முதல்முறையாக பயத்தை பார்க்க முடிகிறது…!!!


அகங்காரம், ஆணவம், கர்வம், தற்பெருமை – நிறைந்த
இடத்தில் முதல்முறையாக ஒரு அச்சத்தை, தோல்வி பற்றிய
பயத்தை பார்க்க முடிகிறது…!!!

தனது மிகப்பெரிய சாதனையாக கூறி வந்த ஒரு விஷயத்தை
– குஜராத்தில், வணிகர்களிடம் நிலவும்
எதிர்ப்பையும், கோபத்தையும் கண்டு – பயந்து
இந்த ஜிஎஸ்டி வேதனைக்கு
(சாதனையல்ல… வேதனை ….)
காங்கிரசும் தான் காரணம் என்று பேசத் தூண்டி இருக்கிறது…!

———————————-

அது போகட்டும் …
கீழேயுள்ள கார்ட்டூன் பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது…?

வெவ்வேறு நண்பர்களுக்கு, அவர்களது சிந்தனைக்கு
ஏற்றாப்போல் வெவ்வேறு அர்த்தங்கள் தோன்றக்கூடும்…
எழுதுங்களேன் – பின்னூட்டத்தில்…!!!

..

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to முதல்முறையாக பயத்தை பார்க்க முடிகிறது…!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  GST வெற்றி என்றல் தான் என்ற ஆணவம் தலைக்கு ஏறி இருக்கும், தோல்வி என்றவுடன் துணைக்கு அழைக்கிறார். அழுகுணி ஆட்டம் ஆரம்பம். மேலே உள்ள படம், வடிவேலு ஒரு திரைபடத்தில் சிலம்பம் இவ்வாறுதான் சுற்றுவார். அதன் முடிவில் நல்ல அடி விழும் அவருக்கு. தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம்.

 2. இளங்கோ சொல்கிறார்:

  பயம்; முதல்முறையாக பயம்.
  வரத்தானே செய்யும். ஆணவத்தால் செய்த அட்டூழியங்கள் ?
  ஏடிஎம் வாசலில் நின்று கடுத்த அன்றாடங்காய்ச்சிகளின் சாபங்கள் ?
  மளிகைக்கடை, பெட்டிக்கடை, காய்கறி வண்டி, பழ வண்டி,
  நடைபாதை வியாபாரிகள் என்றுஅத்தனை பேரின் வயித்தெரிச்சலையும்
  கொட்டிக் கொண்டவர் முதல் முறையாக எதிர்ப்பை எதிர்கொள்கிறார்.
  சிறுவயதில் மாந்தோப்பில், புளியந்தோப்பில் கல் வீசி காய் அடிப்போம்.
  மாட்டிக் கொண்டால், ஓடியவர்களை காட்டி நான் மட்டுமில்லை அவங்க கூடத்தான்
  என்று மற்ற பசங்களையும் உதைவாங்க இழுப்போம்.
  இவர் அதையே தான் செய்கிறார் இப்போது.
  இத்தனை கஷ்டத்திற்கும் நான் மட்டும் காரணம் அல்ல காங்கிரசும் கூடத்தான்.
  எனவே எனக்கு ரெண்டுகண்ணும் போனாலும் கவலை இல்லை;
  காங்கிரஸ் கண்ணும் போக வேண்டும் என்று குஜராத் வணிகர்களை வேண்டுகிறார்.

 3. Rajan Selvam சொல்கிறார்:

  குஜராத் ரிசல்ட் வந்த பிறகு பாரும். அதுவரை இப்படியே சுய இன்பம் அனுபவித்துக்கொண்டு இருங்கள் பெரியவரே. யாரும் தடுக்க போவதில்லை. என்ன உமக்கு கொஞ்சம் பித்தம் தலைக்கேறும்..

  • அறிவழகு சொல்கிறார்:

   சீ…நீயும் உன் பக்தி(புத்தி)யும். குஜராத் முடிவு வரத்தான் போகிறது. உன் எஜமானுக்கு அது முடிவாகவே ஆகப்போகிறது.

   அதற்கு முன்னோட்டமாக பஞ்சாப் இடைத்தேர்தல் நல்ல ஆரம்பம்.

   நல்லதே நடக்கட்டும்.

  • இளங்கோ சொல்கிறார்:

   பித்தம், பைத்தியம், கோபம், ஆத்திரம் அத்தனையும் தலைக்கேறீ
   இருப்பது யாருக்கு என்பது தலைவரின் பேச்சை கேட்டாலே தெரிகிறதே.
   இவர் இன்னமும் தன்னை குஜராத் சி.எம். ஆகவே நினைத்துக்கொண்டு
   அங்கேயே கேம்ப் அடிப்பது ஏன் ? பயம் தானே ?

  • PrabhuT சொல்கிறார்:

   தங்களுடைய இத்துப் போன கொள்கைகளை எப்படியோ சாயம் போட்டு தேர்தல் சந்தையில் விற்ற டேஷ்பக்தாஸ், இப்பொழுது சாயம் வெளுத்தவுடன், தரம் தாழ்ந்து நடக்க ஆரம்பிக்கிறார்கள். எடுத்துக்காட்டு….வயது மற்றும் அறிவில் முதிர்ந்த ஒரு மனிதனை மேலே கண்மூடிக்கொண்டு விமர்சித்திருப்பது….நானும் கூட இவருடைய பல கருத்துக்களோடு முரண்படத்தான் செய்கிறேன்…….ஆனால் அதை வெளிப்படுத்துவதில் சபை நாகரிகம் வேண்டும்……நாட்டு நடப்பை சொன்னால் அது உமக்கு “சுய இன்பம்.”
   உம் கூட்டத்தின் அரசியல் எதிர்காலத்துக்கு அழிவு ஆரம்பம் அய்யா!!!!!

 4. Sundar Raman சொல்கிறார்:

  You are so happy …. be happy … but it will not last long .

 5. சேட்டைக் காரன் சொல்கிறார்:

  GST- முதல் மசோதா எந்த அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டது? காங்கிரஸ் கொண்டுவந்த GST-க்கும் பாஜக கொண்டுவந்த GST-க்கும் என்ன வித்தியாசம்? ஏதாவது தெரியுமா? தெரிந்தால் யார் பயப்படுகிறார்கள், யார் தலைநிமிர்ந்து மக்களிடம் போகிறார்கள் என்று புரியும். 🙂

  • டீ மாஸ்டர் சொல்கிறார்:

   காங்கிர GSTஸை அமுல்படுத்த விடாமல் தடுத்ததும் அதே பா.ஜ.க. தான் பின்னர் என்னவோ அது தங்கள் சாதனை என்று மக்கள் முன்னே சென்றவர்களும் அதே பா.ஜ.க. தான் இப்போது காங்கிரஸுக்கும் பங்கு இருக்கிறது என்று பம்முவதும் அதே வெட்கம் கெட்டவர்கள் தான்

  • PrabhuT சொல்கிறார்:

   இப்பல்லாம் “சேட்டைக் காரர்கள்” தான் டேஷ்பக்தாஸ்

  • இளங்கோ சொல்கிறார்:

   // யார் தலைநிமிர்ந்து மக்களிடம் போகிறார்கள் // ????

 6. மதுரைத்தமிழன் சொல்கிறார்:

  GST பெயிலானால் என்ன அதுக்குதான் மதம் என்று ஒன்று இருக்கிறதே அதை கையில் எடுத்து மதம் கொண்ட யானை போல அழிக்கும்… பாவம் அந்த மதம் கொண்டா யானையிடம் சிக்கி கொள்ளப் போகும் மக்கள்

 7. புதியவன் சொல்கிறார்:

  ஜி.எஸ்.டி நல்ல திட்டம்தான். ஆனால் வணிகர்களுக்கு அது இடைஞ்சல்தான். எல்லோரும் தங்கள் Transactionல் Transparentஆக இருக்கணும், குறிப்பிட்ட நாளுக்குள் எல்லாவற்றையும் submit பண்ணணும் (ஒவ்வொரு மாதமும்).

  ஜி.எஸ்.டியினால் பொருட்களின் விலை குறைந்த மாதிரி நான் அனுபவப்படவில்லை. எல்லா இடங்களிலும் நான் ஜி.எஸ்.டி வரி என்று எக்ஸ்டிராவாகக் கொடுத்தேன். (சமீபத்தைய பயணத்தின்போது). இது உடை, உணவுக்குப் பொருந்தும்.

  அதே சமயம் தேர்தல் அரசியல் என்பது வேறு. தேர்தலின்போது மக்களின், தங்கள் வாக்குவங்கியின் ஆதரவைத் தனதாக்கிக்கொள்ளவேண்டும். குஜராத்திகள், வணிகத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள். அதனால் அவர்களின் கஷ்டம் தேர்தல் ரிசல்டில் தெரியும் என்றே நினைக்கிறேன்.

  கார்ட்டூன் – மோடி அவர்களின் தைரியக் குறைவைக் காண்பிக்கிறது. மக்களுக்கு obvious ஆகத் தெரியும் நல்லனவற்றை இன்னும் மோடி அவர்கள் செய்யவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எல்லாக் கஷ்டங்களும் ஏழைகளுக்கு, பொது மக்களுக்கு.. ஆனால் அரசியல்வாதிகளுக்கோ, பெரிய தொழிலதிபர்களுக்கோ எந்தக் கஷ்டமும் கிடையாது என்பதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்? நீ எரிவாயு மானியத்தை விட்டுத்தா, நான் எளிமையாக இருக்கமாட்டேன், பணக்காரர்களிடமிருந்து வரவேண்டிய வரியை வசூலிக்கமாட்டேன், கறுப்புப் பணத்தை அவர்களிடமிருந்து ஒழிக்கமாட்டேன், அரசியல்வாதிகள்-என் கட்சியாக இருக்கும்போது-அதனைத் தட்டிக்கேட்க மாட்டேன் என்பதை யார் ஒத்துக்கொள்வார்கள்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.