குஜராத் தேர்தல் – உடுத்தாதோரே நிறைந்திருக்கையில் – உடுத்தியவரை எப்படி அழைப்பது ….?


நிர்வாணிகள் உலகில், கோவணம் கட்டியவன்
பைத்தியக்காரன் என்று ஒரு மொழி உண்டு….
அந்த மொழியை இங்கு பயன்படுத்தலாமா…?
இதை முழுவதுமாக படித்து விட்டு, படிப்பவர்கள்
தான் சொல்ல வேண்டும்..

குஜராத் சட்டமன்றத்தில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் -182 பேர்.
அதில் ராஜ்ய சபா தேர்தலுக்கு முன்னரே 6 காங்கிரஸ்
எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து
விட்டனர்.

மீதி இருப்பது 176 பேர்.
இதில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை – 121.
இந்த 176 எம்.எல்.ஏ.க்களுமாக தேர்ந்தெடுக்க வேண்டிய
ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை -3.
இங்கு ஒருவர் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட
தேவையான குறைந்த பட்ச ஆதரவு – 45 பேர்.
(பின்னர் அது 44 ஆக குறைந்தது… )

பாஜகவின் 121 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு
இரண்டு ராஜ்ய சபா வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால்,
அதன் பிறகு அவர்களிடம் மிஞ்சுவது 121 -90 (45+45) = 31 பேர்.

இந்த 31 பேர்களை வைத்துக் கொண்டு,
வெற்றி பெற 45 பேர் தேவை என்கிற நிலையில்,
பாஜக 3-வதாக ஒரு வேட்பாளரை நிறுத்துகிறது.

ஆக மீதி தேவைப்படும் 14 ஓட்டுகளுக்காக 14 பேரை கட்சி
மாற்றம் செய்ய (அதாவது குதிரை பேரம் செய்ய )
முடியும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில்
ஈடுபடுகிறது….. ( இந்த குதிரை பேர முயற்சியை
பெரும்பாலான மீடியாக்கள் கண்டிக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது…)

காங்கிரஸ், தனக்கு வேண்டிய குறைந்த பட்ச ஆதரவான
45 பேரை தக்கவைத்துக் கொள்ள, என்னென்னவோ
முயற்சிகளை மேற்கொள்கிறது….( இதை பாஜக
தலைவர்களும், பெரும்பாலான மீடியாக்களும் ஏளனம்
செய்கின்றன….தொடர்ந்து பரிகசிக்கின்றன…)

இறுதியில், ஓட்டுப்பதிவு அன்று, இரண்டு காங்கிரஸ்
எம்.எல்.ஏ.க்கள், ( அதுவரை காங்கிரசுடன் இருப்பதாக
பாவலா காட்டி, ஊர்வலமும் வந்தவர்கள்…)
திடீர் திருப்பமாக தங்கள் ஓட்டை பாஜக வேட்பாளருக்கு
ஆதரவாக குறியிட்டு விட்டு,

அங்கே பிரசன்னமாக (….!!! )
இருந்த பாஜக தலைவர் அருகே –
மெனக்கெட்டு நடந்து சென்று, அவருக்கு தாங்கள் யாருக்கு
ஓட்டளித்திருக்கிறோம் என்று ஓட்டுச்சீட்டை திறந்து,
விரித்து காட்டி விட்டு ( வாங்கிய…….ற்கு, சொன்னதைச்
செய்து விட்டோம் என்று நிரூபித்து விட்டு…),

பின்னர் ஓட்டுப்பெட்டியில் போடுகிறார்கள். (இவை அத்தனையும்,
தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ
காட்சிகளில் தெளிவாக தெரிகின்றன…)

தேர்தல் கமிஷனின் விதிப்படி, பதிவு செய்யப்பட்ட ஓட்டை,
தங்கள் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டைத்தவிர
வேறு யாருக்கும் காட்டுவது – அந்த ஓட்டை செல்லாததாக்கி
விடும்….இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

இந்த நடைமுறை ஏற்கெனவே இரண்டு தேர்தல்களில்
அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி, இந்த குறைபாடுகளை எடுத்துக்காட்டி,
இந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுக்களை செல்லாததாக
அறிவித்து விட்டு, மற்ற ஓட்டுகளை எண்ணி முடிவை
அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம்
முறையிடுகிறது.

இதனை எதிர்த்து, டெல்லியில் தலைமை தேர்தல்
கமிஷனரின் அலுவலகத்திற்கு 7 மத்திய கேபினட்
அமைச்சர்கள் விஜயம் செய்து பலமாக ஆட்சேபிக்கிறார்கள்.

டெல்லி தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் மாலை 6
மணியிலிருந்து நள்ளிரவு 11 மணி வரை மாறி மாறி
இரண்டு கட்சிகளும் விவாதம் நடத்துகின்றன.

இறுதியில், பாஜக மேலிடம் சற்றும் எதிர்பாராதவிதமாக
தேர்தல் கமிஷன் 2 காங்கிரஸ் உறுப்பினர்களின் ஓட்டு
செல்லாது என்று அறிவிக்கிறது…. ( தலைமை தேர்தல்
கமிஷனராக அண்மையில் நியமனம் செய்யப்பட்டவர்
குஜராத்திலிருந்து கொண்டு விசேஷமாக அழைத்து வரப்பட்டு
இந்த பதவியில் அமர்த்தப்பட்டவர் என்பது இங்கு
முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டும்…)

தேர்தல் கமிஷன் தனது தீர்ப்பை அறிவித்த பிறகு –
நேற்று இரவு ( இன்று அதிகாலை ) 1.30 மணிக்கு தேர்தல்
முடிவு அறிவிக்கப்பட்டது.

இரண்டு பாஜக வேட்பாளர்களும்,
ஒரு காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் சட்டமன்றத்தில் பாஜகவிற்கு இருந்த பலத்தில்
அது இரண்டு வேட்பாளர்களைத்தான் நியாயமான முறையில்
தேர்ந்தெடுக்க முடியும்.

மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை –
பதவி ஆசையோ,
பண ஆசையோ,
அதிகார துஷ்பிரயோகமோ – செய்து தான்
தங்களுக்கு ஆதரவாக இயங்க வைத்திருக்க முடியும்.

இது “குதிரை பேரம்” இல்லையென்றால் வேறு எதுதான்
குதிரை பேரமோ…?

இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்ததையோ, பணம்
கொடுத்து விலைக்கு வாங்கியதையோ, பதவி ஆசை
காட்டி இழுத்துக் கொண்டதையோ – “குதிரை பேரம்”
செய்ததையோ – பாஜக தலைமை
கொஞ்சம் கூட அவமானகரமானதாக கருதவில்லை….

பெரும்பாலான மீடியாக்கள் கூட இந்த “குதிரை பேரத்தை
கண்டிக்கவில்லை….கண்டுகொள்ளவே இல்லை….

எனவே, பெரும்பாலானவர்கள் அம்மணமாகத் திரியும்
ஒரு இடத்தில் கோவணம் கட்டியவர்களை என்னவென்று
சொல்லி அழைப்பார்கள்….?

அநேகமாக, நம்மையும் அப்படித்தான் அழைப்பார்கள் …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to குஜராத் தேர்தல் – உடுத்தாதோரே நிறைந்திருக்கையில் – உடுத்தியவரை எப்படி அழைப்பது ….?

 1. புதியவன் சொல்கிறார்:

  குஜராத்தில் நடந்தது அவமானகரமான விஷயம்தான். அதுவும் பாஜக தலைவர் அமித்ஷா இருக்கும் மாநிலத்தில், அதுவும் அவர் போட்டிபோடும் சமயத்தில் இப்படி நடந்தது, அரசியல்ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது.

  என்ன செய்தாலும் 3வது பாஜக ஆள் வெற்றிபெற முடியாது. அப்படி இருக்கும்போது (அதாவது 31 VS 48+), எப்படி அடுத்த கட்சியைப் பிரித்து அதில் உள்ளவரை பாஜக சார்பாக நிறுத்தமுடியும்? அப்புறம் அரசியல்ரீதியான வியாக்யானம் என்ன பேச முடியும்? (பிரதமர், நாட்டு மக்கள், மனசாட்சி, சலுகைகளை நாட்டுக்காக விட்டுத்தாருங்கள் …. போன்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அவருடைய கட்சித் தலைவரே இந்தமாதிரி அவமானகரமான செயலில் ஈடுபடலாமா?)

  நல்லவேளை பாஜக ஆள் வெற்றிபெறவில்லை. அப்படி வெற்றி பெற்றிருந்தால் அது தீராத அவமானகரமான செயலாக இருந்திருக்கும். இப்போது செய்ததும் அவமானமான செயல், ஆனால் அதை வெற்றி பெறவிடாமல் இயற்கை தடுத்துவிட்டது. Not able to digest this kind of cheap tactics from BJP. புத்தர் போல் ஒருவர் அஹிம்சையைப் பற்றி பரப்புரை செய்யும் கூட்டத்தில், அவருடைய சீடர்கள் ‘கசாப்பு’ கடை வைத்து வியாபாரம் செய்வதைப் போன்றது இது. மோடி அவர்கள், அதுவும் அமித்ஷா – இது நியாயமா?

  ஒரு ராஜ்ஜியசபா எம்பி – இத்துணை சிறிய பரிசு, பாஜக என்ற பெரிய கட்சியின் பிம்பத்தைச் சீர்குலையச் செய்யலாமா? Worthஆ?

  காங்கிரசும், முற்காலத்தில் செய்த வினைகளை அறுவடை செய்கிறது என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடமுடியாது. அல்லது குறுகிய கால அறுவடைக்கான பதர்கள் இந்தமாதிரி கட்சி மாறி வாக்கும்போடும் அற்பர்கள் என்றும் சொல்லிக் கடந்துவிடமுடியாது. பாஜகவிடமிருந்து நல்ல நடத்தையையும் Moralஐயும் எதிர்பார்க்கிறேன். ஆனால் நடந்தது சரியல்ல.

 2. selvarajan சொல்கிறார்:

  ஒரு வேளை ” கழுதை பேரம் ” என்று மாற்றி அழைத்தால் மீடியாக்கள் கவனித்து இருக்குமோ என்னவோ … ! கழுதைக்காவது கத்த தெரியும் — இவர்களுக்கு உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு கத்துவதோடு சரி — ” paid news ” பேர்வழிகளிடம் இதையெல்லாம் எதிர் பார்ப்பது : — ” அம்மணமாகத் திரியும்ஒரு இடத்தில் கோவணம் கட்டியவர்கள் ” போலத்தானோ ….?

 3. Woraiyur Pugal சொல்கிறார்:

  கட்சிமாறி ஓட்டுப்போட்ட இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் தங்களின் வாக்கு சீட்டுகளை காண்பித்ததால் அவர்களின் வாக்கு களை தகுதி நீக்கம் செய்து அதனால் வெற்றிக்கு தேவையான
  வாக்கு களை 45 ல்.இருந்து 44 ஆக குறைத்து அதாவது அகமது படேல் எவ்வளவு வாக்குகள் பெறுவார் என்று கணக்கிட்டே வெற்றிக்கு தேவை யான வாக்குகளை நிர்ணயம் செய்து அகமதுபடேலை வெற்றி பெற வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.

  என்னமோ மோடியும் அமித்ஷாவும் தான் தேர்தல்
  ஆணையத்தை வழி நடத்துவது மாதிரி ஒப்பாரி
  வைத்த கூட்டங்களே..

  ஒரு ராஜ்ய்சபை தேர்தலில் இந்ததேர்தல் கமிஷனை
  வைத்து ஒரு எம்பி சீட்டை கூடஎங்களால் ஜெயிக்க முடியவில்லை.என்பதில் இருந்து தேர்தல் ஆணை யத்திற்கும் எங்களுக்கும்உள்ள உறவை அறிந்து கொள்ளுங்கள்..

  இரண்டு எம்எல்ஏக்கள் ஓட்டு செல்லாது என்பது ஓகே
  அதற்காக வெற்றிக்கு தேவையான 45 ஓட்டுக்களை
  44 ஆக குறைத்தது எந்த விதத்தில் நியாயமோ?

  இது என்ன முட்டாள்த்தனமான நடைமுறை .இந்த முட்டாளத்தனமான நடைமுறையை பயன்படுத்தி
  காங்கிரசை ஜெயிக்க வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.

  இதையே காரணமாக வைத்து பிஜேபி ஜெயித்திருந்தால் உடனே பிஜேபி ஜனநாயகத்தை கொலை செய்து விட்டது என்பார்கள். இப்பொழுது ஜனநா யகம் வென்றது என்கிறார்கள்.

  நடந்து முடிந்த குஜராத் ராஜ்யசபா தேர்தலில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.மோடியின் ஆட்சியில் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணியை செய்ய முழு அதிகாரம் அளிக்கபட்டிருக்கிறது அது ஆளும் கட்சியின், எந்த ஒரு நிர்பந்தத்துக்கும் அடி பணிய வில்லை .

  ஜனநாயக முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட முழு சுதந்திரமும் அளிக்க பட்டுள்ளது. இதனால் மோடியின்ஆட்சி ஜனநாயக முறையிலே செயல்ப டுகிறது என்பதற்கு இதுவே உதாரணம் ..

  • புதியவன் சொல்கிறார்:

   உங்களுக்கு உங்கள் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு புகழ். ஆனால் பாஜக செய்தது Very Cheap Politics. இதை நாம ஆதரித்தோம்னா, நாமும் இந்திய அரசியல் தாழ்ந்ததற்கு ஒரு காரணமாகிவிடுவோம்.

   இன்னொன்று, இதனாலெல்லாம் தேர்தல் ஆணையம் மிக நியாயமாகிவிட்டது என்றெல்லாம் சொல்லமுடியாது. அதிலும் நிறைய பேர் வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள். நான் இதை வேறுமாதிரி பார்க்கிறேன். வேறு வழியில்லை (அதாவது எப்படிக் கூட்டினாலும் ஜெயிக்கவைக்க முடியாது), நாளை கோர்ட்டுக்குப்போனால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் நேர்மையாக நடந்துகொண்டுள்ளதா?

 4. LVISS சொல்கிறார்:

  The media usually do not hang on much about horse trading because this is a standard accusation and is usually not backed by proof–Those who raised this did not bother to prove this because they were up to doing some thing else –In all elections this accusation is said about the ruling parties — And we are used to seeing this accusation losing its velocity after some time because no effort is taken to prove it –It serves a limited purpose — The media merely show the parties(both parties) reaction and stop with this –It is not their job to take it to logical conclusion– The accused parties also do not worry about it because they know such charges are expected —
  What happened in Bangalore every body knows —

  In the normal course two seats would have been won by BJP and one by Congress –This was the given situation — When Vaghela rebelled and took away 7 MLAs with him the BJP fancied a chance of winning this seat also —When the Congress saw BJP taking interest in this third seat they panicked and did a Koovathur on its MLAs betraying a lack of trust in them –By the way has the BJP ever done this kind of thing to keep its flock at any time —If so, I would like to be enlightened —
  On the voting day everything was going according to the script and BJP was sensing an unexpected win for the third seat which they had given up initially as lost –The required numbers were 45 –Two of the MLAs who, either they were not familiar with the voting rules or they wanted to show whom they voted for , showed their slips to the wrong persons –Then the dreams of a third win came down crashing for the BJP–The unwanted act was taken up by the Congress to the EC for cancellation of these two votes -After prolonged wait which went into midnight the EC declared the two votes as invalid –The required number dropped to 44 –The Congress candidate had this number –The Congress candidate retained his seat —

  Just imagine if the verdict by the EC has gone against the congress what would have happened —

  The EC, as always, went by the rule book –Congress was relieved because it was not an easy victory which it appeared to be in the beginning — The BJP was obviously disappointed that they could not get a bonus seat in spite of a rebellion by Vaghhela but for which they would have been happy with the expected two seats —
  After the announcement of the results what happened was that the media ,which is “afraid” of the govt ,began to talk fearlessly about the defeat of the BJP in the forth coming assembly elections in Gujarat —

  • இளங்கோ சொல்கிறார்:

   எல்விஸ் சார் புத்தி போற வழியை பாருங்க…

   பாஜகவின் “குதிரை பேரம்” extra seat ஐ பெற அவர்கள் வகுத்த strategy -யாம்.
   சங்கர்சிங் வகேலா பின்னாடி போற காங்கிரஸ்காரங்க, பாலட் பேப்பரை குண்டு பாஜக ஆசாமிக்கு விரித்து காட்டியது ஏன் ?
   காசு கொடுத்த முதலாளிக்கு, வாங்கிய காசுக்கு தாங்கள் வேலை செய்து விட்டோம் என்று காட்ட தானே ?
   பாலட் பேப்பரை காட்டியது violation of rules என்று தெரிந்த பிறகும், அரை டஜன் சீனியர் கேபினட் மினிஸ்டர்கள் எலெக்ஷன் கமிஷனரை முற்றுகையிட்டு ப்ரஷர் கொடுத்தது ஏன் ? எல்விஸ் சார் சொல்வாரா ?
   சொந்தமாக பிள்ளை பெற வக்கில்லாதவன் அடுத்தவன் பெற்ற பிள்ளையை திருடிக்கொண்டு வந்து தன் பிள்ளை என்று சொல்வது போல தான் தன் பலத்தில் ஜெயிக்க முடியாதவர்கள், சோரம் போன காங்கிரஸ்காரர்களை விலைக்கு வாங்கி வந்துவிட்டு, அதை தங்கள் பலம் என்று காட்ட முயன்றார்கள். அது பலம் இல்லை “வீக்கம்” என்பது அசிங்கமாக வெளிப்பட்டு விட்டது.

   கே.எம்.சார்,
   நீங்கள் எழுதியிருக்கும் இடுகையில் இந்த விஷயம் பற்றீ ஒன்றுமே தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட புரிகிற மாதிரி அருமையாக விளக்கி இருக்கிறீர்கள். என் அலுவலகத்தில் முன்னதாக காங்கிரஸ்காரர்கள் பங்களூர் டூர் அடித்ததை பார்த்து சிரித்து, கிண்டல் செய்துகொண்டிருந்த இரண்டு நண்பர்கள் இப்போது அப்படியே மாறி விட்டார்கள். நன்றி.

 5. LVISS சொல்கிறார்:

  Three of the six MLAs who quit the congress joined the BJP –The BJP fielded one of them as their third candidate –He can be elected by stacked up first preference votes or by depending on the second preference votes which come into play when the first preference votes does not decide the winner –Alas , two MLAs poured cold water on this strategy of the BJP —

 6. selvarajan சொல்கிறார்:

  // பாஜகவோ, மூத்த அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அமைச்சர் குழுக்களை அனுப்பி, மாற்றி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லும் என அறிவிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவிடுத்தது. பாஜக தலைவரும், வேட்பாளர்களில் ஒருவருமான அமித்ஷா, தேர்தல் ஆணைய அலுவலகம் வெளியே சேர் போட்டு அமர்ந்தேவிட்டார்.
  ஆனால் இந்த நெருக்கடி தந்திரங்களுக்கு வளையவில்லை தேர்தல் ஆணையம். மாற்றி வாக்களித்த இரு காங். எம்எல்ஏக்கள் வாக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். ரகசிய வாக்கெடுப்பு விதிமுறைகளை அவர்கள் மீறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.// http://tamil.oneindia.com/news/india/gujrat-rajyasabha-poll-congress-candidate-ahmed-patel-have-292209.html …. நடந்ததை மேலே உள்ள செய்தி விலாவரியாக விளக்கியுள்ளது — மந்திரிகளின் படையெடுப்பு — அமித் ஷாவின் நேரடியாக அங்கே அமர்ந்து இருந்தது எல்லாம் மீடியாக்களில் வெளிவந்து — பதவிக்காக ஆளாய் பறந்ததை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது — தேர்தல் ஆணையத்தை வளைக்க முற்பட்டது யார் என்று அப்பட்டமாக தெரிகிறது — ஏனிந்த பொழப்பு …?

 7. LVISS சொல்கிறார்:

  Seven cabinet ministers were there –So what ? Is there any bar on cabinet ministers appearing in the election venues —
  No senior ex minister of the UPA represented the Congress candidate in the election commission?

  • இளங்கோ சொல்கிறார்:

   இவரை திருத்துபவர்களுக்கு -மன்னிக்கவும் – திருப்திப்படுத்துபவர்களுக்கு
   காவிரிமைந்தன் சார் தன் அசையா சொத்தில் பாதியை கொடுப்பார்.
   ( சரி தானே காவிரிமைந்தன் சார் 🙂 )

  • இளங்கோ சொல்கிறார்:

   எல்விஸ் சார்,

   நீங்க கூட அவங்க கூட எலெக்ஷன் கமிஷனர் ஆபிசுக்கு போயிருக்கலாம்..
   அவங்களை விட சின்சியரா ஆர்க்யூ பண்ணி ஜெயிச்சிருப்பீங்க.
   காங்கிரஸ் மூஞ்சில கரியை பூசி இருக்கலாம்.
   குண்டு வாய்ல லட்டு கொடுத்திருக்கலாம்.
   நல்ல சான்ஸ்; நழுவ விட்டுட்டீங்களே.

 8. LVISS சொல்கிறார்:

  The President appoints the CEC and other commissioners on the recommendations of the Govt- -There are three Election Commissioners -Most of us know why it became a three member body –It is not a one man body -All three election commissioners have equal powers – Now there are only two because of the retirement of the previous CEC –The decisions of the commissions are taken by ,majority vote —
  The other EC is Mr Om Prakash Rawat who among other things worked during UPA rule as secretary in Heavy Industry ministry during 2012-2013 —

  • தமிழன் சொல்கிறார்:

   எல்விஸ் – இதை என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது.

   சட்டம் என்ன சொல்லுது – என்ன வாக்களித்தோம் என்பதைக் காண்பித்தால் செல்லாது.

   ரெண்டாவது, the whole process itself is totally immoral. For one MP, a party can not stoop down to this level.

 9. LVISS சொல்கிறார்:

  To whom was the ballot paper shown–

  http://timesofindia.indiatimes.com/india/ec-declares-votes-of-2-congress-mlas-who-had-cross-voted-invalid/articleshow/59977564.cms

  The congress team had seven members including P Chidambaram. Ghulam Nabi Azad and Anand Sharma —

  Before any one asks why Piyush Goyal was there he was the all India second rank holder Chartered Accountant and second rank holder in law in Mumbai University —

  • இளங்கோ சொல்கிறார்:

   எல்விஸ் சார்,

   சிலருக்கு இந்த ரிசல்டால பைத்தியமே பிடுச்சுடும் போல இருக்கே.
   நீங்க இந்த லிங்க்கை இங்கே எதற்காக கொடுக்கறீங்க ? இதுல புதுசா
   என்ன இருக்கு ?
   பியூஸ் என்ன படிச்சிருந்தா என்ன ? எண்டையர் கேங்க் மோசடி பண்ணிச்சு.
   என்ன நியாயம் சொன்னாலும் justify பண்ண முடியாது.
   ராத்திரி சரியா தூங்கி இருக்க மாட்டீங்க. ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வந்து புதுசா எதாவது லிங்க் கெடச்சா எழுதுங்க. 🙂

   மேல தமிழன் சார் என்ன சொல்றார் பாருங்க:

   // எல்விஸ் – இதை என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது.//

 10. paamaranselvarajan சொல்கிறார்:

  பேலட் பேப்பரை விரித்து ..விரித்து அனைவருக்கும் காட்டி விட்டே இனி தங்களின் வாக்குகளை செலுத்தலாம் … என்று ஒரு சட்டத்தையே பாேட்டு விட்டால் யாரும் எதுவும்கேட்க மாட்டார்கள் … எவ்வளவாே செய்தாச்சி இதைசெய்ய மாட்டாேமா…?

 11. Thirumalachari thiruvengadam சொல்கிறார்:

  Could be a strategy by congress to outwit BJP and sha by preparing two Mlas behave like this as it happened in sivasankar long back and the result is not known even now and the mystery of the person whose vote clinchedtp the issue.Of course what the BJP did to fish in troubled waters is not only despicable but downright immoral.But of course all is fair in war love and politics.A.T.Thiruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.