குட்டி யானைக்கு கொம்பு முளைச்சுதாம்… கொடுத்து வைத்த கஸ்தூரி ….!!!


படைப்பிலேயே மிகப்பெரிய உருவத்தையும்,
பலத்தையும் கொண்ட யானை –
அன்புக்கு கட்டுப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவரையும் மகிழ்விப்பது – ஒரு அதிசயம்..!!!

ஐந்து வயதில் கேட்ட –

” குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சாம் …! ”

இன்னமும் மறக்கவில்லை…

மனிதருடன் மிகவும் சிநேகிதமாக பழகும் யானையை
கோவில்களின் ஒரு அங்கமாகவே ஆக்கி விட்டது
நமது பண்பாடு.

திருவரங்கம் வாசிகளுக்கு ( எனக்கும், என்
குடும்பத்தினருக்கும் கூடத்தான் ) யானை தரிசனம் மிகவும்
பழக்கப்பட்ட ஒன்று. எப்போது கோவிலுக்கு போனாலும்,
எந்த திருவிழாவிற்கு சாமி வீதி ஊர்வலம் வந்தாலும்,
“ஆண்டாளை” தேடும் குழந்தைகளை பார்க்கலாம்.

————–

கீழே காணொளியில் –
கஸ்தூரி – பழனி முருகன் கோவில் யானை –
என்ன செய்கிறது பாருங்கள்…!!!

கஸ்தூரியின் நலனில் இந்த அளவு அக்கறை
எடுத்துக்கொண்ட கோவில் நிர்வாகத்திற்கு நமது
பாராட்டுகள்…!!!

————————————————————————————

தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் –

மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற
எல்லாம் வல்ல இறையை வேண்டி,
அனைவருக்கும் எனது நல் வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.

– அன்புடன்,
காவிரிமைந்தன்
18/10/2017

——————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to குட்டி யானைக்கு கொம்பு முளைச்சுதாம்… கொடுத்து வைத்த கஸ்தூரி ….!!!

  1. sridhar சொல்கிறார்:

    arumai. nandri

  2. sridhar சொல்கிறார்:

    kasturi

  3. Peace சொல்கிறார்:

    Nice video. Happy Dipawali!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.