திரு.ஓபிஎஸ், தங்களை, பாஜக தலைமை கட்டுப்படுத்துவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாரா ..???


இன்றைய டெல்லி செய்தி இது –

இன்று( ஆகஸ்ட்-14) பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில்
பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். பிரதமர் இல்லத்தில்
சுமார் அரைமணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது
மைத்ரேயன் எம்.பி. உடனிருந்தார்.

இரு அணிகள் இணைப்பு குறித்தும், தமிழக அரசியல் சூழல்
குறித்தும் அவர்கள் விவாதித்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள்
முதல்வர் பன்னீர்செல்வம்,’ தமிழகத்தின் தற்போதயை
அரசியல் சூழ்நிலைகள் குறித்து பிரதமரிடம் விரிவாக
எடுத்துரைத்தேன். தமிழக அரசின் நிலைப்பாடுகள் குறித்தும்,
தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்தும்
விரிவாக பேசினோம்’ என்று தெரிவித்தார்.

——————————

“தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைகள் குறித்து
பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தேன்….”

இதற்கு என்ன அர்த்தம்….?
இதற்கான அவசியம் எங்கே வந்தது …. ?

பாஜக தலைமை – தாங்கள் எந்தவிதத்திலும் அதிமுக
அணிகளின் பிளவிலோ, இணைப்பிலோ சம்பந்தப்படவில்லை
என்றே இது வரை கூறி வந்துள்ளது….

இப்போது திரு.ஓபிஎஸ், வெளிப்படையாகவே, தமிழக
அரசியல் குறித்து பிரதமரிடம் பேசியதாகச் சொல்லி
இருப்பதன் அர்த்தம் என்ன….?

அதிமுக தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது
வெளிப்படையாக மக்களுக்கு தெரிய வரட்டும் என்று
பாஜக தலைமையும் விரும்புகிறதா…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to திரு.ஓபிஎஸ், தங்களை, பாஜக தலைமை கட்டுப்படுத்துவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாரா ..???

 1. selvarajan சொல்கிறார்:

  முந்தைய இடுகை ஒன்றில் // சூத்திரதாரி
  டெல்லியில்
  இருக்கையில்… ??? // என்று குறிப்பிட்ட பின்னும் — கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா ..? தமிழ் நாட்டு அரசியல் கேலிக்கூத்தான செய்தியாகி இருக்கின்ற வேளையில் ஒரு வருத்தம் தரும் செய்தி பத்திரிக்கைகளில் ” அறுபதுக்கும் மேலான குழந்தைகள் ” ஆக்ஸிஜன் இல்லாத மருத்துவமனையில் மரணம் …..மனம் கனக்கிறது . அது உ .பி. யில் நடந்தது …. ” பசுக்களை பராமரிக்க துடிக்கும் பரமாத்மாக்கள் — சிசுக்களை காக்க முடியாமல் ” ….. போனது எதனாலோ …. ?

  • தமிழன் சொல்கிறார்:

   இதற்கு அரசைக் குறை சொல்வது அவ்வளவு பொருத்தமுடையதன்று. இந்தமாதிரி துரதிருஷ்ட சம்பவங்கள் நம்ம நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். நம்ம நாட்டில் சட்ட திட்டங்களை அரசோ, அதிகாரிகளோ மக்களோ கடைபிடிப்பதே இல்லை. அது, பஸ்ஸில் பெரிய ஓட்டையில் குழந்தை விழுந்து இறந்த சம்பவமாகட்டும், 11 மாடி கட்டிடம் கட்டும்போதே விழுந்த சம்பவமாகட்டும், 97 திமுக ஆட்சியில் பிரகதீஸ்வரர் கோவிலில் நடந்த தீச்சம்பவத்தில் 50 பேர் இறந்த சம்பவமாகட்டும், கும்பகோணம் பள்ளி தீவிபத்தாகட்டும், அல்லது சென்னை சில்க்ஸ் தீப்பிடித்த சம்பவமாகட்டும் – எங்கும் அதிகாரிகளின், மக்களின் அலட்சியம்தான் தென்படுகிறது.

   உ.பி சம்பவத்தின் முதல் காரணம், அந்த மருத்துவமனையின் டீனும் அதிகாரிகளும். அவர்கள் நிர்வாக ரீதியாக, அரசுக்கு இந்தச் சிக்கலை கடிதம் மூலம் தெரிவித்திருந்தால், Reminder அனுப்பியிருந்தால், அதன் பிறகு குற்றம் சுகாதாரத் துறையினருடையது. அவர்கள் அதனை மந்திரிக்குத் தெரிவித்திருந்தால் குற்றம் மந்திரியினுடையது. அவர் அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருந்தால், போலீசும் அரசுக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டுசென்றிருந்தால் அது முதலமைச்சருடையது. பொத்தாம் பொதுவாக முதலமைச்சரைக் குறை சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை.

   • selvarajan சொல்கிறார்:

    அவரவர் பார்வை — அவர் – அவர்களுக்கு — மறுமொழி இடுவதில் விருப்பம் இல்லை … ஒரு விளக்கம் மட்டுமே …!

   • "கீரன்" சொல்கிறார்:

    // உ.பி சம்பவத்தின் முதல் காரணம், அந்த மருத்துவமனையின் டீனும் அதிகாரிகளும். அவர்கள் நிர்வாக ரீதியாக, அரசுக்கு இந்தச் சிக்கலை கடிதம் மூலம் தெரிவித்திருந்தால், Reminder அனுப்பியிருந்தால், அதன் பிறகு குற்றம் சுகாதாரத் துறையினருடையது. அவர்கள் அதனை மந்திரிக்குத் தெரிவித்திருந்தால் குற்றம் மந்திரியினுடையது. அவர் அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருந்தால், போலீசும் அரசுக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டுசென்றிருந்தால் அது முதலமைச்சருடையது.//

    யார், எந்த அளவிற்கு பிரச்சினையை கொண்டு சென்றார்கள் என்பது செய்திகளில் வருகின்றனவே. நீங்கள் படிக்கவில்லையா ? அல்லது தெரிந்து கொண்டதாக காட்டிக்கொள்ள விருப்பமில்லையா ?
    முதலில் படித்து லேடஸ்ட் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
    விவரங்களை தெரிந்து கொள்ளாமலே நீங்கள் மட்டும் எப்படி ” முதலமைச்சரை குறை சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல ” என்று சொல்லலாம் ?

   • "கீரன்" சொல்கிறார்:

    // இதற்கு அரசைக் குறை சொல்வது அவ்வளவு பொருத்தமுடையதன்று. இந்தமாதிரி துரதிருஷ்ட சம்பவங்கள் நம்ம நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். நம்ம நாட்டில் சட்ட திட்டங்களை அரசோ, அதிகாரிகளோ மக்களோ கடைபிடிப்பதே இல்லை.
    அது, (1) பஸ்ஸில் பெரிய ஓட்டையில் குழந்தை விழுந்து இறந்த சம்பவமாகட்டும், (2) 11 மாடி கட்டிடம் கட்டும்போதே விழுந்த சம்பவமாகட்டும், (3) 97 திமுக ஆட்சியில் பிரகதீஸ்வரர் கோவிலில் நடந்த தீச்சம்பவத்தில் 50 பேர் இறந்த சம்பவமாகட்டும், (4) கும்பகோணம் பள்ளி தீவிபத்தாகட்டும் , //

    இந்த சம்பவங்கள் நடந்தபோது யாரும் சம்பந்தப்பட்ட அரசுகளை குறை சொல்லவில்லையா ? அப்போது சொன்னார்கள் என்றால் இப்போதும் சொல்வதில் என்ன தவறு? யார் மீது தவறு என்று தெரியும் வரையில், அரசைத்தான் குறை கூறுவார்கள்.
    ரெயில் விபத்து நடந்தபோது, ரெயில்வே மந்திரியா
    சிக்னல் கொடுத்தார், தடம் மாற்றினார், பாலம் கட்டினார் ?
    அப்புறம் அவர் ஏன் ரிசைன் செய்தார் ?
    யார் அல்டிமேட் அதாரிடியோ, அவரைத்தான் குறை சொல்வார்கள். தவறு எங்கே நடந்தது, யாரால் நடந்தது என்று அவர் தான் கண்டுபிடித்து தெரியப்படுத்த வேண்டும்.
    நடந்ததை பூசிமெழுக கூடாது. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் காண்டிராக்டரை மாற்றியதில் மந்திரிக்கு சம்பந்தம் இல்லையா ? அது மந்திரியோடு நின்று விட்டதா அல்லது அதற்கு மேலும் போனதா என்று யாருக்கு தெரியும் ?
    மறுப்பு தெரிவிக்க ஓடி வருகிறவர்கள், இந்த விவரங்களை எல்லாம் முதலில் சேகரிக்க வேண்டும்.

    • புதியவன் சொல்கிறார்:

     ரெயில் விபத்து நடந்தபோது, ரெயில்வே மந்திரியா சிக்னல் கொடுத்தார், தடம் மாற்றினார், பாலம் கட்டினார் ? அப்புறம் அவர் ஏன் ரிசைன் செய்தார் ? – இது அந்தக் காலம், அதாவது லால் பகதூர் சாஸ்திரி காலம்.

     மும்பை தீவிரவாத கலவரத்துக்கு (பாகிஸ்தான் தீவிரவாதிகள்) ப.சி. ராஜினாமா செய்ததாக ஞாபகம் இல்லை. காமன்வெல்த் விளையாட்டு முழுவதும் குளறுபடியாகி, போட்ட பாலமெல்லாம் உடைந்தபோதும் யாரும் ராஜினாமா செய்ததாகத் தெரியவில்லை (மன்மோகன் சிங்தான் அதற்குப் பொறுப்பு. இது வெளினாட்டினர் முன்னால் நமக்கு நடந்த கேவலம்). கோவை கலவரத்தின் விளைவாக, நெல்லை கலவரம் போன்ற பல கலவரங்களின் விளைவாக, தினகரன் தீப்பிடித்தது, பஸ் தீவைத்துக்கொளுத்தியது போன்ற, நாட்டில் நடந்த ஒரு கலவரத்துக்கும், விபத்துகளுக்கும் யாரும் ராஜினாமாவோ, பொறுப்பு ஏற்றுக்கொண்டதாகவோ தெரியவில்லை. அப்படி ஏதாகிலும் ‘நான் படிக்காமல்’, ‘நீங்கள் படித்திருந்தால்’ சுட்டி கொடுக்கலாம்.

     அதற்கப்புறம், இத்தனை பெரிய அரசியல்வாதிகள், மந்திரிகள், முதல்வர்கள், பிரதமர் போன்றோர் ‘தன் மானம் கொண்டு வீறிட்டெழுந்து’ ராஜினாமா செய்திருக்கிறார்களே… முதலமைச்சராகி சில மாதங்களான யோகி அவர்களையும் ராஜினாமா செய்யச் சொல்வதில் அர்த்தம் உள்ளதே என்று யோசிக்கிறேன். அப்படி எந்த உதாரணமும் இல்லாவிட்டால், சரிதான், இவங்க ஆசையை இப்படி எழுதித் தீர்த்துக்கொள்கிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறேன்.

     • "கீரன்" சொல்கிறார்:

      எழுப்பப்பட்ட வினாக்கள் எல்லாம் விடை கண்டு விட்டனவா ?
      உங்கள் பதில் முழுமையானதாக இருக்கிறது என்று
      உங்களுக்காவது திருப்தி கிடைக்கிறதா ?

     • புது வசந்தம் சொல்கிறார்:

      மும்பை தாக்குதலுக்கு பிறகு தான் ப.சி அந்த துறைக்கு அமைச்சர் ஆனார். கோவை கலவரம் சரி அது என்ன நெல்லை கலவரம் ? உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் எழுதாதீர்கள் அல்லது இனி அப்படி ஏதேனும் திட்டம் உள்ளதா? முளைச்சாவு என்று முதல்வரே பூசி மொளுகுகிறார். அந்த குழந்தைகளின் தாயாகவும், தந்தையாகவும் இருந்து அந்த இழப்பை உணருங்கள்.

     • புதியவன் சொல்கிறார்:

      99ம் ஆண்டு ஜூலை 23ம்தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நெல்லையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலம் சென்ற போது கலவரம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர் – இதை புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் வருடம்தோறும் நினைவுகூறுகின்றனர்.

   • அறிவழகு சொல்கிறார்:

    குழந்தைகள் மரணத்தில் உங்களுக்குப் பொறுப்பில்லையா ஆதித்யநாத்?

    http://tamil.thehindu.com/opinion/columns/article19501136.ece?homepage=true

    – செல்வ புவியரசன், தி இந்து நாளிதழ்,16 Aug 2017.

    • புதியவன் சொல்கிறார்:

     குழந்தைகள் மரணத்திற்கு முதல்வருக்குப் பொறுப்பு உண்டு. ஆனால் அவரை ராஜினாமா செய்யச் சொல்லுபவர்கள் எல்லோருமே, அந்தக் காரணத்திற்காக ராஜினாமா செய்யச்சொல்லவில்லை. அப்படி இருந்தால், நடந்த ஏகப்பட்ட கலவரங்களுக்கு ஒரு பியூனாவது அல்லது ஒரு கவுன்சிலராவது பதவிவிலக யாராவது சொல்லியிருக்கணுமே.

     இன்றைக்கு கமலஹாசன் 50 ஆண்டு நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டு, ஊழலுக்காக அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரும்போது, அதற்கு ஏன் மதிப்பு கிட்டுவதில்லை? இதுவரை நடந்த கோடானு கோடி ஊழலின்போது, அதில் திமுக சம்பந்தப்பட்டிருந்தபோது, அவர், கருணானிதிக்கு பாராட்டுக்கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தாரே, ஒரு முறையாவது ‘நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்யுங்கள்’ என்று கேட்டாரா?

     இதனால்தான் இன்றைக்கு ஆதித்யனாத் ராஜினாமாவைக் கேட்பவர்கள், அவர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகக் கேட்பதால் அதற்கு மரியாதை கிட்டவில்லை.

 2. புதியவன் சொல்கிறார்:

  ஜெ. அதிமுகவை எப்படி வைத்திருந்தார். அவரது அடியொற்றி, மற்றவர்களும் ஓபிஎஸ் தலைமையை ஏற்றுச் செயல்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். நந்தவனத்தில் இருந்த பல ஆண்டிகள், ஜெ. வனைந்து வைத்த பானையைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்த கதையாகிவிட்டது.

  பாஜக, மத்திய அரசு என்பதைத் தவிர, அதிமுகவினருக்கு அந்தக் கட்சிமேல் எதற்குக் கவலை. தமிழக அரசுக்கு மத்திய அரசின் தயவு (அரசியல் அப்படி ஆகிவிட்டது) தமிழக நன்மைக்காக வேண்டும். நல்லுறவு இருந்தால், மத்திய அரசு தொந்தரவு கொடுக்காது. அதற்குமேல் அதீதமாக மத்திய அரசு உதவாது (காவிரி மேலாண்மை போன்ற மற்ற மானிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில்). ஆனால் பாஜக நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் என்றே நினைக்கிறேன் (தமிழகத்தில் அணுவுலை இருந்தால் அதன் பயன் தமிழகத்துக்குத்தான் பெரும்பாலும் கிடைக்கும். கேரளா, அணுவுலை அமைக்க எதிர்ப்பாக இருந்தால், தமிழக அணுவுலையால் கேரளா பயன்பெற முடியாது போன்றவைகளை. அதுபோல், தேவையில்லாமல் கர்னாடகா அணை கட்டுவதை பாஜக அரசு அனுமதிக்காது. அனுமதித்தால், நாளை பிரம்மபுத்திராவுக்கு சைனா இடைஞ்சல் செய்தால் எங்கும் போய் முறையிட முடியாது)

  இப்போ என்ன நடக்கிறது? ஓபிஎஸ்ஸுக்கு நியாயமான ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் இல்லை. அது புரிந்துகொள்ளக்கூடியது. காசு இருக்கும் பக்கம்தான் எம்.எல்.ஏக்கள் சாய்வார்கள். அதனால், இப்போது தேவை, அதிமுகவினரின் பெரும்பான்மை வாக்குகள் ஓபிஎஸ்ஸுக்கா, எடப்பாடி (அது நியாயமில்லை என்ற போதிலும்) அவர்களுக்கா அல்லது சசிகலாவுக்கா என்பதுதான். இதைத் தெளிவாக்கிக்கொண்டால், மற்ற எல்லாம் சரியாகிவிடும். நிற்க,

  தற்போது ஓபிஎஸ் பிரதமரைப் பார்ப்பது சரியானதாகத் தோன்றவில்லை. ஓபிஎஸ் தலைவராகவேண்டுமானால், அதற்கு அதிமுக தொண்டர்கள்தான் ஆதரவு தரவேண்டும். தமிழக பிரச்சனைகளுக்கு இப்போது பிரதமரைப் பார்க்க என்ன அவசியம், ஓபிஎஸ் அவர்களுக்கு என்ன அதாரிட்டி? இது, பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் நலனுக்காக, ‘இந்து மக்கள் முன்னணி’ பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்திப்பதுபோன்றது. முதலில், இந்திய மக்களின் mandateஐப் பெறாமல் அங்கு செல்வதில் என்ன பயன் உண்டோ அதே பயன் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களின் mandateஐப் பெறாமல், பிரதமரைச் சந்திப்பதில் உண்டு.

  பூனைகளுக்குக் கிடைத்த அப்பத்தை, யாருக்கு என்ன பங்கு என்று மத்யஸ்தம் செய்ய குரங்கினை நடுவராக வைத்த கதை தெரியாத தமிழர்கள், அதிமுக தொண்டர்கள் இருக்கமுடியாது. துரதிருஷ்டவசமாக, ஓபிஎஸ்ஸோ, எடப்பாடியோ, சசிகலா கும்பலோ, படித்தவர்கள் கிடையாது என்பதால், அவர்கள் இந்தக் கதையைப் படித்திருக்க வாய்ப்பில்லை. முடிவை அறியும்போது, யாராவது 1ம் வகுப்பில் சொல்லிக்கொடுக்கும் இந்தக் கதையை அவர்களிடம் கொண்டுசேர்த்தால் நல்லது.

  அதேசமயம், பாஜகவின் மீது குறை சொல்ல எந்தக் காரணமும் இல்லை. குரங்கை நோக்கிச் சென்ற பூனைகளைக் குறை சொல்வதா, அல்லது தேமே என்று இருந்த குரங்குக்கு வாய்ப்புக் கிடைத்ததனால், குரங்கைக் குறை சொல்வதா?

  • இளங்கோ சொல்கிறார்:

   // குரங்கை குறை சொல்வதா ? //
   அதானே.
   குரங்கே எங்கேயாவது குரங்கை குறை சொல்லுமா 🙂 🙂 ???

  • srinivasanmurugesan சொல்கிறார்:

   தேர்தல் ஆணையம் மத்திய அரசின் பிடியில்….கட்சி தலைவர் தேர்தல் நடந்தால் தானே தொண்டர்களின் ஆதரவை பெற முடியும்.அதற்கு திரு.மோடியின் ஆதரவு அவசியம்.இன்றைய சூழ்நிலையில் எரியும் கொள்ளியில் திரு.பன்னீர் கொள்ளிதான் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவை பெற்றது.அதை நிருபிக்க கட்சி தேர்தலை தடத்த ஆணையம் உத்திரவிட வேண்டும்.

 3. mani சொல்கிறார்:

  I think ops was doing well in the shorttime has was allowed to rule when jaya passed away. His
  popularity was increasing slowly, this created jealousy among the mannargudi people and they
  thought if allowed for a longer time he may become a force to reckon with and he was threatened
  to resign, So what could have been a smooth sail for four more years of admk rule, ran in to the
  rough weather due to the greediness of one family which has amassed huge wealth and with that
  ill gotten money they “buy” the MLAS , Unforunately OPS does not have numbers to help his
  cause so naturally he is seeking help from Delhi.

  • தமிழன் சொல்கிறார்:

   மணி-நீங்கள் சொல்வது சரியாக இருக்கவேண்டுமென்றால், ஜெ. அவர்கள் எப்போதாவது (தனிப்பட்ட முறையிலாவது) சசி கும்பலைப் பற்றி மோடி அவர்களிடம் குறிப்பிட்டிருக்கவேண்டும். அல்லது சோ அவர்கள் இதைப்பற்றி சொல்லியிருக்கவேண்டும். ஆனால், மோடி அவர்கள் இப்போது இருக்குமிடம், ஓரளவு ‘உண்மைகளை’த் தெரிந்துகொள்ளும் இடம். அதனால், ஜெ.விடம் தான் கொண்ட நல்லெண்ணத்துக்காக இதைச் செய்ய நினைக்கலாம். ஆனால் இதை ஏன் அவர் எடப்பாடி அவரைச் சந்தித்தபோது கூறியிருக்கக்கூடாது?

   அதிமுக ஆதரவு வோட்டுக்கள், மோடி அவர்களுக்கோ அல்லது பாஜகவுக்கோ ஆதரவான ஓட்டுகள் இல்லை. அதில் உள்ளது, 1. கருணானிதியை மிகவும் வெறுக்கும் மக்கள் 2. சிறுபான்மையினர், மோடி வரக்கூடாது அதனால் யார் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு ஓட்டு என்று போட்டவர்கள். (அதாவது அதிமுக தொண்டர்களின், அதிமுகவை விரும்பும் பொதுமக்களின் வாக்குகளைத் தவிர்த்து).

   எடப்பாடி நடந்துகொள்வதிலும் நான் லாஜிக் எதையும் பார்க்கவில்லை. அவரை ஆதரிக்கும் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள், மன்னார்குடி கும்பலினால்தான் அவரை ஆதரித்தனர் (இன்றைக்கு பதவி போய்விடக் கூடாது என்று நினைத்து அரசை ஆதரித்தாலும், அவர்கள் ஒரிஜினலாக எடப்பாடி ஆதரவாளர்கள் கிடையாது). ஓபிஎஸ் அவர்களை, ஜெவுடன் லிங்க் பண்ணமுடியும் (மனதளவில்). ஆனால் எடப்பாடியை ஜெ.வுடன் தொடர்புபடுத்த முடியாது (ஏனென்றால் ஜெ. அவர்கள் எப்போதும் எடப்பாடியை முதலைமைச்சராக்கியது கிடையாது). அதனால் எடப்பாடி பதவியை விட்டுக்கொடுக்காமல் இருப்பது, சந்தர்ப்பவாதம் தவிர, வேறு எதுவும் கிடையாது. அவரால் நிச்சயம் தொண்டர்களைக் கவரமுடியாது (ஜாதி என்பதற்கு மேல்). இன்னும் இந்தப் பிளவு மூன்றாகத் தொடரும் பட்சத்தில், ஓபிஎஸ் அவர்களும் அவருடைய ஆதரவை இழந்து அதிமுக முற்றிலுமாகக் குலையும்.

   கருணானிதிக்கு வாக்களிக்காதவர்கள், அவர் ஊழல், தீய சக்தி, ஜெ.வை ஒப்பிடும்போது என்று நினைத்து வாக்களித்தனர். திமுகவுக்கு எதிராக மன்னார்குடி தலைமை ஏற்கும் பட்சத்தில், அதிமுகவுக்கு வாக்களிக்க போதுமான காரணங்கள் இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.