யார் அந்த 246 கோடி கருப்பு – “தமிழ்நாடு நேதா”…?


500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக
அறிவிக்கப்பட்டபோது, திருச்செங்கோடு, தேசிய மயமாக்கப்பட்ட
வங்கியின் கிளை ஒன்றில் ஒரே நபரால், ஒரே நாளில்,
ஒரே கணக்கில் 246 கோடி ரூபாய் டெபாசிட்
செய்யப்பட்டிருக்கிறது. இது வங்கியின் சாதாரண
வேலை நேரம் முடிந்த பிறகு நிகழ்ந்திருக்கிறது.


இந்த கணக்குக்கு சொந்தக்காரர் யார் என்பதை அரசுத்துறையும்,
வங்கியும், தெரிவிக்க மறுக்கின்றன. செய்தித்தலைப்பு மட்டும்,
அது ஒரு தமிழக அரசியல்வாதியின் பினாமி என்று
சொல்கிறது.

இந்த அளவிற்கு கருப்புப்பணம் வைத்திருந்த “யோக்கிய”
அரசியல்வாதி யார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டியது
அவசியம். இதை தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு.

அரசாங்கம் எதாவது சட்டவிதிகளை காட்டி, தகவலை வெளியிட
மறுக்கலாம். ஆனால், இங்கே இருக்கும் மீடியாக்களும்,
புலனாய்வு பத்திரிகைகள் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும்,
தின, வார இதழ்களும் – இதை கண்டுபிடிக்க எவ்வளவு
நேரம் ஆகும்…?

246 கோடி பணத்தை கொண்டு வர குறைந்த பட்சம்
10 சூட்கேஸ்களாவது தேவைப்படும்… 3-4 ஆட்களாவது கூட
வந்திருப்பார்கள். உரிய முறையில் எண்ணி, அந்த பணத்தை
ஏற்றுக்கொள்ள 3-4 வங்கி ஊழியர்களாவது செயல்பட்டிருப்பார்கள்.
வங்கி காவலாளி நிச்சயம் இருந்திருப்பார்… பியூனும் கூட…!!!

அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட வங்கியில்
பணிபுரியும் ஊழியர்களின் மூலம் இந்த நபர் யார் என்று
தெரிந்து கொள்வது நமது ஊடகங்களுக்கு பெரிய காரியமா
என்ன…?

பின் செயலில் இறங்க வேண்டியது தானே…?
ஏன் தாமதம்…?
அவர்கள் வாயும், “அதே” கருப்பால் அடைக்கப்பட்டு விட்டதா…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to யார் அந்த 246 கோடி கருப்பு – “தமிழ்நாடு நேதா”…?

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  சிலரின் சொந்த லாபத்திற்காக பெரிய அளவில் நடத்தபட்ட மோசடி, மக்கள் பலிகடா ஆனார்கள். அவர்கள் சொன்ன எந்த காரணமும் எடுபடவில்லை. பின்னர், எதற்காக நடத்தப்பட்ட நாடகம் ? இதன் பலன் தேசத்திற்கு கிடைக்கவில்லையானால் யாருக்கு ? நடத்தப்பட்ட ரெய்டுகள் அனைத்தும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட கட்சி சார்தே இருந்தது மற்றவர்கள் அனைவரும் யோக்கியர்களா ? இந்திய அளவில் தமிழ்நாடு, பீகார் மற்றும் மே.வங்காளம் மட்டுமே நடந்தது அப்போ மற்ற மாநிலம் எல்லாம் புடம் போட்ட தங்கங்களா ? நீங்கள் மேலே பதிவிட்ட விசயம் ஏன் வெளியே வரவில்லை? தேவையானால் வரும் இல்லையெனில் வராது.

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  // இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’வங்கி செயல்பாட்டு நேரத்துக்குப் பின்னர் 246 கோடி ரூபாயை ஒருவரே வங்கியில் செலுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இது நடந்தது…

  நாங்கள் நோட்டீஸ் அனுப்பிய பின்னர் பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் சேர்ந்து வரி, அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டார் அந்த அரசியல்வாதி. // — என்று பல பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளது ….

  பிரதமரின் திட்டத்தில் சேர்ந்து விட்டதாலும் … வரி அபராதம் செலுத்தி விட்டதாலும் … அந்த கருப்பு பண திருடன் இவர்களால் ” புனித ஸ்நானம் ” செய்விக்கப்பட்டு … புண்ணிய புருஷராக உலா வந்து … அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகி விடுவார் …

  விலாவரியா விலாசம் முதற் காெண்டு அறந்திருந்தும் அவரது பெயரை வெளியிட அவரை விட அதிகம் வெட்கப்படும் அரசுத்துறைகள் இருக்கும் பாேது மற்றவர்கள் இதில் முனைப்பு எப்படி காட்டுவார்கள் …. ?

 3. சேதுராமன் சொல்கிறார்:

  அரசுத்துறையையும், வங்கியையும் விடுங்கள்.
  தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் கூட இதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லையே. ரிசவ்ர் வங்கி கன்டெயினர் மாட்டியபோது
  அத்தனை குதி குதித்தவர்கள் எல்லாரும் இப்போது எங்கே போய் விட்டார்கள்?
  அந்த வங்கி பியூனைக் கேட்டால் கூட சொல்லி விடுவாவ்ரே; அன்றைக்கு
  வந்தது யாருடைய ஆட்கள் என்று. யார் பெயரில் பணம் போடப்பட்டது என்பதை
  அந்த வங்கியில் வேலைசெய்யும் அனைவரும் அறிந்திருப்பார்கள்.

  கே.எம்.சார் சொல்வது போல், புலனாய்வு பத்திரிகைகளோ,
  எதிர்க்கட்சிகளோ அக்கறை எடுத்துக் கொண்டால், இதை கண்டுபிடிப்பது பெரிய விஷயம் இல்லை. யார் கண்டது எந்த புற்றில் எந்த பாம்போ. ?
  அமுக்கியது ஆளூம் கட்சியாகத்தான் இருக்க வேண்டுமென்பது
  அவசியமில்லையே ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.