…
…
…
உலகிலேயே அதிக நாட்கள் வழக்கறிஞராக பணிபுரிந்தவர்
திரு.ராம் ஜெத்மலானியாகத்தான் இருக்க முடியும்….
புகழ்பெற்ற, ஆனால் மிகவும் சர்ச்சைகளுக்கு உள்ளான
வழக்கறிஞரான இவர், கடந்த வாரம் –
செப்டம்பர் 14-ந்தேதி, தனது 95-வது பிறந்த தினத்தில்,
வழக்கறிஞர் தொழிலிலிருந்து ஓய்வு பெறுவதை
அறிவித்தார்.
அண்மையில், கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதியன்று பிரதமர் நரேந்திர
மோடிஜி அவர்களுக்கு திரு.ஜெத்மலானி எழுதி இருக்கும்
ஒரு சர்ச்சைக்குரிய கடிதம் பற்றிய செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
எளிதில் உணர்ச்சி வசப்படுபவரான திரு.ஜெத்மலானியின்
இந்த வெளிப்படையான கடிதத்தில், தனது எதிர்பார்ப்புகளையும்
ஏமாற்றங்களையும் விவரித்துள்ளார்…. இதில் சிறிது
மிகப்படுத்தல்களும், தனிப்பட்ட வருத்தங்களும் இருக்கலாம்…
ஆனால், அடிப்படையில் உண்மை இருப்பது புரிகிறது…..
ஒரு நொந்துபோன இதயத்தின் வெளிப்பாடாக அது
அமைந்திருக்கிறது. மோடிஜி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட
தான் எந்தெந்த வழிகளில், எவ்வளவு ஆர்வத்தோடு
முயற்சிகள் எடுத்துக் கொண்டார் என்பதை விளக்கி
இருப்பதோடு,
தன் எதிர்பார்ப்புகள் அனைத்தும் எந்த அளவிற்கு சிதைந்து போய்
விட்டன என்றும் எழுதி இருக்கிறார்…. அவரது வருத்தத்திற்கு
முக்கிய காரணமாக அவர் சொல்வது “வெளிநாடுகளில்
பதுங்கி இருக்கும் கருப்புப்பணத்தை” கொண்டு வருவதில்
மோடிஜி தன் எதிர்பார்ப்புகளை ஏமாற்றி விட்டார் என்று.
கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வர எத்தனையோ வாய்ப்புகள்
இருந்தாலும் -கிடைத்த அத்தனை வழிகளையும்,
பயன்படுத்திக் கொள்ள மோடிஜி கொஞ்சமும் ஆர்வம்
காட்டவில்லை, செயல்பட முன்வரவில்லை என்று
மிகுந்த ஏமாற்றத்துடன் கூறுகிறார்.
முன்னதாக, பாஜக தலைவர் அமித் ஷா அவர்கள்
சம்பந்தப்பட்ட ஒரு கொலை வழக்கிலிருந்து அவர் விடுபட,
அவர்களுக்கு தான் எந்த அளவிற்கு உதவி செய்தார்
என்பதையும்,
அந்த காலங்களில், அந்த வழக்கு சம்பந்தமாக எவ்வளவு
நாட்கள் மோடிஜியும், அமித் ஷா அவர்களும் தன் வீட்டிற்கு
வந்தனர் என்பதையும் திரு.ஜெத்மலானி தன் கடிதத்தில்
நினைவு கூர்கிறார்.
பிற்பாடு, தான் செய்த உதவிகளை எல்லாம் மறந்து, தன்னை
சட்டவிரோதமாக பாஜகவிலிருந்து வெளியேற்ற, அதன்
தலைவர் முனைந்ததையும் கூறி வருந்துகிறார்….
ஒன்பது பக்கங்கள் கொண்ட அந்த
கடிதத்தின் விவரங்கள் அத்தனையையும் இங்கே
கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால்,
அந்த கடிதத்தின் நகலையே கீழே பதிப்பித்திருக்கிறேன்.
…
very bold letter
பதவிக்கு வரும் வரை ஒரு வாய்ஜாலம், வந்த பின் ஒரு வாய்ஜாலம். இங்கு வாய்ஜாலம் மட்டுமே இன்றும் தொடர்கிறது. பாவம், இங்கு ஒரு முன்னணி வக்கிலே ஏமாந்து விட்டார், மக்கள் எம்மாத்திரம்.
ராம் ஜெத்மலானி அவர்கள் உண்மையை புட்டு புட்டு வைக்கிறார்.
அத்தனை ஆதாரங்களையும் தர, ஜெர்மன் அரசு தயாராக இருந்தாலும்,
அதைப்பெற்றுக் கொள்ள இந்த அரசு தயாராக இல்லை என்கிறாரே.
அந்த லிஸ்டில் எத்தனை பாஜக முதலைகள் இருக்கின்றனவோ -எதற்கு
வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று தவிர்த்து விட்டார்கள்
போலிருக்கிறது.
ஆறு மாதத்திற்கு முன்னால் இருந்த மாதிரி இப்போது மக்களின் மன நிலை இல்லை. மக்கள் பாஜக சர்க்காரின் உண்மை ரூபத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். கெட்டிக்காரர் புளுகு எத்தனை நாளைக்கு ஓடும் ?
கே.எம்.சார்,
எங்கெல்லாமோ தேடி எடுத்து பல செய்திகளை தருகிறீர்கள்.
இவையெல்லாம் தின பத்திரிகைகளில் வருவதே இல்லை.
உங்கள் உழைப்பிற்கு பாராட்டும் நன்றியும்.
இந்த கடிதத்திற்கு இதுவரை ஏதாவது பதில் கிடைத்ததா ..? கிடைக்காது என்பதுதான் … நிதர்சனம் …! திரு ராம் ஜெத்மலானி அவர்கள் அந்த காலத்தில் தினமும் ” பத்து கேள்விகள் ” என்று அன்றைய பிரதமர் திரு ராஜிவ் காந்திக்கு பகிரங்கமாக கேட்டது அப்பாேது மிகவும் பிரபலம் … !!!
Whip lash on BJP party led Govt.