ஆச்சரியத்தில் உறைய வைக்கும் …. உலகத்தின் 8-வது அதிசயம்…!


உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும், எஞ்சினீரிங்க்
மார்வெல் – காரகோரம் ஹைவே ….

கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால்,
இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்….

பாகிஸ்தானிலிருந்து – சீனாவிற்கு செல்லும்,
1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே”
( Karakoram Highway )… இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில்
உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி )பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.

இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும்,
மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது….

இந்தப்பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

1959-ல் துவங்கிய பணி இருபது ஆண்டுகள் கழித்து
1979-ல் முடிவடைந்திருக்கிறது. அதன் பின்னர் பல சமயம்
பாதை பல இடங்களில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு,
புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இந்த பாதையை உருவாக்கும் பணியில் –
நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து
சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே –
810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள்
உயிரை இழந்திருக்கிறார்கள்.

காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது,
இந்த பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர்
உயரத்தில் செல்கிறது….

உலகத்தின் 26,000 அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில்
அமைந்திருக்கும் 5 சிகரங்களை இந்தப்பாதையில்
பயணிக்கும்போது பார்க்க முடியும்….
இதிலிருந்து நெருங்க முடியும்…

இனி – உலகத்தின் மிக அதிசயமான, ஆபத்தான
பாதையில் பயணம் போகலாம் வாருங்கள் …!!!

மீண்டும் ஒரு முறை பாருங்கள். அப்போது தான் அதன் அருமையை உணர முடியும்…
நான் மீண்டும் மீண்டும் பலமுறை பார்த்து விட்டேன்.
இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை… எப்படித்தான் திட்டம் போட்டு, எப்படித்தான் கட்டினார்களோ…? அதுவும் அவ்வளவு உயரத்தில், செங்குத்தான சிகரங்களில்….!!!

( இதைவிட, இன்னும் பிரமாதமான, இன்னொரு அற்புதமான,
சீன ஒளிப்பதிவு நிபுணர் ஒருவரால் எடுக்கப்பட்ட 9 நிமிட வீடியோ ஒன்று, கிடைத்தது. முதலில் அதைப்பதிவிட்டு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலில் தான் இந்த இடுகையை எழுதத்துவங்கினேன். ஆனால், அதை இங்கே டெக்னிகல் பிரச்சினை காரணமாக பதிவிட முடியவில்லை… பின்னால் சரி செய்ய முடிந்தால் பதிவிடுகிறேன்…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஆச்சரியத்தில் உறைய வைக்கும் …. உலகத்தின் 8-வது அதிசயம்…!

 1. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  Great-wonderful

 2. ramanujam சொல்கிறார்:

  அருமை!

 3. இளங்கோ சொல்கிறார்:

  சினிமா செட் போல, கனவுலகம் போல இருக்கிறது.
  இதை திட்டம் போட்டு நிறைவேற்றியவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.