உண்மையான பிரம்மச்சரியம் என்பது எது …..?


எதை பிரம்மச்சரியம் என்று சொல்லலாம் …. ?
திரு.சின்மயானந்தா அவர்கள் இது குறித்து விவரமாக தனது
உரைகளில் கூறுகிறார்… அதிலிருந்து கொஞ்சம் கீழே –

—————

s.c.special

காம இச்சைகளைத் துறப்பது மட்டும் தான்
பிரம்மச்சரியமா என்று கேட்டால் ….

கண், மூக்கு, காது, வாய், ஸ்பரிசம்
ஆகியவை அனைத்துமே நமக்கு வெவ்வேறு விதமான
இன்பங்களை அளிக்கக்கூடிய புலன்கள்.

இவற்றினால், நாம் பெறும்
இன்பமே உண்மையானது என்றால்,
இந்த இன்பங்கள் எல்லாருக்குமே ஒரே
மாதிரியான பலனை விளைவிக்க வேண்டும்..

ஆனால் அவ்வாறு அமைவதில்லையே …

ஒருவன் கண்ணுக்கு ரதியைப் போல் தோன்றும்
ஒரு பெண் இன்னொருவனுக்கு
அப்படித்தோன்றுவதில்லையே..!

ஒருவன் ரசிக்கும் புலால் உணவு,
மற்றொருவனுக்கு
பார்க்கவே அருவருப்பாகத் தோன்றுகிறதே ..!

சிகரெட் பிடிக்கும்போது ஒருவன்
ஆனந்தம் அடையும்போது,
கூடவே இருக்கும் இன்னொருவனுக்கு
குமட்டி எடுக்கிறதே ..!
இவற்றிற்கு என்ன காரணம் …?

உண்மை என்னவென்றால்,
நமக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ
தருவது இந்தப் புலன்கள் அல்ல என்பதே..!

இவையெல்லாம் வெறும் கருவிகளே.
இவற்றை இயக்கும் உண்மையான உரிமையாளர்
நம்முடைய மனம் தான். மனம் சொல்வதை
கேட்டுத்தான் இந்த புலன்கள் பணி செய்கின்றன.

உண்மையில் எப்படியாக இருந்தாலும்
மனம் நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் தான்-
அது நன்றாக இருக்கிறது. இல்லையென்றால் -இல்லை.

மனம் வேதனையில் இருந்தால், மனைவியின்
ஸ்பரிசம் கூட ரசிப்பதில்லை.

மனம் ஆனந்த நிலையில்
இருக்கும்போது, எளிய உணவு கூட ருசிக்கிறது.
எல்லாமே பிடிக்கிறது…!

மனதைக் கொண்டு புலன்களை ஆட்டுவிக்கும் சக்தி,
மனிதனுக்கு மட்டும் தான் இருக்கிறது. மிருகங்களுக்கு
தங்கள் புலன்களைப் பயன்படுத்தத் தெரியும். ஆனால்,
அவற்றை அறிவைக்கொண்டு ஆளத்தெரியாது.

இது போலத்தான் – மனிதர்களிலும், அறிவைப் பயன்படுத்தத்
தெரியாதவர்கள், கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள் –
மிருகங்களாகவே இருக்கிறார்கள்.
அவர்களுடைய இச்சை, கோபம், கெட்ட உணர்வுகள்
ஆகியவற்றை அவர்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

புத்திசாலியாக இருப்பவன் புலன்களை சீராகக்
கட்டுப்படுத்தி, அவற்றை அளவுடன் உபயோகிக்கிறான்.
இப்படி புலன்களை கட்டுப்படுத்தி வாழ்வதற்குப்
பெயர் தான் பிரம்மச்சரியம்.

இன்று, பெண் உறவை அறியாதவர்கள்
அல்லது மறுப்பவர்களை மட்டும் தான்
பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர்களாகச் சொல்கிறோம்.
இது
தவறு.

மனதைக் கட்டுப்படுத்தி,
எல்லா விதத்திலும், தன்னுடைய சக்தியை
சுயகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து,
அவற்றின் மூலம் சிறந்த பலன்களை அடைவதே
பிரம்மச்சரியம்.

மனிதனுடைய உடல் சக்தி என்பது,
அவனுக்கு ஆண்மையையும், இளமையையும்,
வீரியத்தையும் கொடுக்கிறது. இவையும்,
அவனுடைய அறிவைக் கூர்மைப் படுத்தும்
சிந்தனை ஆற்றலும் அவனுடைய நல்வாழ்க்கைக்காக
அளிக்கப்பட்டுள்ள செல்வங்கள்.

இவற்றைப் பாதுகாத்து,
அளவுடன் செலவிட்டு, அதனால் மிகச்சிறந்த
மறுபலனைப் பெறும் வாய்ப்பை அடைபவனிடம் –
பொலிவும், புத்திசாலித்தனமும்,
செயல்
வேகமும் குடிகொள்கின்றன.

அதுவே உண்மையான பிரம்மச்சரியம்.

s.c.t.2

s.c.t.1

——————————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to உண்மையான பிரம்மச்சரியம் என்பது எது …..?

 1. D. Chandramouli சொல்கிறார்:

  Very interesting interpretation for Brahmacharyam.

 2. kayshree சொல்கிறார்:

  ………..K. SRINIVASAN

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.கே.ஸ்ரீநிவாசன் அவர்களின் பின்னூட்ட பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

   எதிர்த்து எழுதிய கருத்துக்காக அல்ல. தரம் தாழ்ந்த வார்த்தைகளை
   பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் ஏசியதற்காக.

   திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் சென்ற வருடம், கேவலமான வார்த்தைகளால்
   இங்கே வாக்குவாதங்களை நிகழ்த்தி விட்டு, இறுதியில் இனி உன் வலைப்பக்கமே வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனார்.

   பின்னர் இப்போது மீண்டும் இங்கு வந்து வம்புக்கு இழுக்கிறார்.
   அவரை யாரும் இங்கு வேண்டி விரும்பி அழைக்கவில்லை.

   அவர் தரத்திற்கு இறங்கி, என்னையும், இந்த தளத்தையும் அசிங்கப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.

   ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு, முன்னரே அவர் சொல்லியிருந்த வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி,
   “அவர் தரத்திற்கு இந்த விமரிசனம் தளம் ஏற்றதல்ல ” என்று
   சொல்லி தயவுசெய்து இனியாவது இந்த பக்கம் வந்து எங்கள் நேரத்தை
   வீணாக்க வேண்டாம் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

   ( ஒரு வேடிக்கை ; இனி உன் தளம் பக்கமே வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனவர், பின்னர் மெனக்கெட்டு subscribe செய்து தொடர்ச்சியாக நமது இடுகைகள் அனைத்தையும், வேண்டி, விரும்பி, வரவழைத்து படிக்கிறார்…!!! )

   -காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  பிரம்மசர்யத்திற்கு நல்ல விளக்கம். நாம பொதுவா கலோகியல் அர்த்தத்தை எடுத்துக்கொண்டு, ‘பெண் ஸ்பர்சத்தை ஒதுக்கியவன்’ என்று சொல்கிறோம். புலனடக்கம்தான் பிரம்மசர்யத்துக்கான பாதை.

  இதைப் பகிர்ந்துகொள்வதால், கா.மை சார், தான் ‘பிரம்மசாரி’ என்று சொல்லவில்லை. அதனால் கருத்தை ஒதுக்கி, தனிப்பட்ட முறையில் குறை சொல்லி வந்துள்ள பின்னூட்டம் ரசிக்கவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s