“மூக்குப் பொடி சித்தர் ” மாயை – ஆட்சியை மாற்றுமா ..???!!!


ஒரு நாள் மின்சாரக்கம்பி மீது அவர் சர்வசாதாரணமாக
நடந்து சென்றாராம்… அது முதல் மிகவும் பிரபலமாகி
விட்டாரரென்று திருவண்ணாமலை வாசிகள்
சொல்கிறார்களாம்….


அவரது சொந்த ஊர் எது என்பது யாருக்கும் தெரியாது…
எப்போது திருவண்ணாமலைக்கு வந்தாரென்பதும்
யாருக்கும் தெரியாது.

யாராவது பணம் கொடுத்தால், அதை கிழித்து போட்டு
விடுவாராம். பச்சை கலரில் போர்வை மட்டும் உடுத்தி
இருப்பாராம்….

இவர் யாரிடமும் சுலபத்தில் பேச மாட்டாராம்…யாரையும்
எளிதில் பார்க்கவும் மாட்டாராம்…ஆனால், யார் மீது
இவரின் பார்வை படுகிறதோ, அவர்கள் நினைத்து வந்த
காரியங்கள் எல்லாம் கைகூடுமாம்….

விலக்கப்பட்ட துணைச்செயலாளர் இவரைப் போய் பார்த்து,
ஒரு இரவு முழுவதும் இவர் முன் தியானத்தில் அமர்ந்து
இருந்தாராம்.

மூக்குப்பொடி கண் விழித்து,
இவரை பார்த்த மாத்திரத்தில்,

அவரை ஒரே அமுக்காக பச்சை போர்வை ஒன்றை
போர்த்தி அமுக்கி, காலில் விழுந்து – ஆசிர்வாதம் பெற்று
விட்டாராம்… இனி ஆட்சி அவர் கையில் வருவது உறுதி
என்கிறார்கள்.

பத்திரிகை ஒன்று சொல்கிறது இந்த விவரங்களை எல்லாம்.

அடடா – இத்தனை நாட்களாக ஆட்சியை கை வசப்படுத்த
இப்படி ஒரு சுலபமான வழி இருப்பது தெரியாமல் போய்
விட்டதே… அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும்,
டெல்லிவாசிகளுக்கும்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to “மூக்குப் பொடி சித்தர் ” மாயை – ஆட்சியை மாற்றுமா ..???!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  ஓபிஎஸ் சாருக்கு இதைப்பற்றி யாரும் சொல்லவில்லையா –
  அவர் ஷிர்டிக்கு போயிருக்கிறாரே !

 2. புதியவன் சொல்கிறார்:

  அதிமுகவுக்கு இப்போது நல்ல நேரம் கிடையாது. பணம் இருப்பது மன்னார்குடி கும்பலிடம் (தேர்தலைப் பார்த்துக்கொள்ள). மற்றவர்களிடம் தங்களுக்குச் சேர்த்த, தங்களுடைய தேர்தலுக்குச் சேர்த்த பணம் மட்டும்தான் இருக்கிறது. ஓபிஎஸ், எடப்பாடி வார்த்தைகளை நம்பி மட்டும் அதிமுகவுடன் இணையமுடியாது. யாராவது மூன்றாவது ஆளின் assuranceஐயும் நம்பித்தான் முடிவு எடுக்கமுடியும். இப்போது பாஜக/மோடி அவர்கள் இந்த மூன்றாவது ஆள் வேலையைச் செய்கிறார்கள். ஓபிஎஸ் சேர்வதற்கு முதல் படியே, சசிகலா மன்னார்குடி கும்பலை கட்சியைவிட்டுத் தூக்கவேண்டும். அதன்பிறகு, உடனேயே, ஓபிஎஸ் அவர்களும், அவருக்கு யாரேனும் போட்டியாக இருப்பவரும் கட்சியின் முழுவீச்சான அங்கீகாரத்தை (வாக்குகளின் மூலம், பொதுச்செயலாளர் அந்தஸ்தை) பெறவேண்டும். அதற்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி போட்டியிட்டாலும் தவறில்லை. அதை வைத்துக்கொண்டுதான் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். இதைச் செய்யாமலிருந்து, இடையில் ஏதாவது அரசியல் விளையாட்டு விளையாடினால் அது கட்சியின் அழிவுக்கு வழிவகுக்கும். பொதுச்செயலாளர், கட்சியின் அங்கீகாரத்தைப் பெறுவது முக்கியம். அதில், தங்கள் தனிப்பட்ட நலனைவிட, கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, யார் பெரும்பான்மை அதிமுக தொண்டர்களின் ஆதரவு பெற்றவர் என்று பார்க்கவேண்டும். இதில் தோற்றால் எந்த அவமானமும் கிடையாது. கட்சித் தொண்டர்கள் விரும்பும் தலைவரே மக்கள் மத்தியில் கட்சியின் புகழைக் கொண்டுசேர்க்கமுடியும், மக்களின் ஆதரவைப் பெறமுடியும். மன்னார்குடி கும்பல், கொள்ளையர்கள் என்பது அனேகமாக எல்லோருக்கும் தெரியும். அவர்கள் கருணானிதி/ஸ்டாலின் கும்பலோடு கொள்ளையடிப்பதில் மட்டும் போட்டிபோடலாம்.

  அதிமுக கட்சியின் வாக்குகளை மன்னார்குடி கும்பல், பணத்தின் துணையோடு பெறக்கூடாது. அப்புறம் அது வாக்குகளைத் திசைதிருப்புவது, ஓட்டு எண்ணிக்கை கோல்மால் போன்றவற்றில் கொண்டுவந்துவிடும்.

  மற்றபடி மூக்குப்பொடிச் சித்தர் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று சொல்வது கட்சிக்குப் பிரயோசனப்படாது.

 3. LVISS சொல்கிறார்:

  THAT SOME BELIEVE IN THIS KIND OF THING IS REALLY A SURPRISE –WHILE WE CAN LAUNCH A HUNDRED PLUS SATILITES AT ONE GO WE STILL HAVE SOME STEEPED IN THESE BELIEFS—

  • தமிழன் சொல்கிறார்:

   அரசியல் என்பது விசித்திரமானது. சாதாரண மக்களுக்கே, ‘இதைச் செய்தால் இது நடக்கும்/லாம்’ என்றால், செய்துதான் பார்த்திடுவோமே, ஏன் அதை விடணும் என்ற மனநிலை தோன்றும். இதுதான் பரிகாரத் தலங்கள் சக்கைபோடு போடக் காரணம். (பரிகாரத்துக்கு உங்கள் தலையைக் கொடுக்கவேண்டும் என்றால் ஒருவரும் போகமாட்டார்கள்). சில ப்ரீதி செய்துதான் பார்ப்போமே என்று எல்லோருக்கும் தோன்றுவது சகஜம் (என்டிஆர் அவர்கள், கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்ததும், புடவை கட்டி யாகம் செய்ததும் இந்த மாதிரி நம்பிக்கையில் சேர்த்திதான். மஞ்சள் துண்டைப் பற்றியும் சொல்லவேண்டிய அவசியமில்லை. பாரம்பர்ய ‘கடவுள் இல்லை’ கும்பல் கோவிலில் போய் கும்பிட்டு நிற்பதுபோல் படங்கள் வந்ததும் நாம் பார்த்த ஒன்றுதான், கோவில் குளம் தூர்வாரியதும் இதில் சேர்த்திதான் ). இன்றைக்கு யாராவது ஜோசியர், ‘கடவுள் உண்டு, நம்புகிறேன்’ என்று நீங்கள் பிரச்சாரம் செய்தால், நீங்கள்தான் அடுத்த முதல்வர் என்று ஸ்டாலினிடம் சொன்னால், உடனே அதைச் செய்துவிட்டுதான் அடுத்த காரியம் பார்ப்பார்.

   விண்வெளி, விஞ்ஞான முன்னேற்றம் என்பது வேறு, நாம் பரம்பரையாக நம்பும் ‘பரிகாரம்’, ‘கோவில் தரிசனம்’, ‘மந்திரம்/தந்திரம்’ என்பது வேறு.

   குறிப்பி: கேபிட்டல் எழுத்துகளில் பின்னூட்டம் இடாதீர்கள். அது படிப்பதற்கு உகந்ததுபோல் தெரியாது, அதன் த்வனி, அழுத்திச் சொல்வதுபோல் இருக்கும். இது ஈமெயில் எடிக்கஸி.

   • LVISS சொல்கிறார்:

    I HAVE SEEN MANY MENTIONING ABOUT THESE ETHICS– WHEN THE INTERNET BELONGS TO NO ONE WHO CODED THESE ETHICS– SOME SAY IT AMOUNTS TO SHOUTING –IF THAT IS SO TYPING IN SMALL LETTERS WOULD AMOUNT TO WHISPERING ISNT IT AND YOU WONT HEAR IT –ANYWAY I DONT SUBSCRIBE TO THIS –SOMETIMES I TYPE IN CAPS AND PERHAPS THIS IS THE FIRST TIME I AM DOING IT HERE —I AM A REGULAR COMMENTOR IN A NEWS WEBSITE — MANY TIMES i TYPE IN CAPS —

    • இளங்கோ சொல்கிறார்:

     கே.எம்.சார்,

     தமிழன, எல்விஸ் அவர்களுக்கு சொல்கிறார் :

     கேபிட்டல் எழுத்துகளில் பின்னூட்டம் இடாதீர்கள். அது படிப்பதற்கு உகந்ததுபோல் தெரியாது, அதன் த்வனி, அழுத்திச் சொல்வதுபோல் இருக்கும். இது ஈமெயில் எடிக்கஸி.

     எல்விஸ் அவர்கள் பதிலுக்கு பிடிவாதம் பிடிக்கிறார்.
     “இன்டர்னெட் யாருக்கும் சொந்தமில்லை. இதில் இப்படித்தான்
     எழுத வேண்டும் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.
     நான் இப்படித்தான் எழுதுவது வழக்கம்.”

     இன்டர்னெட் யாருக்கும் சொந்தமில்லை என்பது நிஜம் தான்.
     ஆனால், இந்த வலைத்தளம் உங்களுக்கு சொந்தமானது.
     எனவே இங்கு இப்படித்தான் எழுத வேண்டுமென்று நீங்கள் சொல்லலாம்
     அல்லவா ? நயமாகச் சொன்னால் கேட்க மாட்டேன் என்று கிறுக்குத்தனமாக பிடிவாதம் பிடிப்பவர்களுக்கு சொல்ல வேண்டிய விதத்தில் நீங்கள் சொல்லலாமே.

     • LVISS சொல்கிறார்:

      IF MR. K M SAYS I WILL STOP VISITING THIS SITE —WE DONT LIKE BEING TOLD WHAT TO EAT WHAT TO WEAR ETC ETC BUT WE DONT MIND BEING TOLD HOW TO USE AN INTERNET –STRANGE ISNT IT ?
      WAITING FOR MR. K M’S VIEW ON THIS —

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      திரு.எல்விஸ்,

      வேண்டுமென்றே பிடிவாதம் பிடித்து, ” நான் கேபிடல் லெட்டரில் தான் எழுதுவேன்… இதை எதிர்த்தால், இந்த வலைத்தளத்திற்கே வர மாட்டேன் ” என்று சொல்லும் ஒருவரிடம் … நீங்கள் அவசியம் இந்த தளத்திற்கு வந்து தான் ஆக வேண்டும் என்று இறைஞ்சும் நிலையில்
      நானில்லை…..

      ” I AM A REGULAR COMMENTOR IN A NEWS WEBSITE — MANY TIMES i TYPE IN CAPS ”

      நீங்கள் விரும்பும் இத்தகைய தளங்களில் போய் எத்தனை அங்குல உயரத்திற்கு வேண்டுமானாலும் எழுதிப்பழகுங்கள்.

      ஆனால், இங்கு பின்னூட்டம் எழுதும்போது, மற்றவர் நலனையும் அனுசரித்து தான் எழுத வேண்டும்.

      உங்கள் பின்னூட்டம் ஸ்பெஷல் கவனத்தை பெற வேண்டுமானால், உங்கள் கருத்து சிறப்பானதாக இருந்தால் போதுமானது. எழுத்து பெரியதாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை…

      சென்று வாருங்கள் நண்பரே…!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நன்றி இளங்கோ…
      சில சமயங்களில் நான் சொல்ல நினைப்பதை நீங்களே சொல்லி
      விடுகிறீர்கள்… அது ஒரு விதத்தில் எனக்கு வசதியாகத்தான்
      இருக்கிறது.

      ஆனாலும் …… எப்போதுமே அப்படி இருப்பதில்லை… 🙂 🙂 🙂

      .
      வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • தமிழன் சொல்கிறார்:

     எல்விஸ்- என் கருத்தாகத்தான் சொன்னேன், இந்தத் துறையில் பல வருடங்கள் இருப்பதால். அதனை “கட்டளை” த்வனியில் நிச்சயமாகச் சொல்லவில்லை. வாழ்த்துக்கள்.

     • Ganpat சொல்கிறார்:

      Shri.LVISS,..பொதுவாக நாம் சாப்பிடுவதற்கு வலது கையை பயன்படுத்துவதுதான வழக்கம்.இவையெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட நடைமுறைகள்.எல்லா எழுத்துக்களையும் caps இல் அடிப்பவர் கீபோர்ட் பழுது என்றுதான் பொருள்.”இல்லை என் இஷ்டம் நான் அப்படிதான் செய்வேன்” என்பவரிடம் என்ன பேசுவது? நன்றி

 4. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  திரு.எல்விஸ் அவர்களுக்கு உங்களின் பதில் – Superb; I am honoured. thank you.

  எனக்கு – ?
  நீங்கள் என்னை கோபிக்க மாட்டீர்கள் என்று எல்விஸ் அவர்களுக்கு
  நான் பதில் எழுதும்போதே தெரியும் 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.