மீண்டும் ஒரு புத்திசாலித்தனமான எடப்பாடி “மூவ்” – திரு.ஸ்டாலின் விரும்பியதும் இதைத்தானோ…?திரு.தினகரன் சார்புள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களை
தகுதி நீக்கம் செய்து உத்திரவு பிறப்பித்துள்ளார் தமிழக
சட்டமன்ற சபாநாயகர்….

தமிழகத்தில் இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு பெரிய
அரசியல் விளையாட்டு. சதுரங்கத்தில் இரண்டு பேர் தான்
விளையாட முடியும். ஆனால், இங்கே ஏகப்பட்ட குழுக்கள்
விளையாடிக் கொண்டிருக்கின்றன …!

நம்மைப் பொருத்த வரையில், ஆட்டக்காரர்கள் யாருமே
சரியில்லை என்பதே நம் அபிப்பிராயம். ஆனால், இந்த
ஆட்டங்கள் ஒரு முடிவுக்கு வரும் வரையில் நம்மால்
செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை. நாம் வெறும்
பார்வையாளர்கள் தான்.

இந்த நிலையில், மிக மோசமான ஆட்டக்காரர்கள்
மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவதை வரவேற்கிறோம்
என்கிற நோக்கில்,

இந்த திருவாளர் தினகரனின் குழுவினர்
வெளியேற்றப்படுவதை முழுமனதோடு வரவேற்போம்.

இதில் திரு.ஸ்டாலின், வெளியே சும்மா எதிர்ப்பை
காட்டினாலும், உள்ளுக்குள் பெருத்த நிம்மதியும்,மனமகிழ்வும்
கொள்வார் என்றே தோன்றுகிறது.

ஆனால், இந்த நிம்மதி வெளிக்காட்டப்பட மாட்டாது….
“ஜனநாயக படுகொலை” என்று கடும் விமரிசனங்கள் வரும்…
ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்படும்…

துவக்கத்திலிருந்தே திமுக உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்தை கலைப்பதில் விருப்பம் இல்லை என்பது தான் உண்மை.
எனவே, தான் நம்பிக்கை இல்லா
தீர்மானத்தை கொண்டு வந்தால், திமுகவிலேயே அதற்கு
முழு ஆதரவு கிடைக்குமோ என்கிற சந்தேகம் திமுக செயல்
தலைவருக்கு இருந்து வந்திருக்கிறது. அதனால் தான்
அவர் அந்த பேச்சு வரும்போதெல்லாம் நழுவிக்கொண்டே
வந்தார் என்றும் சொல்லலாம்.

இப்போது, திரு.தினகரன் குழுவினர் நீதிமன்றம் சென்றாலும்,
இப்போதைக்கு இந்த விஷயத்திற்கு எந்த வித முடிவும்
ஏற்படப்போவதில்லை….

திருவாளர் ஸ்டாலின் தொடர்ந்து எடப்பாடி அரசு ஆள தகுதி
இழந்து விட்ட அரசு என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
சட்டத்தை குறுக்கு வழியில் வளைத்து ஆட்சியை தொடர்கிறார்கள் என்று சொல்லலாம்….
அதே சமயம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர
வேண்டிய நிர்பந்தத்திலிருந்தும் தப்பி விடலாம்.

இப்போதைக்கு தேர்தலைப்பற்றி கவலைப்பட வேண்டாம்
என்கிற பெருத்த நிம்மதிப் பெருமூச்சு அனைவருக்கும் ….???

இது ஒன்று தானே அனைத்து தரப்பினரும் ( சட்டமன்றத்தில்
ஒரு உறுப்பினர் கூட இல்லாத பாஜக உட்பட )
ஒருமனதாக விரும்புவது – வேண்டுவது….!!!

————————————————

இதே பொருளில் 3 வாரங்களுக்கு முன்னர் (24/08/2017)
இதே தளத்தில் –

புத்திசாலித்தனமான ‘மூவ்’…!
ஆயுசு கெட்டி – எடப்பாடியார் அரசுக்கு…!!! ( இப்போதைக்கு…!!! )

– என்கிற தலைப்பில் வெளியான இடுகையிலிருந்து,
இந்த இடுகைக்கு தொடர்பான சில பகுதிகள் வெளிவந்ததை
நினைவுபடுத்த, அந்த பகுதிகளை மீண்டும் கீழே
தந்திருக்கிறேன்….

——————————————————————-

புத்திசாலித்தனமான ‘மூவ்’…! ஆயுசு கெட்டி – எடப்பாடியார்
அரசுக்கு…!!! ( இப்போதைக்கு…!!! )
Posted on ஓகஸ்ட் 24, 2017

————–

தஞ்சாவூர் பொம்மையை எப்படி தள்ளி விட்டாலும், மீண்டும்
மீண்டும், நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்து விடும். அது போல்
தான் இருக்கிறது எடப்பாடி அவர்களின் அரசு.

எடப்பாடி / அதிமுக அரசு நீடிக்க வேண்டுமா, வேண்டாமா
என்கிற பிரச்சினைக்குள்ளேயே இப்போது போகவில்லை.

கொலை, கொள்ளை, கடத்தல், என்று எதற்கும் துணிந்த,
மன்னார்குடி மாஃபியா கும்பல், எந்த காரணத்தை முன்னிட்டும்
இந்த விஷயத்தில் ஜெயித்து விடக்கூடாது.

இந்த சக்திகள் ஜெயித்தால், தமிழகமே நாசமாகி விடும்.
எனவே, இந்த கும்பல் தோற்கடிக்கப்படுவது,
அழித்து ஒழிக்கப்படுவது மிக மிக அவசியம் என்கிற ஒரே
பார்வையில் மட்டும் தான் இந்த விஷயம் அலசப்படுகிறது.
……
ஒரு வாரத்திற்குள் சபாநாயகரிடம் சரண்டர் ஆகிறவர்கள்
தப்பிப்பார்கள். மற்றவர்கள் நிச்சயமாக எம்.எல்.ஏ. பதவியை
இழக்க நேரிடும்.

( இந்த உத்திரவை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றம்
செல்லலாம் என்பது வேறு விஷயம்…
இப்போதைக்கு அவர்களை நீக்குவதை தடுக்க முடியாது….
நீக்கிய பிறகு செல்லலாம்… செல்லட்டுமே…!!!
…..
…..
தமிழகத்தின் மற்ற பிரச்சினைகளை தனியே
பார்த்துக் கொள்ளலாம். இப்போதைய தலையாய பிரச்சினை –
இவர்களை அடக்குவது தான்.

——————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மீண்டும் ஒரு புத்திசாலித்தனமான எடப்பாடி “மூவ்” – திரு.ஸ்டாலின் விரும்பியதும் இதைத்தானோ…?

 1. paamaranselvarajan சொல்கிறார்:

  ஒரு வகையில் குழப்ங்களுக்கு முடிவு என்றாலும்…… 18 எம்.எல.ஏ.க்கள் மாண்புமிகு சபாநாயகர் அவர்களால் தகுதி நீக்கம்செய்தது ….? சபாநாயகர் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும், உங்களிடம் என்ன எதிர்ப்பார்த்தார் என்பதையும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.:

  “பேரவையின் விதிகளையும், மரபுகளையும், முன்னாள் பேரவைத் தலைவர்களின் நல்ல தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு, இந்தப் பேரவையினை சட்டத்தின் அடிப்படையில் நடத்திச் செல்வதில் தாங்கள் அக்கறையும், ஆர்வத்தையும் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்லாமல் இங்குள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கின்றது. இந்தப் பேரவை உறுப்பினர்கள் அனைவரின் உரிமையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களிடத்திலே ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

  மாட்சிமை மிகுந்த இந்தச் சட்டப் பேரவையின் பெருமையையும், புகழையும் நிலை நிறுத்துவதிலே தங்களுடைய அறிவும், அனுபவமும், ஆற்றலும் நிச்சயம் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கேற்ற அத்தனைத் திறனையும் தாங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

  வீணையிலிருந்து சரியான இசை வர வேண்டும் என்றால், அதனுடைய தந்திகள், அதாவது வீணையின் நரம்புகள் இறுக்கமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் நடுநிலைமையில் இருக்க வேண்டும். அது போல், இந்த அவை சீரோடும், சிறப்போடும் நடைபெற வேண்டுமென்றால் அதற்கு இன்றியமையாததாக விளங்குவது நடுநிலைமை. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடுநிலைமை தங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளதால், இந்த அவையை சீரோடும், சிறப்போடும் நீங்கள் நிச்சயம் நடத்துவீர்கள் என்ற எனது நம்பிக்கையினைத் தெரிவித்துக் கொண்டு, தங்களுடைய தலைமையின் கீழ் இந்தப் பேரவையின் கண்ணியம் மேலும் சிறப்புறும்” … சிறப்புற்றதா ….?ஜெயாவின் வார்த்தைகள் காற்றாேடு கலந்து விட்டதா …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இன்று நடக்கின்ற சதுரங்க வேட்டை ஆட்டத்தில் நேர்மையாளர் யார்…? ஒருவரையாவது சுட்டிக்காட்ட
   முடியுமா…?

   நான் மேலே இடுகையில் சொல்லி இருப்பது –
   —————–
   //நம்மைப் பொருத்த வரையில், ஆட்டக்காரர்கள் யாருமே சரியில்லை என்பதே நம் அபிப்பிராயம்.

   இந்த நிலையில், மிக மோசமான ஆட்டக்காரர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவதை வரவேற்கிறோம் என்கிற நோக்கில்,

   இந்த திருவாளர் தினகரனின் குழுவினர் வெளியேற்றப்படுவதை முழுமனதோடு வரவேற்போம்.//
   ——————-

   இந்த விளையாட்டில் யாருமே விதிகளை கடைபிடிக்கவில்லை என்பது தானே நிஜம்…?
   பிறகு இதில் சபாநாயகருக்கு மட்டுமென்ன விதிவிலக்கு…? இறுதியில் அவரும் தான்
   வெளியேற வேண்டியவர் தானே …!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. MANI சொல்கிறார்:

  edappadi has done the right thing he has checkmated
  dinakaran for the time being and as the matter will go
  to court and mr dinakaran has no PLAN B , and he has
  no clues at all this time.. this matter may drag for some
  more time.this is a political game and certainly
  there is no gentlemen in politics in india now.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.