இன்றைய கணக்குக்கு மூன்றரை ஜோக்குகள் –இங்கு திரு.சு.சு.அவர்களின் படத்தை போடலாமா என்று
முதலில் யோசித்தேன்…. !!!

ரா(வு…?)கு காலத்தில் (!!!) பேச அழைத்த ஆளுநரை
சந்தித்த பின் தளபதி –

“114 எம்எல்ஏக்கள் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியை
ஆதரிக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக
119 பேர் உள்ளனர். இந்த கணக்கு கூட தெரியாமல் ஒரு
கவர்னரா…?

இந்த கணக்கை ஆளுநரிடம் எடுத்துக் கூறி இருக்கிறோம்.
ஒரு வார காலத்துக்குள் சட்டசபையை கூட்டி பெரும்பான்மை
பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்திரவிட வேண்டும்…

இல்லையென்றால் – ??????
சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்…!!!
மக்கள் மன்றத்தை நாடுவோம்.

( எக்காரணத்தை முன்னிட்டும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை
நாங்கள் கொண்டு வந்து விட மாட்டோம்…!!!- எங்களுக்கும்
தெரியும்… இந்த கணக்கு எங்களுக்கானது இல்லையென்று…!)

——————————————————————-

அடுத்த ஆட்சி தேமுதிக தான்…!!!
பயமுறுத்தும் கேப்டன்….

திருப்பரங்குன்றம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் மலைச்சாமி
இல்ல திருமண விழாவில் கட்சித்தலைவர் விஜயகாந்த்,
மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில்
திமுக, அதிமுக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. இதற்கான மாற்றம் விரைவில் வரும்.
அதனை தரப்போவது தேமுதிக ஆட்சி தான்.

( ஒரு மாற்றமாக இவர் வந்து ஏமாற்றுவார்….? )
——————————————————————-

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து ஆட்சி
அமைப்போம்….

– தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர்
அறிவிப்பு…( ஆசை யாரை விட்டது…? )

( கொல்லைப்புற வழியாக ஆட்சியை பிடிக்க மாட்டோம்
என்று தளபதி சொன்ன சில மணிநேரங்களிலேயே….!!!)
——————————————————————-

அரை ஜோக் –

சுப்பிரமணியன் சுவாமி, கமலை ‘பாம்பஸ் இடியட்’ என திட்டி,
“அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைவதாக கேள்விப்பட்டேன்”
என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

( திட்டுவதற்கென்றே ஹாவர்டு யுனிவர்சிடியில்
டாக்டர் பட்டம் பெற்ற திருவாளர் சு.சு.
——————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இன்றைய கணக்குக்கு மூன்றரை ஜோக்குகள் –

 1. paamaranselvarajan சொல்கிறார்:

  பல்வேறு துறைகளில் விளையாட்டு , எழுத்து , கலை பாேன்ற துறைகளில் ” சாதனை ” புரிந்தவர்களுக்கு என்று சில இடங்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்ளன. மத்தியில் ஆட்சிக்கு வருகிற கட்சி இவர்களில் தனக்குப்பிடித்தமானவர்களை நியமிக்கும் என்பது நடைமுறை வழக்கமாகி விட்ட ஒன்று …
  திரு. சுப்ரமணிய சுவாமி இதில் எதில் சாதனை புரிந்தவர் என்று தற்பாேது அவருக்கு எம்.பி. பதவி வழங்கியுள்ளார்கள் என்பது…. வழங்கியவர்களுக்கும் ..பெற்றவருக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று …
  எந்த விதமான ” கமெண்ட்டுகள் ” எந்த ரூபத்தில் , யாரிடமிருந்து வந்தாலும் அவர் மாறாமல்.தன் வழக்கமான அனைத்தையும் செய்து வருவது ” சாதனை தானே ” …. எது எப்படியாே வரும் 15 – ந்தேதி அவருக்கு ” பிறந்த நாள் ” … 78 வயதை கிராஸ் செய்யும் அவருக்கு நமது வாழ்த்துக்களை மனதார தெரிவிப்பாேம் ….!!!

 2. இளங்கோ சொல்கிறார்:

  “தில் இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து பாருங்கள்”
  என்று அமைச்சர் ஜெயகுமார், ஸ்டாலினுக்கு சவால் விடுகிறாரே;
  ஸ்டாலின் ஏன் கவர்னருக்கு கணக்கு சொல்லிக்கொடுத்து விட்டு,
  பதுங்கி ஓடுகிறார் ? சட்டமன்றத்தில் “நம்பிக்கை இல்லா தீர்மானம் ” கொண்டு வர
  நோட்டீஸ் கொடுப்பது தானே ?
  அவருக்கு, திமுக உறுப்பினர்களே பதுங்கி விடுவார்கள் என்று பயம் போலும்.
  நடுங்கியோடும் இவர் எதற்கு “தளபதி” ?

 3. srinivasanmurugesan சொல்கிறார்:

  திட்டுவதற்கென்றே ஹாவர்டு யுனிவர்சிடியில்
  டாக்டர் பட்டம் பெற்ற திருவாளர் சு.சு.—–ஹ்ஹஹா…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s