கோட்டை, கொத்தளங்கள் – அரண்மனைகள்….. (பகுதி-1)
நாலைந்து நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில்
‘ஜோதா-அக்பர்’ ஹிந்தி திரைப்படம் பார்த்தேன்.
மொகலாய சக்கரவர்த்தி அக்பரின் திருமண
வாழ்க்கையை பிரதானமாகச் சித்தரிக்கும் படம்.

இந்தப் படத்தின் பல காட்சிகள் உதய்பூரில், பிச்சோலா
ஏரியுள்ளும், ஏரிக்கரையை ஒட்டியும் இருக்கும்
‘ஷிவ் நிவாஸ் பேலஸ்’ என்கிற – நட்சத்திர ஓட்டலாக
மாற்றப்பட்ட அரண்மனையில் எடுக்கப்பட்டவை.

ராஜஸ்தானில் எக்கச்சக்கமான பெரிய, அழகிய
அரண்மனைகள் இருக்கின்றன – அவற்றைக் காண
ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்….

இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது,
இந்தியாவில், தமிழ் நாட்டில் – இருக்கும்
கோட்டைகள், அரண்மனைகள் பற்றி ( அவற்றில் நான் நேரில்
பார்த்த சிலவும் அடங்கும் ) கொஞ்சம் எழுதுவோமே என்று
தோன்றியது.

30 வருடங்களுக்கு முன்னரே ‘ஆக்டபஸி’ என்கிற
ஜேம்ஸ் பாண்ட் படம் இந்த உதய்பூர் ஓட்டலில்
‘சுட’ப்பட்டு
இந்த இடம் உலகப்புகழ் பெற்ற
சுற்றுலாத்தலம் ஆகி விட்டது …!

இப்போதைக்கு இந்த நட்சத்திர ஓட்டலில்
ஒரு நாள் வாடகை ரூபாய் 23,000/- ….!!!

1880-ல் துவங்கப்பட்டு, 1904-ல் ( சுமார் 110
வருடங்களுக்கு முன்)
கட்டி முடிக்கப்பட்ட இந்த
அரண்மனையை ‘கட்டி மேய்க்க’ முடியாததால், மன்னர் ஃபதே
சிங் மஹாராணா, நட்சத்திர ஓட்டலாக்கி விட்டார்.

இந்த ஓட்டலின் சில அழகான புகைப்படங்களை
கீழே தந்திருக்கிறேன்….!

shiv nivas -taj lake pichola-
udaypur-1

shiv nivas palace -2

shiv nivas-3

shiv nivas-4

shiv nivas -5

shiv nivas-6

shiv nivas-7

 

பொதுவாக ராஜஸ்தானில், டெல்லியில், பெரிய அளவில்
பல கோட்டைகளும் அரண்மனைகளும் இருக்கின்றன.
மஹாராஷ்டிராவில் சிறிதும் பெரிதுமாக நிறைய
கோட்டைகள்……. ஹைதராபாத் அருகே மிகப்பெரிய
கோல்கொண்டா கோட்டை…..

தமிழ் நாட்டில் சொல்லிக் கொள்கிற அளவில்
மிகப்பெரிய கோட்டைகள் எதுவும் இல்லை என்று
தான் சொல்ல வேண்டும்.
பெரிதாக என்றால் –
வேலூர் கோட்டையை சொல்லலாம். அடுத்து செஞ்சிக்
கோட்டையை, கிருஷ்ணகிரி கோட்டையை சொல்லலாம்.
மற்றவை எல்லாம் அனேகமாக மிகச்சிறிய
கோட்டைகளே. அரண்மனைகள் – அனேகமாக
இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

கீழே வேலூர், செஞ்சி, கிருஷ்ணகிரி, தரங்கம்பாடி
டட்ச் கோட்டை, ஆகிய கோட்டைகளின்
புகைப்படங்கள்….
.

photos

1  – Vellore fort  2.    Ginjee fort  3.  Krishnagiri fort
4.  Krishnagiri fort drawing of 1764 kept in british museum
5 and 6 – Dutch fort in Tarangambadi

 

vellore forts-1

ginjee fort-2

krishnagiri fort-3

Kistnagherry_Krishnagiri -

british library - 1764

-tarangambadi dutch fort-4

dutch fort-tarangambadi-2

 

இவற்றைப் பற்றி சொல்ல இன்னும் சில செய்திகள்
இருக்கின்றன. நாளை தொடர்கிறேனே…….

————————————————–
பின் குறிப்பு –

இந்த இடுகை ஏற்கெனவே சுமார் 3 வருடங்களுக்கு முன்பு
விமரிசனம் தளத்தில் பதிவிடப்பட்டது. நேற்று எதேச்சையாக
இந்த இடுகையை பார்க்க நேர்ந்ததையடுத்து… சில
யோசனைகள் தோன்றின.

கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட பதிவுகளை இந்த
விமரிசனம் தளத்தில் எழுதி இருக்கிறேன். இவற்றை
பொதுவாக மூன்று பிரிவுகளில் அடக்கலாம்…

ஒன்று – அவ்வப்போது ஏற்படும் சூடான அரசியல்
நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதுவது.. இவற்றிற்கு
அதிகம் ஆயுள் இல்லை. எழுதியபோது, சுடச்சுட, சுவையாக
இருந்திருக்கும்…. இப்போது படித்தால் பழைய
செய்தித்தாளை படிப்பது போல் – சுவையற்று இருக்கும்.

இரண்டாவது – போகிற போக்கில் என் மனதில் உருவாகும்
சில நல்ல தலைப்புகள்… அவற்றைப் பற்றி, ஆழ சிந்தித்து,
மீண்டும் மீண்டும் அசை போட்டு, பின்னர் உருவாக்கும்
பொது தலைப்புகளிலான இடுகைகள். இவற்றை எப்போது
வேண்டுமானாலும் படிக்கலாம். ஓரளவு
சுவாரஸ்யமாக ( 🙂 )இருக்கும்…

மூன்றாவது – சில தலைப்புகளை நானே வேண்டி விரும்பி
தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதற்கான அடிப்படை ஆய்வுகளை
மேற்கொண்டு, வலைத்தளத்திலும், புத்தகங்களிலுமிருந்து
பல ஆதாரங்களை திரட்டி, சுவாரஸ்யமான தொடராக
கொடுக்க முடிந்தது… இவற்றிற்காக நான் நிறைய
உழைத்திருக்கிறேன்… பல மணி நேரங்கள்.. பல நாட்கள்…!!!

இதில் முதல் ரகத்திற்கு இப்போது எந்தவித
முக்கியத்துவமும் இல்லை. They can be simply forgotten.

ஆனால், 2-வது மற்றும் 3-வது ரகத்தைச் சேர்ந்த இடுகைகள்
பெரும் சிந்தனை, உழைப்பில் உருவானவை. இவை
எவ்வளவுக்கெவ்வளவு அதிக பட்சம் வாசகர்களை
சென்றடைகின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு நான் மகிழ்ச்சி
அடைவேன்… என் உழைப்பிற்கு கிடைக்கும் கூலி அது தான்.

இந்த வலைத்தளத்தை துவங்கி சில வருடங்கள் கழிந்து
விட்டன. இதில் ஏற்கெனவே போடப்பட்ட பதிவுகளை
எப்போது வேண்டுமானாலும் சுலபமாக தேடியெடுத்து
படிக்கும் வசதியை ஏற்படுத்தும் அளவிற்கு, எனக்கு கணினி
அறிவு கிடையாது.

இங்கு புதிது புதிதாக நிறைய வாசக நண்பர்கள் ஆர்வத்துடன்
வருவதை பார்க்கிறேன்…. அவர்கள் நான் உழைத்து தயாரித்த
இத்தகைய சில பழைய இடுகைகளையும் அவசியம் பார்க்க
வேண்டும் என்று விரும்புகிறேன்.

இப்போதைக்கு – எப்படியும், தினமும் ஒரு புது இடுகையாவது
எழுதி விடுவது என்று வைத்துக் கொண்டிருக்கிறேன்.

அதன் கூடவே, முடியும்போதெல்லாம், பழைய இடுகைகளை
பரிசீலித்து, மறுபதிவு செய்ய தகுதி உடையவற்றையும்
பதிவு செய்யலாம் என்று தோன்றுகிறது. அதில் முதல்படி
இந்த இடுகை.

——————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கோட்டை, கொத்தளங்கள் – அரண்மனைகள்….. (பகுதி-1)

 1. paamaranselvarajan சொல்கிறார்:

  ” தரஙகம்பேட்டை ” தரங்கம்பாடி என்று இருக்க வேண்டும்

 2. Phillips சொல்கிறார்:

  Nice idea. K.M.Sir please go ahead with your Plan.

 3. தமிழன் சொல்கிறார்:

  கொல்கொண்டா கோட்டையும் (400 வருடங்களுக்கு உட்பட்டது) பிரம்மாண்டமானது. அங்கு, அந்தப்புரம் அழகியலோடு கட்டப்பட்டது (அது இருந்த காலத்தில் விலையுயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டது). மற்றபடி, அரசு நிர்வாகத்திற்கான நிறைய அறைகள், ஒவ்வொன்றும் அந்தக் காலத்தில் கதவுகள் இல்லாமல், துணிவிரிப்புகளால் பிரிக்கப்பட்டது. ராஜாவின் கீழ்த்தள அறை. மேல்தள மற்றும் அதைச் சுற்றியுள்ள அறைகளில் மற்ற முக்கிய அமைச்சர்கள், உறவினர்கள் தங்கினர். அவர்கள் என்ன பேசினாலும், எவ்வளவு மெதுவாகப் பேசினாலும், ராஜாவின் அறையின் சுவர்களில் காதை வைத்தால் தெளிவாகக்கேட்கும்படி அவை அமைக்கப்பட்டிருந்தன. அதையும் சுற்றிப்பார்த்திருக்கிறேன்.

  எதிரிகள் (சேர சோழ பாண்டிய நாயக்க மற்றும் மற்றவர்கள், முஸ்லீம் தவிர-ஏனென்றால் அவர்கள் சொத்துக்களைச் சூறையாடியவர்கள், அதனை வடனாட்டிற்கு எடுத்துச்சென்றவர்கள்-தமிழ்னாட்டில்) வெற்றி பெற்றவுடன் அரண்மனையை பெரும்பாலும் தகர்த்திருக்கின்றனர். அதனால்தான் தமிழ்னாட்டில் இவர்களது அரண்மனையைக் காண இயலாது. சமீப காலத்தில் இருந்த சேர வம்ச பத்மனாபபுர அரண்மனை இப்போதும் காணக்கிடைக்கிறது. ஒருவேளை நிர்வாகத்திற்காக அவர்கள் கோவிலைப் பயன்படுத்தியிருப்பார்களா? அதனால்தான் அதற்கு கோயில் என்று பெயர் வந்ததா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s