தினமலர்+ஹிந்து – இன்றைய கார்ட்டூன்கள் 2-ம் நிஜந்தானே…?


ஒன்று – தீவிரமாக பாஜகவை ஆதரிக்கும் நாளேடு…
அதில் வந்திருக்கும் ஒரு கார்ட்டூன் –

இன்னொன்று – முதலாளி இடதுசாரி என்று
சொல்லப்படுபவர், ஆனாலும் காங்கிரசை ஆதரிக்கும்
நாளேடு –

இவை முறையே பாஜக மற்றும் காங்கிரஸ் பற்றி
கார்ட்டூன் போட்டால் அவற்றை நிஜமென்று தானே
எடுத்துக் கொள்ள வேண்டும்…?

நிஜத்தை பிரதிபலிக்கும், இன்று வெளிவந்திருக்கும் – அந்த இரண்டு கார்ட்டூன்களும் கீழே…..

( இரண்டு கட்சிகளையும் சேர்த்தே விமரிசித்தாகி விட்டது –
பாஜக நண்பர்கள் என் மீது பாய முடியாது… 🙂 🙂 🙂 )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தினமலர்+ஹிந்து – இன்றைய கார்ட்டூன்கள் 2-ம் நிஜந்தானே…?

 1. புதியவன் சொல்கிறார்:

  தினமலரின் இரண்டு ஆதிக்க சக்திகள் (இந்தத் தலைமுறை மற்றும் மூத்த தலைமுறை) – ஒன்று பாஜக சார்பு, இன்னொன்று திமுக சார்பு. இதற்கு முன்புவரை அதிமுக சார்பாக இந்தப் பத்திரிகை இருந்தது. அதனால் அவர்கள் கட்டுரை, பாஜக சார்பாகவும், கொஞ்சம் எதிர்ப்பாகவும் வரும்.

  தி இந்து – கார்டூனிஸ்ட் இன்னும் நடைமுறைச் செய்திகளை, அன்றாடச் செய்திகளைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். இப்போ காங்கிரஸ் தலைவர்களே, ராகுலின்மீது நம்பிக்கை இழந்து பிரியங்காவைக் கூப்பிடும் நேரம். ராகுலே சொந்த வாழ்க்கையையும் இழந்து, அரசியல் வாழ்க்கையிலும் ரொம்ப ஆர்வம் செலுத்தாமல் ரெண்டும் கெட்டானாக இருக்கிறார்.

  ஆனாலும் அடிப்படைக் கருத்து இரண்டிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

 2. அறிவழகு சொல்கிறார்:

  அவர் பாவம் என்ன செய்வார்? அவருக்கு பின்னாடி வரும் பெருச்சாளிகளை விடவும் முன்னாலுள்ள குஞ்சுகளை நசுக்குகின்றாரா இல்லையா என்று பாருங்கள்.

  குஞ்சுகள் ‍- விவசாயிகள், சிறு வணிகர்கள், அஞ்சறை பெட்டியிலும் சுருக்கு பையிலும் சிருக சேர்த்துவைத்த மூதாட்டிகளும் பொதுமக்களும்.

  • இளங்கோ சொல்கிறார்:

   அறிவழகு அவர்களே,

   இதைத்தானே ” குசும்பு ” என்று சொல்லுவார்கள்…? 🙂 🙂

  • Sundar Raman சொல்கிறார்:

   மோடி எலி குஞ்சுகளை நசுக்கிறாராம் . என்ன கற்பனை – எந்த மூதாட்டியை கொடுமை படுத்தினார் , எந்த சுருக்குப்பையை பிடுங்கினார் . சேல்ஸ் டாக்ஸ் – வரி கட்டமாட்டோம் , வருமான வரி கட்டமாட்டோம் , கட்டு கட்டாய் பணம் வெச்ருப்போம் , தங்கத்தில் பதுக்குவோம் என்று சொன்னவர்கள் , செய்தவர்கள் அவதி பட்டார்கள் , இப்போ லபோ திபோன்னு அடுச்சுக்கிறாங்க . பெருச்சாளிகள் எல்லாம் எப்படி அவதி படுகிறார்கள் என்று கொஞ்சம் பார்வையை வீசி பாருங்கள் – அரசாங்க அலுவலகங்களில் ஒற்றர் வைத்து , பின் மாட்டியவர்கள் தான் எஸ்ஸார் – மெட்ராஸ் மார்வாடிகள் . இப்போ வங்கிகள் அவர்கள் பின் , இன்னமும் நீதி மன்றம் எஸ்ஸார் பின் போக பார்த்தது – ஆனால் உச்ச நீதி மன்றம் மாற்றியது . ( காத்திக் சிதம்பரம் – சென்னை உயர் நீதிமன்றம் – உச்ச நீதிமன்றம் போல ) .

   மக்களை எல்லாம் கொடுமை படுத்தியதால் தான் எல்லா தேர்தலிலும் வென்று வருகிறார் – என்ன ஒரு நகை முரண் . GST வரியால் , கிட்ட தட்ட எல்லாரும் வரி வலைக்குள் வந்து விடுவார்கள் . வரி ஏய்ப்பு செய்ய முடியாது , நாட்டுக்கு நல்லது தானே .

   கோசி மணி போன்ற மூன்றாம் தர தலைவர்களே ED வலைக்குள் என்றால் – TR பாலு, மாறன் , ஜகதரட்ஷகன் , அழகிரி , ராஜா, கனிமொழி இவர்கள் எப்போது வருவோர்களோ – அல்லது வராமல் போவார்களோ . அப்படி வராமல் போனால் , இந்த கார்ட்டூன் அப்படியே பொருந்துகிறது

   • இளங்கோ சொல்கிறார்:

    Sundar Raman

    // TR பாலு, மாறன் , ஜகதரட்ஷகன் , அழகிரி , ராஜா, கனிமொழி இவர்கள் எப்போது வருவோர்களோ – ( அல்லது வராமல் போவார்களோ ). அப்படி வராமல் போனால் , இந்த கார்ட்டூன் அப்படியே பொருந்துகிறது //

    நீங்கள் சொல்லும் இவர்கள் யரும் பிடிபடவில்லை..
    ஆகையால் இந்த கார்ட்டூன் உங்கள் கூற்றுப்படியே சரி ; சரிதானே ?

    • Sundar Raman சொல்கிறார்:

     நிச்சயமாக 100% ஆமோதிக்கிறேன் … மற்றும் இதற்க்கு காரண கர்த்தா ஜெயிட்லே தான் இருக்க முடியும் . மோடியின் பழைய கணக்கை பார்த்தாலும் , அவர் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்களை பிடித்ததாக தெரியவில்லை . தமிழ் நாட்டை விட்டு , மற்ற தலைவர்களை பார்த்தால் , சோனியா , பவார் , முலாயம் , அகிலேஷ் , லல்லு , அப்துல்லா ( அப்பா & மகன்) , மாயாவதி , ஜெகன்மோகன் இப்படி எல்லார் மேலயும் நடவடிக்கை எடுக்கணும் , இது வரை ஒரு புஜுபால் மட்டுமே சிக்கி இருக்கார் , லாலு மேல கேஸ் – மற்ற படி பெரிய நடவடிக்கை ஏதும் இல்லை . கெஜ்ரிவால் நன்றாக சிக்குவார் , அவரை வைச்சு செய்வாங்கன்னு நம்பறேன் .

     முடிவு – ஊழல் ஒழிப்பில் நடவடிக்கை போதவே போதாது .

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சுந்தர் ராமன், இளங்கோ –

      உங்கள் சுவாரஸ்யமான பின்னூட்டங்களுக்கு நன்றி.

      சுந்தர் ராமன்,

      என் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு கேள்வி.
      “ஊழல் ஒழிப்பில் நடவடிக்கை போதவே போதாது ” என்று முடிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

      அதற்கு என்ன காரணம்…?
      யார் காரணம்…?
      எப்படி காரணம்…?
      அதையும் நீங்களே விளக்குங்களேன் …

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 3. Sundar Raman சொல்கிறார்:

  முன்பே சொல்லி இருக்கிறேன் , இருந்தாலும் முயற்சிக்கிறேன் . மோடி முத்த அமைச்சராக இருந்த பொழுது இந்த மாதிரி நடவடிக்கை எடுத்த மாதிரி தெரிய வில்லை . அவர்களை தேர்தலில் தோற்கடித்து , ஊழலை வெளிப்படுத்தி அவர்கள் பேரை ரிப்பேர் ஆக்கி , மக்கள் அவர்களை நிராகரிப்பதன் மூலம் , அதுவே பெரிய தண்டை என நினைக்கிறார் போலும் .

  மோடி தனியாக எந்த ஊழல் குற்றச்சாட்டிலும் துளி கூட கரை படியாதவர் . அவர் வீடு, அன்னான் , அண்ணி , அம்மா , மற்ற உறவினர்கள் , பழைய மனைவி – இவர்களின் வாழ்க்கை முறைகளை பார்த்தாலே போதும் வேற சாட்சியம் ஒன்றும் தேவை இல்லை . இது போல ஒரு சில தலைவர்களே உள்ளனர் , அதிலும் அவர்கள் கம்யூனிஸ்ட்டாக இருப்பார்கள் .

  மேலும் நீதிமாற்றத்தின் தீர்ப்புகள் , நடவடிக்கை ஊழல் ஒழிப்புக்கு துளி கூட துணை போக வில்லை . மல்லையா பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்க சொன்னது கோர்ட் . எஸ்ஸார் வழக்கிலும் துணை போனது . மாறன் , கார்த்திக் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்கியது .

  மோடி ஊழலை வெளி கொணர்ந்தாலே போதுமானது என நினைக்கிறார் , அது போதாது . தண்டனை வாங்கி தர வேண்டும் .

  எல்லாவற்றிலும் , ஜெட்லீ அவர்களின் பங்கு சந்தேகத்திற்கு உரியது . இப்போ ரஸ்தோகி போறார் , என்ன ஆகிறது என்று பாப்போம்

  .

  • "கீரன்" சொல்கிறார்:

   Sundar Raman,

   //மோடி ஊழலை வெளி கொணர்ந்தாலே
   போதுமானது என நினைக்கிறார் //

   1) ஓட்டுக்கேட்கும்போது இப்படிச் சொல்லித்தான்
   கேட்டாரா ?
   2) தப்பு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது
   அரசின் கடமை இல்லையா ?
   3) நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரு வருடத்திற்குள்
   கிரிமினல் எம்.பி.க்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும்
   துரிதமாக முடிக்கப்பட்டு, பாராளுமன்றம் சுத்தம் செய்யப்படும் என்று சொல்லவில்லையா ?

   //ஜெட்லீ அவர்களின் பங்கு சந்தேகத்திற்கு உரியது//
   நிதியமைச்சர் பிரதமருக்கு கட்டுப்பட்டவர் இல்லையா ?
   அமைச்சரவைக்கு கூட்டு பொறுப்பு இல்லையா ?

   “கீரன்”

 4. Sundar Raman சொல்கிறார்:

  மோதி முதல் அமைச்சராக ….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.