மோடிஜி….. மஹா….. கெட்டிக்காரர்…!!!

மேலேயுள்ள தினத்தந்தி, புகைப்படத்தின் கீழே விசேஷமாக குறிப்பிட்டிருக்கும் செய்தியை பாருங்கள்….!!!


“வந்தே மாதரம் ” கூறத்தான் உரிமை இல்லை ….
ஆனால், மத்திய அமைச்சராக இருக்க ….???
——————–

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை தொடர்பாக,
டெல்லியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் கலந்துகொண்டு உரை
நிகழ்த்தினார்….

விசேஷம் –

பிரதமர் மோடியின் இந்த உரையை –
நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என

பல்கலைக்கழகங்கள்,
கல்லூரிகள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி
நிறுவனங்களுக்கு –

பல்கலைக்கழக மானியக்குழு
அறிவுறுத்தி இருந்தது… (அதாவது….. 🙂 🙂 )

அங்கே அவர் நிறைய பேசினார்….
அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றும்போது, இடையில்
பேசிய ஒரு விஷயம் தான் இங்கே தலைப்பு பொருள் :-

” இந்த விழா அரங்கினுள் நான் நுழைந்த போது ‘வந்தே
மாதரம், வந்தே மாதரம்’ என மக்கள் எழுப்பிய ஒலியால்,
எனது இதயம் தேசப்பற்று மதிப்பீடுகளால் நிறைந்தது.

ஆனால் வந்தே மாதரம் கூறுவதற்கான உரிமை நமக்கு
இருக்கிறதா?

————
சாலைகளில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நாம்
வைத்திருக்கும் வரை, “வந்தே மாதரம்” கூறுவதற்கான
உரிமை நமக்கு இல்லை.
————

சாலைகளை தூய்மையாக வைத்திருப்போமோ இல்லையோ,
நமது தாய் மண்ணில் சிறுநீர் கழிக்க நமக்கு நிச்சயமாக
உரிமை இல்லை.”

( தினத்தந்தி – 12, செப்டம்பர் 2017 )
——————————————————————-

மோடிஜி மஹா கெட்டிக்காரர்….
தன் மந்திரிகளின் தகுதிகளை நன்கு அறிந்தவர்…

எனவே தான் –

சாலையில் சிறுநீர் கழிப்பவருக்கு –
வந்தே மாதரம் கூற உரிமை இல்லை என்று
சொன்னதோடு விட்டார்….

தன் அமைச்சரவையில், மந்திரியாக இருக்க
தகுதி இல்லை என்று சொல்லவில்லையே…!!!

அதான் ….. மத்திய விவசாயத்துறை அமைச்சர்
திரு.ராதாமோகன் சிங் அவர்கள்
கமாண்டோ பாதுகாப்புடன் நடுத்தெருவில் …..

தனது “வந்தே மாதரம்” கூறும் உரிமையை
இழந்து விட்டும்,
ராஜகம்பீரத்துடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார் – 🙂 🙂 🙂

—————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to மோடிஜி….. மஹா….. கெட்டிக்காரர்…!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  // கமாண்டோ பாதுகாப்புடன் நடுத்தெருவில் …..

  தனது “வந்தே மாதரம்” கூறும் உரிமையை
  இழந்து விட்டும்,

  ராஜகம்பீரத்துடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்//

  first class comedy – கொன்னுட்டீங்க சார்.

 2. viswa சொல்கிறார்:

  இவர்கள் தேச பக்தர்கள் நாம் இதை சொன்னால் தேச விரோதிகள்

 3. Sundar Raman சொல்கிறார்:

  உங்களால் மட்டுமே முடியும், எதற்கும் எதற்கும் முடிச்சு …
  எத்தனை கழிப்பறைகள் கட்டியிருக்கிறார்கள் , அதெல்லாம் தெரியாது , புரியாது … எந்த அமைச்சராவத்து ஊழல் செய்தார் , இந்த ஷாப்பிங் மால் கட்டிட்டார் , அல்லது இந்த ஹோட்டல் வாங்கிட்டார் , என்று எதுவுமே சொல்லமுடியாத பொழுது , இதை தான் உங்களால் சொல்ல முடியும்… and for that some yes masters .

  • இளங்கோ சொல்கிறார்:

   Sundar Raman,

   // எத்தனை கழிப்பறைகள் கட்டியிருக்கிறார்கள் , அதெல்லாம் தெரியாது, புரியாது… //

   தெரிகிறதே நீங்கள் கழிப்பறை கட்டிய லட்சணம்.

   மந்திரி ஒன்றுக்கு போகக்கூட வழி இல்லை. தெருவில் பலர் பார்க்க நின்றுகொண்டே போக வேண்டியிருக்கிறது. நீங்கள் அப்படி கட்டி இருந்தால், இவர் ஏன் இப்படி….. போகிறார் ?
   இன்னுமொன்று – அப்பேற்பட்ட அசிங்கம் பிடித்த மந்திரியை இன்னும் ஏன் தன் மந்திரிசபையில் வைத்திருக்கீறார் உங்கள் தலைவர் ?
   தன் கீழே வேலை செய்பவரை கட்டுப்படுத்த வக்கில்லாதவர் ஊருக்கு ஏன் உபதேசம் ?

  • இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

   சுந்தரராமன் அவர்களே,
   இங்கே இடுகை எழுதுவது நம்நாட்டு நடப்பு எங்கே செல்கிறது, மக்கள் எப்படி முட்டாள் ஆக்க படுகிறார்கள், எப்படி ஏமாற்றப்படுகிறார்கள், எப்படி சுரண்டப்படுகிறார்கள், மாற்றம் எதிர்பார்க்கும் சாமானியன் வாழ்வு என்று மேம்படும் என்றெல்லாம் பல அலசல்களை செய்யவும், அது சரியான பாதையில் அரசியல்வாதிகள் அதனை எடுத்து செல்லும்போது பாராட்டுவதும் தான்.
   காமை ஐயா அவர்களுடன் சேர்ந்து இந்த Yes Masters ஆகிய நாங்களும் நம்பியிருப்பது ஒன்று தான். இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா?? இது மாறுமா சுந்தரராமன் சார்

  • இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

   இந்த அரசும் அரசியல் தலைவர்களும் அவர்களாக ஹோட்டலும் மாலும் ஊழலும் செய்ய வேண்டாம். இப்படி செய்கிற தொழிலதிபர்களை ஊக்குவிப்பதும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகா வைப்பதும், ஏழையை கவினிக்காமல் அவர்களை மேலும் அமுக்குவதும், அம்பானி அதானி போன்ற கார்போரேட்டுகளுக்கு துணையாய் நிற்பதும், பாரபட்சமான மாநிலங்களை நடத்துவதும், தன கட்சியின் சுயநல வளர்ச்சிக்காக ஒரு மாநிலத்தையே அழிக்க அல்லது அமுக்க நினைப்பதும் தவறு என்று சுட்டிக்காட்டுவதை நீங்கள் தவறு என்று சொன்னால், இந்த
   Yes Masters ஆகிய எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது தான்

   • இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    some spelling error in prev content.
    இந்த அரசும் அரசியல் தலைவர்களும் அவர்களாக ஹோட்டலும் மாலும் ஊழலும் செய்ய வேண்டாம். இப்படி செய்கிற தொழிலதிபர்களை ஊக்குவிப்பதும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகா வைப்பதும், ஏழையை கவினிக்காமல் அவர்களை மேலும் அமுக்குவதும், அம்பானி அதானி போன்ற கார்போரேட்டுகளுக்கு துணையாய் நிற்பதும், பாரபட்சமாக மாநிலங்களை நடத்துவதும், தன் கட்சியின் சுயநல வளர்ச்சிக்காக ஒரு மாநிலத்தையே அழிக்க அல்லது அமுக்க நினைப்பதும் தவறு என்று சுட்டிக்காட்டுவதை நீங்கள் தவறு என்று சொன்னால், இந்த ஆகிய எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது தான்

  • Raghavendra சொல்கிறார்:

   Sundar Raman

   // and for that some yes masters .//

   உங்களைப் போல் பொய்க்கும், பகட்டுக்கும்
   “பக்தர்”களாகவோ, ஜால்ராக்களாகவோ
   இருப்பது தான் அசிங்கம். நடுத்தெருவில் மந்திரி
   சிறுநீர் கழிப்பதற்கும் வக்காலத்து வாங்கும்
   கண்மூடிகள் தான் வெட்கப்பட வேண்டும்.

   உண்மைக்கும், நேர்மைக்கும் யெஸ் மாஸ்டர்களாக
   இருப்பதற்கு பெருமை தான் கொள்ள வேண்டும்.

 4. Karthik சொல்கிறார்:

  Sir
  You are real Gem. You must start releasing news papers with caption of blunt Truth. Your memory skills are amazing. Exactly you coined the two events. Whether PM intended or not, But it is a hard truth which we need to accept.

 5. Tamilian சொல்கிறார்:

  அமைச்சர் தெருவில் சிறுநீர் கழிப்பது குற்றம். அவருக்கு பிளாடர தொந்தரவு இருக்கலாம். ஆனால, கட்டின கழிப்பறைகள எந்த லட்சணத்தில இருக்கின்றன? அவற்றை நிரவகிப்பது எப்படி உள்ளது?

 6. sridhar சொல்கிறார்:

  Sir, in the context of the prime minister to have such a cabinet and talk about cleanliness, you have the right to criticize and you have done so.
  I personally feel that someone has to tell the people it is wrong (people includes the minster who acted like this). With your experience, you know pretty well that for a change to happen we have to keep reminding at every opportunity.
  With the larger strata of the society changing, the smaller strata can be identified and changed.
  This is for our overall benefit. Thanks

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.