குஜராத்திலிருந்து வந்த ஏழைகளின் நாயகனுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்…எதிர்க்கட்சியாக இருந்தபோது,
“ஆதார்” அட்டையை கடுமையாக எதிர்த்து விட்டு,
தான் ஆட்சிக்கு வந்த பிறகு –
“ரேஷன் கார்டு”க்கு கூட ஆதாரை கட்டாயமாக்கி,
ரேஷன் அரிசியை/கோதுமையை மிச்சம் பிடித்த,
ஏழைகளின் நாயகனுக்கு,
தினமணி நாளிதழின் இந்த செய்தி சமர்ப்பணம் –

——————————————————————————-

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காததால்,
அரிசி கிடைக்காமல், ஜார்க்கண்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்காத ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரேஷன் பொருட்களை மட்டுமே நம்பி தங்கள் ஜீவனத்தை நடத்தி வந்த ஏழைக் குடும்பங்கள் பரிதவிப்புக்கு உள்ளாகின.

ஜார்க்கண்ட் மாநிலம் கரிமதி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்
குமாரி என்ற சிறுமி கடந்த செப்டம்பர் 28ம் தேதி
உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்து பல நாட்கள் ஆன
நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் தெரிய
வந்துள்ளது.

அவர்கள் வீட்டு ரேஷன் கார்டுடன் ஆதாரை
இணைக்காததால், அது ரத்து செய்யப்பட்டு, அரிசி
முதலியவை கிடைக்காமல், பட்டினியால் சிறுமி மரணம்
அடைந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இந்த தகவல்
வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. சந்தோஷியின் தாய்
உட்பட 10 பேர் கொண்ட இந்த குடும்பத்துக்கு கடந்த 6
மாதங்களாக ரேஷனில் பொருட்கள் வழங்கப்படவில்லை.

இதனால், இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல நாட்கள்
பட்டினியாகவே தங்கள் நாட்களை கழித்து வந்துள்ளனர்.

2013ம் ஆண்டு முதல், ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், அந்த
உத்தரவை மீறும் வகையில் அரசுகள் நடந்து கொள்வதையே
இந்த சம்பவம் உறுதி செய்துள்ளது.

ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது, இருப்பவர்கள் இணைத்துக் கொள்ளலாம் என்றே உச்ச நீதிமன்றம் கூறி வந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு எந்த அரசு பதிலளிக்கப் போகிறது. பொறுப்பேற்றுக் கொள்ளப்போகிறது.

ஆதார் இணைப்பினால் பல நன்மைகள் நாட்டுக்கும், நாட்டு
மக்களுக்கும் கிடைத்திருப்பதாக மத்திய அரசு மார்தட்டிக்
கொண்டாலும், அது நடக்காமல் போயிருந்தாலும் யாருக்கும்
ஒன்றும் ஆகியிருக்காதோ?

ஆனால் கட்டாயம் என்ற ஒற்றை வார்த்தையால், இப்படி ஒரு உயிர்தானா? இல்லை வெளிச்சத்துக்கு வராமல் எத்தனை உயிர்கள் போயிருக்குமோ என்றே அஞ்ச வேண்டியுள்ளது.

பல்வேறு விஷயங்களில் களையெடுக்க வேண்டிய மத்திய,
மாநில அரசுகள், எடுத்ததுமே ஏழை, எளிய மக்களின்
அடிப்படை வசதிகளிலேயே குறி வைப்பதுதான்
கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

மத்திய அரசும், மறைமுகமாக, ஆரம்பத்தில் இருந்தே ஏழை
எளிய மக்களின் பலாபலன்களில்தான் முக்கியக் கவனம்
செலுத்தி வந்தது.

சிலிண்டர் மானியம், ரேஷன் பொருள் மானியம் என ஏழை மக்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச சலுகைகளைக் கூட இரும்புக் கரம் கொண்டு அடக்கி,

லட்சமும் இல்லாமல் கோடியும் இல்லாமல், லட்சக்
கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்களுக்கு அதே கையால்
டாடா காண்பித்துக் கொண்டிருக்கிறது.

மக்களுக்கு எதிரான நல(?) திட்டங்களை செயல்படுத்துவதில்
மட்டும் எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை பாகுபாடு
காட்டியதே இல்லை.

( http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/oct/17/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-11-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2791892.html )

—————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to குஜராத்திலிருந்து வந்த ஏழைகளின் நாயகனுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்…

 1. Sundararaman சொல்கிறார்:

  You don’t know the truth …this article of yours based on fake news …wait for the truth to come out . it was shown in NDTV ,precisely because I suspect some foul play. Aadhar has saved 9 billion according to Nandan Nilkeni …you can not be more qualfied than him.

  • இளங்கோ சொல்கிறார்:

   சுந்தரராமன்

   இது ” fake news ” என்று உங்களிடம் வந்து சொன்னது யார் ?
   இன்னொரு “பக்தரா ?” தினமணி நாளிதழே ஃஃபேக்கா ?

   நந்தன் நீல்கேணியை உங்கள் கட்சி முதலில் ஏற்றுக் கொள்ள
   மறுத்தது ஏன் ? அவரால் உருவாக்கப்பட்ட
   “ஆதார் ” அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை நீங்களும்
   உங்கள் கட்சியும் எதிர்த்தது ஏன் ?

   இப்போது ஏழைகளுக்கு கொடுக்கப்படும் “subsidiy” ஐ பிடுங்கிக்கொள்ள
   அது உதவுகிறது என்று தானே கட்டாயப்படுத்துகிறீர்கள் ?
   “தில்” இருந்தால் எல்லா கேள்விகளுக்கும், எல்லா பிரச்சினைகளுக்கும்
   பதில் விளக்கம் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்ல வந்ததை மட்டும்
   சொல்லி விட்டு ஓடி ஒளிந்து கொள்ளகூடாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Sundara Raman,

   // You don’t know the truth //

   பக்தர்களுக்கு, அவர்களுக்கு விருப்பமானது தவிர மற்ற எல்லாமே உண்மை இல்லை தான்.

   உண்மை அல்ல என்று சொல்லும் நீங்கள் தான்
   உண்மை என்னவென்று சொல்லுங்களேன்.

   உங்களுக்கு எரிச்சலூட்டும் உண்மைகள் இங்கு வெளிவரும்போதெல்லாம் ஓடி வந்து எதையாவது கொட்டி விட்டு, சென்று விடுவது –

   பிறகு இங்கு எழுப்பப்படும் எந்த வினாவிற்கும் பதிலளிப்பதில்லை என்கிற உங்கள் வழக்கம், உங்கள் பக்கத்தில் “உண்மை” இல்லை என்பதையே
   உறுதிப்படுத்துகிறது.

   சுப்ரீம் கோர்ட் சொன்னதற்கும் மாறாக, சுப்ரீம் கோர்ட்டில் உங்கள் கட்சி சொன்னதற்கும் மாறாக “ஆதார்” எல்லா விஷயத்திற்கும் திணிக்கப்படுவது ஏன்..?

   ஆதார் இல்லையெனில் ரேஷன் கார்டு மறுக்கப்படும் என்று நீங்கள் உத்திரவு போடுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது…? இது சுப்ரீம் கோர்ட்டையே அவமதிக்கும் செயல்.

   கொள்ளைக்காரர்களை,
   திருட்டு பணக்காரர்களை,
   சட்டத்தை ஏமாற்றுபவர்களை –
   பிடிக்கவோ, “உள்ளே” தள்ளவோ வக்கற்றவர்கள்,

   திக்கற்ற ஏழை மக்களின் அரிசியிலும், கோதுமையிலும், மண்ணெண்ணையிலும் கூட கை வைப்பது வடிகட்டிய அயோக்கியத்தனம். இதற்கான தண்டனையை
   கொடுக்க அந்த மக்களுக்கு சக்தி இல்லையென்றாலும் கூட —
   இயற்கை சும்மா விடாது. செய்யும் பாவங்களுக்கு நிச்சயம் ஒரு நாள் கூலி கிடைக்கும்.

   • அறிவழகு சொல்கிறார்:

    ஐயா,

    இவருக்கெல்லாம் பதில் கொடுப்பதை தவிருங்கள். நம்மை இவர்களுக்கு பதில் கொடுக்கவைப்பதில் இருக்கு இவர்களின் சூட்சமம். அதை அவர்களின் எஜமானர்களிடம் காண்பித்து தங்கள் payment ஐ கூட்டிக்க தான் இவர்கள் தத்துபித்தென்று உளருவதாக இருக்கும். இவர்களிடம் என்னமாதரியான கேள்வி கேட்டாலும் பதில் வராது.

    இன்னொருத்தர் எங்கே என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களையும் குற்றப்படுத்தினாரே அவரை தான் சொல்கிறேன். ஒன்ன சொன்னா இன்னொன்ன சொல்லிக்கிட்டு தத்துபித்தென்று வருவாரே அவர் தான். எத்துனை தடவை தான் குட்டியிருப்பீர்கள். இப்போ மன்னிப்பு கேட்கசொன்ன உடன் என்னா ஒரு நேர்மை திறன் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்.

    ஆனால் payment கொஞ்சம் ஜாஸ்தியோ என்னவோ தெரியவில்லை. இவர் அலுச்சாட்டியமும் கொஞ்சம் ஜாஸ்தி. அவ்வளவே. கண்டுக்கவேண்டாம்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     அறிவழகு,

     “பணம்” வாங்கிக்கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று
     இவர்களைப்பற்றி நான் சொல்ல மாட்டேன்; இவர்கள் எல்லாரும்
     நிறைய படித்தவர்கள். நல்ல நிலையில் இருப்பவர்கள்.
     இவர்களால் செய்தியின் உண்மைகளை, தீவிரத்தை- நிச்சயம்
     புரிந்துகொள்ள முடியும்.

     ஆனாலும், இவர்களின் தலைவர் / கட்சி மீது இருக்கும்
     கண்மூடித்தனமான மோகம், பாசம், வெறி – இவர்கள் கண்களை
     மறைக்கிறது. உண்மை தெரிந்தாலும் கூட – அதனை ஏற்க
     இவர்கள் மனம் மறுக்கிறது.

     தொடர்ந்து கண்மூடித்தனமாக தாங்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும்
     சொல்கிறார்கள். செய்தியின் அடுத்த பக்கத்தில் உள்ள உண்மைகளை
     ஏற்க மறுக்கிறார்கள். தெரிந்தே செய்யும் இந்த வாதம் வெறும் விதண்டாவாதமே
     அன்றி வேறில்லை… இவற்றில் substance ஏதும் இல்லை என்பது
     அவர்களுக்கே தெரியும்.

     இவர்கள் நம்பிக்கையை இவர்களோடு வைத்துக் கொண்டிருந்தால்,
     அதில் நாம் தலையிடப்போவதில்லை.

     ஆனால், இந்த தளத்திற்கு வந்து பொய்யான, தவறான வாதங்களை
     முன்வைத்தால், நாம் பேசாமல் இருக்க முடியாது. எதிர்வினை ஆற்றியாக
     வேண்டும். அவர்களின் வாதத்திற்கு நானோ, மற்ற நண்பர்களோ
     பதில் கூறுவதை தவிர்ப்பதற்கில்லை. நண்பர் இளங்கோ போன்றவர்கள்
     இதைச் சிறப்பாக செய்து, என் சுமையை குறைக்கிறார்கள்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 2. sundar சொல்கிறார்:

  Elangovan sir and KM sir , the issue is whether this girl died to Aadhar or is there more cases likely to happen … we are a 100 + crore nation , for any scheme or any idea, there is always a opinion for and against . I agree BJP opposed it in the beginning, now why can’t you take it as , they realized the advantage and so implementing it . Yes I also agree that they opposed it for political reasons without studying the scheme or applying their thoughts . But it takes guts to accept their mistake and take it forward the same scheme( with improvements and MODIfication) and that too with the same person ( Nandan Nilkeni ) . There are lot of leakages in any govt scheme – and if aadhar or any other mechanism takes care of it to a large extend , we should welcome it . You know and I know the reservation keeps going to the well off people , it goes to the same set of people who used it and came up in life – real SC or ST are not benefited to a large extend , if the court demands or govt comes up with a scheme – there will be opposition for the same , however , it need to be done for the benefit of SC and ST who are last in the food chain and are really poor .
  You can always pick up and choose the kind of news you want … and I am saying you picked the fake news , just because it has come in Dinamani or ( see I am really running out of options ) , it need not be true .

  Happy deepvali sir
  Sundar from Trivandrum

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சுந்தர் ராமன்,

   // But it takes guts to accept their mistake and take it forward the same scheme //

   உண்மை ஆனால் அந்த guts உங்கள் தலைவரிடம் இல்லையே…
   நாங்கள் எதிர்த்தது தவறு என்று உங்கள் தலைவர் எங்கேயாவது,
   எப்போதாவது ஒப்புக்கொண்டுள்ளாரா…?

   // they realized the advantage and so implementing it //

   இது அப்பட்டமான சுயநலம் அல்லாமல் வேறேன்ன ?
   It is not about taking advantage – IT IS CLEAR EXPLOITATION….

   // however , it need to be done for the benefit of SC and ST
   who are last in the food chain and are really poor .//

   இதெல்லாம் கவைக்குதவாத வெற்றுப் பேச்சு …
   இதுவரை பணக்காரன் எவனாவது இவரால் பாதிக்கப்பட்டிருக்கிறானா ?
   இப்போது செத்துப்போனது யார் ?
   சமுதாயத்தின் கடைக்கோடி, ஒருவேளை சோத்துக்கு கூட
   வழியில்லாத ஒரு அப்பாவி ஏழை.

   // I am saying you picked the fake news //

   எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதை fake news என்று சொல்கிறீர்கள் ?
   உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்,
   உங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றால் அது fake news -ஆ ?

   // it need not be true //
   இப்போது கூட நிஜம் இல்லை என்று
   உங்களால் உறுதியாக கூற முடியவில்லை…
   உங்களுக்கு பிடிக்கவில்லை – அதனால் நிஜமாக இருக்க முடியாது
   என்று நம்புகிறீர்கள். அவ்வளவே..!

   ——————-
   //சுப்ரீம் கோர்ட் சொன்னதற்கும் மாறாக, சுப்ரீம் கோர்ட்டில்
   உங்கள் கட்சி சொன்னதற்கும் மாறாக “ஆதார்” எல்லா விஷயத்திற்கும்
   திணிக்கப்படுவது ஏன்..?

   ஆதார் இல்லையெனில் ரேஷன் கார்டு மறுக்கப்படும் என்று
   நீங்கள் உத்திரவு போடுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது…?
   இது சுப்ரீம் கோர்ட்டையே அவமதிக்கும் செயல்.//

   – இதற்கு ஏன் பதில் இல்லை ?

 3. மதுரைத்தமிழன் சொல்கிறார்:

  மோடியின் வழிகாட்டுதலின் படி டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தை கடை பிடிக்காதவர் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தியாவில் வாழ தகுதியில்லாதவர்கள் அதனால்தான் அந்த சிறுமி இறந்திருக்கிறார்

 4. மதுரைத்தமிழன் சொல்கிறார்:

  மோடியை மற்றும் அவரது திட்டத்தை எதிர்த்து எந்த செய்திகள் வந்தாலும் அதெல்லாம் Fake News அவரை அவரது திட்டத்தை பாராட்டி பக்தாஸ் எழுதும் செய்திகள் அனைத்தும் உண்மையான செய்திகள்

 5. மதுரைத்தமிழன் சொல்கிறார்:

  என்னைய பொறுத்த வரை பக்தாஸ் போடும் கருத்துகளை அனுமதிப்பதே இல்லை அவர்கள் நம் நேரத்தை வீண் அடிப்பார்கள். நான் ர்ன் பதிவில் என் கருத்தை சொல்லிகிட்டு போய்கிட்டே இருப்பேன் படிப்பவர்கள் நான் சொல்வதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்று அவர்களாகவே சிந்தித்து முடிவு எடுத்து கொள்ள வேண்டும் என்று விட்டுவிடுவேன்

  • Sundararaman சொல்கிறார்:

   Your expectation that in 3 years everything should be sorted out is beyond any human possibility …but efforts are taken in agriculture, health, education, black money and many other field on a sustained basis …if u talk like a JNU kanniaiah…only God can help you. Communist and kazagam rule is there for every one to see, there is difference between long term measure and short term doles…be happy if he is taking any anti public measure, after all nobody will elect a person who gives troubles …people believe in him , and honesty and that is why they are winning state elections …and you be happy with an odd Gurdaspur..
   Enjoy deepawali .

 6. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் நிறைய எழுதி விட்டீர்கள்.
  இவர் திரும்ப திரும்ப அவர் அரைச்சதையே அரைச்சுக்கிட்டிருக்கார்.
  நீங்கள் கேட்ட கேள்விகள் எதுக்கும் பதில் இல்லை.
  இது ஒரு வேஸ்ட். நீங்கள் தயவுசெய்து இந்த ஆசாமியை மதித்து
  எழுதுவதை நிறுத்தி விடுங்கள். இது hardcore RSS. ஒதுக்கப்பட வேண்டிய கேஸ்.

 7. புதியவன் சொல்கிறார்:

  இந்த இடுகைச் செய்தில உண்மை இருக்கு. ரேஷன் பொருட்கள் (அரசு சாமானிய மக்களுக்காகக் கொடுப்பது) பொதுவா கடத்தப்பட்டு, மீண்டும் தீட்டப்பட்டு சந்தைக்கு வருகின்றது. இது அரசியல்வாதிகளின், ஊழியர்களின் பாக்கெட்டுக்குப் போகிறது. இதனைத் தடுப்பதற்காகத்தான், ஆதார் இணைப்பு கொண்டுவரப்பட்டது. ஆனால், படிப்பறிவில்லாத மக்கள் நிறைய இருக்கும் நம் நாட்டில் (ரேஷன் பொருட்களை வாங்குபவர்களில்), அவர்களைப் பற்றி முதலில் சிந்தித்திருக்க வேண்டாமா? (திமுக ஆட்சியின்போது அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் கல்லூரி ஹாஸ்டலில் ரேஷன் பொருட்களைவைத்து உணவு கொடுக்கப்பட்டது என்று செய்தி வந்தது)

  நம் சட்ட நடைமுறை, குற்றவாளிகள் ஆயிரம் பேர் தப்பித்தாலும் நிரபராதி ஒருவன் தண்டனை அடையக்கூடாது என்பதுதான். இது அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்ற பல குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருப்பதால் இதில் கைவைக்காமல், ரேஷன் போன்ற எளியவர்களுக்கான உதவிகளில் சட்டத்தை மாற்றுவது சரியா?

 8. தமிழன் சொல்கிறார்:

  சுந்தர்ராமன்/சுந்தர் அவர் நம்புவதை எழுதுகிறார். அதற்கு ஏன் கடுமையாக அவரை விமரிசிக்கவேண்டும்? தனிப்பட்ட முறையில் ‘பக்தாஸ், காசு வாங்குபவர்’ என்றெல்லாம் சொல்வது ஏற்புடையதுபோல் தெரியவில்லை. அப்போ, இடுகையை ஆதரித்து எழுதுபவர்கள், ‘எதிர்பார்த்த காசு’ வராததால் ஆதரிக்கிறார்களா? இல்லை, தாங்கள் காசு வாங்கும் எஜமானர்கள் சொல்படி கருத்து தெரிவிக்கிறார்களா?

  படிப்பவர்களுக்குத் தெரியும் எது உண்மை எது கொஞ்சம் ஜாஸ்தி மசாலா தூவி எழுதப்பட்டது என்று.

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தமிழன்,

  நான் ஏற்கெனவே மேலே பின்னூட்டத்தில் இதற்கு
  விளக்கம் சொல்லி இருக்கிறேனே –

  //“பணம்” வாங்கிக்கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று
  இவர்களைப்பற்றி நான் சொல்ல மாட்டேன்; இவர்கள் எல்லாரும்
  நிறைய படித்தவர்கள். நல்ல நிலையில் இருப்பவர்கள்.
  இவர்களால் செய்தியின் உண்மைகளை, தீவிரத்தை- நிச்சயம்
  புரிந்துகொள்ள முடியும்.//

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.