திரு.குருமூர்த்தி மற்றும் திரு. ஜெட்லி மீது பாய்கிறார் – திரு சு.சுவாமி – தினகரன் குழுவினர் மீதான நடவடிக்கைக்காக –


இன்று மதியம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்.
திரு.குருமூர்த்தியும் திரு.ஜெட்லியும் சேர்ந்து,
திமுக+காங்கிரசுக்கு, தமிழ்நாட்டை தாரை வார்ப்பதாக
குற்றம் சாட்டுகிறார் – டாக்டர் சு.சுவாமி……..

திருவாளர் சு.சுவாமிக்கு இந்த எரிச்சல்
வரக் காரணம் …?

திரு.சு.சு.வின் விருப்பத்திற்கு நேர் விரோதமாக –
தினகரன்(சசிகலா) குழுவினருக்கு எதிராக, எடப்பாடி
அவர்களின் அரசால் நடவடிக்கை (18 பேர் பதவி நீக்கம்..)
எடுக்கப்பட்டதால், அவர் கடுங்கோபத்தில் இருக்கிறார்…!!!

அந்த எரிச்சலை வெளிக்காட்டும்போது, அதற்கு காரணம் –
திரு.குருமூர்த்தியும், திரு.அருண் ஜெட்லியும்
தான் என்று கூறி வசை பாடுகிறார்…!!!

அடேயப்பா … திரு.சு.சுவாமி அவர்களுக்குத்தான்
மன்னார்குடி கும்பல் மீது எவ்வளவு பாசம்…!!!
அந்த உச்சகட்ட பாசம் – அவரை, தனது கட்சி
முக்கியஸ்தர்களையே வசை பாட வைக்கிறதே….

சு.சுவாமிக்கு, பிடிக்காதவர்கள், வேண்டாதவர்கள்,
எதிரிகள் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது.
சொந்த கட்சியை சேர்ந்த பலரை கூட சு.சுவாமிக்கு
பிடிக்காது.

திரு.அருண் ஜெட்லியை சு.சுவாமிக்கு என்றுமே பிடிக்காது….
இது ஏற்கெனவே எல்லாரும் அறிந்த விஷயம்….
இப்போது புதிதாக திரு.குருமூர்த்தியையும் அவருக்கு
ஆகாதவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டிருக்கிறார்…!!!

திருவாளர் சு.சுவாமியின் மேற்படி ட்விட்டர் செய்தி கீழே –

( சு.சுவாமியின் ட்விட்டரை புரிந்து கொள்ள வேண்டுமானால்,
அவரது அகராதி படித்திருக்க வேண்டும்… 🙂 🙂 )

————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to திரு.குருமூர்த்தி மற்றும் திரு. ஜெட்லி மீது பாய்கிறார் – திரு சு.சுவாமி – தினகரன் குழுவினர் மீதான நடவடிக்கைக்காக –

  1. Raja சொல்கிறார்:

    Dear KM, Arun Jaitley , Gurumurthy & Naidu r key players in current tamilnadu politics . They want to increase vote bank for BJP in tamilnadu. After jaya’s death common people have the chance to shift their mind from admk to BJP, now its backfired . Admk cadres never change they have 27% vote . Remaining 13% common ppl not happy with BJP & their power games .These type of political games work in small states not in TN. They are the main reason for Dinakaran rise . Now tn people hate Eps and Ops more than sashikala . Dmk ,communist ,congress, VC,MDMK came under one roof( BJP against)These 3 intelligents will know the truth very soon. They even spoil BJP future in TN . These people not aware of electrol politics. If any party collation with bjp in 2019 election will repeat 2004 results

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.