70-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் – இவையும் நினைவிற்கு வருகின்றனவே…!!!


1947-ல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ஆகஸ்ட் 15-ல்
சுதந்திரம் கொடுப்பதாக தீர்மானித்தபோது, நாட்டின் எந்தெந்த
பகுதிகள் பாகிஸ்தானுக்கு போகும், எந்தெந்த பகுதிகள்
இந்தியாவுடன் இருக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் எல்லைக்கோடுகள் தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டன. சுதந்திர தினத்தை
இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு
கொண்டாடினர்… ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு அற்ப ஆயுள்.
இரண்டே நாட்கள் தான் உயிர் வாழ்ந்தது.

பிரிவினையால் ஏற்பட்ட விளைவுகள் நாட்டையே உலுக்கி
விட்டன. இரண்டு தரப்பிலுமே, லட்சக்கணக்கானவர்கள்
இடம் பெயர நேர்ந்தது. கோபம், ஆத்திரம், வெறுப்பு,
வாழ்க்கையையே பறி கொடுத்த ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து
மக்களின் மனநிலையை முற்றிலுமாக மாற்றி விட்டது.

இரண்டு தரப்பிலும், அகதிகள் முகாம்கள் திறக்கப்பட்டு,
லட்சக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டார்கள்.
மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தார்கள்.

ரயில்களில், மாட்டு வண்டிகளில், கால்நடையாக – மூட்டை
முடிச்சுகளை தூக்கிக்கொண்டு, குழந்தைகளுடன்,
பெண்களுடன் – அய்யோ நினைத்துப் பார்க்கவே நமக்கு
இவ்வளவு வேதனையாக இருக்கிறதே… அப்போது இதை
அனுபவித்தவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும்….?

அத்தகையை துரதிருஷ்டசாலிகளை நினைத்து ஒரு சொட்டு
கண்ணீராவது சிந்துவோம்.
MILLENNIUM PHOTO: FREEDOM MOVEMENT, HISTORY’S BIGGEST MIGRATION. TRAIN LOADED TO CAPACITY, INDIA PAKISTAN PARTITION.. ISSUED BY DIRECTORATE OF PUBLIC RELATIONS, EAST PUNJAB.

 

 


பிரிந்தே தீர்வது என்று முடிவெடுத்த பெருமக்கள்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் – இவையும் நினைவிற்கு வருகின்றனவே…!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இந்த புகைப்படங்களை பார்க்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது.
  நீங்கள் சொல்வது போல், அத்தனை துன்பங்களையும் நிஜமாகவே
  அனுபவித்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ?
  இது நாள் வரை சுதந்திர நாள் கொண்டாடப்பட மட்டுமே என்று தான்
  நானும் நினைத்திருந்தேன்.

  இவற்றை மறப்பது தான் துரோகம்.
  இவற்றை வெளியே கொண்டு வந்ததற்கு நன்றி சார்.

 2. Peace சொல்கிறார்:

  Voice of Ram. Amazing initiative.

 3. Peace சொல்கிறார்:

  Happy Independence day ! Let hearts unite !

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப Peace,

   மிக்க நன்றி. உங்கள் உணர்வை பாராட்டுகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களுக்கு,

   நண்பர் peace மேலே பதிந்திருக்கும் வீடியோ பாடலை குறித்து பிபிசி-தமிழ் வெளியிட்டுள்ள செய்தியிலிருந்து ஒரு பகுதி கீழே –
   ————————–

   வைரலான இந்திய – பாகிஸ்தான்
   ஒற்றுமையை போற்றும் ’அமைதி கீதம்’ –

   இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.

   இரண்டு முறை போருக்கு வித்திட்ட சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியால் இரண்டு நாடுகளின் உறவிலும் பதற்றம் நீடித்து வருகிறது.

   இந்நிலையில், இரு நாட்டின் தேசிய கீதங்களையும் இணைத்து, அமைதியை அதிகரிக்கும் நம்பிக்கையில் ஒரு புதிய பாடல் வீடியோ ஒன்று உருவாகப்பட்டுள்ளது.

   “அமைதி கீதம்” என்று அழைக்கப்படும் அந்த புதிய பாடல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாடகர்களால் பாடப்பட்டுள்ளது. இரு நாட்டிற்குமான அமைதியை ஆதரிக்கும் முகநூல் குழுவான `வாய்ஸ் ஆஃப் ராம்` குழு இதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது. இரண்டு நாடுகளையும் சேர்ந்த சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் இந்த பாடலையும் அதற்கு பின்னுள்ள உணர்வையும் பாராட்டியுள்ளனர்.

   “நமது எல்லையை கலைக்காக திறந்தால் அமைதியும் அதனுடன் வரும்” என்ற வாசகத்துடன் அந்த வீடியோ தொடங்குகிறது.

   பின்பு கலைஞர்கள் இந்தியாவின் தேசிய கீதமான `ஜன கன மன` மற்றும் பாகிஸ்தானின் தேசிய கீதமான `பாக் சர்சமின்` பாடலை பாடுகின்றனர் அதில் சில பாடர்கள் ஸ்டுடியோவிலிருந்தும், சிலர் வெளிபுறத்திலிருந்தும் பாடுகின்றனர்.

   ————————

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  இந்தப் புகைப்படங்களைப் பார்த்ததும், படித்த விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்துவிட்டன. இந்திய தேசத்துக்குள்ளாகவே, கன்யாகுமரி, சென்னை தமிழ்னாட்டுக்கு போன்ற போராட்டங்களே எவ்வளவு கடுமையாக இருந்தன என்பதை நாமறிவோம். இது ஒன்றாக வாழ்ந்த ஒரு தேசத்தை, அதுவும் மதத்தின் பெயரால் பிரிப்பது. அதில் இறந்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள், லட்சங்களில் அகதிகளானார்கள். சுதந்திரத்துக்கு இந்தியா கொடுத்த மிகப் பெரிய விலை அது. இதை, தலைவர்கள் எப்படி எதிர்பார்க்காது இருந்தார்கள் என்று புரியவில்லை.

  இதில் பெரும்பாலும் கஷ்டப்பட்ட பஞ்சாபிகள், திரும்ப தங்கள் உழைப்பால் உணவு உற்பத்தியிலும் பல தொழில்களிலும் முன்னேறி, இந்திய முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்தார்கள். அவர்களையும் வணங்குவோம்.

  கடவுளின் அருளால், இந்தியா, பாகிஸ்தானைப்போல் அல்லாமல், நாகரீகமான ஜனநாயக தேசம் என்ற நற்பெயர் பெற்றிருக்கிறது. அதற்கு நமக்கு வாய்த்த தலைவர்களும் காரணம். வாழ்க சுதந்திர தேசம், சுதந்திர நன்னாள் வாழ்த்துக்கள்.

 5. D. Chandramouli சொல்கிறார்:

  Sad to see pics of massive exodus. Given that partition was a fait accompli, our leaders and the British Govt could have taken extra days to grant independence, thereby mitigating the possible sufferings of the people on both sides of the border. Anyway, history is history and nothing much can be gained now. Have we learnt the lessons? Doesn’t appear so, going by what happened before the creation of Andhra and later, Telengana States. On this 70th Independence Day, we can only pray that our leaders are endowed with sufficient wisdom to take the nation forward.

 6. seshan சொல்கிறார்:

  70 years crossed with Pain for Kashmir decease, still not cured is it not pathetic.

  instead of asking Kashmir people by voting be with India or Pak, why not we ask all other states except J&K, keep the J&K with us or not.we can conduct a nation level poll in online at least.

  it is better media people should take some initiative to proceed this campaign to keep or not.

  we have spent (they also) too much money and all going on waste ,belongs to other states tax payers money. i doubt J&K contribution in nation building not even 2 to 3 %.

  why our brothers in south and north east waste/lost their life in army at J&K, which is no use to us anymore.

  awaiting your thought.

 7. srinivasanmurugesan சொல்கிறார்:

  பிரிந்தே தீர்வது என்று முடிவெடுத்த பெருமக்கள்…அனைவரும் அவர்களின் தலைமுறைகளும் இன்றைக்கும் வளமாக இருக்க அல்லல் படுவதெல்லாம் அப்பாவி பொதுசனம் தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.