டெல்லி எஜமானர்களின் கட்டளை : நாஞ்சில் சம்பத்தின் தாக்குதல்….!!!
Published : 10 Aug 2017 13:28 IST

டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி
இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுக அணியின்
கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றம்
சாட்டியுள்ளார்.

( http://tamil.thehindu.com/tamilnadu/article19463142.ece )

——————————————————————

திருவாளர் எடப்பாடி, டெல்லிக்கு அஞ்சினார் என்று
திரு.நாஞ்சில் சம்பத் கூறுவது மெத்தச்சரி என்றே வைத்துக்
கொள்ளலாம்…. !!!

ஆனால், தன்மானம் மிக்க, வீர தீர, பராக்கிரம சிங்கம்
தினகரனின் கூட்டமும், அதே டெல்லி எஜமானர்களின்
வேட்பாளர்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில்
ஓட்டு போட்டது ஏன்…?

தினகரன் அவர்களின் அடியார் திருக்கூட்டம் அஞ்சியது
யாருக்கு….? அல்லது எதற்கு…?

CBI -ஆ, ED-ஆ அல்லது
திஹார் சிறையை எண்ணியா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to டெல்லி எஜமானர்களின் கட்டளை : நாஞ்சில் சம்பத்தின் தாக்குதல்….!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  மூன்றையுமே ; கூடவே நிலுவையில் இருக்கும்
  அந்நிய செலாவணி மோசடி வழக்குகளும்.

 2. selvarajan சொல்கிறார்:

  எந்த ஊழலும் செய்யாத இந்திய மக்கள் வாக்கு ஒன்றை அளித்துவிட்டே — தினமும் எந்த சட்டம் திடீரென்று வெளிக்கிளம்புமோ … ” இறப்பு பதிவிற்கும் ஆதார் கேட்பது போல ” இதையே காமெடியாக :– // இறப்பு பதிவு செய்யமட்டும் ஆதார் வேண்டுமா? இல்லை இறப்பதற்கே ஆதார் வேண்டுமா? //
  Read more at: http://tamil.oneindia.com/memes/netizens-making-fun-govt-announcement-on-aadhaar-mandatory-291860.html என்று தினமும் பயந்துக் கொண்டு இருக்கும் போது … அரசியல்வாதிகள் டெல்லிக்கு அஞ்சிக் கிடப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது …அதிகாரம் கையில் இருக்கிறது யாரையும் எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கலாம் — அச்சுறுத்தலாம் என்பது தான் தற்போதைய நடைமுறையாகி விட்டதே … !!! தாங்கள் அறியாததா

 3. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  காமை ஐயா,
  முரசொலியின் 75ஆவது ஆண்டு விழாவைபற்றிய உங்கள் இடுகைக்காக காத்திருக்கிறோம்.

  • புதியவன் சொல்கிறார்:

   முரசொலி, திமுக பத்திரிகை. திமுக என்பதைவிட, கருணானிதியின் சொந்தப் பத்திரிகை. அதைச் சாக்கிட்டு, கருப்பை வெள்ளையாக்கியிருக்கிறார் கருணானிதி. ஏமாந்த திமுகவினரை சந்தா கட்டச் சொல்லி, அதில் காசு பார்த்திருக்கிறார். அதன் இப்போதைய எம்.டி ஸ்டாலின் மகன் உதயனிதி என்பதிலிருந்தே தெரியவில்லையா? ஆனால் கருணானிதி அதை திமுக பத்திரிகை என்று எஸ்டாபிளிஷ் செய்திருக்கிறார். குடும்ப உறவுகளால் இந்து ராம், கேடி பிரதர்ஸ் போன்றவர்கள் பங்குபெற்றிருக்கிறார்கள். நான் கனிமொழியைப் பார்த்தமாதிரி தெரியவில்லை. நீங்கள் மேடையில் பார்த்தீர்களா?

   வேறு வழியில்லாமல், பகைக்கக்கூடாதே என்று ரஜினி போயிருக்கிறார். இதே காரணம்தான் கமலுக்கு (ஏனென்றால் அவர் இப்போதைய அரசை எதிர்த்துக் கருத்துச் சொன்னதால், அவருக்கு திமுகவின் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இந்த கமலின் நியாயத்தை பிறகு எழுதுகிறேன். ராயப்பேட்டை பெனிஃபிட் பண்ட் அழிந்ததற்கு அவர்தான் காரணம்)

   ‘நமது எம்ஜியார்’, ‘முரசொலி’ – இரண்டுக்கும் நான் ஒரு வித்தியாசமும் பார்க்கவில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் –
   நேற்றைய விழாவில் இரண்டு பேரின் குரல்கள் மட்டும்
   அபஸ்வரமாக ஒலித்தது.

   இருவரும் வடிகட்டிய சுயநலமிகள் –

   காங்கிரஸ் தலைவர்கள் – திரு.பீட்டர் அல்போன்ஸ்,
   திரு.திருநாவுக்கரசர் போன்றவர்கள் இருக்கையில், அவர்கள்
   முன்னிலையிலேயே , தேவையே இல்லாமல், ராஜீவ் காந்தி அவர்கள் மரணித்தபோது, முரசொலி அலுவலகம் (காங்கிரஸ்காரர்களால்…) கொளுத்தப்பட்டதை நினைவுறுத்தி பேசி தன் அற்ப புத்தியை காட்டினார் திருவாளர் வைரமுத்து.

   “இங்கே அரசியல் பேசக்கூடாது என்பதை கூட அறியாதவனா நான்..? ” என்று கேட்டுக்கொண்டே, ரஜினி எதிரில் அமர்ந்திருப்பதை பார்த்துக்கொண்டே –

   (ரஜினியைப்போல்) தற்காப்பு கருதி அரங்கத்திலேயே அமர்ந்து விடாமல்,
   துணிச்சலாக தான் மேடையில் ஏறியிருப்பது தன்மானம் கருதி என்றும்
   தன்னை பெரிய அறிவுஜீவியாக நினைத்து, அற்பத்தனமாக
   பேசினார் திருவாளர் பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன்.

   ..
   – வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Selvadurai Muthukani சொல்கிறார்:

  பேசாமல் எச்.ராஜாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நியமித்து விடலாம். எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடும்!!!

 5. புதியவன் சொல்கிறார்:

  எந்த அரசியல் கட்சியும் இருக்கும் வாய்ப்பை உபயோகப்படுத்தும். அதனால் பாஜகவின் தலையீட்டை நாம் வேறுவிதமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஜெ. இருந்தவரையில் கம்பீரமாக இருந்த அதிமுக, இப்போது சுருதி இழந்துகாணப்படுகிறது.

  காசுக்குக் குரைக்கும் நாஞ்சில் சொன்னார் என்பதற்காக அவர் கூறியதை ஒதுக்கத் தேவையில்லை. எருதுகள் பிரிந்தால், சிங்கத்திற்கு எப்போதும் கொண்டாட்டம்தான். காட்டிக்கொடுக்கும் கயவர்கள் இருந்தால் எதிரிக்கு எப்போதும் வலுதான். கொள்ளையடித்தவர்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று நினைத்தால் போலீசுக்கு சாமரம் வீசுவதைத் தவிர்க்க இயலாது.

  ஜெ.வின் சாணக்கியத் தனத்துக்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. அவர் ஓபிஎஸ் அவர்களை முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைத்தார். அதைவைத்து ஓபிஎஸ் எந்தப் பிரச்சனையையும் கட்சிக்குக் கொண்டுவரவில்லை. அதை அப்படியே தொடர்ந்திருக்கவேண்டும். ஓபிஎஸ்ஸுக்கு ஒரு பிம்பம் இருந்தது. அது அதிமுகவுக்கு காலக்கிரமத்தில் உபயோகப்பட்டிருக்கும். பதவி ஆசைதான் இன்றைய நிலைமைக்குக் காரணம். ஜெ. கைகாட்டியவர் ஓபிஎஸ் என்ற ஒரே காரணத்தை முன்னிட்டு அவரைச் சுற்றி எல்லோரும் கூடியிருக்கவேண்டும் (ச.ம உறுப்பினர்கள், கட்சியினர்)

  அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் மூன்று வகை. 1. தீவிர ஆதரவாளர்கள், எம்ஜியார் ஆதரவாளர்கள், இருவரில் கரு/ஜெ-எம்ஜியார் யார் நல்லவர் என்று பார்த்து வாக்களிப்பவர்கள், கொள்ளையடித்தாலும் என் வாழ்வாதாரத்தைப் பறிக்கமாட்டார்கள் என்று நம்புபவர்கள் 2. கருணானிதி வந்துவிடக்கூடாது என்று எப்போதும் மனதில் நினைப்பவர்கள், ஆனால் திராவிடச் சிந்தனை கொண்டவர்கள் 3. தங்கள் மதத்திற்கு எது நல்லது என்று பார்த்து வாக்களிப்பவர்கள். இது எலெக்ஷனைப் பொறுத்து மாறும்.

  முதல்வகை மக்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சசிகலா தொடர்புடைய கும்பலுக்கு வாக்களிக்கமாட்டார்கள். ஜெ.வின் பெரிய குறையே சசிகலா கும்பல், ஜெ.வின் வழக்குகளுக்குக் காரணமே சசிகலா கும்பல் என்று அனேகமாக எல்லோரும் நினைப்பர்.

  இரண்டாவது வகை மக்கள், கருணானிதி இல்லாத தேர்தலில், அதே சமயம் அவருடன் இருந்த கொள்ளையர்கள்தான் ஸ்டாலினுடனும் இருப்பதால் எந்தவகை முடிவு எடுப்பார்கள் என்பது பார்க்கவேண்டியது. ஸ்டாலின்/திமுகவை அவர்கள் சுலபமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  மூன்றாவது வகை மக்கள் செயல்படுவதைப் பொறுத்து பாஜகவின் வளர்ச்சி தமிழ்’நாட்டில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  “டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார்” – இது இரண்டு கட்சிகளுக்கும் (திமுக, அதிமுக) பொருந்தும். ஏனென்றால், இப்போதிருக்கும் அதிமுக, தாங்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக மத்திய அரசு ஆதரவு நிலை எடுக்கிறார்கள். இதில் எந்தப் பிரிவினருக்கும் வித்தியாசம் கிடையாது. சர்க்காரியா கமிஷன் ஊத்தி மூடுவதற்காக 50% சட்டமன்ற தொகுதியை இந்திராவுக்குக் கொடுக்க வைத்தது, கச்சத்தீவைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க வைத்தது. இதுபோலவே, கீழே அறிவாலய கூட்டம் நடக்கும்போது சிபிஐ, மாடியில் கருணானிதியின் இரண்டாவது மனைவியை விசாரணை செய்தது, திமுக ஆதரவு இருக்கும்போதே கனிமொழியையும் ராசாவையும் திகார் சிறையில் வைத்தது. சென்னையை விட்டு எங்கும் போயறியாத (கர்னாடகாவில் குவித்த சொத்துக்களில் போய் தஞ்சம் அடைந்ததைத் தவிர) கருணானிதியை, சக்கரத்தோடு திகார் சிறை வாசலில் நாள் முழுவதும் காத்திருக்கவைத்தது. திராவிடம் பேசிக்கொண்டே மீத்தேனுக்கு ஸ்டாலினை கையெழுத்துபோட வைத்தது. ஏர்கூலரில் வாழ்க்கையை அண்ணா சமாதியில் 2, 3ம் மனைவியோடு மெத்தையில் ஓய்வு அனுபவிக்கும்போதே இலங்கைத் தமிழர்களை அழிக்க மத்திய அரசுக்கு உதவியது. அதனால், மத்திய அரசுக்கு சாமரம் வீசுவது இரண்டு ஆட்சியிலும் தங்கு தடையில்லாமல் நடந்துள்ளது.

  இதன் முக்கியக் காரணம், ‘மடியில் கனம், அதனால் வழியில் பயம்’. இதனை உபயோகப்படுத்திக்கொண்ட, கொள்ளும் காங்கிரஸ், பாஜகவைக் குறை சொல்ல யாருக்குத்தான் யோக்கியதை உண்டு?

 6. Lala சொல்கிறார்:

  ஜெயா இருந்திருந்தாலும் பாஜக வேட்பாளரையே ஆதரித்திருப்பார்.
  அதை விடுத்து திமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரையா ஆதரித்திருக்க போகிறார்?
  இங்கு ஜெயாவுக்கு ஒரு நியாயமும் தினகரனுக்கு ஒரு நியாயமும் ஏன் ?

 7. Phillips சொல்கிறார்:

  Mr.Puthiyavan,

  // பாஜகவைக் குறை சொல்ல யாருக்குத்தான் யோக்கியதை உண்டு? //

  I am watching your comments for the last few weeks.
  Wherever BJP is charged, you start as if you are also travelling on the same path; then gradually deviating from the topic bringing in other parties;
  and finally ending as if there is nothing wrong with BJP. Here also you are concluding your comments with the word ” பாஜகவைக் குறை சொல்ல யாருக்குத்தான் யோக்கியதை உண்டு?”.
  Come clean man; Don’t bring in your favourable views on bjp in a concealed way.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.