இந்த நாடகம் எப்போது முடியும் என்பது இவர்களுக்கே தெரியாதே ….!!!


தலைப்புச் செய்திகள் –

தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு
வருவோம்: ஸ்டாலின்

தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால், ஆட்சி கவிழப்
போவது உறுதி; தங்கதமிழ்செல்வன்

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதையும்
எதிர்கொள்வோம்: ஜெயக்குமார்

முதல்வர் பதவியை இழக்க நேரிடும்: டிடிவி தினகரன்
அதிரடி!

தினகரன் தான் “420” – எடப்பாடி பேட்டி….

பாதி வழி தான் வந்திருக்கிறார்கள்…
மீதியும் வந்தால் பார்க்கலாம் – ஓபிஎஸ் பேட்டி…

—————————–

எப்படியாவது இந்த நாடகம் முடிந்து தொலைந்தால் தேவலை என்று தான் நொந்து நூலாகிப்போன தமிழக மக்களும் நினைக்கிறார்கள்.

ஆனால் – இவர்கள் யாருக்குமே நாடகத்தின் முழு
ஸ்க்ரிப்டும் தெரியாதே…. எப்போது நாடகத்தை முடிப்பது
என்பதை இதை இவர்கள் எப்படி தீர்மானிக்க முடியும்….

சூத்திரதாரி
டெல்லியில்
இருக்கையில்… ???

————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இந்த நாடகம் எப்போது முடியும் என்பது இவர்களுக்கே தெரியாதே ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  சூத்திரதாரி டெல்லியில் இருக்கையில்… ??? – இதை ஆரம்பித்தது பாஜக இல்லை. ஜெ. இருந்த வரையில் எவ்வளவோ முயற்சி செய்தும், ஜெ.வின் நம்பிக்கைக்குரிய நண்பராக இருந்தபோதும் பாஜக அவரை ஆட்டிப் படைக்க முடியவில்லை. இப்போதுள்ளவர்கள் தெர்மோகோல் மனிதர்கள். அதனால் ஆட்டிப்படைக்க முடிகிறது. அதற்கு பாஜகவையோ அல்லது டெல்லியையோ எப்படிக் குறை சொல்ல முடியும்? இப்போதே சிக்னல் கிட்டுமானால், மற்ற எல்லோரையும் உதறித் தள்ளிவிட்டு ஸ்டாலின் பாஜக கையைப் பிடித்துக்கொள்ளமாட்டார் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா? (அவர் ஏற்கனவே திருமாவை உதைத்துத் தள்ளியவர்தானே, காங்கிரஸ் எதிர்ப்பு நிலை எடுத்தவர்தானே)

  காலம், காங்கிரசை மத்திய அரசில் (திமுக ஆதரவு பெற்ற) வைத்து, ஜெ.வுக்கு ஒரு ஆட்சி முழுவதும் எவ்வாறு குடைச்சல் கொடுத்து நிறைய விஷயம் சாதிக்கமுடியாமல் கையைக் கட்டிப்போட்டதோ, அதேபோல், லட்டு மாதிரி சந்தர்ப்பம் கிடைத்தும் ஸ்டாலினுக்கு அது உபயோகப்படாமல், பாஜகவின் ஆதரவும் இல்லாமல் ஏங்கித் தவிக்க வைக்கிறது. என்னவோ… நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஸ்டாலின் கொண்டுவந்தால், வெளியில் எப்படிப் பேசிக்கொண்டாலும் அதிமுக கவிழ்வதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் (வெற்றிவேல் போன்ற வாடகை மனிதர்கள் தவிர) காரணமாக இருக்கமாட்டார்கள். ஸ்டாலின் மீண்டும், கருணானிதியை வைத்து ஏதாவது ஒரு ஃபங்க்ஷன் நடத்தி, கமல், ரஜினியைக் கூப்பிட்டு, Paid புலவர் வைரமுத்து துணையோடு மீடியாக்களில் வலம் வரவேண்டியதுதான்.

 2. LVISS சொல்கிறார்:

  It is becoming a bit tiresome to see no end to this — For the outside observer OPS seems to be putting too many conditions even though he commands lesser no of MLAs –EPS and OPS must first set their priorities whether they should fight for office or remove their common obstacle – The merger is in the hands of the OPS faction –BJP , according to reports, is trying to bring the two factions together — Probably it fears that in the event of the govt falling the mantle may go to either the DMK or Dinakaran faction —
  When will this end?

  • தமிழன் சொல்கிறார்:

   எல்விஸ் – உங்கள் அனுமானம் சரியில்லை. ஓபிஎஸ் சரியாகத்தான் நடந்துகொள்கிறார். அவர் எடப்பாடியுடன் சேர்ந்தவுடன் ஒன்றுபட்ட அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் ஓபிஎஸ்ஐக் கழட்டிவிடமாட்டார் என்பது என்ன நிச்சயம்? அதிகாரம் வரும்வரை அமைதியாக இருந்து இப்போது தினகரனைக் கழட்டிவிடும் எடப்பாடி, இதுவரை சசிகலா தினகரன் சார்பாகத்தானே நடந்துவந்திருக்கிறார். ஓபிஎஸ் அவர்கள் மெச்சூர்டு அரசியல்வாதி.

   பாஜக, அதிமுகவை நம்பி அரசியல் செய்யக்கூடாது. அப்படி, கூட்டணி வைத்து 10 தொகுதி வெற்றிபெற்றாலும் காங்கிரஸ் போல தமிழ்நாட்டில் என்றுமே தழைக்கமுடியாமல் திமுக அல்லது அதிமுகவுக்கு பல்லக்கு தூக்கும் கட்சியாகிவிடும்.

   இன்னொன்று, ரஜினிக்கு தைரியம் கிடையாது. அவரது காலம் போய் 10-15 வருடங்களாகிவிட்டது. காரணமேயில்லாத முரசொலி விழாவுக்குப் போய் சால்வை பெற்றுக்கொண்டதில் இது புலப்படவில்லையா?

   கருணாநிதியாக இருந்தால் காலம் வரும்போது, 1. திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எனக்கும் கழகத்துக்கும் திரைத்துரை சார்பாக பாராட்டுக்கூட்டம் நடத்தியபோதெல்லாம் இப்போது சொல்லும், திமுக ஊழல் கட்சி என்பது அவழுக்கும் தெரியவில்லையா? 2. ஏன் சமீபத்தில்கூட கட்சிப் பத்திரிகையான முரசொலி பவள விழாவிற்கு வந்து என்னைப் பாராட்டியபோது திமுக ஊழல்கட்சி என்பது ஞாபகத்துக்கு வரவில்லையா என்று கேட்பார். அதற்கு கமல், ரஜினி இருவரிடமும் பதில் இருக்காது.

   • இளங்கோ சொல்கிறார்:

    தமிழன்,

    //இன்னொன்று, ரஜினிக்கு தைரியம் கிடையாது. அவரது காலம் போய் 10-15 வருடங்களாகிவிட்டது. காரணமேயில்லாத முரசொலி விழாவுக்குப் போய் சால்வை பெற்றுக்கொண்டதில் இது புலப்படவில்லையா? //

    ground நிலவரம் சற்றும் அறியாமல், உங்கள் கோணத்திலேயே பார்க்கும்
    ரஜினியை பற்றிய உங்கள் கணிப்பு முற்றிலும் தவறானது. வெகு சீக்கிரம் அது நிரூபணமாகும்.
    அப்போது மன்னிப்பு கேட்பீர்களா ?

 3. selvarajan சொல்கிறார்:

  இடுகைக்கு ஏற்ற ” படம் ” ….! ஆடுவது அட்டை பாெம்மைகள் … ஆட்டுவிப்பவர் மேலே …. சூப்பர் …!!

 4. LVISS சொல்கிறார்:

  IF WE ARE TALKING ABOUT THE BJP TRYING TO BREAK THE AIADMK IT IS PAY BACK TIME FOR BRINGING DOWN VAJPAYEE GOVT— BUT I SERIOUSLY DOUBT WHETHER THE BJP WILL DO THIS BECAUSE IT WONT BENEFIT ,AT LEAST FOR NOW — RAJINIKANT IS PROBABLY WAITING FOR THE RIGHT MOMENT TO START HIS PARTY — MAY BE IF THERE IS A CHANCE OF A SNAP ELECTION —

 5. MANI சொல்கிறார்:

  THE BEST OPTION AVIALABLE FOR BOTH OPS AND EPS IS TO UNITE THE PARTY AND
  EVICT BOTH DINAKARAN AND SASIKALA FROM THE POLITICAL ARENA AND GET THE
  TWO LEAVES SYMBOL WHICH MAY HELP THEM IN THE LOCAL BODY ELECTIONS AND
  WITH BOTH UNITED THEY CAN THWART THE ATTEMPT OF STALIN AND CO COMING
  BACK TO POWER . SASIKALA AND DINAKARAN LIKE KARUNANITHI FAMILY HAVE
  AMASSED WEALTH AND THEY WANT TO BE IN POWER TO PROECT THAT ILLGOTTEN
  WEALTH. BJP DOES NOT HAVE MUCH VOTE BANK HERE BUT THEY MAY WISH FOR
  AN ALLIANCE WITH THE UNITED AIADMK IN THE PARLIAMENT ELECTIONS SCHEDULED
  IN 2019.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மணி,

   உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன்.
   இப்போதைக்கு இது தான் நடைமுறை சாத்தியமானது
   என்றே நானும் நினைக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. Chaar சொல்கிறார்:

  எதாவது ஒரு கட்சியாவது பலமிக்கதாக இருந்தால் மட்டுமே சீக்கிரம் முடிவுகளை எடுக்க முடியும். அதிமுக பல பிரிவுகளாக சிதறிவிட்டது. திமுகவுக்கு தன்னம்பிக்கை இல்லை. காங்கிரஸ்-பஜக இருவருக்கும் தமிழ் நாட்டில் இடமில்லை. மற்றவை உதிரிக்கட்சிகள். மொக்கயான நாடகமாவது நடக்கிறதே என்று சந்தோசப்பட்டுக வேண்டியதுதான். இதை விட மோசமான சூழல் உருவாகிவிட்டால், உள்ளதும் போய் விடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.