன் பின்னாளில் காவியாவதும் … காவி தரித்தவன் பின்னாளில் பாவியாவதும் ( அடிக்கடி சாமியார்களின் லீலைகள் என்று செய்திகள் வருவது ) நடைமுறை என்பதால் அப்படி கூறியிருப்பாராே … என்னவாே …!

 9. Ganpat சொல்கிறார்:

  https://www.facebook.com/vskundu?fref=mentions

  இந்த செய்தியை விமரிசிப்பவர்கள் அனைவரும் வெர்னிகாவை தங்கள் மகளாக பாவித்து பிறகு தங்கள் கருத்துக்களை சொன்னால் நல்லது

  • புதியவன் சொல்கிறார்:

   கண்பத் – உங்கள் கருத்தை வரவேற்கிறேன். இதுமாதிரி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை, கட்சியாக, அரசியலாக அணுகாமல், ‘வெறும் அரசியல் அதிகாரத்தில் இருந்தால்’ என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யலாமா என்ற கோபக் கேள்வியோடு அணுகவேண்டும். அதுவும் ஏதிலிகளுக்கும் பெண்களுக்கும் எதிரான கொடுமையை, நம் சொந்தத்திற்கு நடந்தான் எப்படி அணுகுவோமோ அப்படி அணுகவேண்டும்.

   குற்றவாளியின் தந்தை கட்சிப் பதவியை ராஜினாமா செய்தால் என்ன, செத்தால் நமக்கென்ன. குற்றம் செய்ததாகச் சொல்லப்படுபவனை உள்ளே போட்டு, பிறகு விசாரணை துவக்கப்படவேண்டும்.

   நிறையபேர், தந்தை குற்றமற்றவர் போல எழுதுகின்றனர். அரசியல்வாதி, ஒழுங்காக தன் மகனை வளர்க்கவில்லை, தன்னுடைய அரசியல் செல்வாக்கால், சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரு கழிசடையை வளர்த்துள்ளான்.

   இந்தக் குற்றத்தில் ஒரு நல்லது நடந்துள்ளது. பெண், தைரியமான தந்தையை, படித்த தந்தையைப் பெற்றுள்ளார். அதனால் விஷயம் பரவலாகச் சென்றடைந்துள்ளது. இல்லையென்றால் இந்த அயோக்கிய அரசியல்வாதியின் மகன் என்னவெல்லாம் செய்திருப்பான்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   உங்களின் வலுவான பின்னூட்டத்திற்கும்,
   ஆதரவிற்கும் நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    Sir,
    இப்படி சொல்லி என்னை வெளியாள் ஆக்காதீர்கள் ! நான் உங்களிலொருவன் . இந்தியர்கள் அனைவரும் பின்பற்றவேண்டிய விதி ஐந்து ஆண்டுகள் எந்த கட்சி தவறு செய்தாலும் அதை கண்டிப்பேன் தட்டி கேட்பேன்.தேர்தல் என்று வரும்பொழுது எனக்கு பிடித்த கட்சிக்கு வாக்களிப்பேன்.அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்த கட்சி தவறு செய்தாலும் அதை கண்டிப்பேன் தட்டி கேட்பேன்;….இது தொடரும் ..இதுதான் அதிக பட்சம் ஒரு ஜனநாயகத்தில் முடிந்த செயல்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     கண்பத்,

     // Sir, இப்படி சொல்லி என்னை வெளியாள்
     ஆக்காதீர்கள் ! நான் உங்களிலொருவன் .//

     இதை நான் எப்படி ஏற்பேன்….?
     பல சமயங்களில் நான் இந்த களத்தில் தன்னந்தனியே
     தாக்குதலுக்கு உள்ளாகிறேன். ஆயிரம் பேர் படித்தாலும், ஏற்றுக் கொண்டாலும், துணைக்கு வர தயங்குகிறார்களே…
     ஆட்சியையும், அதிகாரத்தையும் எதிர்க்க தயங்குகிறார்களே….!

     நீங்களோ – ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை என்று சொல்வார்களே – அதுவும் போய்,
     ஆடி அமாவாசைக்கு மட்டும் தான் வருவது என்று
     தீர்மானித்திருக்கிறீர்கள்… !!!

     பின் எப்படி….?

     இருந்தாலும்,
     – வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • paamaranselvarajan சொல்கிறார்:

      பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தப் பலனும் இல்லை: நாடாளுமன்ற குழு ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல் // ….. http://www.vikatan.com/news/india/98417-demonitisation-demonetisation-a-blunder-says-parliamentary-committee.html மக்களை அலைச்சலுக்கு ஆளாக்கி … அவர்களின்சேமிப்புகளை வங்கிகளில் கட்டவைத்து … வங்களின் இருப்புகளை அதிகமாக்கயது ஒன்றுதான் நடந்துள்ளது .. மற்றபடி … வழக்கம் பாேல வாய் சவடால் தானா …. ! அய்யா…! இது பற்றி …?

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      அநேகமாக இது இரண்டு நாட்களுக்குள் பாராளுமன்றத்திற்கு வரும்…
      பார்ப்போமே – என்ன சொல்கிறார்கள் என்று.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 10. புது வசந்தம் சொல்கிறார்:

  மனிதம்மற்ற பாவிகள் அனைத்து மதம் மற்றும் கட்சிகளை கடந்து இருப்பார்கள்.

 11. Gauthaman சொல்கிறார்:

  Please read this article. It said that FIR filed for abduction also. I think it is not easy going for that perverted fellow. And also we can shower our comments based on real news.

 12. seshan சொல்கிறார்:

  Real life currently differ from morality life. my concern, we cannot control the external factors like drunken mind (still in India no idea of drinking limit consume), we have to safe our self. else we have to carry weapon like USA keep the gun culture to protect us.

  unless we should avoid lonely travel alone in later hours. particularly sex is the biological need for animals and psychological urge for human, so we have to be handle very careful the sensitive fact. parents or teachers in current society cannot control due to hi tech tools we keep everybody in their world.
  else like Saudi Arabia , very strict law for all ,it also difficult to implement in India due to so called democratic freedom country.

  for my experience, Dubai which i am currently residing is the safest place for all gender in 80% of the area at all time because of tight vigil and law and order.

 13. குலாம் ரசூல் சொல்கிறார்:

  மிக நீண்ட இடுகை. இது பொருத்தமான இடமென்பதால் இடுகிறேன். பொறுத்தருள்க.

  ######### ########
  அது ஓர் அழகிய பொற்காலம்

  Written by நூருத்தீன்.

  கடுங்குற்றங்களுக்கு இஸ்லாம் நிர்ணயித்துள்ள தண்டனைகள் கடுமையானவை. அதை நிறைவேற்றுவது மக்களை ஆளும் தலைவரின் பொறுப்பு. எந்தளவு

  மக்களிடம் ‘அன்பும் அறனும்’ உடையவராய் கலீஃபா உமர் (ரலி) விளங்கினாரோ அதேயளவு குற்றங்களுக்கு அளிக்கப்படும் நீதி அவரது ஆட்சியில் ‘பண்பும் பயனுமாய்த்’ திகழ்ந்தன. குற்றவாளி யாராக இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் சரி, அவருக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் சுய வெறுப்பு விருப்போ, எல்லை மீறலோ அறவே கூடாது என்பதில் உமரின் கண்டிப்பு உச்சக்கட்ட ‘கறார்’தனம்.

  ஏனெனில் தண்டனை வழங்குவதென்பதை, ‘இறைவனின் நீதியை நிலைநாட்டல்; சமூக அவலங்களைக் களைந்து ஒழுங்கை ஏற்படுத்துதல்’ என்பதாகத்தான் உமர் கருதினாரே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்கான பழிவாங்கல்; அதிகார துஷ்பிரயோகம்; கொடுங்கோல் போன்றவற்றின் நிழல்கூட நீதியின்மேல் விழுவது தகாது என்பது அவரது கண்டிப்பான நிலைப்பாடு.

  உமர் (ரலி) மக்களிடம் திரும்பி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக. நான் உங்களிடம் ஆளுநர்களை அனுப்புவது உங்களை அடித்துத் துன்புறுத்துவதற்கோ, உங்களது செல்வங்களைப் பிடுங்குவதற்கோ அல்ல. அவர்கள் உங்களுக்கு இஸ்லாத்தைப் பயிற்றுவிக்கவும், நபியவர்களின் வழியைக் கற்றுத் தருவதற்காகவும்தான்” என்று வாக்குறுதி அளித்துவிட்டு,

  மறுபுறம் ஆளுநர்களிடம் திரும்பி, “நான் உங்களுக்குப் பதவி அளித்துள்ளது மக்களின் முடியை மழிப்பதற்காகவும் அவர்களை அடித்துத் துன்புறுத்துவதற்காகவும் அல்ல. தொழுகையை நிலைநிறுத்தி, அவர்களுக்குக் குர்ஆனைக் கற்றுத்தருவதே உங்களின் தலையாய பணி” என்று அறிவுறுத்துவார்.

  இதெல்லாம் படித்துப் பார்க்க நன்றாக இருக்கிறது; நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்று தோன்றுமல்லவா? அதுதான் கலீஃபா உமர் ஆட்சியின் சிறப்பு. ஆளுநர்கள்மீது புகார்கள் கூறப்பட்டால் உடனே கவனிக்கப்படும்; நியாயம் வழங்கப்படும். குப்பைக்கூடைகள் குப்பைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட காலம்.

  எகிப்து வசப்பட்டதும் அம்மக்களுக்கு அம்ரு இப்னுல் ஆஸை ஆளுநராக நியமித்தார் உமர். ஆட்சியும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒருநாள் மதீனாவுக்கு ஓடிவந்தார் எகிப்தியர் ஒருவர். ‘புஸ்.. புஸ்..’ என்று மூச்சு. முகத்தில் ஆத்திரம். கலீஃபா உமரிடம் புகார் கூறினார்.

  ‘உம் ஆளுநரின் மகன் எனக்கு அநீதி இழைத்துவிட்டார்.’

  “நான் உமக்கு அபயம் அளிக்கிறேன். என்ன நிகழ்ந்தது?”

  “நானும் ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸின் மகனும் ஓட்டப்பந்தயத்தில் ஓடினோம். நான் அவரைத் தோல்வியுறச்செய்து விட்டேன். அதைப் பொறுக்க இயலாத அவர், ‘நான் உயர்குடியைச் சேர்ந்த மகன்’ என்று சொல்லிக்கொண்டே என்னைச் சாட்டையால் அடித்தார்.”

  ‘உடனே நீர் உம் மகனை அழைத்துக்கொண்டு மதீனா வரவும்’ என்று ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸுக்குத் தகவல் சென்றது. கிளம்பி வந்தனர் தந்தையும் மகனும்.

  விசாரனையில் ஆளுநரின் மகன் அநீதியான முறையில் நடந்துகொண்டது நிரூபணமானது. எகிப்தியரிடம் சாட்டையை அளித்து,

  “ம்… உயர்குடியைச் சேர்ந்தவரின் மகனைப் பதிலுக்குப் பதில் பழி தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று தீர்ப்பு வழங்கிய உமர், அம்ரு இப்னுல் ஆஸிடம் கூறிய வாக்கியம் புகழ்பெற்று நிலைத்துப்போனது.

  “தாய் தம் மக்களை சுதந்திரமானவர்களாக ஈன்றிருக்க, என்றிலிருந்து நீர் அவர்களை அடிமைப்படுத்தத் தொடங்கினீர்?”

  “அமீருல் மூஃமினீன் அவர்களே. இந்த நிகழ்வைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் வந்து முறையிடவேயில்லை.”

  இங்கு கலீஃபா வழங்கிய நீதி ஒருபுறமிருக்க மற்றொன்று மிக முக்கியம். பரந்து விரிந்த அரசாங்கத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் பொதுமக்களில் ஒருவர், இஸ்லாமிய ஆட்சியின் ஆக உயர்ந்த தலைவரான கலீஃபாவை எவ்விதச் சம்பிரதாயமும் இன்றி எளிதில் சந்திக்கிறார்; புகார் அளிக்கிறார். அதை அந்தத் தலைவரும் செவிமடுக்கிறார்; விசாரணை புரிந்து நீதி வழங்குகிறார். சமகாலத்திலுள்ள எந்த அரசாங்கத்தில் இது சாத்தியம்?

  ஆளுநரின் மகன் என்றில்லை. ஆளுநராகவே இருந்தாலும் சரி, சலுகை கிடையாது. படைவீரர் ஒருவர் உமரிடம் வந்து முறையிட்டார். “என்னை முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று திட்டிவிட்டார் உங்கள் ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸ்.”

  ஆளுநருக்கு உடனே கடிதம் வந்தது. ‘அம்ரு இப்னுல் ஆஸ் பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட வேண்டும். படைவீரர் அளித்த புகார் மெய் எனில், அவர் ஆளுநருக்கு கசையடி அளித்து பழி தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அதில் கட்டளையிடப்பட்டிருந்தது.

  விசாரணை புகாரை உறுதி செய்தது. மக்களுள் சிலர் அந்தப் படைவீரரிடம் சமாதானம் பேசிப்பார்த்தனர். அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சாட்டையுடன் ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸை நெருங்கினார் அந்தப் படைவீரர்.

  “நான் இப்பொழுது உமக்கு தண்டனை அளிக்கப்போகிறேன். தடுத்து நிறுத்த யாரேனும் உள்ளனரா?”

  “இல்லை. உனக்கு இடப்பட்டுள்ள கட்டளையை நிறைவேற்று” என்றுார் அம்ரு இப்னுல் ஆஸ்.

  “நான் உம்மை மன்னித்தேன்” என்றார் அந்தப் படைவீரர்.

  அவருக்குத் தேவை நீதி. அது கிடைத்துவிட்டது. மற்றபடி ஆளுநரைத் தாக்கவேண்டும், பழிவாங்க வேண்டும் என்பது இரண்டாம்பட்சம். அது அவரது நோக்கமாகவும் இருக்கவில்லை.

  இன்று முஸ்லிம்கள் சிறிதும் தயக்கமின்றி நம்முள் ஒருவரைத் தூற்ற மிக இலகுவாய் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்தச் சொல் எத்தகைய அவச்சொல்லாக இருந்திருந்தால், ஆதாரமின்றி அதை உரைத்தவர் ஆளுநராகவே இருந்தாலும் அவருக்கு அத்தகு கடுந்தண்டனையை அளிக்க உமர் கட்டளையிட்டிருப்பார்?

  ‘யாகவராயினும் நா காக்க’ என்பது வழக்கொழிந்து போன அவலம். நம் புத்தியில் நீர் தெளித்து, சுதாரித்து, அதை மீள்விக்க வேண்டியது மிக அவசரம்.

  நீதி வழங்கும் விஷயத்தில் உமருக்கு எத்தகைய பாரபட்சமும் இருந்ததில்லை; புகாருக்கு உரியவர் தம்முடைய மகனாகவே இருந்தாலும்கூட.

  எகிப்தில் வாழ்ந்துகொண்டிருந்தார் உமரின் மைந்தர்களுள் ஒருவரான அப்துர் ரஹ்மான். ஒருமுறை அவரும் மற்றொருவரும் போதையளிக்கும் பானம் ஒன்றை அறிந்தோ அறியாமலோ பருகிவிட்டனர். போதை தலைக்கேறியதும்தான் ‘அட இது கஷாயமெல்லாம் இல்லை போலிருக்கு’ என்று புரிந்திருக்கிறது அவர்களுக்கு. ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸிடம் வந்தார்கள்.

  ‘ஆளுநரே பானமொன்று அருந்தி நாங்கள் போதையுற்றுவிட்டோம். தயவுசெய்து குடிகாரர்களுக்கு அளிக்கும் ‘ஹத்’ தண்டனையை எங்களுக்கு அளித்து நீதி செலுத்துங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர்.

  ‘தெரியாமல் செய்துவிட்டீர்கள் போலிருக்கிறது. இனிமேல் இவ்விதம் செய்யாதீர்கள்’ என்பதுபோல் ஏதோ சொல்லி அவர்களை வெளியேற்ற முனைந்தார் ஆளுநர்.

  அதற்கு அப்துர் ரஹ்மான், “இதோ பாருங்கள். தாங்கள் மட்டும் எங்களுக்குத் தண்டனை அளிக்காவிட்டால், நான் என் தந்தையிடம் அதை முறையிடும்படி இருக்கும்” என்று மிரட்ட அதன் பின்விளைவு அம்ருவுக்கு நன்கு புரிந்தது.

  எனவே அவர்களைத் தம் வீட்டிற்குள் அழைத்து வைத்து கசையடித் தண்டனையை நிறைவேற்றினார் ஆளுநர். குடிகாரர்களுக்கு வழங்கப்படும் தண்டனையான கசையடியும் முடியை மழித்தலும் பொதுமக்களின் முன்னிலையில் நடைபெறுவதே வழக்கம். மற்றவர்களுக்கு அது பாடமாக அமையும் என்பது அடிப்படை. கலீஃபாவின் மகன் என்பதால் அவருக்குத் தம் வீட்டினுள் வைத்து தண்டனை வழங்கி தனிச் சலுகை புரிந்துவிட்டார் அம்ரு இப்னுல் ஆஸ். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். கலீஃபாவின் மகன் என்பதால் தண்டனையை ரத்து செய்யவில்லை. சற்றே சலுகை. அவ்வளவே. இச்செய்தி மதீனாவில் உமருக்குத் தெரிய வந்து, ஆளுநருக்கு உடனே ஓலை வந்தது.

  “அப்துர் ரஹ்மானுக்கு உமது வீட்டினுள் வைத்து முடியை மழித்தீராமே! எனது விருப்பத்திற்கு முற்றிலும் மாறானது இது. என் மகன் அப்துர் ரஹ்மான் உமது ஆளுகைக்கு உட்பட்ட பொது மக்களுள் ஒருவர். இதர முஸ்லிம்களை நீர் எவ்விதம் நடத்துகிறீரோ அவ்விதமே அவரையும் நடத்த வேண்டும். அவர் கலீஃபாவின் மகன் என்பதற்காகத்தான் சலுகை அளித்துள்ளீர். அல்லாஹ்வுக்கான கடமைகளில் நான் எத்தகைய சமரசமும் செய்துகொள்வதில்லை என்பது உமக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நீர் எப்படி இவ்விதம் நடந்துகொள்ளலாம்” என்று ஆளுநரை அதட்டித் தீர்த்திருந்தது கடிதம்.

  அத்துடன் விடவில்லை. தம் மகன் அப்துர் ரஹ்மானை மதீனாவிற்கு வரவழைத்து பொதுமக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்றினார் உமர்.

  அது ஓர் அழகிய பொற்காலம்.

  -நன்றி: நூருத்தீன்,
  வெளியீடு: சமரசம் 16-28, பிப்ரவரி 2013

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.